• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Learning the Panchangam.

Can some one knowledgable explain the basics in Panchang reading and its interpretation? mainly the five Angaas. and other features.
hi

panchang mainly consists FIVE ELEMENTS......THITHI NAKSTRA VAARA YOGA KARANA......generally every

one know thithi vaara and nakshatra.....yoga and karana has more little astrological knowledge required...
 



There is an easier way of reading. Download the App from App-Store.

https://play.google.com/store/apps/details?id=com.***********.panchangam&hl=en_US&gl=US

If you do not want to download you can access this website and plug in the right information and get an analysis.

 
Last edited:
How to find out the date of the anniversary of the rites
that falls on ,Chaturthi thithi,Panguni month, this year and in Sukla paksham.?
What is the corresponding English date?

Thanks.
i
 
How to read panchangam.
YUGANGAL-4. kretha yugam; 2. thretha yugam; 3. dwaapara yugam. 4. kali yugam. Now we are living in kali yugam.1st patham.

DWEEPANGAL:7. 1. Jambhu dweepam; 2. pilakshat dweepam; 3. shanmali dweepam; 4. Kucha dweepam; 5.Krowncha dweepam; 6. shaaka dweepam; 7. Pushkara dweepam. Now we are living in Jambhu dweepam.

VARUSHANGAL: 7. 1. bharatha varusham; 2. kimpurusha varusham; 3. Hari varusham; 4. ilaavrudha varusham; 5. Rammiyadha varusham; 6. Iranavatha varusham; 7. guru varusham; Now we are in bharatha varusham.

Now we are living in bharatha kandam.

SAKAAPTHANGAL:8 1. Paandava sakaptham; 2. saalivaahana sakaptham;3. Vikrama sakaptham; 4. Bhojaraja sakaptham; 5. Kollsakaptham; 6.Ramadeva sakaptham 7. Prthaparuthra sakaptham; 8. krishnadeva raya sakaptham. Now we are in Salivahana sakaptham.

We are having 60 years in one cycle. This will repeat again , same year name. Now are in nandana year. (varusham)

Each year is divided y two . one Uthiraayanam and the second is dhakshinaaya. From 15th january to 15th july Uthiraayanam. and from 15th july to 15 th January Dhakshinaayanam.

Each year is divided into 6 rithus: From 15th april to 15th june ( chithrai and vaikasi month)=vasantha rithu;
from 15th june 15th august ( aani and aadi month) Ghrishmama rithu;
From 15th august to 15th october ( aavani and puratasi month) =Varusha rithu;

From 15th october to 15th december ( ipasi and karthig month)=sarath rithu;
From 15th december to 15th february( Margali and thai month)=Hemantha rithu;
From 15th february to 15th april ( Maasi and panguni month)=shisira rithu.

Each year is divided into 12 months; 1. Mesham. 2. Rishabam; 3. Mithunam. 4. katakam. 5. Simham; 6. kanni;7. Thulam. 8. Vrischikam. 9. dhanus.10.. Makaram; 11. Kumbam. 12. Meenam.
In Tamil we are telling chithrai; vaikasi; aani; aadi; aavani; puratasi; ipasi; kaarthigai; margali; thai.maasi and panguni.


Each month is divided into two paksham Sukla paksham=valar pirai and Krishna Paksham= Thei pirai. This is based on Moon's stage.

Each Paksham has 15 thithis: one; two; three to fifteen: in sanskrit language it is called as : 1. Prathamai; 2.dweethiyai; 3; Thruthiyai; 4;. Chathurthy.
5. panchami; 6 shasty. 7. sapthami. 8. ashtami. 9. Navami. 10 . Dasami. 11.Ekaadasi. 12. Dwaadasi; 13. Thrayodasi; 14,. Chadurdasi;
15. pournami= full moon in sukla pksham and in Krishna patcham it is called as Amavasai= new moon.
 
How to read panchangam.
YUGANGAL-4. kretha yugam; 2. thretha yugam; 3. dwaapara yugam. 4. kali yugam. Now we are living in kali yugam.1st patham.

DWEEPANGAL:7. 1. Jambhu dweepam; 2. pilakshat dweepam; 3. shanmali dweepam; 4. Kucha dweepam; 5.Krowncha dweepam; 6. shaaka dweepam; 7. Pushkara dweepam. Now we are living in Jambhu dweepam.

VARUSHANGAL: 7. 1. bharatha varusham; 2. kimpurusha varusham; 3. Hari varusham; 4. ilaavrudha varusham; 5. Rammiyadha varusham; 6. Iranavatha varusham; 7. guru varusham; Now we are in bharatha varusham.

Now we are living in bharatha kandam.

SAKAAPTHANGAL:8 1. Paandava sakaptham; 2. saalivaahana sakaptham;3. Vikrama sakaptham; 4. Bhojaraja sakaptham; 5. Kollsakaptham; 6.Ramadeva sakaptham 7. Prthaparuthra sakaptham; 8. krishnadeva raya sakaptham. Now we are in Salivahana sakaptham.

We are having 60 years in one cycle. This will repeat again , same year name. Now are in nandana year. (varusham)

Each year is divided y two . one Uthiraayanam and the second is dhakshinaaya. From 15th january to 15th july Uthiraayanam. and from 15th july to 15 th January Dhakshinaayanam.

Each year is divided into 6 rithus: From 15th april to 15th june ( chithrai and vaikasi month)=vasantha rithu;
from 15th june 15th august ( aani and aadi month) Ghrishmama rithu;
From 15th august to 15th october ( aavani and puratasi month) =Varusha rithu;
From 15th october to 15th december ( ipasi and karthig month)=sarath rithu;
From 15th december to 15th february( Margali and thai month)=Hemantha rithu;
From 15th february to 15th april ( Maasi and panguni month)=shisira rithu.

Each year is divided into 12 months; 1. Mesham. 2. Rishabam; 3. Mithunam. 4. katakam. 5. Simham; 6. kanni;7. Thulam. 8. Vrischikam. 9. dhanus.10.. Makaram; 11. Kumbam. 12. Meenam.
In Tamil we are telling chithrai; vaikasi; aani; aadi; aavani; puratasi; ipasi; kaarthigai; margali; thai.maasi and panguni.


Each month is divided into two paksham Sukla paksham=valar pirai and Krishna Paksham= Thei pirai. This is based on Moon's stage.

Each Paksham has 15 thithis: one; two; three to fifteen: in sanskrit language it is called as : 1. Prathamai; 2.dweethiyai; 3; Thruthiyai; 4;. Chathurthy.
5. panchami; 6 shasty. 7. sapthami. 8. ashtami. 9. Navami. 10 . Dasami. 11.Ekaadasi. 12. Dwaadasi; 13. Thrayodasi; 14,. Chadurdasi;
15. pournami= full moon in sukla pksham and in Krishna patcham it is called as Amavasai= new moon.

ராசிகளும் அதில் இருக்கும் நட்சத்திரங்களும்.. மொத்தம் 12 ராசிகள். முதல் ஆரம்பம் மேஷம். பிரதக்ஷிணமாக வந்து மீனத்தில் முடியும். சூரியன் சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் இருப்பார். வைகாசி மாதம் ரிஷபத்தில் இருப்பார், ஆனி மாதம் மிதுனத்தில் இருப்பார்;

ஆடி மாதம் கடகத்தில் இருப்பார்; ஆவணி மாதம் சிம்மத்தில் இருப்பார்; புரட்டாசி மாதம் கன்னியில் இருப்பார். ஐப்பசி மாதம் துலா த்தில் இருப்பார். கார்த்திகை மாதம் விருச்சிகத்தில் இருப்பார். மார்கழி மாதம் தனுசில் இருப்பார்;

தை மாதம் மகரத்தில் இருப்பார்; மாசி மாதம் கும்பத்தில் இருப்பார்; பங்குனி மாதம் மீனத்தில் இருப்பார். சூரியன் இருக்கும் ராசியை பார்த்து இந்த மாதத்தில் பிறந்தார் என சொல்ல முடியும்.


ஸங்கல்பம் செய்யும் போது இதையே தான் மேஷ மாசே; ரிஷப மாசே மிதுன மாசே; கடக மாசே; சிம்ம மாசே; கன்னியா மாசே, துலா மாசே; விருச்சிக மாசே; தனுர் மாசே; மகர மாசே, கும்ப மாசே. மீன மாசே என சொல்கிறோம்.
அடுத்து ஸங்கல்பம் செய்யும் போது சுக்ல பக்ஷம், க்ருஷ்ண பக்ஷம் எங்கிறோம். அமாவாசைக்கு மறு நாள் ப்ரதமை திதி முதல் பெளர்ணமி முடிய சுக்ல பக்ஷம்=வளர்பிறை; பெளர்ணமிக்கு மறு நாள் ப்ரதமை முதல் அமாவாசை முடிய தேய்பிறை- க்ருஷ்ண பக்ஷம் என்று சொல்கிறோம்.

திதிகள் பதினைந்து:- ப்ரதமை, துதியை; த்ருதியை; சதுர்த்தி; பஞ்சமி, சஷ்டி, ஸப்தமி, அஷ்டமி; நவமி; தசமி; ஏகாதசி; துவாதசி; த்ரயோதசி; சதுர்தசி அமாவாசை அல்லது பெளர்ணமி என்று திரும்ப திரும்ப வரும்.




ஒரு வருடத்தை இரு அயனங்களாக பிரித்தனர். உத்திராயணம்= தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய; தக்ஷிணாயனம் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் முடிய;

12 மாதங்களை 6 ருதுக்களாக பிரித்தனர்.
சித்திரை, வைகாசி=வஸந்தருது;
ஆனி, ஆடி=க்ரீஷ்ம ருது;
ஆவணி, புரட்டாசி=வர்ஷ ருது;

ஐப்பசி, கார்த்திகை=சரத் ருது;
மார்கழி,தை=ஹேமந்த ருது;
மாசி, பங்குனி=சிசிர ருது.

இருபத்தேழு நட்சத்திரங்கள் பெயர்= அசுவதி, பரணி, கார்த்திகை; ரோஹிணி; ம்ருகசீர்ஷம்; திருவாதிரை; புனர்பூசம்; பூசம்; ஆயில்யம்; மகம்; பூரம்; உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி; விசாகம்; அனுஷம்; கேட்டை; மூலம்; பூராடம்; உத்திராடம்; திருவோணம்; அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி ரேவதி.

இந்த 27 நட்சத்திரங்களை 12 ராசிகளுக்குள் அடக்க வேண்டும். 12 மாதங்கள் ஒரு வருடம். ஆதலால் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் நான்கு பாதங்களாக பிரித்தனர். மொத்தம் தமிழ் வருடங்கள் 60. திரும்ப திரும்ப இதே பெயர் வரும்.

இந்த 27 நட்சத்திரங்களை ஸங்கல்பம் செய்யும் போது இம்மாதிரி சொல்ல வேண்டும்; அஸ்வினி, அபபரணி; க்ருத்திகா;ரோஹிணி;; ம்ருகசீர்ஷ;அர்ர்த்ரா; புனர்வஸு; புஷ்ய; ஆஸ்லேஷா; மக; பூர்வ பல்கினி; உத்திர பல்குனி; ஹஸ்த; சித்ரா; ஸ்வாதி; விசாகா; அனுராதா; ஜ்யேஷ்டா; மூலா; பூர்வாஷாடா; உத்ராஷாடா; ஶ்ரவண; ஶ்ரவிஷ்டா; பூர்வப்ரோஷ்டபதி; உத்திரப்ரோஷ்டபதி; ரேவதி;,.

7 நாட்களை ஸங்கல்பம் செய்யும் போது இம்மாதிரி சொல்ல வேண்டும்:- ஞாயிறு=பானு வாஸரம்; திங்கள்= இந்து வாஸரம்; அல்லது ஸோம வாஸரம்; செவ்வாய்= பெளம வாஸரம்; புதன்= ஸெளம்ய வாஸரம்; வியாழன்=குரு வாஸரம்; வெள்ளி= ப்ருகு வாஸரம்; சனி= ஸ்திர வாஸரம்.
யோகங்கள்=27; விஷ்கம்பம்; ப்ரீதி; ஆயுஷ்மான்; ஸெளபாக்கியம்; சோபனம்; அதிகண்டம்; சுகர்மம்; திருதி; சூலம்; கண்டம்; விருத்தி; துருவம்; வியாகாதம்; ஹர்ஷணம்; வஜ்ரம்; ஸித்தி; வ்யதீபாதம்; வரீயான்; பரிகம்; சிவம்; சித்தம்; சாத்தியம்; சுபம்; சுப்பிரம்; பிராம்யம்; மாஹேந்திரம்; வைத்ருதி.

கரணங்கள்-11. பவம், பாலவம், கெளலவம்; தைதுலம்; கரசை; வணிசை; பத்திரை; சகுனி; சதுஷ்பாதம்; நாகவம்; கிம்ஸ்துக்னம்;. இதில் முதல் 7 கரணங்கள் சரம்; கடைசி நாங்கு கரணங்கள்=ஸ்திரம்.


30 திதிகள் கொண்டது ஒரு மாதம். (சுக்ல பக்ஷ, க்ருஷ்ண பக்ஷ திதிகள் சேர்ந்தது.) திதி என்பது சூர்யனுக்கும் சந்திரனுக்குமுள்ள இடைவெளியை குறிக்கும். வாண மண்டலத்தில் மொத்தம் 360 பாகைகள்
ஒரு வட்டத்திற்கு 360 டிகிரி) உள்ளதாகவும், ஒரு திதிக்கும் மற்றொரு திதிக்கும் உள்ள இடைவெளி 12 பாகைகள் எனவும், சூரியனிலிருந்து 180 பாகையில் சந்திரன் வரும்போது பெளர்ணமியும், , சூரியனும், சந்திரனும் ஒரே பாகையில் வரும் போது அமாவாசை வருவதாகவும் வான சாஸ்திரத்தில் சொல்ல படுகிறது.

கிழமைகளில்- புதன், வியாழன், வெள்ளி இரு கண்கள் உள்ள நாட்கள்=சுப காரியம் செய்ய உத்தமம்; ஞாயிறு, திங்கள்-ஒரு கண் உள்ள நாட்கள்=சுப காரியம் செய்ய மத்திமமான நாட்கள்; செவ்வாய், சனி= இரு கண்களும் இல்லா நாட்கள் ஆதலால் சுப காரியம் செய்வதை தவிர்க்க வேண்டும்.


மொத்தம் 27 நக்ஷத்திரங்கள்:- ராசி மண்டலத்தில் மொத்தம் 360 பாகைகளில் ஒவ்வொரு நக்ஷத்திரமும் 13 பாகை-20 கலைகள் கொண்டதாகும். ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் 4 பாதங்கள் வீதம் 108 பாதங்கள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் 2.25 நக்ஷத்திரம்=( 9 பாதங்கள்) 12 ராசிக்கும் பிறித்து கொடுக்க பட்டது.


யோகம்;- இந்த யோகமானது நக்ஷத்திரங்களை போலவே 27 ஆகும். வான மண்டலத்தில் சூரியன் செல்லும் தூரத்தையும், சந்திரன் செல்லும் தூரத்தையும் கூட்டி இந்த யோகங்கள் கணக்கிட படுகின்றன. நக்ஷத்திரத்தை போலவே ஒரு யோகத்தின் அளவு 13 பாகை, 20 கலை யாகும்.

இந்த யோகங்கள் வேறு. அம்ருதாதி யோகங்கள் வேறு. அம்ருதாதி யோகங்கள் கிழமையும், நக்ஷத்திரமும் இணைவதால் கிடைப்பவை. அம்ருத யோகம், சித்த யோகம், மரண யோகம் பிரபலாரிஷ்ட யோகம் என்று வரும்.


கரணம்:- கரணம் என்பது திதியில் பாதி ஆகும். முப்பது நாட்களில் 30 திதிகள். (கிருஷ்ண பக்ஷம், சுக்ல பக்ஷம்) ஆதலால் கரணம் 60 பகுதி ஆகிறது. இதில் 4 பகுதிகளை 4 ஸ்திர கரணங்கள் எப்போதும் ஆக்கிரமிக்கின்றன.

கிருஷ்ண பக்ஷ சதுர்தசியில் இரண்டாவது கரண மான சகுனி கரணமும், அமாவாசையின் முதல் கரணமான சதுஷ்பாதமும் , இரண்டாவதாக நாகவமும் , சுக்ல பக்ஷ ப்ரதமையின் முதல் கரணமான கிம்ஸ்துக்ண கரணமும் , எப்போதும் வருவதால் இவை நான்கிற்கும் ஸ்திர கரணங்கள் என்று பெயர்.. இந்த நான்கு ஸ்திர கரணங்களும் நற்காரியம் செய்ய ஏற்றதல்ல.


மீதமுள்ள 56 பகுதிகளை மீதமுள்ள 7 கரணங்களும், சுக்ல பக்ஷ ப்ரதமையில் 2 ஆவது கரணமான பவ கரணத்தில் ஆரம்பித்து சுழற்சி முறையில் 8 முறை ( 8இன்டூ7=56) வந்து கிருஷ்ண பக்ஷ சதுர்தசியின் முதல் கரணமான பத்திரையில் முடிவடைகிறது. ஆகையால் இவை சர கரணங்கள் என அழைக்க படுகிறன.
 
2007 ம் ஆண்டு நம் Admin ஸ்ரீ. உ.வே. Deevalur N.V.S. ஸ்வாமி பிராமண சங்கத்தில் ஆற்றிய உரையின் தொகுப்பினை எல்லோருடைய பயனுக்காகவும் இங்கே தொகுத்து அளித்துள்ளேன்.


பஞ்சாங்கம் என்றால் என்ன?


முக்கியமான பஞ்ச அங்கங்கள் பற்றி தெரிவிக்கும் நூல் என்பதால் பஞ்சாங்கம் என்று பெயர். பஞ்ச அங்கங்களாவன திதி, வாரம் (கிழமை), நக்ஷத்ரம், லக்னம், யோகம் அல்லது கரணம்.


ராசி மண்டல அமைப்பு:

மொத்தம் 12 ராசிகள் உள்ளன. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்பதாக.

பூமி உருண்டையானது. அதை அட்சரேகை தீர்க்க ரேகை என்ற குறுக்கு மற்றும் நெடுக்குக் (கற்பனைக்) கோடுகளால் பிரிப்பது பற்றி அறிவோம். மொத்தம் 360 டிகிரி கொண்ட இந்த பூமியை 12 குறுக்கு கோடுகளால் சமபாகங்களாகப் பிரித்தால் ஒவ்வொரு பகுதிக்கும் 30 டிகிரி வரும். ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரி என்பது இதனால் ஏற்படுகிறது.


இந்த ராசிகளை வைத்து மாதம் எப்படி உருவாகிறது என்று பார்க்கலாம்.



மாதம் எப்படி உருவாகிறது?


சூரியனின் கிரணங்கள் பூமியில் விழுகிறது.


சூரியன் ஒரே இடத்தில் இருக்கிறது. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது. ஒரு முறை சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் ஆகிறது. அப்படிச் சுற்றி முடிக்கையில் அதிகாலையில் சூரியனுடைய முதல் கிரணம் எங்கே விழுகிறதோ அன்றைய முதல் ராசி அது என்று கொள்ளவேண்டும்.


உதாரணமாக நாம் பன்னிரண்டாகப் பிரித்து வைத்திருக்கும் மேஷராசிக்குரிய சித்திரை மாதத்தில் முதல் பாகையின் (பாகை – டிகிரி) முதல் அம்சத்தில் சூரியனுடைய கிரணம் விழுந்தால் அது சித்திரை மாதம் முதல் தேதி. ஆக சித்திரை மாதம் இப்படித் துவங்குகிறது.

இந்த பூமியானது சூரியனை ஒருமுறை சுற்றி வர 365 நாட்களாகிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். மொத்தம் 360 நாளில் 360 டிகிரியைக் கடந்துவிடுகிறது. ஆக ஒரு நாளைக்கு ஒரு டிகிரி கடக்கிறது. ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றால் பன்னிரண்டு ராசிக்கு தலா ரெண்டு மணிநேரம் என்பது சராசரிக் கணக்கு. ஆனால் துல்லியமாகச் சொன்னால் சில ராசிகளுக்கு சற்றுக் குறைவாகவும் சில ராசிகளுக்கு சற்று அதிகமாகவும் பஞ்சாங்கத்தின் மூலம் அறியலாம். துல்லியக் கணக்கு கீழே....




மேஷம் 1.49
ரிஷபம் 2. 02
மிதுனம் 2.11
கடகம் 2.08
சிம்மம் 2.01
கன்னி 1.59
துலாம் 2.04
விருச்சிகம் 2.10
தனுசு 2.08
மகரம் 1.55
கும்பம் 1.43
மீனம் 1.49

மேஷராசியின் முதல் பாகையை முதல் நாள் சூரியன் கடக்கிறது என்று பார்த்தோம். ஒரு டிகிரி என்பது நான்கு நிமிடம் என்பதால் இதுபோல 30 டிகிரியைக் கடக்க 30 x 4 = 120 நிமிடங்கள் எடுத்துக்கொண்டு ஒரு ராசியைக் கடக்கிறது. காலையில் ஆரம்பித்ததிலிருந்து ரெண்டு, ரெண்டு மணி நேரம் ஒரு ராசியைக் கடக்க எடுத்துக்கொள்கிறது என்று தோராயமாகச் சொல்லலாம். ஆனால் முதல் நாள் ஒரு பாகையைக் கடந்துவிடுவதால் அடுத்தநாள் நாலு நிமிடம் குறைவாக எடுத்துக்கொள்ளவேண்டும். இதுபோல மாதம் முழுக்க ஒவ்வொரு பாகையாகக் கடந்து சித்திரை மாதம் கடைசி நாள் ஒன்றுமே இல்லாமல் போகிறது. இப்படி அடுத்த மாதம் பிறக்கிறது.



மாதம் உருவாவது எப்படி என்று தெரிந்து கொண்டதிலேயே ராசி இருப்பு என்ற பதத்தின் பொருளும் விளங்கும். கடக்க வேண்டிய மீதி ராசியே ராசி இருப்பு என்று சொல்கிறோம். உதாரணமாக இன்று ஆடி மாதம் பத்து தேதி என்று கொண்டால் கடகராசியில் (10x4=40) 40 நிமிடங்கள் போக மீதி 80 நிமிடங்கள் ராசி இருப்பு என்று சொல்லலாம். நமது பரந்தாமன் பஞ்சாங்கத்தில் மட்டும் நாழிகை கணக்கில் இல்லாமல் மணியிலேயே ராசி இருப்பு போடப்பட்டிருக்கிறது.



ஸ்தான சுத்தம் என்றால் என்ன?


முஹூர்த்தத்திற்காக நாம் ‘லக்னம்’ என்று பார்க்கிறோம்.



லக்னம் என்றால் என்ன?


ஒவ்வொரு நாளும் 12 ராசிகள் வருகின்றன என்று பார்த்தோம். நாம் முஹூர்த்தத்துக்காக எந்த ராசியைத் தேர்ந்தெடுக்கின்றோமோ அதுவே லக்னம் எனப்படும். மற்றபடி ராசிக்கும் லக்னத்துக்கும் எந்த வித்யாசமும் கிடையாது. முஹூர்த்தத்துக்காக எந்த ராசியைத் தேர்ந்தெடுக்கின்றோமோ அதுவே லக்னம் ஆகும். சில முஹூர்த்தங்களுக்காக எந்த ஸ்தானம் சுத்தமாக இருக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறதோ லக்னத்திலிருந்து அந்த இடம் வரை எண்ணி அதில் ராகு, கேது, சனி, சுக்கிரன் என்று எந்த க்ரஹமும் இல்லாமல் இருப்பதே ஸ்தான சுத்தம் ஆகும்.

கிரகங்களின் இடமாற்றம்:

அடுத்து கிரகங்களின் இடமாற்றம் பற்றித் தெரிந்து கொள்வோம்.
பூமியைப் போலவே 9 கிரகங்கள் உண்டு என்று நாம் அறிவோம். பூமி சூரியனைச் சுற்றுவது போலவே அவைகளும் அவைகளுக்குரிய பாதையில், அவைகளுக்குரிய வேகத்தில் சுற்றி வருகின்றன. சந்திரன் பூமியைச் சுற்றி வருகின்றது என்பதையும் நாம் அறிவோம். இந்த நிலையை பஞ்சாங்கத்தில் அந்தந்த மாதத்தின் பக்கத்திலேயே கட்டத்தில் போட்டிருப்பார்கள்.


மாத ஆரம்ப நாள் அன்று எந்த கிரகம் எந்த ராசியில் இருக்கிறது என்று போட்டிருப்பார்கள். சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் சீக்கிரமாக ராசி மாறாது.
ஆனால் சுக்ரன், புதன், செவ்வாய் போன்ற கிரகங்கள் வேகமாக மாறும். சில சமயம் மாதம் ரெண்டு முறை கூட மாறும். அந்த மாற்றத்தை எந்த தேதியில் எந்த ராசிக்கு மாறுகிறது என்று கட்டத்தின் நடுவிலேயே கொடுத்திருப்பார்கள்.


இப்படி கிரகங்களின் இடமாற்றம் பற்றிக் குறிப்பிட்டவர்கள் சந்திரனின் இட மாற்றத்தைப்பற்றி மட்டும் எங்கும் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். காரணம் சந்திரனின் இடமாற்றம் என்பது அபரிமிதமானது. இரண்டரை நாளுக்கு ஒருமுறையாக ராசி மாறிவிடுவார் அவர். அவரின் இட மாற்றத்தை கணிப்பது கடினம் என்பதாலேயே பஞ்சாங்கத்தில் குறிப்பிடுவதில்லை. ஆனால் அவர் இருக்குமிடத்தை நாம் தெரிந்து கொள்ள முடியும். அதற்கு நட்சத்திரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும்..


நட்சத்திரங்கள் பற்றிய அறிவு:


சந்திரனுக்கும் நட்சத்திரங்களுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால் கணவன் மனைவிக்குள்ள தொடர்புதான். சந்திரனுக்கு 27 நட்சத்திரங்களை மணமுடித்து வைத்திருக்கிறார்கள் என்று கதை உண்டு. அதனால் அன்றைய நாள் என்ன நட்சத்திரமோ அதுவே சந்திரன் இருக்கும் இடம் என்று தெரிந்து கொள்ளலாம். இனி நட்சத்திரம் பற்றிப் பார்ப்போம்.


ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரி என்று பார்த்தோம். அந்த 30 டிகிரியை ஒன்பது பாதங்களாகப் பிரித்துவிடவேண்டும். அப்படிப்பிரிக்கப்பட்ட ஒன்பதில் ஒரு பாதத்துக்கு (1/9) நவாம்சம் என்று பெயர்.


அதாவது அஸ்வினி என்று எடுத்துக்கொண்டால் 1 2 3 4 பாதங்கள் உண்டு. பரணிக்கும் அப்படியே 1 2 3 4 பாதங்கள் உண்டு. அடுத்து கிருத்திகைக்கும் அப்படியே உண்டு. அதில் முதல் பாதம் மட்டும் எடுத்துக்கொண்டு மேஷ ராசிக்கு அஸ்வினி 4 பாதங்கள், பரணி 4 பாதங்கள், கிருத்திகை ஒரு பாதம் மொத்தம் 9 பாதங்கள், அதாவது ரெண்டேகால் நட்சத்திரம் மேஷராசிக்கு என்று கொள்ளவேண்டும்.


கிருத்திகை 2 3 4 பாதங்கள், ரோகிணி 1 2 3 4 பாதங்கள், மிருகசிரீஷம் 1 2 பாதங்கள் ஆக 9 பாதங்கள், ரெண்டேகால் நட்சத்திரம் ரிஷப ராசிக்கு.


கீழே அட்டவணையில் உள்ளது போல பார்த்துக்கொள்ளவும்.


அஸ்வினி1,2,3,4
பரணி1,2,3,4
கார்த்திகை -1 – மேஷம்

கார்த்திகை-2,3,4
ரோகிணி-1,2,3,4
ம்ருகசீரீஷம்-1,2 – ரிஷபம்

ம்ருகசீரீஷம்-3,4
திருவாதிரை 1,2,3,4
புனர்பூசம் -1,2,3 – மிதுனம்

புனர்பூசம் -4
பூசம்-1,2,3,4
ஆயில்யம்-1,2,3,4 – கடகம்

மகம்-1,2,3,4
பூரம்-1,2,3,4
உத்திரம்-1 – சிம்மம்


உத்திரம்-2,3,4
ஹஸ்தம் -1,2,3,4
சித்திரை-1,2 - கன்னி

சித்திரை -3,4
ஸ்வாதி - 1, 2,3,4
விசாகம் -1,2,3 - துலாம்


விசாகம் - 4
அநுஷம் - 1,2,3,4
கேட்டை-1,2,3,4 - விருச்சிகம்


மூலம்-1,2,3,4
பூராடம் -1,2,3,4
உத்ராடம் – 1 – தனுசு


உத்ராடம் - 2,3,4
திருவோணம்-1,2,3,4
அவிட்டம்-1,2 - மகரம்

அவிட்டம்-3,4
சதயம் -1,2,3,4
பூரட்டாதி - 1,2,3 - கும்பம்


பூரட்டாதி -4
உத்ரட்டாதி -1,2,3,4
ரேவதி-1,2,3,4 – மீனம்


இப்படி ரெண்டேகால் நட்சத்திரங்களாக ஒவ்வொரு ராசிக்கும் போட்டால் மொத்தம் 108 அம்சங்கள். அதாவது 9 x 12 = 108, அல்லது 27 x 4 = 108 நவாம்சங்கள் என்பதுவரை தெளிவு.


சில நட்சத்திரங்கள் (அஸ்வினி, பரணி போன்றவை) கட்டாயம் மேஷராசியில்தான் வரும். கிருத்திகை என்றால் முதல் பாதம் மட்டும் மேஷத்திலும் மீதி மூன்று பாதங்களானால் ரிஷபத்திலும் வரும். ஆகையால் ஒருவரது நட்சத்திரமும் அதன் பாதமும் தெரிந்துவிட்டால் அவரது ராசியைக் கண்டுபிடித்துவிடலாம். பஞ்சாங்கத்தில் அன்றைய நட்சத்திரமும் போட்டிருக்கும் என்பதால் அதை அறிவதும் சுலபம். பாம்பு பஞ்சாங்கம் என்றால் கடைசியில் சந்திரன் எந்த ராசியில் இருப்பார் என்றும் போட்டிருப்பார்கள்.
இனி சுபகாரியங்களுக்கு விலக்கவேண்டிய கிழமைகள், நட்சத்திரங்கள், திதிகள், என்னென்ன என்று பார்க்கலாம்.

- - - Updated - - -

விலக்க வேண்டிய, திதி, வார, நட்சத்திரங்கள்:

செவ்வாய் சனி குருட்டு நாட்கள் எனப்படும். இவைகளில் செய்யப்படும் சுபகாரியங்கள் விருத்தியடையாது என்கிறது ஜோதிஷ சாஸ்திரம்.

ஞாயிறு, திங்கள் ஒரு கண் உள்ளவை. ஆகவே பாதி வெற்றி என்று கொள்ளலாம்.



புதன், வியாழன், வெள்ளி ஆகியவை இரு கண் உள்ள நாட்கள். அவை உத்தமம் ஆகும். இவற்றில் செய்யப்படும் சுப காரியங்கள் நன்றாக விளங்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.

விலக்க வேண்டிய திதிகள் என்றால் பிரதமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, சதுர்தசி, அமாவாசை மற்றும் பௌர்ணமி. இவைகளில் எந்த சுப காரியங்களும் செய்யக்கூடாது.


மீதியுள்ள திதிகளிலே மத்யமமான திதிகளும் உள்ளன, உத்தமமான திதிகளும் உள்ளன.


அடுத்து ஆகாத நட்சத்திரங்கள் என்று சொன்னால் கீழே உள்ள அட்டவணைப் படி அறிந்துகொள்ளலாம்.



நல்ல நட்சத்திரம்





அஸ்வினி
ரோகிணி
மிருகசிரீஷம்
புனர்பூசம்
பூசம்
மகம்
உத்திரம்
ஹஸ்தம்
சித்திரை
சுவாதி
அனுஷம்
உத்திராடம்
திருவோணம்
உத்திரட்டாதி


கூடாத நட்சத்திரம்
பரணி
கிருத்திகை
ஆயில்யம்
பூரம்
கேட்டை
பூராடம்
பூரட்டாதி


சுமாரானவை
திருவாதிரை
விசாகம்
மூலம்
அவிட்டம்
சதயம்
ரேவதி




யோகங்கள்:


அடுத்து நாம் அறிய வேண்டியது சித்த அமிர்தாதி யோகங்கள். அவை மூன்று வகைப்படும். சித்த, அமிர்த, மரணயோகங்கள். இன்னின்ன கிழமையும் இன்னின்ன திதியும் சேர்ந்தால் இன்னின்ன யோகம் என்கிறது சாஸ்திரம். அதை பஞ்சாங்கத்தில் சி, அ, ம என்று முதலெழுத்தைப் போட்டு குறிப்பிட்டிருப்பார்கள். இதைப் பஞ்சாங்கத்தில் அட்டவணையாகவே கொடுத்திருப்பார்கள்.


அமிர்த யோகத்தைவிட சித்தயோகம் நல்லது.



இதுதவிர அன்றன்றைய தேதியிலும் யோகம் பற்றிக் குறிப்பிட்டிருப்பார்கள். இந்த அட்டவணை ஒவ்வொரு பஞ்சாங்கத்திலும் இருக்கும்.





இதுவரை நல்லநாள் பார்க்கத் தேவையான விஷயங்களை தெரிந்துகொண்டோம். இனி பஞ்சகம் என்றால் என்ன என்று பார்க்கலாம்.

பஞ்சகம் என்றால் என்ன?


நல்ல காரியத்துக்கு லக்னம் குறிக்கும்போது முக்கியமாகப் பஞ்சகம் பார்த்துக் குறிக்க வேண்டும். திதி, கிழமை, நட்சத்திரம், லக்னம் ஆகிய நான்கு விஷயங்களைக் கூட்டி ஒன்பதால் வகுத்து வரும் மீதியை வைத்து உத்தமான நாள், மத்திமமான நாள், அதமமான நாள் என்று அறிவது பஞ்சகம். இது மிக முக்கியம்.

இதை எப்படி வைப்பது என்றால் பிரதமை, த்விதீயை என்று ஆரம்பித்து அந்த வரிசையை 1, 2 என்று எண்ணாகக் கொள்ளவேண்டும். கிழமை என்றால் ஞாயிறு முதலும், நட்சத்திரங்களில் அஸ்வினி முதலும், லக்னங்களில் மேஷம் முதலும் என்று கொள்ளவேண்டும். இப்படி நாம் குறித்த நாளுக்குரிய திதி, வார, நட்சத்திர, லக்ன எண்களைக் கூட்டி 9ஆல் வகுத்தால் வரும் மீதியைக் கொண்டு பஞ்சகத்தை அறியலாம். இது மிக மிக முக்கியம்.

உதாரணமாக எல்லாம் கூட்டி 39 என்று வந்தால் அதை 9 ஆல் வகுக்க மீதி 3 என்று வரும். அது உத்தம பஞ்சகம் ஆகும். 3, 5, 7, 9 என்று மீதி வந்தால் அவை உத்தமம் என்று அறியலாம்.

1, 2, 4, 6 மற்றும் 8 என்று வந்தால் அவை முறையே மிருத்யு பஞ்சகம், அக்னிபஞ்சகம், ராஜபஞ்சகம், சோர பஞ்சகம், ரோக பஞ்சகம் என்று அறியலாம். இவை அதமங்களாகும். அதாவது விலக்கவேண்டியவைகள்.
இன்னும் சிலர் துருவங்களையும் கூட்டி பஞ்சகம் அறிவர். துருவம் என்றால் மீனம், மேஷம் என்று சந்திக்கக்கூடிய துருவங்களைக் கூட்டியும் பஞ்சகத்தை தீர்மானிப்பார்கள். அதுவும் அட்வான்ஸ் லெவெலில் பார்க்கலாம்.


ஏன் 9 ஆல் வகுப்பது என்பதும் அடுத்த லெவெலில் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயம். இங்கே 9 ஆல் வகுக்கனும் என்று தெரிந்துகொள்வோம். அதே போல பஞ்சகம் எப்படியுள்ளது என்பதையும் பஞ்சாங்கம் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.


அடுத்து தினப்பொருத்தம் பற்றியும் அதை எப்படிப் பார்ப்பது என்றும் பார்க்கலாம்.

தினப்பொருத்தம் :


தினப்பொருத்தம் பார்க்கவேண்டியது முக்கியம். அதை ஆணுக்கு பார்க்கணுமா இல்லை பெண்ணுக்கா? என்றால் ஒரு சிம்பிள் லாஜிக் உண்டு. எங்கெல்லாம் பொம்மனாட்டிகள் சம்பந்தப்படுகிறார்களோ அங்கெல்லாம் பெண்களுக்குதான் தினப்பொருத்தம் பார்க்கணும்.


விவாஹம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற காரியங்களில் பெண்ணுக்குத்தான் தினப் பொருத்தம் அவசியம். உபநயனம் என்றால் ஆண்களுக்குத்தான் பார்க்கணும். அதேபோல சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் எல்லாம் ஆண்களுத்தான் பண்ணுவது (கூட பெண்கள் இருந்தாலும்) என்பதால் அவர்களுக்கு பார்க்கவேண்டியதுதான் முக்கியம்.

தினப்பொருத்தம் எப்படிப் பார்ப்பது?


யாருக்கு தினப்பொருத்தம் பார்க்கிறோமோ, அவர்களின் நட்சத்திரத்திலிருந்து நாம் பார்த்துவைத்திருக்கும் நாளின் நட்சத்திரம் வரை எண்ணி, அதை 9 ஆல் வகுத்தால் என்ன மீதி வருகிறதோ அதை வைத்து தினப்பொருத்தம் உண்டா இல்லையா என்று தெரிந்துகொள்ளலாம். இது 2, 4, 6, 8, 9 என்று வந்தால் உத்தமம். தாராளமாக லக்னம் வைக்கலாம். அடுத்து நாம் அறியவேண்டியது சந்திராஷ்டமம் என்றால் என்ன என்பது.

இந்த வார்த்தையில் சந்திரன், அஷ்டமம் என்று ரெண்டு பதங்கள் உள்ளன. நாம் பிறந்த ராசியிலிருந்து எட்டாம் ராசியில் சந்திரன் இருக்கும் நாட்கள் எல்லாம் சந்திராஷ்டமம் எனப்படும். இந்த நாட்களில் (சிக்கல்கள், மனத்தாங்கல்கள் போன்ற) விபரீதமாகப் பலன்கள் இருக்கும் என்பதால் அதை விலக்குவது. விவாஹத்துக்கு லக்னம் வைக்கும்போது ஆணுக்கும், பெண்ணுக்கும் சந்திராஷ்டமம் இல்லாத நாட்களையே தேர்ந்தெடுக்கவேண்டும்.


இதை எப்படிக் கண்டறிவது என்றால் அவரவர் நட்சத்திரத்திலிருந்து 17ம் நட்சத்திரம் என்றைக்கோ அன்றைக்கே சந்திராஷ்டமம் என்று கீழே உள்ள அட்டவணையைப் பார்த்து அறியலாம்.




அடுத்து சூரிய உதயத்தின் பயன் என்ன என்று பார்க்கலாம். மேலும் சந்திராஷ்டமம் பற்றி அறியஇங்கே செல்க..
 
சூர்யோதயம் எதற்காகத் தெரிந்துகொள்வது?


பஞ்சாங்கங்களில் ஒவ்வொரு தேதியிலும் இன்ன நட்சத்திரம் இவ்வளவு நாழி இருக்கும், இன்ன திதி இவ்வளவு நாழி இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். பரந்தாமன் பஞ்சாங்கத்தில் ஆங்கில மணியிலும், மற்ற பஞ்சாங்கங்களில் நாழிகைக் கணக்கிலும் குறிப்பிட்டிருப்பார்கள். அது அன்றைய சூரிய உதயத்திலிருந்து இவ்வளவு நாழி அல்லது மணி இருப்பதாகப் புரிந்துகொள்ளவேண்டும்.


சூரியோதயம் என்பது ஏப்ரல் மே மாதங்களில் கிட்டத்தட்ட ஆறு மணியாக இருக்கும். பின்னால் செல்லச்செல்ல, மார்கழி போன்ற மாதங்களில் பார்த்தால் கிட்டத்தட்ட 6.40 என்பதாகத் தள்ளிச்சென்றுவிடும். இப்போது மார்கழி மாதத்தில் ஒரு வியாழனன்று காலை 7. 45 க்கு முஹூர்த்தம் வைத்துக்கொள்கிறோம் (அன்று 6 – 7.30 a.m..யமகண்டம்) என்றால் அந்த மாதம் சூர்யோதயம் 6.40 என்றால் நாம் வைக்கும் முஹூர்த்தம் யமகண்டமாக ஆகிவிடும். இது போன்றவைகளைத் தவிர்க்கவே சூர்யோதயத்தைத் தெரிந்துகொள்வது.


இது நாட்டுக்கு நாடு மாறும். ஒரே ரேகையில் இருக்கும் நாடுகளில் பெரிதாக மாறுதல்கள் இருக்காது. ஆனால் கிழக்கு மேற்காக இருக்கும் நாடுகளில் வித்யாசம் இருக்கும். அதனால் அதைக் கவனத்தில் கொண்டு நாம் நேரத்தைக் குறிக்கவேண்டும்.


அடுத்ததாக நாழிகையை மணியாக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.


நாழிகை ----------- மணி:


ஒரு நாளைக்கு 24 மணிநேரம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் முன்காலத்தில் நாழிகைக் கணக்கில் இருக்கும்போது ஒரு நாளைக்கு 60 நாழிகையாக வைத்திருந்தனர். இது ரெண்டும் ஒன்றுதான்.
ஒரு மணி நேரத்துக்கு 60 நிமிடங்கள். நாழிகைக் கணக்கில் பார்த்தால் ஒரு நாழிகைக்கு 60 விநாழிகை என்று அளவு. இதை அறிவது மிகவும் சுலபம்.


ஒரு மணி நேரத்துக்கு 2 1/2 நாழிகை. ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள். So, 2.5 x 24 = 60 நிமிடங்கள். இதற்கு சுலபமான ஒரு formula இருக்கிறது.


ஒரு நாழிகைக்கு ரெண்டரை விநாழிகை. ஒரு நிமிடத்தை விநாழிகையாக மாற்றவேண்டும் என்றால் அதை ரெண்டரையால் பெருக்கிவிடலாம். அதாவது 1 x 2.5 = 2.5 விநாழிகை.


அதே போல விநாழிகையை மணியாக மாற்ற அதை 0.4 வால் பெருக்கிவிடவேண்டும். அதாவது பத்து விநாழிகையை மணியாக மாற்ற 10 x 0.4 = 4 நிமிடங்கள் என்று கொள்ளவும்.

கௌரி பஞ்சாங்கம் என்றால் என்ன?

கௌரி பஞ்சாங்கம் என்று எல்லோரும் கேள்விபட்டிருப்போம். அப்படின்னா என்ன?


சிலருக்கு பஞ்சாங்கத்தைப் புரிந்து கொள்ள, நாள் பார்க்க எல்லாம் சிரமமாக இருக்கும். ஒவ்வொரு பஞ்சாங்கத்திலும் (ஸ்ரீரங்கம் பஞ்சாங்கம் என்றால் 29 பக்கத்திலும் பரந்தாமன் பஞ்சாங்கத்தில் 20 ம் பக்கத்திலும் பார்க்கலாம்) கௌரி பஞ்சாங்கம் என்று, இன்னின்ன கிழமைகளில் பகல் இரவு வேளைகளுக்கு என்று ஒவ்வொரு ஒண்ணரை மணிநேரத்துக்கும் ஒரு பலன் கொடுத்திருப்பார்கள் (கீழே படத்தில் உள்ளபடி). சுப, லாப, சோர, உத்யோக, ரோக என்று பலன்கள் இருக்கும். அதில் தவிர்க்கவேண்டியவைகளை தவிர்த்து சுப வேளைகளில் முஹூர்த்தம் வைக்கலாம்.






அடுத்ததாக ஹோரைகளைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.


ஹோரைகள் என்றால் என்ன?

ஹோரை என்றால் ஒரு கால அளவு. ஒரு மணி நேரத்தை ஹோரை என்று சொல்லலாம். ஆங்கில வார்த்தையான Hour என்பதே ஹோரை என்ற பதத்திலிருந்து வந்திருக்கலாம்.


ராகு கேதுவைத் தவிர்த்து 7 கிரகங்களுக்கு ஹோரை உண்டு. எந்த கிழமையோ அந்தந்தக் கிழமையின் அதிபதிக்கான ஹோரை தான் முதலில் வரும். உதாரணமாக ஞாயிறன்று அதன் அதிபதியான சூரிய ஹோரை தான் முதலில் வரும். சூரிய உதயத்திலிருந்து இந்த ஹோரையைக் கணக்கிடவேண்டும்.
சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என்பதாக அதன் வரிசை இருக்கும். மீண்டும் சூரிய ஹோரை என சுழலும். ஆக சூரிய ஹோரையில் துவங்கும் ஞாயிற்றுக்கிழமை 7 மணி நேரம் ஆனதும் மறுபடி ஒரு மணிக்கு சூரிய ஹோரையாகவே இருக்கும். இதை சுலபமாக தெரிந்துகொள்ள 6 1 8 3 என்ற எண்ணை நினைக்கலாம்.





ஆக, எந்த ஹோரையில் சுப காரியங்கள் விலக்கலாம் என்றும் பஞ்சாங்கங்களில் குறிப்புகள் உண்டு.


ஹோரை பற்றி மேலும் அறியலாம்.


ராகுகாலம், யமகண்டம், குளிகை:

ராகுகாலம், யமகண்டங்கள் எல்லாம் அசுப வேளைகள் என்று எல்லோரும் அறிவோம். பலரும் நினைப்பதுபோல குளிகைக்காலமும் அதே கணக்கில் வராது.

ஒரு சிம்பிள் லாஜிக் என்றால் குளிகை காலத்தில் செய்யும் காரியங்கள் திரும்பத் திரும்ப செய்யும்படி இருக்குமாம். அதனால் அபர காரியங்களை தவிர்த்துவிடவேண்டும். மற்றபடி கிரகப்பிரவேசம், ஆயுஷ்ஹோமம் போல சுப காரியங்களை தாராளமாகச் செய்யலாம். இதுவும் பஞ்சாங்கத்தில் பார்த்து அறியலாம்.


இனி ராகுகால, யமகண்டம் பற்றி:


ஒவ்வொரு நாளும் ராகுகால யமகண்டங்கள் தலா ஒன்றரை மணி நேரத்துக்கு இருக்கும். இந்த வேளை முழுக்க விஷமானதல்ல...அதில் ஏதோ ஒரு மூன்று நிமிடங்கள் தான் கெடுதல் விளைவிக்கும் நேரமாக இருக்கும். அது எந்த மூன்று நிமிடங்கள் என்பது அறிய முடியாது என்பதால்தான் இந்த வேளைகளில் சுப காரியங்களை விலக்குவது. நான் ராகு கால யமகண்டத்தில் செய்த காரியம் நன்றாகவே இருக்கிறது என்று ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் சொல்லக் கேட்டிருக்கலாம், அவர்கள் இந்த மூன்று நிமிடங்களில் மாட்டாததால் தான் தப்பிக்கிறார்கள்.


அடுத்து ஜன்ம, அனுஜன்ம, த்ரிஜன்மங்கள்:

ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் பத்தாவது நட்சத்திரம் அனுஜன்மமாகும். 19 வது நட்சத்திரம் திரிஜன்மமாகும். அதாவது அஸ்வினி, மகம், மூலம் மூன்றும் ஜன்ம, அனுஜன்ம, திரிஜன்மங்களாம். இவைகளின் குணங்கள் ஒன்றாக இருக்கும். பலன்கள் ஒன்றுபோலவே இருக்கும். முதல் பர்யாயம், ரெண்டாம் பர்யாயம், மூன்றாம் பர்யாயாம் என்றும் சொல்லுவதுண்டு. அதற்கேற்ப நாள் பார்க்கலாம். இதன் வரிசை:

அஸ்வினி – மகம் – மூலம்
பரணி – பூரம் – பூராடம்
கார்த்திகை - உத்திரம் - உத்திராடம்
ரோகிணி – ஹஸ்தம் – திருவோணம்
மிருகசிரீஷம் – சித்திரை – அவிட்டம்
திருவாதிரை – சுவாதி – சதயம்
புனர்பூசம் – விசாகம் – பூரட்டாதி
பூசம் – அனுஷம் – உத்திரட்டாதி
ஆயில்யம் – கேட்டை – ரேவதி

இப்படி ஜன்ம அனுஜன்ம திரிஜன்ம நட்சத்திரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.



அடுத்து அக்னி நட்சத்திர காலத்தைப் பற்றி:



அக்னி நட்சத்திரம்:

இந்த காலம் வசந்த காலத்தில் வருகிறது. மிகவும் நல்ல காலம். இந்தக் காலத்தில் சுப காரியங்களை விலக்கவேண்டும் என்று புரளிகள் உண்டு. ஆனால் உண்மை அப்படியல்ல. க்ருஹ்ய சூத்ரத்தில் தக்ஷிணாயன காலத்தை விட உத்தராயண காலமே சிறந்தது, அதில் சுப காரியங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதை பரந்தாமன் பஞ்சாங்கத்தில் போட்டிருப்பார்கள்.

அக்னி நட்சத்திர காலத்தில் செய்யக் கூடியவை:

விவாஹம், உபநயனம், பூச்சூட்டல், கிரகப்பிரவேசம், ருதுசாந்தி.

செய்யத் தகாதவை:

குளம், கிணறு வைப்பது, தோட்டம் வைப்பது, மரம் நடுதல் ஆகியவை.


இனி ஸ்ராத்த திதிகள் பற்றி:


ஸ்ராத்த திதிகளை எப்படித் தெரிந்து கொள்வது என்று பார்க்கலாம். பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு நாளும் இன்னின்ன தேதியில் இன்னின்ன நாழி வரை இன்னின்ன திதி என்பதாக ஒரு திதி போடப்பட்டிருக்கும். அது அந்நாளின் ஸ்ரார்த்த திதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. குதப காலத்தில் என்ன திதியோ அதுவே ஸ்ரார்த்த திதியாகும். அதாவது பிராமணர்களுக்கு தினமும் ஐந்து வித யக்ஞங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன.


தினமும் பெருமாள் திருவாராதனம் செய்வது தேவ யக்ஞம், அடுத்து வேத அத்யயனம் (அத்யயனம் என்றால் வேதத்தை அறிவது, இந்நாளில் வேதாத்யயனம் என்ற இடத்தில் ஏதோ ஒரு ருத்ரம், சமகம், புருஷசூக்தத்தையாவது அனுசந்திக்கவேண்டும்) செய்வது பிரம்ம யக்ஞம், மூன்றாவது பூத யக்ஞம்...நம்மைப் போல மற்ற ஜீவராசிகளுக்கு உணவிடுவது, இந்நாளில் காக்கைக்கு உணவிடுவது இந்த வகையில் வரும். (நம் முன்னோர்களே காக்கையாக வருகிறார்கள் என்பதெல்லாம் உண்மையில்லை). இந்த வரிசையில் நாலாவதாக வருவது பித்ருயக்ஞம் என்கிற பித்ரு தர்ப்பண ஸ்ரார்த்தாதிகள். இதற்கு குதப காலத்தில் மத்யானம் ரெண்டு ரெண்டரைக்கு மேல் நாலு மணிக்குள் செய்யவேண்டும் என்று விதிக்கிறது தர்ம சாஸ்திரம். அந்த நேரத்தில் என்ன திதியோ அதுவே ஸ்ரார்த்த திதியாகும்.




ஸ்ராத்தம் என்றால் என்ன? ஏன் பண்ணுகிறோம்?

நம்மை விட உயர்ந்தவர்களின் தாட்சண்யம் வேண்டும் என்பதற்காக தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் அவர்களுக்கு ஒரு உணவோ, பானமோ தந்து உபசரிப்பது போல பிராமணனாகப் பிறந்தவர்கள் பித்ருக்களுக்கு செய்யும் ஒரு ப்ரீதியே ஸ்ரார்த்தம் என்று சொல்லலாம்.

தாழ்ந்த நிலையில் இருப்பவனுக்கு உயர்ந்த நிலையில் இருப்பவனின் தயவு, தாட்சண்யம் வேண்டும், அதற்காக செய்யப்படும் காரியம்தான் அவனை ரட்சிக்கிறது என்று சொல்ல முடியாது. அதுபோல நாம் இடும் உணவுதான் பித்ருக்களை ரட்சிக்கிறது என்றும் சொல்லமுடியாது.

அதேபோல, ஒரு பிராமணனுக்கு இடும் உணவு எப்படி பித்ரு லோகத்தில் உள்ள பித்ருக்களுக்கு போய்ச் சேரும் என்று விஞ்ஞான பூர்வமாயும் விளக்க முடியாது. அப்படி இருந்தால் வெளியூருக்குச் சென்றவனை நினைத்து வேறு ஒருவனுக்கு உணவிட்டால் வெளியூர் சென்றவன் வயிறு நிரம்பணுமே... அதனால் மந்திர பூர்வமாக பித்ருக்களின் கவனத்தை நம் பக்கம் ஈர்த்து அவர்களின் பரிவு, ப்ரீத்தியை சம்பாதிப்பதே ஸ்ரார்த்தத்தின் நோக்கு என்று தெரிந்து கொள்வோம்.

இதைத் தெரிந்துகொள்ள சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த பூமிப் பரப்பில் பல ஆன்மாக்கள் பரந்துள்ளன. பூமியில் மனித, பிராணி, ஸ்தாவரங்கள் என்று மூவகை உயிரினங்கள் உள்ளன. அவைகள் சதா தம் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த ஆன்மாக்கள் பூமி பரப்பிலேயே இருந்தால் அப்படிப் பட்ட ஒரு இனப்பெருக்க சம்பவத்தில் புகுந்து மறுபடி இங்கேயே பிறக்கும். ஆனால் மறுபிறவி வேண்டாம் என்று நினைக்கும் பிராமணர்கள் அந்த ஆன்மாக்களை அடுத்த நிலைக்கு தூக்கிவிடக் கூடிய காரியம்தான் ஸ்ரார்த்தமாகும்.

பித்ருக்கள் வசு, ருத்ர, ஆதித்ய ரூபங்களில் இருப்பர். நாம் ஒரு ஆன்மாவை உயரத் தூக்கி விடும்போது பித்ருக்களும் நம் மேல் கொண்ட பரிவால் அங்கிருந்து ஆன்மாக்களை இழுத்துக் கொள்கிறார்கள். அதாவது ஒரு Tug of Warல் இழுத்தவன் அதே இடத்தில் நில்லாமல் சற்றுத் தள்ளி நிற்பதுபோல வசுக்கள், ருத்ரர்களாகவும், ருத்ரர்கள் ஆதித்யர்களாகவும், ஆதித்யர்கள் சுவர்க்கம் போகத்தகுதி பெறவும் என்பதாக அடுத்த நிலையை அடைய ஸ்ரார்தங்கள் உதவும். இவையெல்லாம் பிராமணர்களுக்கு உள்ள பொது விதிகள். வைஷ்ணவர்களுக்கு வேறு concept உண்டு.


பெருமாள் நமக்கு ஒத்தாசை பண்ணுவார். தேவதைகள் நமக்கு ஒத்தாசை பண்ணுவா. ஆனா அதெல்லாம் அவர்களை ஸ்தோத்திரம் செய்பவர்களுக்கு, சாஸ்திரம் விதித்தபடி அவர்களுக்கென்று ஏற்பட்டிருக்கும் சோம, அஸ்வமேத யக்ஞங்களை ஸ்ரத்தையாக செய்பவர்களுக்குத்தான் ஒத்தாசை பண்ணுவா. ஆனா பித்ருக்கள் அப்படியில்லை. நாம் சாதாரணமாக சாதத்தைத் தந்தாலே அதை நினைவு வைத்துக்கொண்டு நமக்கு உபகாரம் பண்ணுவார்கள் பித்ருக்கள். தேவதைகள் பொதுவாக எல்லோருக்கும் உபகாரம் பண்ணுபவர்கள் பித்ருக்களோ நமக்காக பெர்சனலாக உபகாரம் பண்ணுமவர்கள். இதனால் பல தேவதைகளை உபாசித்துப் பெறும் பலன்களை பித்ருக்களை உபாசித்தே பெறலாம் என்று ஏற்படுகிறது.


பாவம், புண்ணியம் – என்ன அர்த்தம்?

ச்லோகார்த்தேந ப்ரவக்ஷயாமி யதுக்தம் க்ரந்த கோடீஷு
பரோபகார: புண்யாய பாபாய பரபீடநம்"

என்று ஒரு ஸ்லோகம் உண்டு. இதன் பொருள்: கோடிக்கணக்கான கிரந்தங்களில் சொல்லப்பட்டிருப்பதை அரை ஸ்லோகத்தால் சொல்கிறேன் என்கிறார். அப்படி என்ன சொல்லப் போகிறார் என்றால் தன்னலத்துக்காக இல்லாமல், பிறர் நலத்துக்காக என்ன காரியமெல்லாம் செய்கிறோமோ, அவை புண்யங்கள். பிறத்தியாரை உபத்ரவித்து, ஹிம்சித்து பண்ணும் காரியங்கள் எல்லாம் பாபங்கள்.
இந்த பாப புண்ணியங்களின் காரியம் என்ன என்றால் மேலே சொன்னதுபோல ஆன்மாக்களை மேலே எழும்ப விடாமல் பூமியை நோக்கி இழுப்பது பாபங்களின் வேலை. அப்படி இழுக்க விடாமல் தடுக்கும் தடைகளை போக்கி மேலே இழுக்க உதவுவது புண்ணியங்களின் வேலை.


பிராமணர்களின் சிறப்பு:

இந்த பாப புண்ணியங்கள்தான் உலகத்தையே ஆட்டிவிக்கின்றன. பாவங்கள் எப்படி வரும்? என்றால் நம் உடல் இச்சையைத் தீர்த்துக்கொள்ள அதமமான காரியங்களில் ஈடுபடுவதும், நாம் நன்றாக சௌக்கியமாக இருக்கவேண்டும் என்பதற்காக பொருள் ஆசையால், பொருளை சேர்ப்பதற்காக அதர்ம காரியங்களைச் செய்வது என்ற இந்த ரெண்டு காரியம்தான் எல்லா பாபங்களுக்கும் அடிப்படையா இருக்கும். புண்ணியம் பண்ண தர்மத்தை போஷிப்பதுதான் வழி.


இப்படி சம்பாதித்த பாபங்களை ரெண்டு வழியால் போக்கிக்கலாம். ஒன்று ஜபதபங்கள், உபவாசம், தீர்த்தயாத்திரை போல உடல் வருத்தி செய்யும் காரியங்கள் மூலமாகப் போக்கிக்கலாம். இன்னொன்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் எத்தனையோ வகை தானங்களை பிராமணர்களுக்கு அளிப்பதன் மூலம் போக்கிக்கலாம்.


எல்லோர் உடம்பிலும் சிவப்பு ரத்தம்தானே ஓடுகிறது? எதற்கு பிராமணனுக்கு என்று தனியாக சொல்லியிருக்கு என்றால் பிறரிடம் தானம் பெற்று அவர்களின் பாபத்தையும் போக்கி, தன்னையும் பாபமற்றவனாகச் செய்துகொள்ளத்தான் வேதாத்யயணம் போன்றவைகளை சாஸ்திரம் பிராம்மணனுக்கு விதிக்கிறது. அதற்கான காரியம்தான் சந்த்யாவந்தனங்கள்.


முன் தின இரவில் செய்த பாபத்தை பிரார்தர்சந்த்யையில் ‘சூர்யஸ்ச்ச மாமன்யுஸ்ச’ என்றும் பகலில் பண்ண பாவங்களை ‘அக்னிஸ்ச்ச மாமன்யுஸ்ச’ என்றும் மந்திரங்கள் சொல்லி போக்கிக்கொள்கிறான். மாத்யாஹ்நிகத்தில் பஞ்சமாபாதகம், உபபாதகங்களைப் போக்கிக் கொள்கிறான்.

அதனால் பிராம்மணர்கள் அனைவரும் சந்த்யாவந்தனாதிகளைத் தப்பாமல் செய்ய வேண்டும்.


பஞ்சாங்க தானம்:

மேலே சொன்ன அனுஷ்டானங்களை பண்ண பஞ்சாங்க நூல் மிகவும் உதவும் என்பதால் எல்லா தானங்களிலும் பஞ்சாங்க தானம் உயர்ந்தது.

சர்வே ஜனா சுகினோ பவந்து!


1. சூரிய உதயம்தான் அடிப்படை - அத்துடன் கூட்டித்தான் திதி, நக்ஷத்திரம், யோகம், கரணம் ஆகிய அனைத்தையும் அறியவேண்டும்.
2. சூரிய உதயத்திலிருந்துதானே குதபகாலம் கணக்கிட முடியும்? அன்றைய திதி என்பது ச்ராத்திற்குத்தான் பொருந்தும், அந்த க்ஷணத்திற்கு
(விநாடியில் சிறு பகுதி அல்லது கண் இமைக்கும் நேரத்திற்கு க்ஷணம் என்று பெயர்?!) என்ன திதி, நக்ஷத்திரம் .... என்று வேண்டுமானால் சொல்லலாம்.
3. ச்ராத்த திதி நிர்ணயம் மிகவும் சிக்கலானது நிறைய நிபந்தனைகள் உள்ளன -

இதோ அந்த நிபந்தனைகள் முடிந்தால் புரிந்துகொண்டு பின்பற்றவும். அடியேன் இந்த வம்புக்கெல்லாம் போவதில்லை, ப்ரபல பஞ்சாங்கங்களைப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து
சரியானதைக் குறித்து வைத்துக்கொள்வேன்

ஒரு திதியானது அபரான்னம் காலத்திற்கு (18 முதல் 24 நாழிகை) மேல் வியாபித்திருக்கும் திதியே அன்றைய திதியாகும்.
அதாவது 24 நாழிகைக்கு மேல் வியாபித்திருக்கும் திதியே அன்றைய திதியாகும்.

ஒரு திதியானது மத்தியான்னம் முதல் அபரான்னம் வரை வியாபித்திருக்குமேயானால், பகல் அகசை (அகசு என்பது பகல் 12 மணி நேரம் இரவு 12 மணி நேரம் என்பது
சில மாதங்களில் பகல் நேரம் அதிகமாகவும் இரவு நேரம் குறைவாகவும் இப்படி மாறியும் இருப்பதால் வரும் கால வித்தியாசம் எனப்படும்.
இதை பஞ்சாங்கத்தில் அகசு நாழிகை என்று குறித்திருப்பார்கள்)
பிராத - ஸங்கல - மத்தியான்ன - அபரான்ன - சாயன்ன என ஐந்து கூறுகள் செய்து
அபரான்ன காலத்தில் அதிகம் வியாபித்திருக்கின்ற தினத்தில் திதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.

ஒரு திதியானது சாயான்னத்தில் தொடங்கி மறுநாள் மத்தியான்ன காலத்தில் முடிந்து விட்டால்,
மறுநாள் குதப கால ஆரம்பமாகிய 14 நாழிகைக்கு மேலும் ரெளஹீன காலத்தில் முடிகின்ற 8 நாழிகைக்குள்ளும்
இந்த திதியின் சிரார்த்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒரு திதியானது மாத ஆரம்பம் மற்றும் மாத முடிவில் ஆக இரண்டு தடவை வந்தால், பிந்தின திதியை அனுஷ்டிக்க வேண்டும்.
பிந்தின திதியில் சங்கராந்தி கிரகண தோஷங்கள் ஏற்பட்டால் முந்தின திதியை அனுஷ்டிக்க வேண்டும்.
பிந்தினது அதிகத் திதியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

சங்கராந்தி தோஷம் என்பது பகல் 12 நாழிகைக்கு மேலும் இரவு 15 நாழிகை வரையிலும் இருக்கும்.

ஒரு திதியானது ஒருமாதத்தில் ஒரு தடவை வந்து அந்த திதியானது அன்று அபரான்ன காலம் வரை வியாபித்திராத போது,
அன்றைய திதியை சிரார்த்தத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடாது. பூர்வமாத (முந்தைய மாத) திதியை சிரார்த்தத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அனுஷ்டிப்பதில் முன் மாதத்தின் குதப கால தொடர்பு இருக்க வேண்டும்.
அதாவது குதப கால ஆரம்பமாகியய 14 நாழிகைக்கு மேலும் ரெளஹீன காலத்தில் முடிகின்ற 8 நாழிகைக்குள்ளும் தொடர்பு இருக்க வேண்டும்.
சங்ிகரம தோஷமும் இருக்கக் கூடாது.

மேறக்ணடவாறு முந்தின மாத திதி அமையவில்லையெனில் அந்த மாதத் திதியையே அனுஷடிக்கலாம்.

ஒரே மாதத்தில் இரண்டு திதிகள் வந்து இரண்டிற்கும் சங்கராநதி தோஷம் ஏற்பட்டிருந்தால் அதற்கு அடுத்த மாதம் வரும் திதியே சிலாக்கியமாகும்.


4. சூரிய உதயத்திலிருந்து குறைந்தது 12 நாழிகை இருந்தால் அன்றைய தினம் குறிப்பிட்ட நக்ஷதிரக்காரர்களுக்கான விசேஷத்தைச் செய்யலாம்.

5. பாதி மாதத்திற்கு மேல் வரும் நாட்களையே நிஜமாதம் என்பார்கள். (நிஜம் என்றால் உண்மை)
அப்போ முன்பாதி மாதம் பொய்யா என்று கேட்கக்கூடாது (சரி அடியேனே சொல்லிவிடுகிறேன்) - இது இன்னும் கொஞ்சம் தலை சுற்றலை உண்டாக்கும்
பஞ்சாங்க கணிதம் சௌரமான, சாந்திரமான என சில அடிப்படை சித்தாந்தங்களைக் கொண்டு கணிக்கப்படுகிறது, இதனால் சில சமயம் சாந்திரமான
பஞ்சாங்கத்தின் முன்பகுதி வேறு அடிப்படையில் முன் மாத்தின் தொடர்ச்சியாக - நீட்சியாக (அதை அதிக மாதம் என்கிறார்கள்?!) அமைந்துவிடும்,
எனவே பின்பகுதியே நிஜ மாதம் ஆகும்.

யப்பாடா, ஒரு வழியா பதில்னு ஒண்ணு எழுதிட்டேன், அது சரியா தப்பாங்கறதெல்லாம் தெரியாது. தங்களுக்குப் புரிஞ்சதா இல்லையான்றதும் சந்தேஹமே?!
தாஸன்,
என்.வி.எஸ்
 
பஞ்சாங்கம் படித்து செய்வதனால் ஏற்படும் பலன்கள். நல்ல திதிகளில் செய்யும் காரியங்கள் லக்ஷிமி கடாக்ஷத்தை கொடுக்கும். நல்ல கிழமைகளில் செய்ய படும் காரியங்கள் ஆயுள் விருத்தியை கொடுக்கும்.
நல்ல நக்ஷத்திரங்களில் செய்ய படும் காரியங்கள் பாவங்களை நசிக்க செய்கின்றன. நல்ல யோகங்கள் பார்த்து செய்ய படும் காரியங்கள் சோகங்களை நாசம் செய்யும். நல்ல கரணங்களில் செய்ய படும் காரியங்கள் அந்த காரியங்களில் வெற்றி யடய செய்கின்றன.




பஞ்சாங்கம் என்பது வாக்கிய முறை, திருக்கணித முறை, எபிமெரிஸ் முறை என்ற மூன்று விதங்களில் கணிக்க படுகிறது.
வாக்கிய பஞ்சாங்கம் என்பது ரிஷிகளால் கணித்து சொல்லபட்ட சூத்திரங்களை அடிப்படையாக கொண்டு கணிக்க படுகிறது.
திருக்கணித பஞ்சாங்கம் என்பது கோள்கலின் வட்ட பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு கணித அடிப்படையில் கணிக்க படுகிறது.
எபிமெரிஸ் பஞ்சாங்கம் மேல் நாட்டு முறைப்படி கணிக்கபடும் பஞ்சாங்கம் ஆகும்.

தமிழ் வருடங்கள் மொத்தம் 60 ஆகும். இது பிரபவ முதல் அக்ஷய வரை திரும்ப திரும்ப வருகிறது. எல்லா பஞ்சாங்கங்களிலும் இந்த 60 வருட பெயர்கள் இருக்கிறது.

தேவர்களின் பகல் நேரம் உத்திராயணம்; இரவு நேரம் தக்ஷிணாயனம். .நமக்கு ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள்.
60 வினாடிகள்=1 நாழிகை; 60 நாழிகை=1 நாள்=24 மணி நேரம்.; 1 நாழிகைக்கு 24 நிமிடங்கள்;
நமக்கு ஒரு நாள் என்பது இன்று ஸூர்ய உதயத்திலிருந்து நாளை ஸூர்ய உதயம் ஆரம்பிக்கும் வரை உள்ள நேரம் ஆகும்.

பஞ்சாங்கங்களில் கொடுக்க பட்டிருக்கும் நாழிகை-வினாடிகள் எல்லாம் அன்றைய ஸூர்ய உதயத்திலிருந்து கணக்கிட பட வேண்டிய நேரங்கள் ஆகும். ஸூர்ய உதய நேரங்கள் இடத்திற்கு இடம் மாறுபடும். மாதத்திற்கு மாதம் வேறுபடும்.

எந்த ஊரில் சுப காரியம் நடைபெற இருக்கிறதோ , அந்த ஊரின் ஸூர்ய உதய நேரத்தை கணக்கில் கொண்டு நாழிகை, நக்ஷத்திரங்கள் போன்றவைகளின் நேரங்களை கணக்கிட வேண்டும். பஞ்சாங்கத்தில் அந்தந்த ஊர்களின் ஸூர்ய உதய நேரம் கொடுக்க பட்டிருக்கும்.
ராகு காலம், யம கண்டம், குளிகன் போன்ற நேரங்கள் ஸூர்ய உதயம் காலை 6 மணி என்ற பொதுவாக கணக்கில் கொண்டு பிரசுரிக்க படுகின்றன. மேற்கண்ட நேரங்களை அந்தந்த ஊரின் ஸூரிய உதய நேரத்தை கணக்கில் கொண்டு அதற்கு தகுந்தாற்போல் கூட்டியோ கழித்தோ கணக்கிட பட வேண்டும்.

சில தினங்களில் இரண்டு யோகங்கள் கொடுக்க பட்டிருக்கும். சி/ம அல்லது ம/சி அல்லது ம/ அ என்று கொடுக்க பட்டிருக்கும். அவ்வாறு வரும்போது முதல் நக்ஷத்திரம் எவ்வளவு நாழிகை உள்ளதோ அவ்வளவு நேரம் வரை முதல் யோகம் பிறகு இரண்டாவது யோகம் என்று கொள்ள வேண்டும். சித்த அம்ருத யோகங்களில் நல்ல காரியங்கள் செய்யலாம். மரண யோகத்தில் செய்யக்கூடாது..

அகஸ் என்று ஒரு காலம் பஞ்சாங்கத்தில் இருக்கும். ஸூர்ய உதயதிற்கும் ஸூர்ய அஸ்தமனத்திற்கும் உள்ள இடைபட்ட காலத்தின் பகல் பொழுது நேரம் இது. வைகாசி ஆனி மாதங்களில் பகல் நேரம் 13 மணியாக வரும். ஐப்பசி கார்த்திகையில் பகல் நேரம் 11 மணி ஆகவும் உத்தேசமாக வரும்.
பொதுவாக ஒரு நாள் என்பது 60 நாழிகை; பகல் 12 மணி நேரம்; இரவு 12 மணி நேரம். இன்று ஸூர்ய உதயத்திலிருந்து மறு நால் ஸூர்ய உதயம் வரை. பகல் நேரத்தை 5 பிறிவுகளாக பிரித்தார்கள். காலை 6 மணி முதல் 8-24 மணி வரை ப்ராதஹ் காலம் எனப்பெயர்.

8-24 மணி முதல் 10-48 மணி வரை ஸங்கவ காலம் எனப்பெயர்.; காலை 10-48 மணி முதல்மதியம் 1-12 மணி வரை மாத்யானிக காலம் எனப்பெயர். மதியம் 1-12 மணி முதல் மாலை 3-36 மணி வரை அபராஹ்ண காலம் எனப்பெயர். மாலை 3-36 மணி முதல் மாலை 6 மணி முடிய ஸாயங்காலம் எனப்பெயர்.

அந்தந்த ஊரின் ஸூர்ய உதயம் நேரம் முதல் 6 நாழிகை=2மணி24 நிமிடம் சேர்த்து கொண்டு பார்க்க வேண்டும். இந்த 5 காலங்களில் அபராஹ்ண காலத்தில் தான் நாம் சிராத்தம் செய்ய வேண்டும். நாம் சிராத்தம் செய்ய வேண்டிய திதி சிராத்தம் செய்யும் நாளில் மாலை 3-36 மணி வரையில் இருந்தால் அன்று சிராத்தம் செய்யலாம். 3-36 மணிக்கு மேல் இருந்தாலும் அன்று தான் சிராத்தம். மறு நாள் மாலை 3-36 மணி வரை சிராத்த திதி இல்லாவிட்டால் முதல் நாளே சிராத்தம் செய்ய வேண்டும்.

ஆதலால் திதி மாத்திரம் பார்த்தால் போதாது. திதி எத்தனை நாழிகை உள்ளது என்பதையும் பார்க்க வேண்டும்.சிராத்த திதி அன்று 24 நாழிகையோ அல்லது அதற்கு மேலோ இருந்தால் அன்று தான் சிராத்தம். தற்கால பஞ்சாங்கத்தில் ஸ்ரா திதி என்று அல்லது வாக்கிய சிராத்த திதி என்று காலம் கொடுத்து எழுதி வருகிறார்கள். அதில் உங்கள் சிராத்த திதி வர வேண்டும். அன்று தான் சிராத்தம் செய்ய வேண்டும்.
சில இடங்களில் சூன்ய திதி/ அதிதி/ ப்ர;துவி என்றும் சிராத்த திதி காலங்களில் வரும்.

அதாவது மறு நாள் அபராஹ்ன நேரத்தில் சிராத்த திதி இல்லை. முதல் நாள் அபராஹ்ண நேரத்தில் சிராத்த திதி உள்ளது. முதல் நாள் தான் சிராத்தம் செய்ய வேண்டும்.

முதல் நாள் அபராஹ்ன காலத்தில் சிராத்த திதி இல்லை. மறு நாள் அபராஹ்ண காலத்தில் சிராத்த திதி உள்ளது, சிராத்தம் மறு நாள் செய்ய வேண்டும்.

அடுத்து ஒரே தகுதி உள்ள இரு நபர்களில் யாரை தேர்ந்து எடுப்பது என்ற குழப்பம் வருவது போல் இரு நாட்களிலும் அபராஹ்ண காலத்தில் ( 19 முதல் 24 நாழிகைக்குள் இருந்தால்) முழுமையான சிராத்த திதி இருந்தால் எந்த நாளில் சிராத்தம் செய்வது. போதாயன மஹரிஷி சொல்கிறார். திதி க்ஷயமா அல்லது திதி வ்ருத்தியா என்பதை பார்த்து தீர்மானம் செய்ய வேண்டும் எங்கிறார். அப்போது திதி க்ஷயம் என்றால் என்ன? திதி விருத்தி என்றால் என்ன? என்று பார்க்க வேண்டி இருக்கிறது.

பொதுவாக திதியின் மொத்த முழு அளவு 60 நாழிகை. பொது நிர்ணயம். பகல் 12 மணி நேரம்; இரவு 12 மணி நேரம். ஆனால் வைகாசி ஆனியில் பகல் நேரம் 13 மணி . இரவு நேரம் 11மணி. ஐப்பசி கார்த்திகையில் பகல் மணி நேரம். இரவு 13 மணி நேரம் என்று வருகிறது. ஸூர்யன் கிழக்கிலிருந்து வடகிழக்கிற்கு செல்கிறது. பிறகு கிழக்கு வந்து தென் கிழக்கு செல்கிறது.

பஞ்சாங்கத்தில் நாம் ஏதாவது ஒரு நாளின் திதி நாழிகை பார்க்க வேண்டும். அதற்கு முதல் நாள் திதி நாழிகை; அதற்கு மறு நாள் திதி நாழிகை எனப்பார்க்கும் போது திதிகளின் நாழிகை அதிகரித்து கொண்டு வந்தால் திதி வ்ருத்தி என்றும், திதி நாழிகை குறைந்து கொண்டு வந்தால் திதி க்ஷயம் எனவும் அறிய வேண்டும்.

அதாவது அடுத்த திதி க்ஷயமானால் முதல் நாள் சிராத்தம், திதி வ்ருத்தி என்றால் மறு நாள் சிராத்தம் என அறிய வேண்டும்.
சிராத்த திதி முதல் நாள் அபராஹ்ணம் தொடங்கும் நேரத்தில் ஆரம்பித்து மறு நாள் அபராஹ்ணம் முடியும் வரை இருந்தால் திதி க்ஷய நாட்களில் முதல் நாளூம், திதி வ்ருத்தி நாட்களில் மறு நாளும் செய்ய வேண்டும்.
இரண்டு நாட்களிலும் அபராஹ்ண காலத்தில் திதி இல்லாமல் இருந்தால் முதல் நாள் ஸாயங்காலத்தில் உள்ள முதல் நாளே சிராத்தம்.

மனு சொல்கிறார்:- சிராத்த திதி இரண்டு நாட்களிலும் அபராஹ்ண வ்யாப்தி இல்லாமல் இருந்தால் முதல் நாள் 6 நாழிகைக்கு குறைவில்லாமல் இருந்தால் முதல் நாள் சிராத்தம் செய்ய வேண்டும். இரண்டு நாட்களிலும் சிராத்த திதி அப்ராஹ்ணத்தில் வெவ்வேறு அளவு வ்யாபித்து இருந்தால் என்றைய நாளில் அபராஹ்ணத்தில் திதி அதிக நேரம் இருக்கிறதோ அன்று தான் சிராத்தம். எங்கிறார் மரீசி மஹரிஷி.

இரண்டு நாட்களிலும் அபராஹ்ண காலத்தில் ஒரே அளவாக ஒரு பகுதியில் மட்டும் சிராத்த திதி இருந்தால் திதி க்ஷயமானால் முதல் நாளும் திதி வ்ருத்தியானால் மறு நாளும் செய்ய வேண்டும். மிகவும் அபூர்வமாக இம்மாதிரி வரும் போது உங்கள் வாத்தியாரை கேட்டு செய்யவும்.

ஒருவருக்கு வெள்ளி கிழமை இரவு 3 மணிக்கு மேல் நான்கு மணிக்குள் தூக்கத்தில் ப்ராணன் போய் விட்டால் வெள்ளி இரவு 4 மணிக்குள் இருக்கும் திதியே சிராத்த திதியாகும். வெள்ளி கிழமை மாலை 6 மணிக்கு ப்ராணன் போனாலும் அப்போது உள்ள திதியே சிராத்த திதியாகும். இரவில் உடலை எரிக்க முடியாது, ஆதலால் தஹனம்=உடல் எரிப்பு மறு நாள் தான் செய்ய வேண்டும். தஹனம் செய்த நாளை முதல் நாளாகக்கொண்டு 13 நாட்கள் காரியங்கள் செய்ய வேண்டும். 45 ஆவது ஊனத்திலிருந்து இறந்த நாளான வெள்ளிகிழமை முதல் கணக்கு எடுத்துக்கொள்ளலாம்.

நேத்திரம்; ஜீவன் என பஞ்சாங்கத்தில் போட்டிருப்பார்கள். இரண்டிலும் முழு எண்கள் இருந்தால் உத்தமம். ஏதேனும் ஒன்றில் பாதி என்று இருந்தால் மத்திமம். இரண்டிலும் 0 ஆக இருந்தால் அதமம்.-சுப காரியங்களுக்கு ஏற்றதல்ல.

யோகினி:- எந்த திசையில் ப்ரயாணம் செய்யலாம் அல்லது கூடாது என்பதை குறிப்பவை. இது பற்றிய விவரம் பஞ்சாங்கத்திலேயே கொடுக்க பட்டிருக்கும்.

ஒரே நாளில் இரண்டிற்கும் மேற்பட்ட திதிகள் வந்தால் அந்த நாளில் அவமா (அவமாகம்) என்று குறிப்பிட்டு இருப்பார்கள். ஒரு திதி மூன்று நாட்களுக்கு தொடர்ந்து இருப்பின் திருதினஸ்ப்ருக் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டு இருப்பார்கள். இந்த நாட்களில் சுப காரியங்கள் செய்ய க்கூடாது என்பது ஆன்றோர் வாக்கு
 
2007 ம் ஆண்டு ஸ்ரீ. உ.வே. Deevalur N.V.S. ஸ்வாமி பிராமண சங்கத்தில் ஆற்றிய உரையின் தொகுப்பினை எல்லோருடைய பயனுக்காகவும் இங்கே தொகுத்து அளித்துள்ளேன்.

பஞ்சாங்கம் என்றால் என்ன?


முக்கியமான பஞ்ச அங்கங்கள் பற்றி தெரிவிக்கும் நூல் என்பதால் பஞ்சாங்கம் என்று பெயர். பஞ்ச அங்கங்களாவன திதி, வாரம் (கிழமை), நக்ஷத்ரம், லக்னம், யோகம் அல்லது கரணம்.


ராசி மண்டல அமைப்பு:

மொத்தம் 12 ராசிகள் உள்ளன. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்பதாக.

பூமி உருண்டையானது. அதை அட்சரேகை தீர்க்க ரேகை என்ற குறுக்கு மற்றும் நெடுக்குக் (கற்பனைக்) கோடுகளால் பிரிப்பது பற்றி அறிவோம்.
மொத்தம் 360 டிகிரி கொண்ட இந்த பூமியை 12 குறுக்கு கோடுகளால் சமபாகங்களாகப் பிரித்தால் ஒவ்வொரு பகுதிக்கும் 30 டிகிரி வரும்.
ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரி என்பது இதனால் ஏற்படுகிறது.


இந்த ராசிகளை வைத்து மாதம் எப்படி உருவாகிறது என்று பார்க்கலாம்.



மாதம் எப்படி உருவாகிறது?


சூரியனின் கிரணங்கள் பூமியில் விழுகிறது.


சூரியன் ஒரே இடத்தில் இருக்கிறது. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது. ஒரு முறை சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் ஆகிறது.

அப்படிச் சுற்றி முடிக்கையில் அதிகாலையில் சூரியனுடைய முதல் கிரணம் எங்கே விழுகிறதோ அன்றைய முதல் ராசி அது என்று கொள்ளவேண்டும்.


உதாரணமாக நாம் பன்னிரண்டாகப் பிரித்து வைத்திருக்கும் மேஷராசிக்குரிய சித்திரை மாதத்தில் முதல் பாகையின் (பாகை – டிகிரி)
முதல் அம்சத்தில் சூரியனுடைய கிரணம் விழுந்தால் அது சித்திரை மாதம் முதல் தேதி. ஆக சித்திரை மாதம் இப்படித் துவங்குகிறது.

இந்த பூமியானது சூரியனை ஒருமுறை சுற்றி வர 365 நாட்களாகிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
மொத்தம் 360 நாளில் 360 டிகிரியைக் கடந்துவிடுகிறது. ஆக ஒரு நாளைக்கு ஒரு டிகிரி கடக்கிறது. ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றால் பன்னிரண்டு ராசிக்கு தலா ரெண்டு மணிநேரம் என்பது சராசரிக் கணக்கு.
ஆனால் துல்லியமாகச் சொன்னால் சில ராசிகளுக்கு சற்றுக் குறைவாகவும் சில ராசிகளுக்கு சற்று அதிகமாகவும் பஞ்சாங்கத்தின் மூலம் அறியலாம். துல்லியக் கணக்கு கீழே....




மேஷம் 1.49
ரிஷபம் 2. 02
மிதுனம் 2.11
கடகம் 2.08

சிம்மம் 2.01
கன்னி 1.59
துலாம் 2.04
விருச்சிகம் 2.10

தனுசு 2.08
மகரம் 1.55
கும்பம் 1.43
மீனம் 1.49

மேஷராசியின் முதல் பாகையை முதல் நாள் சூரியன் கடக்கிறது என்று பார்த்தோம். ஒரு டிகிரி என்பது நான்கு நிமிடம் என்பதால்
இதுபோல 30 டிகிரியைக் கடக்க 30 x 4 = 120 நிமிடங்கள் எடுத்துக்கொண்டு ஒரு ராசியைக் கடக்கிறது. காலையில்
ஆரம்பித்ததிலிருந்து ரெண்டு, ரெண்டு மணி நேரம் ஒரு ராசியைக் கடக்க எடுத்துக்கொள்கிறது என்று தோராயமாகச் சொல்லலாம்.
ஆனால் முதல் நாள் ஒரு பாகையைக் கடந்துவிடுவதால் அடுத்தநாள் நாலு நிமிடம் குறைவாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
இதுபோல மாதம் முழுக்க ஒவ்வொரு பாகையாகக் கடந்து சித்திரை மாதம் கடைசி நாள் ஒன்றுமே இல்லாமல் போகிறது. இப்படி அடுத்த மாதம் பிறக்கிறது.



மாதம் உருவாவது எப்படி என்று தெரிந்து கொண்டதிலேயே ராசி இருப்பு என்ற பதத்தின் பொருளும் விளங்கும். கடக்க வேண்டிய மீதி ராசியே ராசி இருப்பு என்று சொல்கிறோம்.
உதாரணமாக இன்று ஆடி மாதம் பத்து தேதி என்று கொண்டால் கடகராசியில் (10x4=40) 40 நிமிடங்கள் போக மீதி 80 நிமிடங்கள் ராசி இருப்பு என்று சொல்லலாம்.
நமது பரந்தாமன் பஞ்சாங்கத்தில் மட்டும் நாழிகை கணக்கில் இல்லாமல் மணியிலேயே ராசி இருப்பு போடப்பட்டிருக்கிறது.



ஸ்தான சுத்தம் என்றால் என்ன?


முஹூர்த்தத்திற்காக நாம் ‘லக்னம்’ என்று பார்க்கிறோம்.



லக்னம் என்றால் என்ன?


ஒவ்வொரு நாளும் 12 ராசிகள் வருகின்றன என்று பார்த்தோம். நாம் முஹூர்த்தத்துக்காக எந்த ராசியைத் தேர்ந்தெடுக்கின்றோமோ அதுவே லக்னம் எனப்படும்.
மற்றபடி ராசிக்கும் லக்னத்துக்கும் எந்த வித்யாசமும் கிடையாது. முஹூர்த்தத்துக்காக எந்த ராசியைத் தேர்ந்தெடுக்கின்றோமோ அதுவே லக்னம் ஆகும்.
சில முஹூர்த்தங்களுக்காக எந்த ஸ்தானம் சுத்தமாக இருக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறதோ லக்னத்திலிருந்து அந்த
இடம் வரை எண்ணி அதில் ராகு, கேது, சனி, சுக்கிரன் என்று எந்த க்ரஹமும் இல்லாமல் இருப்பதே ஸ்தான சுத்தம் ஆகும்.

கிரகங்களின் இடமாற்றம்:

அடுத்து கிரகங்களின் இடமாற்றம் பற்றித் தெரிந்து கொள்வோம்.

பூமியைப் போலவே 9 கிரகங்கள் உண்டு என்று நாம் அறிவோம்.
பூமி சூரியனைச் சுற்றுவது போலவே அவைகளும் அவைகளுக்குரிய பாதையில், அவைகளுக்குரிய வேகத்தில் சுற்றி
வருகின்றன. சந்திரன் பூமியைச் சுற்றி வருகின்றது என்பதையும் நாம் அறிவோம்.
இந்த நிலையை பஞ்சாங்கத்தில் அந்தந்த மாதத்தின் பக்கத்திலேயே கட்டத்தில் போட்டிருப்பார்கள்.


மாத ஆரம்ப நாள் அன்று எந்த கிரகம் எந்த ராசியில் இருக்கிறது என்று போட்டிருப்பார்கள்.
சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் சீக்கிரமாக ராசி மாறாது.

ஆனால் சுக்ரன், புதன், செவ்வாய் போன்ற கிரகங்கள் வேகமாக மாறும். சில சமயம் மாதம் ரெண்டு முறை கூட மாறும்.
அந்த மாற்றத்தை எந்த தேதியில் எந்த ராசிக்கு மாறுகிறது என்று கட்டத்தின் நடுவிலேயே கொடுத்திருப்பார்கள்.


இப்படி கிரகங்களின் இடமாற்றம் பற்றிக் குறிப்பிட்டவர்கள் சந்திரனின் இட மாற்றத்தைப்பற்றி மட்டும் எங்கும் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள்.
காரணம் சந்திரனின் இடமாற்றம் என்பது அபரிமிதமானது. இரண்டரை நாளுக்கு ஒருமுறையாக ராசி மாறிவிடுவார் அவர்.
அவரின் இட மாற்றத்தை கணிப்பது கடினம் என்பதாலேயே பஞ்சாங்கத்தில் குறிப்பிடுவதில்லை.
ஆனால் அவர் இருக்குமிடத்தை நாம் தெரிந்து கொள்ள முடியும். அதற்கு நட்சத்திரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும்..


நட்சத்திரங்கள் பற்றிய அறிவு:


சந்திரனுக்கும் நட்சத்திரங்களுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால் கணவன் மனைவிக்குள்ள தொடர்புதான்.
சந்திரனுக்கு 27 நட்சத்திரங்களை மணமுடித்து வைத்திருக்கிறார்கள் என்று கதை உண்டு.
அதனால் அன்றைய நாள் என்ன நட்சத்திரமோ அதுவே சந்திரன் இருக்கும் இடம் என்று தெரிந்து கொள்ளலாம்.
இனி நட்சத்திரம் பற்றிப் பார்ப்போம்.


ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரி என்று பார்த்தோம். அந்த 30 டிகிரியை ஒன்பது பாதங்களாகப் பிரித்துவிடவேண்டும்.
அப்படிப்பிரிக்கப்பட்ட ஒன்பதில் ஒரு பாதத்துக்கு (1/9) நவாம்சம் என்று பெயர்.


அதாவது அஸ்வினி என்று எடுத்துக்கொண்டால் 1 2 3 4 பாதங்கள் உண்டு. பரணிக்கும் அப்படியே 1 2 3 4 பாதங்கள் உண்டு.
அடுத்து கிருத்திகைக்கும் அப்படியே உண்டு. அதில் முதல் பாதம் மட்டும் எடுத்துக்கொண்டு மேஷ ராசிக்கு அஸ்வினி 4 பாதங்கள், பரணி 4 பாதங்கள், கிருத்திகை ஒரு பாதம் மொத்தம் 9 பாதங்கள்,
அதாவது ரெண்டேகால் நட்சத்திரம் மேஷராசிக்கு என்று கொள்ளவேண்டும்.


கிருத்திகை 2 3 4 பாதங்கள், ரோகிணி 1 2 3 4 பாதங்கள், மிருகசிரீஷம் 1 2 பாதங்கள் ஆக 9 பாதங்கள், ரெண்டேகால் நட்சத்திரம் ரிஷப ராசிக்கு.


கீழே அட்டவணையில் உள்ளது போல பார்த்துக்கொள்ளவும்.


அஸ்வினி1,2,3,4
பரணி1,2,3,4
கார்த்திகை -1 – மேஷம்

கார்த்திகை-2,3,4
ரோகிணி-1,2,3,4
ம்ருகசீரீஷம்-1,2 – ரிஷபம்

ம்ருகசீரீஷம்-3,4
திருவாதிரை 1,2,3,4
புனர்பூசம் -1,2,3 – மிதுனம்

புனர்பூசம் -4
பூசம்-1,2,3,4
ஆயில்யம்-1,2,3,4 – கடகம்

மகம்-1,2,3,4
பூரம்-1,2,3,4
உத்திரம்-1 – சிம்மம்


உத்திரம்-2,3,4
ஹஸ்தம் -1,2,3,4
சித்திரை-1,2 - கன்னி

சித்திரை -3,4
ஸ்வாதி - 1, 2,3,4
விசாகம் -1,2,3 - துலாம்


விசாகம் - 4
அநுஷம் - 1,2,3,4
கேட்டை-1,2,3,4 - விருச்சிகம்


மூலம்-1,2,3,4
பூராடம் -1,2,3,4
உத்ராடம் – 1 – தனுசு


உத்ராடம் - 2,3,4
திருவோணம்-1,2,3,4
அவிட்டம்-1,2 - மகரம்

அவிட்டம்-3,4
சதயம் -1,2,3,4
பூரட்டாதி - 1,2,3 - கும்பம்


பூரட்டாதி -4
உத்ரட்டாதி -1,2,3,4
ரேவதி-1,2,3,4 – மீனம்


இப்படி ரெண்டேகால் நட்சத்திரங்களாக ஒவ்வொரு ராசிக்கும் போட்டால் மொத்தம் 108 அம்சங்கள். அதாவது 9 x 12 = 108, அல்லது 27 x 4 = 108 நவாம்சங்கள் என்பதுவரை தெளிவு.


சில நட்சத்திரங்கள் (அஸ்வினி, பரணி போன்றவை) கட்டாயம் மேஷராசியில்தான் வரும்.
கிருத்திகை என்றால் முதல் பாதம் மட்டும் மேஷத்திலும் மீதி மூன்று பாதங்களானால் ரிஷபத்திலும் வரும்.
ஆகையால் ஒருவரது நட்சத்திரமும் அதன் பாதமும் தெரிந்துவிட்டால் அவரது ராசியைக் கண்டுபிடித்துவிடலாம்.
பஞ்சாங்கத்தில் அன்றைய நட்சத்திரமும் போட்டிருக்கும் என்பதால் அதை அறிவதும் சுலபம். பாம்பு பஞ்சாங்கம் என்றால்
கடைசியில் சந்திரன் எந்த ராசியில் இருப்பார் என்றும் போட்டிருப்பார்கள்.

இனி சுபகாரியங்களுக்கு விலக்கவேண்டிய கிழமைகள், நட்சத்திரங்கள், திதிகள், என்னென்ன என்று பார்க்கலாம்.

- - - Updated - - -

விலக்க வேண்டிய, திதி, வார, நட்சத்திரங்கள்:

செவ்வாய் சனி குருட்டு நாட்கள் எனப்படும். இவைகளில் செய்யப்படும் சுபகாரியங்கள் விருத்தியடையாது என்கிறது ஜோதிஷ சாஸ்திரம்.

ஞாயிறு, திங்கள் ஒரு கண் உள்ளவை. ஆகவே பாதி வெற்றி என்று கொள்ளலாம்.



புதன், வியாழன், வெள்ளி ஆகியவை இரு கண் உள்ள நாட்கள். அவை உத்தமம் ஆகும்.
இவற்றில் செய்யப்படும் சுப காரியங்கள் நன்றாக விளங்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.

விலக்க வேண்டிய திதிகள் என்றால் பிரதமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, சதுர்தசி, அமாவாசை மற்றும் பௌர்ணமி. இவைகளில் எந்த சுப காரியங்களும் செய்யக்கூடாது.


மீதியுள்ள திதிகளிலே மத்யமமான திதிகளும் உள்ளன, உத்தமமான திதிகளும் உள்ளன.


அடுத்து ஆகாத நட்சத்திரங்கள் என்று சொன்னால் கீழே உள்ள அட்டவணைப் படி அறிந்துகொள்ளலாம்.



நல்ல நட்சத்திரம்





அஸ்வினி
ரோகிணி
மிருகசிரீஷம்
புனர்பூசம்

பூசம்
மகம்
உத்திரம்
ஹஸ்தம்

சித்திரை
சுவாதி
அனுஷம்

உத்திராடம்
திருவோணம்
உத்திரட்டாதி


கூடாத நட்சத்திரம்
பரணி
கிருத்திகை
ஆயில்யம்
பூரம்

கேட்டை
பூராடம்
பூரட்டாதி


சுமாரானவை
திருவாதிரை
விசாகம்
மூலம்

அவிட்டம்
சதயம்
ரேவதி




யோகங்கள்:


அடுத்து நாம் அறிய வேண்டியது சித்த அமிர்தாதி யோகங்கள். அவை மூன்று வகைப்படும். சித்த, அமிர்த, மரணயோகங்கள்.
இன்னின்ன கிழமையும் இன்னின்ன திதியும் சேர்ந்தால் இன்னின்ன யோகம் என்கிறது சாஸ்திரம்.
அதை பஞ்சாங்கத்தில் சி, அ, ம என்று முதலெழுத்தைப் போட்டு குறிப்பிட்டிருப்பார்கள். இதைப் பஞ்சாங்கத்தில் அட்டவணையாகவே கொடுத்திருப்பார்கள்.



அமிர்த யோகத்தைவிட சித்தயோகம் நல்லது.



இதுதவிர அன்றன்றைய தேதியிலும் யோகம் பற்றிக் குறிப்பிட்டிருப்பார்கள். இந்த அட்டவணை ஒவ்வொரு பஞ்சாங்கத்திலும் இருக்கும்.





இதுவரை நல்லநாள் பார்க்கத் தேவையான விஷயங்களை தெரிந்துகொண்டோம். இனி பஞ்சகம் என்றால் என்ன என்று பார்க்கலாம்.

பஞ்சகம் என்றால் என்ன?


நல்ல காரியத்துக்கு லக்னம் குறிக்கும்போது முக்கியமாகப் பஞ்சகம் பார்த்துக் குறிக்க வேண்டும்.
திதி, கிழமை, நட்சத்திரம், லக்னம் ஆகிய நான்கு விஷயங்களைக் கூட்டி ஒன்பதால் வகுத்து வரும் மீதியை வைத்து உத்தமான நாள், மத்திமமான நாள், அதமமான நாள் என்று அறிவது பஞ்சகம். இது மிக முக்கியம்.

இதை எப்படி வைப்பது என்றால் பிரதமை, த்விதீயை என்று ஆரம்பித்து அந்த வரிசையை 1, 2 என்று எண்ணாகக் கொள்ளவேண்டும்.
கிழமை என்றால் ஞாயிறு முதலும், நட்சத்திரங்களில் அஸ்வினி முதலும், லக்னங்களில் மேஷம் முதலும் என்று
கொள்ளவேண்டும். இப்படி நாம் குறித்த நாளுக்குரிய திதி, வார, நட்சத்திர, லக்ன எண்களைக் கூட்டி 9ஆல் வகுத்தால் வரும் மீதியைக் கொண்டு பஞ்சகத்தை அறியலாம். இது மிக மிக முக்கியம்.

உதாரணமாக எல்லாம் கூட்டி 39 என்று வந்தால் அதை 9 ஆல் வகுக்க மீதி 3 என்று வரும். அது உத்தம பஞ்சகம் ஆகும்.
3, 5, 7, 9 என்று மீதி வந்தால் அவை உத்தமம் என்று அறியலாம்.

1, 2, 4, 6 மற்றும் 8 என்று வந்தால் அவை முறையே மிருத்யு பஞ்சகம், அக்னிபஞ்சகம், ராஜபஞ்சகம், சோர பஞ்சகம், ரோக பஞ்சகம் என்று அறியலாம். இவை அதமங்களாகும்.
அதாவது விலக்கவேண்டியவைகள்.
இன்னும் சிலர் துருவங்களையும் கூட்டி பஞ்சகம் அறிவர்.
துருவம் என்றால் மீனம், மேஷம் என்று சந்திக்கக்கூடிய துருவங்களைக் கூட்டியும் பஞ்சகத்தை தீர்மானிப்பார்கள். அதுவும் அட்வான்ஸ் லெவெலில் பார்க்கலாம்.



ஏன் 9 ஆல் வகுப்பது என்பதும் அடுத்த லெவெலில் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயம். இங்கே 9 ஆல் வகுக்கனும் என்று தெரிந்துகொள்வோம்.
அதே போல பஞ்சகம் எப்படியுள்ளது என்பதையும் பஞ்சாங்கம் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.


அடுத்து தினப்பொருத்தம் பற்றியும் அதை எப்படிப் பார்ப்பது என்றும் பார்க்கலாம்.

தினப்பொருத்தம் :


தினப்பொருத்தம் பார்க்கவேண்டியது முக்கியம். அதை ஆணுக்கு பார்க்கணுமா இல்லை பெண்ணுக்கா?
என்றால் ஒரு சிம்பிள் லாஜிக் உண்டு. எங்கெல்லாம் பொம்மனாட்டிகள் சம்பந்தப்படுகிறார்களோ அங்கெல்லாம் பெண்களுக்குதான் தினப்பொருத்தம் பார்க்கணும்.


விவாஹம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற காரியங்களில் பெண்ணுக்குத்தான் தினப் பொருத்தம் அவசியம்.
உபநயனம் என்றால் ஆண்களுக்குத்தான் பார்க்கணும்.
அதேபோல சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் எல்லாம் ஆண்களுத்தான் பண்ணுவது (கூட பெண்கள் இருந்தாலும்) என்பதால் அவர்களுக்கு பார்க்கவேண்டியதுதான் முக்கியம்.

தினப்பொருத்தம் எப்படிப் பார்ப்பது?


யாருக்கு தினப்பொருத்தம் பார்க்கிறோமோ, அவர்களின் நட்சத்திரத்திலிருந்து நாம் பார்த்துவைத்திருக்கும் நாளின் நட்சத்திரம் வரை எண்ணி,

அதை 9 ஆல் வகுத்தால் என்ன மீதி வருகிறதோ அதை வைத்து தினப்பொருத்தம் உண்டா இல்லையா என்று தெரிந்துகொள்ளலாம்.
இது 2, 4, 6, 8, 9 என்று வந்தால் உத்தமம். தாராளமாக லக்னம் வைக்கலாம். அடுத்து நாம் அறியவேண்டியது சந்திராஷ்டமம் என்றால் என்ன என்பது.

இந்த வார்த்தையில் சந்திரன், அஷ்டமம் என்று ரெண்டு பதங்கள் உள்ளன. நாம் பிறந்த ராசியிலிருந்து எட்டாம் ராசியில் சந்திரன் இருக்கும் நாட்கள் எல்லாம் சந்திராஷ்டமம் எனப்படும்.
இந்த நாட்களில் (சிக்கல்கள், மனத்தாங்கல்கள் போன்ற) விபரீதமாகப் பலன்கள் இருக்கும் என்பதால் அதை விலக்குவது.
விவாஹத்துக்கு லக்னம் வைக்கும்போது ஆணுக்கும், பெண்ணுக்கும் சந்திராஷ்டமம் இல்லாத நாட்களையே தேர்ந்தெடுக்க வேண்டும்.


இதை எப்படிக் கண்டறிவது என்றால் அவரவர் நட்சத்திரத்திலிருந்து 17ம் நட்சத்திரம் என்றைக்கோ அன்றைக்கே சந்திராஷ்டமம் என்று கீழே உள்ள அட்டவணையைப் பார்த்து அறியலாம்.




அடுத்து சூரிய உதயத்தின் பயன் என்ன என்று பார்க்கலாம். மேலும் சந்திராஷ்டமம் பற்றி அறியஇங்கே செல்க..




சூர்யோதயம் எதற்காகத் தெரிந்துகொள்வது?


பஞ்சாங்கங்களில் ஒவ்வொரு தேதியிலும் இன்ன நட்சத்திரம் இவ்வளவு நாழி இருக்கும், இன்ன திதி இவ்வளவு நாழி இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
 

Latest ads

Back
Top