• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

Kari naal.

Status
Not open for further replies.

kgopalan

Active member
சூரிய கதிர்வீச்சின் தாக்கம், பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விடKARI NAALIL அதிகமாக இருக்கும். நமது முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக ஆராய்ந்து முடிவு செய்து வைத்திருக்கும் நாட்கள் இவை. இந்நாட்கள் வருடத்திற்கு வருடம் மாறுபடாதவை (Constant ). தமிழ் மாத தேதிகளின் அடிப்படையில் இந்நாட்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள்

. உதாரணமாக தை மாதம் 1, 2, 3 ஆகிய நாட்கள் கரிநாட்கள். மாறாக, இது ‘அஷ்டமி, நவமி’ போன்றோ அல்லது ‘பரணி, கிருத்திகை’ போன்றோ திதிகள் அல்லது நட்சத்திரங்களின் அடிப்படையில் அமைந்தது அல்ல.(kari nal explanation)


சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும் பொழுது, நமது உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும், ஹார்மோன்களும் சராசரிக்கும் சற்று கூடுதலாக அதிக அளவில் தூண்டப்படுகின்றன. இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுதல், ஆராயாமல்

உடனுக்குடன் முடிவெடுத்தல் போன்ற வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். இது போன்ற காரணங்களால் கரிநாட்களில் சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்த்திருக்கிறார்கள். இது வானவியல் ரீதியாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நிர்ணயம் செய்யப்பட்ட நாட்களேயன்றி ஜோதிட ரீதியாக கடைபிடித்து வரும் விஷயம் அல்ல.


ஒவ்வொரு தமிழ் வருடமும் கரிநாட்களின் விவரம் :
சித்திரை-6, 15,
வைகாசி- 7, 16, 17,


ஆனி- 1, 6,
ஆடி-2, 10, 20,
ஆவணி-2, 9, 28,


புரட்டாசி- 16, 29,
ஐப்பசி-6, 20,
கார்த்திகை-1, 10, 17,


மார்கழி-6, 9, 11,
தை-1, 2, 3, 11, 17,
மாசி-15, 16, 17,


பங்குனி-6, 15, 19.
கரிநாட்களில் சுபநிகழ்ச்சிகளை மேற்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.



அசைவம் சாப்பிட்ட பின் கோவிலுக்கு ஏன் செல்லக் கூடாது?


நாம் சாப்பிடும் உணவு மற்றும் மனதிற்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. எப்படியெனில் உதாரணமாக நாம் தயிர் அதிகமாக

சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதும், காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவதை போன்ற உணர்வுகள் ஏற்படுவதும் நாம் சாப்பிடும் சாப்பாட்டிற்கும், நமது மனதிற்கும் தொடர்பு உள்ளது என்பதைக் குறிக்கிறது.


கோவிலுக்குச் செல்லும் போது, நம்முடைய மனம் மற்றும் உடல் அளவில், சுத்தமாக செல்ல வேண்டும்.



நாம் சாப்பிடும் அசைவ உணவுகள் ஜீரணமாவதற்கு, அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், அது நமது மனதளவில் ஒரு வகை மந்தமான நிலையை ஏற்படுத்துகிறது.


எனவே நம் மனதளவில் மந்த நிலையில் உள்ள ஒருவர் சூட்சும சக்திகள் நிலவும் கோயிலுக்குள் செல்லும் போது, அந்த சக்திகளை உணரக் கூடிய ஆற்றலை இழந்து விடுகிறார்.


ஏனெனில் அசைவ உணவுகள் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலைக் குறைக்கும் தன்மை கொண்டவை.


இதனால் தான், நாம் கோயிலுக்குச் செல்லும் போது, அசைவம் சாப்பிடாமல், எளிமையான உணவை மிதமான அளவில் சாப்பிட்டு, மனதில் உற்சாகத்துடன் இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறுகிறார்கள்.
குறிப்பு
ஒருவேளை நாம் அசைவ உணவைச் சாப்பிட்ட பின் கோயிலுக்குச் செல்ல வேண்டிய நிலைகள் ஏற்பட்டால், நாம் சாப்பிட்ட 3 அல்லது 4 மணி நேரத்திற்குப் பின்னர் குளித்துவிட்டு கோயிலுக்குச் செல்வது மிகவும் நல்லது
 
Status
Not open for further replies.
Back
Top