ஒருவர் இறந்த தமிழ் மாதம், அடுத்தது கிருஷ்ன பக்ஷம் அல்லது சுக்ல பக்ஷம் பிறகு திதி என்ன என்று பார்க்க வேண்டும். இறந்த நேரத்தில் என்ன திதி உள்ளது என்று பஞ்சாங்கத்தில் பார்க்க வேண்டும்.
அமாவாசைக்கு அடுத்த ப்ரதமை முதல் பெளர்ணமி முடிய சுக்ல பக்ஷம். பெளர்ணமிக்கு அடுத்த ப்ரதமை முதல் அமாவாசை முடிய கிருஷ்ண பக்ஷம்.
ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் கிருஷ்ண பக்ஷம் அல்லது சுக்ல பக்ஷத்தில் இறந்த சிராத்த திதியின் ஆங்கில தேதியை ஒரு பேப்பரில் எழுதி கொள்ளவும்,
11ம் நாள் ஒரு மாசிகம் ஆகிவிடும். ஒரு வருடத்திற்கு ஆங்கில தேதியை எழுதி விடவும். இது தான் மாசிகம் செய்ய வேண்டிய நாள். இதற்கு முதல் நாள் சோதகும்பம் செய்ய வேண்டும்.
ஊன மாசிகம் :- இறந்த 27ம் நாள் ஊனத்தை 28,29,30 இவற்றில் ஒரு நாள் செய்ய வேண்டும்.இறந்த ஆங்கில தேதி மாதப்படி நாட்கள் பார்த்து கொள்ளவும்.
45 ஊனம்:- 41 டு 45க்குள் ஒரு நாள்; 6ம் மாத ஊனம்:- 171 டு 180க்குள் ஒரு நாள். ஊன ஆப்தீகம்:- 341 டு 355க்குள் ஒரு நாள். ஊனத்தை கர்த்தாவின் ஜன்ம நக்ஷத்திரம், செவ்வாய் வெள்ளி, சனி, ப்ரதமை, சதுர்த்தி, சஷ்டி, நவமி, ஏகாதசி, சதுர்தசி திதிகளில் பண்ணக்கூடாது,
ஒரே திதி இரு முறை வந்தால் , சிராத்த திதியில் மாசிகத்தையும், சூன்ய அல்லது அதிதி நாளில் அதிக மாசிக மாக பண்ண வேண்டும்.