Kamadhenu Puja

காமதேனு பூஜை
***

அணைத்து தேவர்களும், முனிவர்களும் விரும்பியதை வழங்கும் தேவலோகப் பசுவான காமதேனுவை வழிபடுவது, குடும்பத்திற்குச் செல்வம் மற்றும் அமைதியைத் தரும். நவராத்திரி தொடக்கமாக இந்த பூஜையைச் செய்வார்கள்.

பசுவை கோமாதாவாகப் பாவித்து வழிபடுவதே காமதேனு வழிபாடாகும். கோமாதாவில் சகல தேவதைகளும் வசிப்பதாக ஐதீகம். எனவே, காலை வேளையில் குளித்துவிட்டு பசுவிற்கு அகத்திக்கீரை, பழங்கள் மற்றும் வெல்லம் கலந்த உணவு வழங்குவது சிறந்தது.

பசுவை வணங்கி, சந்தனம், குங்குமம் வைத்து மலர் தூவ வேண்டும். நேரடிப் பசு இல்லாவிட்டில், காமதேனு உருவம் பொறிக்கப்பட்ட படத்திற்குப் பூக்களால் அலங்கரித்து, தீபமேற்றி வழிபடலாம்.

இதன் பலன்:

1. குடும்பத்தில் இருந்த கடன் தொல்லைகள் மற்றும் வறுமை நீங்கும்.

2. வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகி, நிம்மதியும் ஒற்றுமையும் நிலவும்.

3. நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேற முன்னோர்களின் ஆசியும் காமதேனுவின் அருளும் கிடைக்கும்.
 
Back
Top