• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Karaikal Ammaiyar

Status
Not open for further replies.
I have posted the compositions of Karaikal Ammaiyar, earlier in this forum, with meaning in English and Tamil. in the thread http://www.tamilbrahmins.com/slokas...949-2990-3009-2980-2990-3018-2996-3007-a.html
The present attempt is to make an in-depth study of her poems. The posts, in Tamil, will appear every Friday. Those who are interested and capable are requested to translate these into English for the benefit of those who know English only.

ஆலயங்களில் இருபுறமும் மற்ற நாயன்மார்கள் நின்று கொண்டிருக்க, காரைக்கால் அம்மையார் மட்டும் அமரும் உரிமை பெற்றுத் தனிச் சிறப்புக்கு உரியவராகக் கருதப்படுவது எதனால்?

இறைவனிடமிருந்து மாங்கனி பெற்றது, பேயுடல் பெற்றது, கயிலை மலை மீது தலையால் நடந்து சென்றது ஆகிய அதிசயச் செயல்களைச் செய்ததாலா? அல்ல. இவற்றை விடப் பெரிய அதிசயச் செயல்கள் செய்த நாயன்மார் பலர் உளர்.

அம்மையாரை விடப் புலமையில் சிறந்தோரும், இவருடைய பாடல்களை விட அதிகமாக நெஞ்சம் உருக்கும் பாடல்களைப் பாடினோரும் உண்டு.

இவரை விட அதிகமாக இறைவனால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுத் தன் பக்தியை நிரூபித்தோர் பலர். இவர் தன் அழகைத் துறந்ததை விட மேம்பட்ட தியாகங்கள் செய்த சிவனடியார்கள் பலர். இவரை விட இறைவனிடம் அதிக நட்புக் கொண்டு பழகி உரிமையோடு ஏவல் கொண்டவரும் உண்டு.

அவர்களுக்கெல்லாம் கொடுக்கப்படாத சிறப்பு உரிமை இவருக்குக் கொடுக்கப்பட்டது என்றால் அதற்குக் காரணம்- இவர் தோன்றியிராவிடில் சைவம் இல்லை, மற்ற சிவனடியார்களும் இல்லை என்பதனால் தான்.

இவள் நம்மைப் பேணும் அம்மை என்று சிவன் உரைத்ததாகக் கூறுவது உபசார வழக்கு. உண்மையில் அவர் சைவத்தைப் பேணிய தாய். சைவத்துக்கு ஒரு திட்டமான வடிவம் கொடுத்து அது ஒரு தனிப் பெரும் சமயமாக வளர்வதற்கான அடித்தளம் இட்டவர் அவர். அந்தக் காலகட்டத்தில் அம்மையார் தோன்றி இராவிட்டால் சமணமும் சாக்கியமும் தமிழ்நாட்டில் கோலோச்சி இருக்கும். வெளிநாடுகளில் புத்த சமயம் தாழ்ச்சியுற்ற வடிவத்தில் இன்று பின்பற்றப்படுவது போலத் தமிழ்நாட்டிலும் சமணம் சாக்கியம் என்ற சமயங்களின் பெயரை வைத்துக் கொண்டு மனம் போன வாக்கில் வாழும் ஒரு ஒழுங்கு முறை அற்ற சமுதாயம் ஏற்பட்டிருக்கும். அந்த அவக்கேட்டிலிருந்து தமிழ் நாட்டை மீட்டவர் அம்மையார். அப்பர் முதலானோர் அவர் போட்டுக் கொடுத்த பாதையில் தான் சென்றார்கள். தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவனாக ஆவதற்கு முதலடி எடுத்து வைத்தவர் அம்மையார்.

சங்க காலத்தில் பல வகை நிலங்களிலும் வெவ்வேறு தெய்வங்களை வணங்கி வந்தார்கள். ஒரு வகை நிலத்து மனிதர் மற்றொரு வகை நிலத்தில் குடியேறாத காலம் அது. மக்கள் புலம் பெயர்ந்து வாழ்வது வழக்கமாகிவிட்ட பிறகு தெய்வங்களுக்குள்ளே உயர்வு தாழ்வு கற்பிக்கப்படக் கூடிய நிலை ஏற்பட்டது. அந்நிலையில் வெவ்வேறு பெயரிட்டு அழைத்தாலும், வெவ்வேறு வகையில் வணங்கினாலும் முழுமுதற் பொருள் ஒன்றே என்ற கருத்தைத் தமிழ் மக்களுக்கு முதன் முதலில் தெரிவித்தவர் அம்மையார். தன் கருத்துக்கு ஆதாரமாக அவர் வேதத்தைச் சார்ந்திருந்தார். வேதம் இந்திரன் வருணன் முதலான பல வேறு தெய்வங்களைப் போற்றுகிறது. ஆனால் வேதத்தின் மெய்பொருள் உணர்ந்தோரே, “ஒன்றுளதுண்மை, ஓதுவர் அறிஞர் பலவிதமாய்” (ரிக் 1.164.46) என்ற அதன் உயிர் நாடியை அறிவர். அம்மையார் வேதம் ஓதுதலைக் கடமையாகக் கொண்ட அந்தணர் மரபில் பிறக்கவில்லை, வேதத்தை அறிவு வழியில் ஆராய்ந்து உபநிடதங்கள் இயற்றிய அரச வம்சத்தில் தோன்றவில்லை. வணிகர் குலத்தில் பிறந்திருந்தாலும் வேதத்தின் மெய்ப்பொருளை உணர்ந்து, ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று அலையும் அறிவிலிகளை நோக்கி, எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத்து அவ்வுருவே ஆம் என்று கூறித் தெய்வங்களுக்குள்ளே வேறுபாடுகள் இல்லை, வழிபடு முறைகளிலும் உயர்வு தாழ்வு இல்லை, முழுமுதற் கடவுள் ஒன்றே என்ற வேத சாரத்தைத் தன் எளிய தமிழில் அறிவுறுத்தியவர் அவர்.

சைவர்கள் திருமாலையும் வணங்குகிறார்கள். தொல் பழம் தெய்வங்களையும் வணங்குகிறார்கள். முருகனும், கணபதியும் வெவ்வேறு பகுதிகளில் தோன்றி இருந்தாலும் அவர்களைச் சிவனுடைய மகன்களாகப் போற்றுகின்றனர். வெளிநாட்டிலிருந்து வந்த சமயங்களின் வழிபாட்டிடங்களிலும் வழிபடுகிறார்கள் சைவர்களுக்கு இந்தப் பரந்த மனப்பான்மை வருவதற்கான அடித்தளம் இட்டவர் அம்மையார்.

சமயம் என்பது அறிவைச் சார்ந்தது அல்ல, இதயத்தோடு தொடர்புடையது என்பதை முதன் முதலில் எடுத்துக் கூறியவர் அம்மையார். இதுவே பிற்காலத்தில் பக்தி இயக்கமாக மாறியது. இது சைவத்தில் மட்டுமல்லாமல் பிற நாட்டுச் சமயங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இறைவன் எவ்வுருவினன், எத்தன்மையன் என்ற ஆராய்ச்சிகளை ஒதுக்கி வையுங்கள், அவன் அஞ்சுதற்குரியன் அல்லன், தன் பெருமை தானறியா எளியவன். அவனுக்கே ஆட்பட்டவர்களாக இருங்கள். வேள்விகள், விரதங்கள், கடுமையான தத்துவ விசாரணைகள் எதுவும் தேவை இல்லை. அவனிடம் அன்பு செலுத்துங்கள் போதும், உங்களுக்கு எதை வேண்டினாலும் தருவான் என்ற கருத்தை உறுதியாகச் சொன்னவர் அவர்.

இறை அருளை அடைதல் எல்லோர்க்கும் எளிது என்று உரக்க அறிவித்து அதுவரை மேல் மட்டத்தினருக்கு மட்டுமே உரிமையாக இருந்து வந்த சமயத்தை எளிமைப்படுத்திச் சாதாரண மக்களும் அதில் பங்கு கொள்ளுமாறு செய்தார்.
 
"இவரை விட அதிகமாக இறைவனால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுத் தன் பக்தியை நிரூபித்தோர் பலர்."

Shri Vikrama sir,

Why should we extol or reproduce the poems written by others which also extol, praise, gods who took pleasure in giving troubles to the devotees? Is it not proper to decry such gods and publicly tell that what we want are gods who will help us get over the very many problems, and not gods who are sadistic in nature and derive pleasure from the troubles and sufferings of humans?

I have a doubt that Christianity scores on this count, head over shoulders (is this the correct usage) and that is why lot of Hindus convert into Christians. As a forum of Tamil Brahmins, is it not better that we try to find out some loving god who does not have a mischievous, sadistic mind, from out of 33 crores of devas who are believed to be there, and popularize the greatnesses of such loving, affectionate gods only?
 
ஏன் இத்தனை கடவுள் வடிவங்கள்?

'கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' என்றும், 'நம்பினார் கெடுவதில்லை' என்றும்

கூறுவதையே அடிப்படையாகக் கொண்டவை எல்லா சமயங்களும். உலகின் மிக உயர்

சக்தியே கடவுள் என்பதும், அனைத்து மதங்களுமே கூறுவது! பின் ஏன் இத்தனை கடவுள்

வடிவங்கள்?


இனிப்புப் பண்டம் பிடித்தவர்கள் ஏராளமானோர் இருக்கின்றார். ஆனாலும், ஏன் எல்லா

இனிப்புக்களையுமே எல்லோரும் விரும்புவதில்லை? ஒரு இனிப்பை மிக உயர்வாக

நேசித்து உண்ணுவது பலருக்கும் வழக்கம் ஆயிற்றே! அதுபோலவே, ஒவ்வொருவரும்

வெவ்வேறு தெய்வ வடிவங்களை விரும்பி வணங்குகின்றார்.


தெய்வம் சக்திதான் என்றால், அதற்கு வடிவம் ஏன்? எல்லோராலும் மனதை

ஒருமைப்படுத்தி, 'ஒரு சக்தி' என்பதை மனதில் எண்ணி தியானிப்பது கடினம். ஒரு

உருவத்தை மனதில் கொண்டு தியானித்தல் எளிது! மனம் ஒரு குரங்கு அல்லவா? அது

தாவி, ஓடி, வேறு எண்ணங்களில் செல்லாது இருக்க, ஒரு வடிவத்தைப் பார்த்தோ,

இல்லை மனத்தில் எண்ணியோ இருப்பதுதான் மனதை ஒருநிலைப்படுத்தும் வழி!


இறை தியானம் ஏன் என்றும் யோசித்தால், நம்மைக் காக்க நமக்கு மேல் ஒரு சக்தி உண்டு

என நம்பினால்தான், நமக்குப் பணிவு வரும்; வாழ்வில் நம்பிக்கை வரும்; வாழ்வின்

கஷ்டமான தருணங்களிலும், திடமான மனதுடன் வாழ்வைத் தொடர முடியும்!


இவை எல்லாவறையும் மீறி, கடவுள் எதற்கு? நாமே சாதிக்கலாம் யார் தயவும் இன்றியே,

என்று வாதம் செய்தால், அவர்களுக்கு ஒரு தெய்வமும் வேண்டாமே! அவர்கள்,

தெய்வத்தை நம்புபவர்களை அவர்கள் வழியில் விடலாமே!


மதம் பிடித்து, தங்கள் மதம்தான் பெரிது என்று மற்றவர்களைத் துன்புறுத்துவதும்,

தாழ்வாகப் பேசுவதும்தான் தவறு. நம் மதத்தையும், நாம் நம்பும் கடவுளரையும்

போற்றுவோம்; பிற மதத்தினர் மனத்தை புண்படுத்தாது இருப்போம்! அவரவர் நம்பிக்கை

அவரவர்களுக்கு என இருந்தால், உலகமே வேறு விதமாக இருக்கும்!


உலகம் உய்ய வேண்டும், :pray2:
ராஜி ராம்
 
Sreemathi Raji Ram ammani,

I don't know whether your post #3 (which I am not quoting because it is lengthy) is in reply to mine # 2 addressed to Shri Vikrama. But it looks like a weak apology of a rebuttal of my view, to me.

I have no quarrel with any of the points you have raised in your said post. To put my doubt/objection in caterer's tongue :), what I am asking is why should we prefer a sweet item which will surely cause stomach cramps, diaorrhea and even affect the liver and then only its sweetness can be tasted? Since there are ever so many sweetmeats why not we sing the praise of Halwa, Jilebi or Rassogolla instead of those trouble-giving items and consider those who underwent enormous sufferings after tasting such sweetmeat, as great people? Hope my doubt is clear to you now.

You write "உலகம் உய்ய வேண்டும்". I ask "ulakam enRAvatu uyyumA, uyntatAka kETTiruppOmA? ulakamE uyntuviTTAl kaDavuLukku vElai illAmal pOyviDAtA?"
 

என்னைப் பொறுத்தவரை, உலகம் உய்ய நான் வேண்டுகிறேன்,

எனக்குப் பிடித்த ஆண்டவனை. அவ்வளவே! :pray2:
 
Dear Sri Sarma-61,
Everyone suffers, God's devotees no exception.

Was not Jesus crucified and did he not cry desperately, Why, God, have you deserted me?

Was not Prophet Mohamed hounded from his own city?

The sufferings of devotees are described in Puranas only to drive home the point that one should not expect a shower of benefits by surrendering to God. Then it becomes a commercial transaction and not Bhakti.
 
Dear Sri Sarma-61,
Everyone suffers, God's devotees no exception.

Was not Jesus crucified and did he not cry desperately, Why, God, have you deserted me?

Was not Prophet Mohamed hounded from his own city?

The sufferings of devotees are described in Puranas only to drive home the point that one should not expect a shower of benefits by surrendering to God. Then it becomes a commercial transaction and not Bhakti.

Shri Vikrama sir,

Christians believe that Jesus was the only begotten son of God, the father and Jesus had to be so horribly crucified to death so that the entire humanity which believed in his status as saviour of Mankind, will be saved from hell. Hence, the experience of Jesus cannot IMHO be equated with our bhaktas being tested by their favourite god/s before granting boon/s.

Prophet Muhammad was driven out from his own city, but he, nor his staunch followers took it as இறைவன் சோதனை; Muhammad treated it as a real political issue, went out when his time was unfavourable, to Medina, got enough fighters and successfully came back to his place later. He also did not seem to have considered as a இறைவன் சோதனை.

It is only our Hindu religion with an underlying subservient, servile mentality towards God/s that wants people to believe Gods to be mischevous people who will play brutal sport with those who bow down to them. (I believe that the unsaid part is that if the God, the father of Christians, Allah of the mussalmans or somebody else comes with courage, our gods will go into hiding. Do we feel honoured by such coward-looking God concepts? We do not take Krishna's advice to Arjuna to fight even his teacher, pitaamaha and brothers for the sake of principles. What an irony!)
 
Dear Sri Sarma-61,
If you consider my posts to be full of absurdities, you are free to skip it. In the same way, if you find Christianity better than Hinduism, nobody prevents you from following it. You remind me of Sri sapr33, a former member who was a very good debater. I am not good at arguments. Hence I choose not to reply to your queries.
 
"இவரை விட அதிகமாக இறைவனால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுத் தன் பக்தியை நிரூபித்தோர் பலர்."

Shri Vikrama sir,

Why should we extol or reproduce the poems written by others which also extol, praise, gods who took pleasure in giving troubles to the devotees? Is it not proper to decry such gods and publicly tell that what we want are gods who will help us get over the very many problems, and not gods who are sadistic in nature and derive pleasure from the troubles and sufferings of humans?

I have a doubt that Christianity scores on this count, head over shoulders (is this the correct usage) and that is why lot of Hindus convert into Christians.

It is quite surprising that such facile statements are made without any basis. Is there any study that shows that Hindus have converted to Christianity because Hindu gods supposedly subject them to pain? Has it at least been documented that this is a major reason? Even an empirical study of the news reports of conversion shows that it is caste discrimination, incentives etc that are the main reasons for conversions. It is always necessary to make claims which can be backed up with proper studies.
 
It is quite surprising that such facile statements are made without any basis. Is there any study that shows that Hindus have converted to Christianity because Hindu gods supposedly subject them to pain? Has it at least been documented that this is a major reason? Even an empirical study of the news reports of conversion shows that it is caste discrimination, incentives etc that are the main reasons for conversions. It is always necessary to make claims which can be backed up with proper studies.

Shri subbu sir,

Your statements are also equally facile IMO. Is there any study to support your views? viz., that hindus converted to Christianity because of the stated causes and that the Christian concept of a loving God who will save the believers from being cast into hell, does not/did not play any role in the conversions? You believe in something/s and then you are dead sure that that belief is the truth, the only truth and there is no truth outside it.

I was born in Kerala and have some experience of what drives the fishermen community increasingly to Christianity; it is prayer songs like "yeśuvin- rājyaṃ svarggīya rājyaṃ snehattin- sāmrājyaṃ", "யேசு தான் உன் வழியும் லட்சியமும்", etc. All sins are wiped out once you confess. Does Hinduism have similar provisions?
 
Yes, SV does, it is called Prapatti aka Bara Nyasam.

Shri Nara sir,

Is this prapatti a one-time initiation or like Christianity, can be taken as and when one feels like getting rid of accumulated sins?
 
Dear Shri Sharma-61,

I have clearly stated that ' empirical study of news reports'. I have never said that this is my belief or it is backed by any study. My experience is limited to Tamil Nadu and the news reports emanating therefrom. Any way, I think it is pointless to flog this discussion further without any reliable study or research on this subject. Adios.
 
Friends,
This thread is about Karaikal Ammaiyar and not about the relative superiority of Christianity and Hinduism. The latter point has been discussed many times in several threads in the past. Kindly do not hijack this thread.
 
One drop of tear shed in sincere remorse

flushes away even all the sins committed knowingly.

God listens to the MIND of the person

and not merely the WORDS uttered by his lips!

Words without thoughts will never to heaven go!

Hinduism does NOT believe in conversions.

It lives and lets people live in their chosen faith.

There are divisions between people in ALL religions.

You may use anther word instead of the word caste.

Have you heard of the people who commit sins on all the days of the week

so that they can confess and become pure on Sunday to repeat the cycle?
 
Friends,
This thread is about Karaikal Ammaiyar and not about the relative superiority of Christianity and Hinduism. The latter point has been discussed many times in several threads in the past. Kindly do not hijack this thread.

Yes Sir! Awaiting your next post on Friday! :ranger:
 
கி.பி.250க்கும் 575க்கும் இடைப்பட்ட காலத்தைத் தமிழகத்தின் இருண்ட காலம் என்று சொல்கிறார்கள். இக்காலத்தில் கருநாடகத்தைச் சேர்ந்த களப்பிரர் என்னும் கூட்டத்தார் சேர சோழ பாண்டியர்களை வென்று தமிழ்நாடு முழுவதும் ஆட்சி செய்தனர். இவர்கள் சமண சாக்கிய சமயங்களைச் சார்ந்தவர்கள்.

இருண்ட காலம் என்று சொல்லப்படுவதற்குக் காரணம், இக்காலம் பற்றி அறியப் போதுமான வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்பது தான். களப்பிரர் காலத்தில் ஏற்பட்டிருந்த இலக்கியங்கள் அனைத்தும் மறு உலக வாழ்வைப் பற்றிய சிந்தனைகளாகவும் அறவுரைகளாகவும் உள்ளனவே தவிர மக்களின் அன்றாட வாழ்வையோ, அக்கால முக்கிய நிகழ்ச்சிகளையோ பிரதிபலிப்பனவாக இல்லை.

களப்பிரர் காலத்தில் சேர சோழ பாண்டியர்கள் முற்றிலும் அழிந்து விடவில்லை. இக்கால கட்டத்தில் பாண்டியன் ஒருவன் இலங்கையில் ஆட்சி நிலை நாட்டியதையும்,சோழர்கள் இரேணாட்டில் (ஆந்திரத்தின் கடப்பை, கர்நூல் பகுதிகள்) சிறப்பாக ஆட்சி செய்ததையும் நோக்குக.

உண்மையில் இந்த மூன்று நூற்றாண்டுகளில் தமிழகத்தைக் களப்பிரர்கள் ஆண்டார்கள் என்று சொல்வதை விட, இவ்வுலக வாழ்வில் உற்சாகம் இல்லாமல் மறு உலக வாழ்வில் நாட்டம் செலுத்தும் மனப்போக்கு ஆண்டது என்று சொல்வதே பொருந்தும்.

‘பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும் பேரின்பம்’ என்ற கொள்கை உடைய சமண சாக்கிய சமயங்கள் தாம் இந்தப் போக்குக்கு முக்கிய காரணம். “அறநெறியை வலியுறுத்திப் பிறவா நிலையான மறு உலக வாழ்வுக்கு ஆயத்தம் செய்வதே இவ்வுலக வாழ்வின் நோக்கம்” என்றும் “இவ்வுலக இன்பங்கள் மறு உலகப் பயணத்தைத் தடை செய்யுமாதலால் இவற்றை மறுத்து வாழ வேண்டும்” என்றும் அவை கூறின.

ஆரம்பத்தில் இச்சமயங்கள் தமது எளிமை காரணமாக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்க வேண்டும். நாளடைவில் மக்கள் சிந்திக்கத் தொடங்கினர். இன்று நம் கண் முன் உள்ள பிரச்சினைகளுக்கு வழி சொல்லாமல், எங்கோ எப்பொழுதோ அடையப் போகிற வீட்டுலகிற்கு வழி சொல்கின்றனவே இச்சமயங்கள் என்று நினைத்திருக்கக் கூடும் அவர்கள்.

எனவே அற நெறியில் மக்களுக்கு நாட்டம் குறைந்தது. மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய துறவிகளே ஒழுக்கம் தவறி வாழத் தலைப்பட்டனர். உழைக்காமல் வாழ விரும்பிய சோம்பேறிகளுக்கும் மனம் போல வாக்கில் வாழ விரும்பிய தூர்த்தர்களுக்கும் புகலிடமாயின சமண, சாக்கியப் பள்ளிகள். இதைச் சம்பந்தரின் தேவாரம் விரிவாகக் கூறுகிறது. அதனால் புறச்சமயத்தவர் பொது மக்களின் வெறுப்புக்கு ஆளானார்கள். நல்லொழுக்கம் உள்ளவர்களும் நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறியவர்களாக இருந்தனர். அவர்கள் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்த அளவுக்கு உணர்ச்சிக்கு இடம் கொடுக்கவில்லை. மனித வாழ்வு என்பது அறிவு உணர்ச்சி இரண்டின் கலவை அன்றோ?

அக்காலத்தில் சாமானிய மக்களுக்கு முன் நின்ற பிரச்சினை என்ன? முற்பிறப்பில் அறியாது செய்த வினைகளால் துன்புறுத்தப்படாமல் எல்லோரும் இன்பமாக வாழவேண்டும். இறந்த பின் மீண்டும் பிறவாமையாகிய முத்தி அடைய வேண்டும். இந்த இலக்குகளை அடைய வேள்வி, பிரம்மத் தியானம் போன்ற சிக்கலான வைதிக வழிகளோ, சமண சாக்கியம் கூறும் துறவு வழிகளோ அல்லாத எளிய வழி ஒன்று வேண்டும்.

இப்படியாகச் சமண சாக்கிய சமயங்கள் தம் உயர் நிலையினின்றும் வீழ்ந்து மக்கள் பிரச்சினைகளுக்கு விடை அளிக்க முடியாமல் போகவே, சமுதாயம் முழுமையும் செய்வதறியாது திகைத்து நின்ற காலத்தில் அம்மையார் தோன்றினார்.
 
அம்மையாரின் குடும்பம்

காரைக்கால் பல வணிகர்களும் நெருங்கி வாழும் பதி என்கிறார் சேக்கிழார். சமண சாக்கிய சமயங்களை வணிகர்கள் தாம் ஆதரித்து வந்தனர் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே காரைக்கால் வாழ் வணிகர்களும் சமணத்தைச் சார்ந்தவர்களாக இருக்கக் கூடும்.

தனதத்தன், நிதிபதி, பரமதத்தன், புனிதவதி என்ற வடமொழிப் பெயர்கள் இதற்கு மேலும் வலுச் சேர்க்கின்றன. ஸம்ஸ்கிருதம் தொல்காப்பியக் காலத்திலிருந்து தமிழ்நாட்டில் இருந்து வந்த போதிலும் பொதுமக்கள் வழக்கில் அம்மொழிச் சொற்கள் மிகுதியாகப் பயன்பட்டது சமணர் ஆதிக்கம் பெருகிய பின் தான். திருஞான சம்பந்தரின் பாடல்களை விட அப்பரின் பாடல்களில் வடசொற்கள் மிகுதியாக உள்ளதையும், மருள் நீக்கியார் என்ற தமிழ்ப் பெயர் தாங்கிய அப்பர், சமண சமயத்தில் சேர்ந்த பின் தருமசேனர் என்ற வடமொழிப் பெயர் பெற்றதையும், தருமபாலர், புத்தமித்திரர் போன்ற வடமொழிப் பெயர் தாங்கிய புறச் சமயத்தார் அனைவரும் பச்சைத் தமிழரே என்பதையும் கவனிக்க வேண்டும்.

அம்மையார் பாடல்களில் சங்க காலத்தை விட மிகுதியான வடசொற்கள் (4 சதவீதம்) உள்ளன. சரணாரவிந்தம், அட்டமூர்த்தி, ஞானமயன், சிவகதி போன்ற கூட்டுச் சொற்கள் பயன்படுத்தப் படுவதிலிருந்தும், பிற்காலத்தில் ஆகாயம், தயை என்று தற்பவமாகப் பயன்பட்டது போல் அல்லாமல் ஆகாசம், தயா என்று தற்சமம் ஆளப் பட்டதிலிருந்தும் அவர் வடமொழியை மிகுதியாகப் பயன்படுத்திய சமணக் குடும்பத்தில் பிறந்தவர் என ஊகிக்கலாம்.

இவரது கணவன் முழுமுதற் கடவுள் ஒருவர் உண்டு என்ற நம்பிக்கை இல்லாதவன் என்பது, அம்மையார் மாங்கனி வரவழைத்த போது அவன், ஈசன் அருள் எனக் கேட்டும் அது தெளியாது இருந்ததாலும், "தணிவரும் பயம் மேற்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி அவரை வேறு ஓர் அணங்கு" எனக் கருதி அச்சமடைந்ததிலிருந்தும் அறிகிறோம். "தொலைவில் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார்" என்று சேக்கிழார் கூறுவதிலிருந்து அவருடைய உறவினர்கள் அனைவருமே இந்தப் புதுமை கண்டு அஞ்சினார்களே அன்றி, இது ஈசன் அருள் என உணராத நாத்திகர்களாகத் தான் இருந்தனர் எனத் தெரிகிறது.

சேற்றில் செந்தாமரை முளைத்தது போல இத்தகைய சமணக் குடும்பத்தில் தோன்றிய அம்மையாரைக் கொண்டு சைவத்தைத் தழைக்கச் செய்ய வேண்டும் என்பது ஈசனின் திருவுள்ளம் போலும்.

அண்மைக் காலத்தில், வேதக் கல்வி வழக்கொழிந்து போன வங்காளத்தில் அந்தணரல்லாத குடும்பத்தில் தோன்றிய விவேகானந்தர் மூலமாக வேதத்தின் பெருமை உலகளாவப் பரவியதை ஒப்பிடுக.
 
அம்மையாருக்கு முந்திய காலம்

சிவன் பற்றிய குறிப்பு எதுவும் தொல்காப்பியத்தில் இல்லாததால் அத்தெய்வம் சிந்து வெளியிலிருந்து வந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. அத்துடன் வேதத்தின் ருத்திரனின் தாக்கமும் அதில் ஏற்பட்டு அந்த இரண்டு அம்சங்களின் சேர்க்கையான முக்கண்ணன் வழிபாடு சங்க காலத்தில் நிலவியது. ஆனால் சங்க நூல்களில் இக் கடவுள் சிறப்பிடம் பெறவில்லை.

இறைவன் ஆலங்காட்டில் ஆடுவதாக முதலில் குறிப்பிடுபவர் அம்மையாரே. அம்மையாருக்கு முந்திய நூல்களில் அத்தகைய குறிப்பு இல்லை. கடவுள் ஆலமரத்தடியில் அமர்ந்திருப்பதாகக் கூறும் திருமுருகாற்றுப்படையும் கலித்தொகையும் அம்மையாருக்கு முந்தியதா அல்லது பிந்தியதா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. ஈசனுக்கு இந்த ஆலமரத் தொடர்பு எப்படி ஏற்பட்டது?

சுடலை மாடன் என்பது தமிழ்நாட்டில் வணங்கப்படும் தொல் பழம் தெய்வங்களில் ஒன்று. சைவம் எழுச்சி பெற்ற சோழ மண்டலத்தில் இதன் வழிபாடு அருகி விட்டது. ஆனால் தென் மாவட்டங்களில் இன்றும் அது தொடர்கிறது. இத்தெய்வத்தின் கோவிலைச் சுற்றி ஆலமரங்கள் காணப்படுவது வழக்கம் என்று தொல் பழம் தெய்வங்களைப் பற்றி ஆய்ந்த முனைவர் அ.கா.பெருமாள் கூறுகிறார். மாடன் வழிபாட்டின் முக்கிய அம்சம், திருநாளின் போது சாமியாடி ஒருவர், மக்கள் பின் தொடர நள்ளிரவில் சுடுகாட்டுக்குச் சென்று அங்கு சாம்பலில் குளித்து, எலும்புகளை அணிந்து கொண்டு ஊருக்குள் திரும்பி வருவது என்று அவர் கூறுகிறார். சுடலை வாழ்வு, சாம்பல் பூச்சு, அழிக்கும் தொழில், கபாலம் ஏந்தி இருத்தல், ஆலமரத்தடியமர்தல் ஆகிய சிவனின் பண்புகள் சுடலை மாடனிடமிருந்து வந்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

சங்க காலத்தில் முக்கண்ணன் வழிபாடு இருந்தும் அதனுடன் சுடலை பற்றிய குறிப்பு இல்லாததால், சங்க காலத்துக்குப் பின்னரே சுடலை மாடனின் தாக்கம் முக்கண்ணன் வழிபாட்டில் ஏற்பட்டது எனக் கொள்ள முடியும்.

காரைக்கால் அம்மையார் தான் முதன் முதலாகச் சிவன் சுடுகாட்டில் நடனமாடுவதாகக் கூறுகிறார். அவர் காலத்தில் சிவன் முழுமுதற் கடவுளாகப் போற்றப்படும் உயர் நிலையில் வைக்கப்படுவதைக் காண்கிறோம். சிவனுக்காகப் பாமாலை சூட்டிய முதல் புலவர், முதல் சிவனடியார் அம்மையாரே.
 
இறைவனுக்கு அம்மையார் வழங்கும் பெயர்கள்

அடிகள், அழகன், அந்தணன், அட்ட மூர்த்தி, அண்டத்தான், அண்டவாணன், அண்ணல், அப்பன், அம்மான், அமரர் பிரான், அரவப் புயங்கன், அரன், ஆதிரையான், ஆள்வான், இறைவன், ஈசன், உத்தமன், உம்பர் கோன் தானத்தான், எந்தை, எம்மான், எரியாடி, கங்கை மணவாளன், கண்ணாளன், கண்ணுதலான், கறைமிடற்றான், குழகன், சங்கரன், சீராளன், செஞ்சடையான், செம்மேனிப் பேராளன், ஞானத்தான், தழல் வண்ணன், தன்னோடே ஒப்பான், நம்பன், நன்றுடையான், நனையாச் சடைமுடி, நுதற்கண்ணான், நெய்யாடி, பரமன், பிரான், புண்ணியன், பெரியான், பெருமான், மணிமிடற்றான், மாயன், மைத்தமர்ந்த கண்டத்தான், வானத்தான், வானோர் பெருமான், விண்ணோன், விமலன், வெண்ணீற்றன், வேதியன் முதலிய பல பெயர்களைப் பயன்படுத்தி அம்மையார் இறைவனைப் போற்றுகிறார்.

ஆலமரத்தடியில் அமர்ந்த நிலையைக் குறிப்பிடும் பெயரையும், பிற்காலத்தில் பெருவழக்காகிய சிவன் என்ற பெயரையும் அம்மையார் பயன்படுத்தவில்லை என்பது கவனிக்கத் தக்கது.

இறைவனின் தோற்றச் சிறப்புகள்

இறைவன் சிவந்த சடை உடையவன். அதில் பிறை நிலவையும் கொன்றை, எருக்கு, வன்னி மலர்களையும் சூடி இருக்கிறான். கங்கை ஆறும் அங்கே தங்கி உள்ளது. நெற்றியில் ஒரு கண்ணைப் பெற்றிருக்கிறான். அவனது மிடறு நஞ்சு உண்டதால் கறுத்துள்ளது. எட்டுத் தோள்களை உடையவன். தலையிலும் மார்பிலும் இடையிலும் பாம்புகளே அணிகலன். மார்பில் நூலும், ஏனக் கொம்பும், மண்டை ஓட்டு மாலையும், எலும்புகளும் அணிந்திருக்கிறான். உடல் பவளம் போல் சிவந்த மேனியாக உள்ளது. அதில் முழுவதும் நீறு அணிந்துள்ளான். அவனது இடது புறத்தில் நீலக்குழல் கொண்ட மலைமகள் பாகம் பிரியாதவளாக இருக்கிறாள். யானைத் தோலைப் போர்வையாகப் போர்த்துக் கொண்டிருக்கிறான். கையில் தீ ஏந்தி உள்ளான். ஆனேறு அவனது வாகனமாக உள்ளது. கால்களில் கழலும் சிலம்பும் அணிந்துள்ளான். வேறு பொன் அணிகள் அணியவில்லை. அவனது அடிகள் செந்தாமரை போல் உள்ளன. அவனது இருப்பிடம் சுடுகாடு. அங்கு அவன் பேய்க் கணங்களுடன் நடனமாடிக்கொண்டு இருக்கிறான். கையில் கபாலம் ஏந்தி ஊர் ஊராகப் பலி ஏற்றுத் திரிகிறான்.
 
திருமாலும் சிவனும்

தற்போது வழக்கில் இல்லாத, திருமால் பற்றிய, ஒரு கருத்தை அம்மையாரின் பாடல்களில் காணமுடிகிறது. ஈசனின் வலப் பக்கம் திருமால் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

ஒருபால் உலகளந்த மாலவனாம், மற்றை
ஒருபால் உமையவளாம் (அற்புதத்திருவந்தாதி-41)

………………………...செங்கண்
திருமாலைப் பங்குடையான் (அ-52)

ஓருருவாய் நின்னோடு உழிதருவான்- நீருருவ
மேகத்தாற் செய்தனைய மேனியான் நின்னுடைய
பாகத்தான் (அ-54)

…………………………………………………பெண்புணரும்
அவ்வுருவோ மாலுருவோ ஆனேற்றாய் நீறணிவ
தெவ்வுருவோ (அ-59)

மின்போலுஞ் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால் (அ-3)

இக்கருத்து ஏழாம் நூற்றாண்டில் கூடத் தொடர்ந்து இருந்திருக்கிறது. மாதொருபாலும் மாலொருபாலும் மகிழ்கின்ற நாதன் என்று சம்பந்தரும், மாலோர் பாகம் திகழ்ந்தான் என்று அப்பரும் குறிப்பிடுகின்றனர். இவ்வழக்கு காலப் போக்கில் கைவிடப்பட்டு, உமையைத் திருமாலின் சோதரியாகக் கூறும் உறவு முறை ஏற்படுத்தப்பட்டது.

தமிழ் மண்ணைப் பொறுத்தவரை சிவனை விட மூத்தவர் திருமால். இவர் தொல்காப்பியர் காலத்திலிருந்தே வணங்கப்பட்டு வந்தவர். புதிதாக வந்த சிவனை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகப் பழைய தெய்வங்களுடன் தொடர்புபடுத்தியதை அம்மையாரின் பாடல்களிலிருந்து அறிகிறோம்.

சங்க காலத்தின் முற்பகுதியில் தோன்றிய நூல்களில் சிவன் முருகனின் தந்தையாகக் கூறப்படவில்லை. பிற்பகுதியில் தோன்றிய கலித்தொகை, திருமுருகாற்றுப்படை, பரிபாடல் ஆகியவற்றில் மட்டும் முருகனைச் சிவனின் மகனாகக் கூறும் வழக்கம் புதிதாக ஏற்பட்டதை ஒப்பிடுக.
 
Respected Vikrama Sir,

சக்தியைத் தன் இடப்பாகத்தில் சிவபெருமான் கொண்டுள்ளார். ஆனால் நம் வழக்கத்தில் 'பெண்களுக்கு இடம்

கொடுக்கக் கூடாது!' எனச் சொல்லி, பெண்களை ஆண்களின் வலப்புறம் நிற்கச் சொல்லுகிறார்களே! இதற்கு

ஏதேனும் காரணம் உண்டா? தாங்கள் அறிந்தால் தெரிவியுங்கள்.


நன்றி,

ராஜி ராம்
 
Respected Vikrama Sir,

சக்தியைத் தன் இடப்பாகத்தில் சிவபெருமான் கொண்டுள்ளார். ஆனால் நம் வழக்கத்தில் 'பெண்களுக்கு இடம்

கொடுக்கக் கூடாது!' எனச் சொல்லி, பெண்களை ஆண்களின் வலப்புறம் நிற்கச் சொல்லுகிறார்களே! இதற்கு

ஏதேனும் காரணம் உண்டா? தாங்கள் அறிந்தால் தெரிவியுங்கள்.


நன்றி,

ராஜி ராம்
கணவனுக்கு வலது கரமாக நின்று உதவுபவள் மனைவி. அதனால் வைதிக காரியங்கள் செய்யும்போது வலதுபுறம் நிற்கச் சொல்கிறார்கள். அதே நிகழ்ச்சியில் ஆசீர்வாத அக்ஷதை வாங்கும்போது இடது புறமாக நிற்கச் செய்கிறார்கள்.
பெண்ணுக்கு இடம் (place) கொடுக்கக் கூடாது என்று சொல்வது ஆண் ஆதிக்க மனப்பான்மை ஆகும்.
 
தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.

ஆண்கள் எல்லோரும் தம் மனைவியை வலது கரமாக எண்ணிக் கொண்டாடினால்,

உலகமே வேறு மாதிரி இருக்கும்! ஆசீர்வாத அக்ஷதை வாங்கும்போது மட்டும்

'இடம் கொடுப்பீர்களா?' என்று நான் கேலி செய்வது வழக்கம்!
:hail:
 
இறைவனின் செயல்களும் கோலங்களும்

முப்புரம் எரித்தது, கங்கையைத் தலையில் தாங்கியது, அரக்கன் செருக்கடக்கியது, ஆலகால விடமுண்டு கண்டம் கறுத்தது, அர்ச்சுனனைச் சோதிக்கக் கிராத வேடம் பூண்டது. அடி முடி தேடிய மால் அயனுக்கு அறிய முடியாதபடி நின்றது, காலனைக் காலால் உதைத்தது, காமனை எரித்தது, கபாலம் ஏந்திப் பலி ஏற்றது, யானைத் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டது, சந்திரனைத் தலையில் சூடியது, சுடுகாட்டில் அனல் ஏந்திப் பேய்களுடன் நடனமாடியது என்று சிவனின் பல திருவிளையாடல்களையும் கோலங்களையும் அம்மையார் குறிப்பிடுகிறார்.

தேவாரக் காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்

சிவனுடைய தோற்றத்தில் அம்மையார் குறிப்பிடாத பல அம்சங்கள் தேவாரக் காலத்தில் சேர்ந்து விட்டிருப்பதைக் காண்கிறோம்.

அம்மையாரின் பெம்மான் காலாலும் கண்ணாலுமே பகைவர்களை அழித்தவன். முப்புரம் எரிக்க அவனுக்குத் தேவைப்பட்டது ஓரம்பு தான். வில்லைக் கூட அவன் கையில் ஏந்தி இருக்கவில்லை. ஆனால் தேவாரக் காலத்தில் அவனிடம் சூலம், மழு ஆகிய ஆயுதங்கள் விளங்குவதைக் காண்கிறோம். பல பகைவர்களை வென்றதன் அடையாளமாகத் தேவாரக் காலத்தில் கொக்கிறகு, ஆமை ஓடு ஆகிய வெற்றிச் சின்னங்கள் அவனிடத்தே விளங்குகின்றன.

இறைவன் புலித்தோலும் மான் தோலும் அணிந்திருப்பதாக அம்மையார் சொல்ல, தேவாரக் காலத்தில் கோவணம் அணிந்தவனாகவும், நக்கனாகவும் கூறப்பட்டுள்ளான். கையில் மான் ஏந்தியவனாகவும் காணப்படுகிறான். பொன்னாரம் மற்றொன்று பூண் என்று அம்மையார் வேண்டியதற்கிணங்கப் பிற்காலத்தில் அவனிடத்தில் தோடு, குழை ஆகிய அணிகளும் விளங்குகின்றன.

அம்மையாரால் கூறப்படாத தக்கன் கதை தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல, பிரமன் தலையைச் சிவன் கொய்தது பற்றிய புராணக் கதையும் அம்மையாருக்குப் பின்னரே எழுந்திருக்க வேண்டும்.

சிவன் இராவணனை மலையின் கீழ் அடர்த்து பாதத் தனி விரலால் செற்றதாக அம்மையார் கூறுகிறார். ஆனால் கைலாயம் என்ற பெயரை ஒரு இடத்தில் கூடக் குறிப்பிடாததால், சிவனைக் கைலாயத்தில் உறைபவராகச் சொல்லும் வழக்கும் அம்மையார் காலத்துக்குப் பின்னரே தோன்றி இருக்கக் கூடும்.

தேவாரக் காலத்தில் இறைவன் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து நான்கு முனிவர்க்கு அறம் உரைத்தது கூறப்படுகிறது. இதுவும் அம்மையாருக்குப் பின் ஏற்பட்ட மாற்றம் ஆகும்.

அம்மையாரின் இறைவன் உமை காண ஆடுகிறான். தேவாரக் காலத்தில் இறைவன் காளி காண ஆடுகிறான்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top