சூரியனுக்கு ஒரு தடவை சுற்றி வர 365 நாட்கள் ஆகிறது. சந்திரனுக்கு ஒரு தடவை சுற்றி வர 353 நாட்கள் ஆகிறது. சந்திரன் நக்ஷத்திரங்களில் சுற்றி வருகிறது. உங்கள் ஜாதக ராசிகட்டத்தில் 12 ராசிகள் இருக்கும். சூரியன் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு செல்வதயே ஒரு மாதம் 30 நாட்கள் எங்கிறோம். மாத பிறப்பு எங்கிறோம்.
சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்வதை ஸெளரமான மாதம் எனப்பெயர். அமாவாசைக்கு மறு நாள் ப்ரதமை முதல் அடுத்த அமாவாசை முடிய உள்ள நாட்களுக்கு சாந்திரமான மாதம் எனப்பெயர்.
ஸெளரமான மாதம் சித்திரை , வைகாசி ----- பங்குனி முடிய. இதையே மேஷம், ரிஷபம் என 12 ராசி கட்ட பெயர் களாகவும் சொல்லலாம். சாந்திரமான மாதம் பெயர் சைத்ரம், வைசாகம், ஜ்யேஷ்டம், ஆஷாடம், சிராவணம், பாத்ரபதம், ஆசுவினம், கார்த்திகம், மார்க்க சிரம், பெளஷம், மாகம், பால்குணம் என பெயரிட்டு அழைக்கிறார்கள்.
இதை எல்லா பஞ்சாங்கங்களிலும் ஒவ்வொரு மாதமும் போடுகிறார்கள். அநேகமாக பண்டிகைகள், விரதங்கள் சாந்திரமான மாத அடிபடையில் தான் நிற்ணயம் செய்து போட வேண்டியுள்ளது.
ஒரு வருடத்தில் 12 நாட்கள் வீதம் சந்திரன் இரண்டரை வருடத்தில் 30 நாட்கள் முன்பாகவே சந்திரன் சுழர்ச்சியில் முன்னதாக நிற்கிறது. இதையே அதிக மாதம் எனப்பெயரிட்டு , இந்த அதிக மாதத்திற்கு 60 நாட்கள் போட்டு 30 நாட்கள் அதிக மாத நாட்கள் மற்றோரு 30 நாட்கள் நிஜ மாதம் என போடுகிறார்கள். இந்த வருடம் பஞ்சாங்கத்தில் சாந்திர மான பெயரான அதிக ஆஸ்வின சுத்தம், அதிக ஆஸ்வின பகுளம், நிஜ ஆஸ்வின சுத்தம், நிஜ ஆஸ்வின பகுளம் என போட்டிருப்பார்கள்.
பகுளம் என்பது தேய் பிறை, சுத்தம் என்பது வளர்பிறை.