Karuneka pithrukkal

காருணீக பித்ருக்கள்:-

அப்பாவின் சகோதரர்கள் பெரியப்பா/சித்தப்பா -----------கோத்ரான் ----------- சர்மண: வசு ரூபான் பித்ருவியான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

அப்பாவின் சகோதரிகள் (அத்தை) ----------- கோத்ரா: ----------- தா: வசு ரூபா: பித்ரு ஸ்வஸ்ரூ : ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

அம்மாவின் சகோதரர்கள் ------------- கோத்ரான் -------------- சர்மண: வசுரூபான் மாதுலான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

அம்மாவின் சகோதரிகள் ----------- கோத்ரா: --------- தா: வசு ரூபா: மாத்ரு பகினி ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.


அண்னன்/தம்பிகள் ------------- கோத்ரான் ------------- சர்மண: வசு ரூபான் ஜ்யேஷ்ட/கனிஷ்ட ப்ராத்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

ஸஹோதரி ------------ கோத்ரா: ----------- தா: வசு ரூபா: ஜ்யேஷ்ட/கனிஷ்ட பகினி ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

ஸஹோதரி புருஷர் --------- கோத்ரான் --------- ஶர்மண: வஸுரூபான் பாவுகான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

புத்ரர்கள் ---------- கோத்ரான் ---------- சர்மண: வசு ரூபான் புத்ரான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

மருமகள் ----------- கோத்ரா: --------- தா: வசு ரூபா: ஸ் நுஷா ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

பெண் ------------- கோத்ரா: --------- தா: வசு ரூபா: துஹித்ரூ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

மாப்பிள்ளை --------- கோத்ரான்---------- சர்மண: வசு ரூபான் ஜாமி ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

மனைவி ----------- கோத்ரா: -------- தா: வசு ரூபா: பார்யா ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

மாமனார் ---------- கோத்ரான் ------- ஶர்மண: வசுரூபான் ஸ்வஸ்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

மாமியார் --------- கோத்ரா: -------- தா: வசு ரூபா: ஸ்வஸ்ரூ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

மைத்துனர் -------- கோத்ரான் ---------- ஶர்மண: வசு ரூபான் ஶ்யாலகான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

சினேகி தரர்கள் --------- கோத்ரான் -------- சர்மண: வசு ரூபான் ஸகீன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

ப்ரஹ்மோபதேசம் செய்தவர் -------- கோத்ரான் --------- சர்மண: வசு ரூபான் குரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

வேதம் கற்பித்தவர் --------- கோத்ரான் -------- சர்மண: வசு ரூபான் ஆசார்யான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

பிழைப்பிற்கு மூலகர்த்தா ( யஜமானன்) --------- கோத்ரான் ------ சர்மண: வசு ரூபான் ஸ்வாமின: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

மற்றவர்களுக்கு காருணீக பித்ருக்கள் அட்டவணயில் கொடுக்க பட வில்லை. ஆனால் தர்ம ஸிந்து, நிர்ணய ஸிந்து, ஹேமாத்ரி புத்தகம் போன்றவைகளை பார்க்கும் போது மாமியாருக்கு தனியாக செய்யலாம் என்று உள்ளது.

பெரியம்மா, சித்தி, அத்தை-அத்திம்பேருக்கு இருவரும் தற்போது உயிருடன் இல்லை என்றால்
அத்தைக்கு ---------- கோத்ரா:---------- தா: வசு ரூபா: பர்த்ரு ஸ ஹித பித்ரு ஸ்வஸ்ரூ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

பெரியப்பா ---------- கோத்ரான் --------- சர்மண: வசுரூபான் பத்னி ஸஹித பித்ருவ்யான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

அத்தை உயிருடன் இருக்கிறார் அத்திம்பேர் இல்லை என்றால் அண்ணன், தம்பி இருக்கிறார், அவரது மனைவி இல்லை என்றால், பெரியப்பா, சித்தப்பா இருக்கிறார் ஆனால் அவரின் மனைவி இல்லை என்றால் மாமா இருக்கிறார் ஆனால் மாமி இல்லை என்றால் நண்பர்கள் என்று சொல்லி செய்யலாம் எங்கிறார் முசிறி அண்ணா.

---------- கோத்ரான்--------- சர்மண: வசுரூபான் ஸகீன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

------------ கோத்ரா: ----------- தா: வசுரூபா: ஸகீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
 
அட்டவணையில் இல்லாத உறவுகளை எவ்வாறு காருணிக பித்ருக்களில் சேர்த்து கொள்வது என்று விளக்கியதற்கு மிகவும் நன்றி கோபாலன் Sir.
எனது பெரியப்பா, அவர் மனைவி, அவர் இளைய மகன் மூவரும் உயிருடன் இல்லை.பெரியப்பாவின் இளைய மகனை ( my cousin younger brother) கனிஷ்ட ப்ராத்ரூன் என்று தனியாக காரூணிக பித்ருவாக சேர்த்து கொள்ளலாமா?
 
Gyatha and Agnatha karunika pithrun swatha namas tharpayami. Is this not ok. Why to do separately? Kindly explain the significance.
H Sankaranarayanan
 
Respected Brahmasri Gopalan Sir, Excellent narration. Please make a writeup and send us as attachment for reference and retention. With all this information, we are able to do it as a TILA THARPANA SRARTHAM or HIRANYA SRARTHAM. Will the pitrus get satisfied fully or only to some extent?
 
நமஸ்காரம், காருணிக பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்யும்போது,
... கோத்ரம் ... ஶர்மாணம் வஸுரூபம் (உறவு/ஆசார்யம்/குரும்/மித்ரம்) ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி என்று புருஷர்களுக்கும்
... கோத்ராம் ... நாம்னீம் வஸுரூபாம் (உறவு..) ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி என்று ஸ்த்ரீகளுக்கும் சொல்லி தர்ப்பணம் பண்ணுவதும் உண்டு.
-------------------------------
ஸம்ஸ்க்ருதத்தில் உறவுப் பெயர்கள்
****************************
1) தந்தையின் ஸஹோதரர் -பித்ருவ்யஃ
2) தந்தை ஸஹோதரரின் மனைவி
-பித்ருவ்யபத்னீ, பித்ருவ்யா
3) தந்தை ஸஹோதரரின் மகன்
-பித்ருவ்யபுத்ரஃ, பித்ருவ்யஜஃ
4) தம்பி- அநுஜஃ
5) தங்கை- அநுஜா
6) அண்ணன்- ஜ்யேஷ்டஃ
7) அக்கா- ஜ்யேஷ்டா
8) மாப்பிள்ளை
-ஜாமாத்ரு, ஜாமாதா
9) தந்தைவழித் தாத்தா -பிதாமஹஃ
10) தந்தைவழிப் பாட்டி
-பிதாமஹீ
11) கணவரின் ஸஹோதரர் -தேவரஃ
12) கணவர் ஸஹோதரரின் மனைவி- யாத்ரு, யாதா
13) நாத்தனார்- நநாந்தா
14) நாத்தனார் கணவர் -நநாந்த்ருபதிஃ
15) பெண்வயிற்றுப் பேரன் -நப்தா
16) பெண்வயிற்றுப் பேத்தி -நப்த்ரீ
17) தாய்வழித் தாத்தா -மாதாமஹஃ
18) தாய்வழிப் பாட்டி -மாதாமஹீ
19) தந்தைவழிக் கொள்ளுத் தாத்தா- ப்ரபிதாமஹஃ
20) தந்தைவழிக் கொள்ளுப் பாட்டி- ப்ரபிதாமஹீ
21) தாய்வழிக் கொள்ளுத் தாத்தா- ப்ரமாதாமஹஃ, மாதுஃபிதாமஹஃ
22) தாய்வழிக் கொள்ளுப் பாட்டி
-ப்ரமாதாமஹீ, மாதுஃபிதாமஹீ
23) கணவர்- பதிஃ, பர்த்தா
24) மனைவி- பத்னீ, பார்யா, ஜாயா
25) தந்தை- பிதா, ஜனகஃ
26) மகன்- புத்ரஃ, ஆத்மஜஃ
27) மகள்- புத்ரீ, ஆத்மஜா
28) பிள்ளைவயிற்றுப் பேரன் -பௌத்ரஃ
29) பிள்ளைவயிற்றுப் பேத்தி -பௌத்ரீ
30) பிள்ளைவயிற்றுக் கொள்ளுப் பேரன்
-ப்ரபௌத்ரஃ
31) பிள்ளைவயிற்றுக் கொள்ளுப் பேத்தி
-ப்ரபௌத்ரீ
32) மருமகள்- புத்ரவதூ
33) அத்தை- பித்ருஷ்வஸா
34) அத்தை கணவர்- பித்ருஷ்வஸ்ருபதிஃ
35) அத்தை மகன் -பைத்ருஷ்வஸ்த்ரீயஃ
36) அண்ணன்- அக்ரஜஃ
37) அக்கா- அக்ரஜா
38) ஸஹோதரியின் கணவர்
-ஆவுத்தஃ, பகினீபதி
39) ஸஹோதரி- பகினீ, ஸ்வஸ்ரூ
40) ஸஹோதரனின் மகன் -ப்ராத்ருஜஃ
41) ஸஹோதரனின் மகள் -ப்ராத்ருஜா
42) ஸஹோதரியின் மகன் -பாகினேயஃ, ஸ்வஸ்த்ரீயஃ
43) ஸஹோதரியின் மகள் -பாகனேயீ, ஸ்வஸ்த்ரீயா
44) மதனி- ப்ராத்ருஜாயா
45) ஸஹோதரன்- ப்ராதா
46) தாய்- ஜனனீ, அம்பா
47) மாமா- மாதுலஃ
48) மாமி- மாதுலீ
49) மாமன் மகன்- மாதுலபுத்ரஃ, மாதுலேயஃ
50) தாயின் ஸஹோதரி- மாத்ருஷ்வஸா
51) தாயின் ஸஹோதரி கணவர் -மாத்ருஷ்வஸ்ருபதிஃ
52) தாயின் ஸஹோதரி மகன் -மாத்ருஷ்வஸ்த்ரீயஃ
53) உறவினர்- பந்துஃ, ஸ்வஜன
54) சிறுவன்- பாலகஃ
55) சிறுமி- பாலிகா
56) மாமனார்- ஶ்வஸுரஃ
57) மாமியார்- ஶ்வஶ்ரூஃ
58) ஸஹோதரன்- ஸஹோதரஃ
59) ஸஹோதரி- ஸஹோதரீ
60) மைத்துனன்- ஶ்யாலஃ
61) மைத்துனன் மனைவி- ஶ்யாலினீ, ஶ்யாலபத்னீ
62) மைத்துனன் மகன்- ஶ்யாலஜஃ
63) மைத்துனி- ஶ்யாலீ, ஶ்யாலிகா
64) மைத்துனி கணவர்- ஶ்யாலிபதிஃ, ஸடோகஃ ( இவரைத்தான் நாம் ஷட்டகர் என்கிறோம்)
65) சம்பந்தி மாமா- ஸம்பந்தீ
66) சம்பந்தி மாமி- ஸம்பந்தினீ
-------------------------------
 
Respected Brahmasri Gopalan Sir, Excellent narration. Please make a writeup and send us as attachment for reference and retention. With all this information, we are able to do it as a TILA THARPANA SRARTHAM or HIRANYA SRARTHAM. Will the pitrus get satisfied fully or only to some extent?
நமஸ்காரம். பார்வண ஶ்ராத்தம் பண்ணினால் நல்லதுதான். ஆனால், குறைந்த பட்சம் வாத்யார் தவிர 6 பிராம்மணர்கள் வேண்டும். 1) பித்ரு வர்க்கம் 2) மாத்ரு வர்க்கம் 3) மாதாமஹ வர்க்கம் 4) காருணிக பித்ருக்களுக்காக 5) விஶ்வேதேவர் 6) விஷ்ணு
பெரிய/சிறிய தாயார் இருந்தால், ஒன்று அதிகப்படியான "ஸபத்னீமாதா" வுக்காக
மஹாளய பக்ஷத்தில் பிராம்மணர்கள் பார்வண ஶ்ராத்தம் செய்வதற்குக் கிடைப்பதரிது.
 
Back
Top