• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Murugan Paamaalai - 108

Status
Not open for further replies.

anamika

Active member
Dear All,

Sharing with you the devotional verses "Murugan Paamaalai - 108" composed by Swami Guhananda (a) Sri. P.S. Krishnan.

Regards,
anamika

முருகன் 108

ஹர ஹரோ ஹர - ஸ்வாமி ஹர ஹரோ ஹர
ஹர ஹரோ ஹர - ஸ்வாமி ஹர ஹரோ ஹர

1. திருப்பரங்கிரி நாதனுக்கு ஹர ஹரோ ஹர
திருமென்மலர் பாதனுக்கு
திருமாலின் மருகனுக்கு
திருப்புகழின் நாயகனுக்கு

தீமைகளை களைபவனுக்கு
தீந்தமிழின் நாயகனுக்கு
தினமும் பாதம் பணிவேன் யான்
திருவடியில் சேர்த்துக் கொள்வாய்

2. திருச்செந்தூர் குமரனுக்கு
திருப்போரூர் அழகனுக்கு
திருமுருகா தேவர் தலைவா
திருவடியை சிரசில் வைப்பாய்

திருமுருகன்பூண்டி கண்டோய்
திசையெல்லாம் நீயே ஆனாய்
திறமிகு திவ்ய நாயகனுக்கு
திருமயிலம் அமர்ந்தோனுக்கு

3. ஆவினன் குடி அழகனுக்கு
ஆறுகூராய் மலைபிளந்தோனுக்கு
ஆரூர் அமர்ந்த அரசனுக்கு
ஆனைமுகத்தோன் சோதரனுக்கு

ஆதிசக்தி மகன் தனக்கு
ஆதிகுக்கே ஆண்டவனுக்கு
ஆறிருதோள் கொண்டவனுக்கு
ஆண்டருள்வாய் ஏழை எம்மை

4. சுவாமிமலை நாதனுக்கு
சுந்தரனாய் நின்றான் தனக்கு
சுகவாழ்வை தந்திடுவாய்
சுர குஞ்சரி மணாளனே

திருவேரக தெய்வத்திற்கு
திருவருணை இளையனார்க்கு
திருக்கார்த்திகை வந்தவனுக்கு
திரிலோக நாயகன் தனக்கு

5. திருத்தணி வாழ் முருகனுக்கு
திருவெண்ணீறணிந்தவனுக்கு
திரிபுரபவ தேவன் தனக்கு
திகழ் வள்ளி நாயகனுக்கு

எட்டு குடி வேலவனுக்கு
எண்கண் அமர்ந்த அழகனுக்கு
எல்லா கிரிக்கும் இறைவன் தனக்கு
என்றும் அழியா அழகனுக்கு

6. அவ்வைக்கு கனி தந்தவனுக்கு
அரன் தன் மைந்தனுக்கு
அடும் பல வினை அகற்றுவோனுக்கு
அருள் தரும் வடிவேலவனுக்கு

பழமுதிர்ச்சோலை இளவலுக்கு
பன்னிரு கரமுடையோனுக்கு
பதிப்போரை பாலிப்பவனுக்கு
பரப்ரஹ்ம ஸ்வரூபன் தனக்கு

7. ஆறுசிரம் அமைந்தோன் தனக்கு
ஆறுமுகம் ஆனவனுக்கு
ஆறிருபுயம் கொண்டோன் தனக்கு
ஆறிரு காது அழகனுக்கு

கந்த கோட்ட கந்தனுக்கு
கருணை பொழியும் குமரவேளுக்கு
கடும் சூரர்படை வென்றோனுக்கு
கந்தா என்றால் வந்து நிற்போனுக்கு

8. சிவகிரி வாழ் செல்வனுக்கு
சிந்தைதனில் நிறைந்தோனுக்கு
சிக்கல் சிங்காரனுக்கு
சிரமதனில் கை குவித்தேன்

வேடனாகி வந்தோனுக்கு
வேலனாகி மணம் புரிந்தோய்
வேங்கை மரமானவனே
வேட்டுவச்சியை மண முடித்தோய்

9. மருதமலை நாயகனுக்கு
மறைகள் போற்றும் மன்னனுக்கு
மலர் காவடி பிரியோனுக்கு
மந்தஹாஸ நாயகனுகு

அறவழி சொன்ன ஆண்டிக்கு
அகத்திய முனி தமிழ் குருவே
அகந்தனிலே ஆட்சி செய்வாய்
அருள்வாய் விராலி குன்றோனே

10. கழுகாசல மூர்த்திக்கு
கட்டழகன் கந்தன் தனக்கு
கரிமுகத்தோன் தம்பிக்கு
கடம்ப மாலை தரித்தோனுக்கு

வல்லக்கோட்டை முருகனுக்கு
வயலூர் வாழ் குமரனுக்கு
வரும் துயரம் தீர்த்திடுவாய்
வழித்துணையாய் வந்திடுவாய்

11. கதிர்காம கடவுளுக்கு
களபம் அணியும் கந்தனுக்கு
கண கம்பீர கோஷனுக்கு
கண்கண்ட தெய்வத்திற்கு

சங்கர மகன் தனக்கு
சஞ்சலங்கள் போக்குபவனுக்கு
சரவணபவன் ஆனவருக்கு
சக்திவேல் கொண்டவனுக்கு

12. குமரகோட்ட குமரனுக்கு
குன்றுதோரும் அமர்ந்தோனுக்கு
குறுக்குத்துறை தெய்வத்திற்கு
குண நிதயே ரக்ஷிப்பாய்

மலைக்குருவான மயிலோனுக்கு
மலைக்குறமகள் மணாளனுக்கு
மயிலேறும் குருபரனுக்கு
மங்களமே அருள்வோனுக்கு

13. பழனிபதி பாலகனுக்கு
பஞ்சாமிர்த பிரியனுக்கு
பார்த்தன் தன் மருகனுக்கு
பார்வதி தன் மகனுக்கு

உலகம் தனை வலம் வந்தோனுக்கு
உற்ற கணபதி உதவி பெற்றோனுக்கு
உதார கீர்த்தி நாயகனுக்கு
உக்ரஸமநாய மூர்த்திக்கு

14. விழிக்குத் துனை உன் மலர் பாதங்கள்
மொழிக்குத் துணை முருக நாமம்
பழிக்குத் துணை ஈராறு தோள்கள்
தனி வழிக்கு துணை வடிவேலும் மயூரமும்

ஹர ஹரோ ஹர - ஸ்வாமி ஹர ஹரோ ஹர
ஹர ஹரோ ஹர - ஸ்வாமி ஹர ஹரோ ஹர
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top