Mathangi Meenakshi

Status
Not open for further replies.
Mathangi Meenakshi Amma
மாதங்கி தியானம்:--
த்யாயேயம் ரத்னபீடே சுககலபடிதம் ச்ருண்வதீம் ச்யாமளாங்கீம்
ந்யஸ்தை காங்க்ரீம் ஸரோஜே சசிசகல தராம் வல்லகீம் வாதயந்தீம்
கல்ஹாரா பத்தமாலாம் நியமித விகஸத் சூளிகாம் ரக்தவஸ்த்ராம்
மாதங்கீம் சங்கபத்ராம் மதுமத விவசாம் சித்ரகோத்பாஸி பாலாம்

பொருள்: ரத்ன பீடத்தில் அமர்ந்து ஒரு பாதத்தை தாமரை மலரில் வைத்திருப்பவளும், இரண்டு கிளிகளைக் கையில் கொண்டு அதன் அழகிய பேச்சை ரசிப்பவளும், பச்சை நிறத்தினவளும், சந்திரகலை தரித்தவளும், வீணையைக் கையில் ஏந்தியுள்ளவளும், செங்கழுநீர் பூமாலை அணிந்தவளும், பின்னிய அழகிய சடையினை உடையவளும், சிவப்பு ஆடை அணிந்தவளும், சங்குத்தோடு அணிந்தருப்பவளும், (காதம்பரீ) திலகம் விளங்கும் நெற்றியை உடையவளுமான ராஜமாதங்கியைத் தியானிக்கிறேன்.
 

Attachments

  • Mathangi Meenakshi.webp
    Mathangi Meenakshi.webp
    52 KB · Views: 226
Status
Not open for further replies.
Back
Top