நந்தன வருடபிறப்பு நல்வாழ்த்துக்கள்
எண்கணிதம் உலகிற்கு எடுத்தளித்த நம்முன்னோர்
எண்களினால் வருடத்தை ஏன்குறிக்க முயலவில்லை?
காலத்தின் நீளத்தைக் கணக்கிடுதல் எவ்வாறு?
மூலநொடி யாரறிவார்? முடியும்நொடி யாரறிவார்!
முடிவுக்குள் முதலிருத்தி முதலுக்குள் முடிவிருத்தி
விடிவிக்கும் காலமொரு விளையாட்டு வளையமென
மாறிவரும் மீண்டுவரும் மாயவலை காலமென
பேரறிவர் வருடத்தை பெயரிட்டு வரவேற்றார்!
காலமொரு அலைவட்டம், கலையுமதன் சுற்றத்தில்
நீளுமென முளைக்கின்ற நீர்க்குமிழி உலகங்கள்!
வட்டத்தின் மையம் வலியசிவம் ஒன்றுண்மை!
வடிவிதற்கு ஆரம் வகைத்தநம் அறியாமை!
ஆரம் பெரிதானால் அளவாலே விரிவாகும்
காலம் எனும்மாயம் கைக்கொள்ளாப் புதிராகும்!
மையத்தை குறிவைத்தால் மாறிவிடும் பேராரம்!
பையச் சுருங்கிவிடும் படர்காலம் விளங்கிவிடும்!
வேற்றுமையில் ஒற்றுமையை வேண்டிப் பார்ப்பதுவும்
மாற்றுவழி யாலுலகை மதித்து நடப்பதுவும்
அன்புநிலை யாலெவரின் நண்பரென ஏற்பதுவும்
நம்பிடுங்கள், காலத்தை நடத்துவிக்கும் ஆயுதங்கள்!
எந்தனமும் எல்லோர்க்கும் எப்போதும் தருவதற்கு
நந்தனமா மிந்த நல்லாண்டு பிறக்கிறது!
வந்தனமே! நலமே! வருங்காலப் பெருவளமே!
வந்து உதி! சிந்தை தெளி! வையசுகம் வாழவிழி!
அன்புடன்
மீ. ராஜகோபாலன்
14-04-2012