• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Mahishasura Mardini Stotram in Tamil with Meaning

praveen

Life is a dream
Staff member
மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம் பொருள்

1.
அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விச்வ வினோதினி நந்தநுதே

கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே

பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரிகுடும்பினி பூரிக்ருதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: மலையரசனின் மகளே, உலகை மகிழ்விப்பவளே, விளையாட்டாக உலகை நடத்திச் செல்பவளே, நந்தனால் வழிபடப்பட்டவளே, சிறந்த மலையான விந்திய மலையில் உறைபவளே, திருமாலுக்குப் பெருமை சேர்ப்பவளே, வெற்றி வீரர்களால் துதிக்கப்படுபவளே, பகவதீ, நீலகண்டரின் பத்தினியே, உலகமாகிய பெரிய குடும்பத்தை உடையவளே, அரியவற்றைச் சாதிப்பவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.


2.
ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி
துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே

த்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணி
கல்பிஷ மோஷிணி கோஷரதே

தனுஜ நிரோஷிணி திதிஸுத ரோஷிணி
துர்மத சோஷிணி ஸிந்துஸுதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: நல்லோருக்கு வரங்களை மழைபோல் பொழிபவளே. கொடியவர்களை அடக்கி வைப்பவளே, கடுமையான வார்த்தைகளையும் பொறுப்பவளே, மகிழ்ச்சியுடன் பொலிபவளே, மூன்று உலகங்களுக்கும் உணவளித்துக் காப்பவளே, சிவபெருமானை மகிழ்விப்பவளே, பாவங்களைப் போக்குபவளே, பேரொலியில் மகிழ்பவளே, தீயவர்களிடம் கோபம் கொள்பவளே, கொடியவர்களை அடக்குபவளே, அலை மகளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.



3.
அயி ஜகதம்ப மதம்ப கதம்பவன
ப்ரிய வாஸினி ஹாஸரதே

சிகரி சிரோமணி துங்க ஹிமாலய
ச்ருங்க நிஜாலய மத்யகதே

மதுமதுரே மதுகைடப கஞ்ஜினி
கைடப பஞ்ஜினி ராஸரதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: உலகின் அன்னையே, என் தாயே, கதம்ப வனத்தில் வசிப்பதை விரும்புபவளே, சிரிப்பில் மகிழ்பவளே, மலைகளில் சிறந்த இமயமலையில் உச்சியிலுள்ள ஸ்ரீசக்கரத்தின் நடுவில் வீற்றிருப்பவளே, தேன்போல் இனியவளே, மது கைடப அசுரர்களை அழித்தவளே, கேளிக்கைகளில் மகிழ்பவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்



4.
அயி நிஜஹுங்க்ருதி மாத்ர நிராக்ருத
தூம்ர விலோசன தூம்ரசதே

ஸமரவிசோஷித சோணிதபீஜ
ஸமுத்பவ சோணித பீஜலதே

சிவசிவ சும்ப நிசும்ப மஹாஹவ
தர்ப்பித பூத பிசாசரதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: தூம்ரவிலோசனன் முதலிய நூற்றுக்கணக்கான அசுரர்களை ஹூங்காரத்தினாலேயே தோற்று ஓடச்செய்தவளே, போரில் மாண்ட அசுரர்களின் ரத்தக்கடலில் தோன்றிய அழகிய சிவந்த கொடி போன்றவளே, சும்ப நிசும்ப அசுரர்களை அழித்ததாகிய மாபெரும் வேள்வியால் பூதகணங்களை மகிழ்வுறச் செய்தவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.


5
அயி சதகண்ட விகண்டித ருண்ட
விதுண்டித சுண்ட கஜாதிபதே

ரிபுகஜ கண்ட விதாரண சண்ட
பராக்ரம சுண்ட ம்ருகாதிபதே

நிஜபுஜ தண்ட நிபாதித கண்ட
விபாதித முண்ட பதாதிபதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: சதகண்டம் என்ற ஆயுதத்தால் முண்டாசுரனை வீழ்த்தியவளே, யானை முகத்தினனான கஜாசுரனின் தும்பிக்கையைத் துண்டித்தவளே, எதிரிகளான யானைகளின் கழுத்தைத் துண்டித்து எறிவதில் திறமை மிக்கவளே, தண்டாயுதம் போன்ற தன் தோள்களின் வலிமையால் முண்டாசுரனின் சேனாதிபதியைக் கண்டதுண்டமாக வெட்டியெறிந்தவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.



6
அயிரண துர்மத சத்ரு வதோதித
துர்தர நிர்ஜர சக்தி ப்ருதே

சதுர விசார துரீண மஹாசிவ
தூதக்ருத ப்ரமதாதிபதே

துரித துரீஹ துராசய துர்மதி
தானவ தூத க்ருதாந்தமதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்:
அருவிபோல் எதிரிகளின் பிணக் குவியலைப் பொழிகின்ற ஆற்றல் பெற்றவளே, பகுத்து ஆராய்வதில் வல்லவரான சிவபெருமானை எதிரிகளிடம் தூதாக அனுப்பியவளே, தீய சிந்தனையும் கெட்ட நோக்கமும் கொண்ட அசுரர்களை அழிப்பவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.


7
அயி சரணாகத வைரிவ தூவர
வீர வராபய தாயகரே

த்ரிபுவன மஸ்தக சூலவிரோதி
சிரோதி க்ருதாமல சூலகரே

துமிதுமி தாமர துந்துபி நாத
மஹோ முகரீக்ருத திங்மகரே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: தஞ்சம் அடைந்த எதிரிகளின் மனைவியருக்கும் சரணடைந்த வீரர்களுக்கும் அடைக்கலம் தந்து காத்தவளே, மூன்று உலகங்களுக்கும் தலைவியாக விளங்குபவளே, எதிரிகளின் கழுத்தில் திரிசூலத்தை நாட்டியவளே, தும் தும் என்று முழங்குகின்ற துந்துபி வாத்தியத்தையே வெட்கப்படச் செங்கின்ற
 

Latest ads

Back
Top