Hayagrivar Mantram

praveen

Life is a dream
Staff member
ஹயக்ரீவர் மந்திரம்.

ஹயக்ரீவர்குதிரை முகமும், மனித உடலும் கொண்ட உருவானவர், இவரை விஷ்ணுவின் வடிவாகக் கருதி வைணவர்கள் வழிபடுகிறார்கள். ஹயக்ரீவரை கல்வித் தெய்வம் என குறிப்பிடுகின்றார்கள். இந்த அவதாரத்தினை தசாவதாரத்திற்குள் இணைப்பதில்லை.

ஹயக்ரீவர்

ஹயக்ரீவரிடமிருந்து வேதங்களை பெறும் பிரம்மா
அதிபதி ஞானம்
தேவநாகரி Hayagrīva
சமசுகிருதம் viṣṇu
வகை திரிமூர்த்தி
இடம் வைகுண்டம்
கிரகம் வைகுண்டம்
ஆயுதம் சுதர்சன சக்கரம், கௌமோதகி
துணை லட்சுமி
அவதாரக் காரணம் தொகு

மது, கைடபன் எனும் அசுரர்கள் படைக்கும் கடவுளான பிரம்மாவிடமிருந்த வேதங்களை பறித்துக் கொண்டனர். அத்துடன் பாதாள உலகத்திற்குச் சென்றனர். அதனை மீட்டுத் தரும்படி பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணுவை வேண்டினார். மதுவும், கைடபனும் படைக்கும் தொழிலை செய்ய ஆசை கொண்டனர்.

அவர்கள் குதிரை முகம் உடையவர்கள் என்பதால் விஷ்ணுவும் குதிரை முக அவதாரம் எடுத்து அவர்களுடன் போர் புரிந்தார். இந்த ரூபமே ஹயக்ரீவர் என்று அழைக்கப்படுகிறது. அசுரர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். [1]

லட்சுமி ஹயக்ரீவர் தொகு

மது, கைடபன் அசுரர்களை அழித்த பின்னும் ஹயக்கிரீவருக்கு உக்கிரம் தனியாதால் லட்சுமி தேவியை அவர் மடியில் அமர வைத்துள்ளனர்.

இத்திருவுருவத்திற்கு லட்சுமி ஹயக்ரீவர் என்று பெயர். ஹயக்ரீவருக்கு கல்வி கருவாக இருந்தமையால் கல்விக்கு தெய்வமாகவும், லட்சுமி உடனிருப்பதனால் செல்வத்திற்கு தெய்வமாகவும் ஹயக்கிரீவர் வணங்கப்படுகிறார்.

ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் தொகு

தூய மெய்ஞ்ஞான வடிவமும் ஸ்படிகம் போன்று தூய்மையானவரும் அறிவு யாவற்றுக்கும் ஆதாரமானவருமாகிய ஹயக்கிரீவரை வணங்குகிறேன் எனும் பொருளுடைய ஸ்தோத்திரம்.

"ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே"

ஹயக்ரீவர் காயத்திரி தொகு
'ஓம் தத் வாகீச்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி தந்நோ ஹஸெள ப்ரஸோதயாத்'

மூலமந்திரம்

'உத்கீத ப்ரணவோத்கீத, ஸர்வ வாகிச்வரேச்வர ஸர்வ வேதமயா சிந்த்யா, சர்வம் போதய போதய' [2]

ஓம்கார உத்கீத ரூபாய ருக்யஜீ ஸாம மூர்த்தயே நம: அஸ்து தேவதேவாய வாஞ்சிதார்த்த ப்ரதாயினே: வேத வேதாந்த வேத்யாய வேதாஹரணே கர்மணே ஸர்வாஸ்த்வ மஹாமோஹ பேதினே ப்ரஸ்மணே நம: [3]

மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ஹயக்ரீவர் தசாவதாரங்களுக்கு முன்பே மனித உடலுடனும் குதிரை முகத்துடனும் தோன்றியவர். அதனால் பரிமுகன் என அழைக்கப்படுகிறார். ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் பவுர்ணமி திதியில் அழகான நீண்ட தீர்க்கமான நாசியுடன் (மூக்கு), இரண்டு பெரிய மிளிரும் காதுகளுடன்,

குதிரை முகத்துடன் சூரிய ஒளிக்கதிர்கள் பிடரி கேசங்களாக அமைய, பூமி நெற்றியாய் அமைய, கங்கை, சரஸ்வதி இரு புருவங்களாக அமைய, சந்திர, சூரியர்கள் தாமரைக்கண்களாக, சந்தியா தேவதைகள் நாசித்துவாரங்களாக,

பித்ருதேவதைகள் பற்களாக, பிரம்ம லோகங்கள் இரண்டு உதடுகளாக, காளராத்ரி கழுத்தாக அமைய திவ்யதேஜஸ் உடன் அவதரித்தார். அனைத்து வித்தைகளின் ஆதார தெய்வமாக விளங்குபவர் அவர்.

ஒருமுறை பிரம்மா உறக்கத்தில் இருந்தபோது மதுகைடபர் என்ற அரக்கர்கள் பிரம்மா படைத்த வேதங் களை திருடிச் சென்று அதல பாதாளத்தில் ஒளித்து வைத்து விட்டனர். தூக்கம் கலைந்து எழுந்தபோது வேதங்களைக் காணாது பிரம்மா திடுக் கிட்டார். மகா விஷ்ணு விடம் முறையிட்ட தால் அவர் எப்படியும் மீட்டுத்தருவதாக உறுதி அளித்தார்.

அதற்காக மகாவிஷ்ணு ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து பாதாளம் வரை சென்று வேதத்தின் ஒரு பாடத்தில் உள்ள உத்கீதம் என்ற ஸ்வரத்தை உருவாக்கி அதன் வழியே வந்த அரக்கர்களை போரிட்டு அழித்தார். பின்னர் வேதங்களை மீட்டு வந்து பிரம்மாவிடம் ஒப்படைத்தார்.

இதன்மூலம் கல்வி, கலை, ஞானத்தின் தெய்வங்களுக்கு எல்லாம் குருவாக ஹயக்ரீவர் விளங்குவது உறுதியாகி உள்ளது. எனவே இவரை வழிபட்டால் கல்வி, கேள்வி, ஞானம் பெறலாம் என்பது ஐதீகம்.

அவருடைய குதிரை முகம் சூரியனையும் வெல்லக்கூடிய ஆற்றல் மிக்க பேரொளியைப் பெற்றுள்ளதோடு நான்கு கைகளில் சங்கு, சக்கரம், பத்மமாலை, அபயம் என விளங்கும்.

அவர் லட்சுமி ஹயக்ரீவராக, வரத ஹஸ்த ஹயக்ரீவராக, அபயஹஸ்த ஹயக்ரீவராக, யோகஹயக்ரீவராக பலவித வடிவங்களிலும் விளங்குகிறார். கல்வியின் ஆக்கபூர்வ வளர்ச்சிக்கு தடையில்லாது பிள்ளைகள் அனைவரும் மன அமைதியுடன் கல்விகற்று சிறப்புடன் தேர்ச்சி அடைய ஹயக்ரீவர் துதி காயத்ரி மந்திரம் முதலியவற்றை தியானித்தல் அவசியமாகிறது.

கல்வியில் நல்ல உயர்நிலை பெறவும், உழைத்த உழைப்பு வீணா காமல் இருக்கவும், ஞாபகசக்தி வேண்டும். இதனை அருளுபவர் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர். இந்த நிலைபெற்ற ஐஸ்வர்யமான கல்விச் செல்வத்தைப் பெற செங்கல்பட்டு அருகே செட்டிப்புண்ணியத் தில் உள்ள லஷ்மி ஹயக்ரீவரை வழிபடலாம்.

அறியாமை எனும் இருளில் இருந்து ஞானம் எனும் ஒளியை நோக்கி அழைத்து செல்லும் ஞான ஆசிரியனாக விளங்குபவர் ஹயக்ரீவர், கல்விக் கடவுளான சரஸ்வதிக்கே ஞானத்தை அருளியவர் (சரஸ்வதிக்கு ஒரே கோயில் திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் உள்ளது)கல்விச் செல்வத்துடன் பொருட் செல்வத்தையும் வழங்கும்

விதமாக தனது மடியில் லட்சுமி தேவியுடன் அருள்பாலிக்கும் குதிரை முகமும், மனித உடலும் கொண்ட யோக தெய்வம் ஹயக்ரீவருக்கு தமிழகத்தில் பல இடங்களில் கோயில்கள் உள்ளன. இதில் கடலூர் அருகில் உள்ள திருவஹிந்திரபுரம் (திருவந்திபுரம்) லட்சுமி ஹயக்ரீவர் கோவில் உலகப்புகழ் பெற்றது.

சென்னைக்கு அருகில் காட்டாங் கொளத்தூரை அடுத்துள்ள செட்டிப் புண்ணியத்தில் கோவில் கொண்டுள்ள அருள்மிகு தேவநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள ஸ்ரீயோக ஹயக்ரீவர் சன்னதியில் அர்ச்சனை செய்து பூஜித்தால் கல்வியில் சிறந்து விளங்க முடியும் என இத்திருக் கோயில் தலபுராணம் கூறுகிறது. இந்த ஆலயத்தில் ஸ்ரீயோக ஹயக்ரீவர் வீற்றிருந்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி அருள் பாலித்து வருகிறார். ஆண்டுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கும், தொடர்ந்து உயர்கல்வி பெறுவதற்கும் மாணவ, மாணவிகள் இத்தலத்துக்கு வந்து வழிபடு கிறார்கள்.

இத்தலத்துக்கு நேரில் வர இயலாதவர்கள் அருகில் உள்ள விஷ்ணு கோயி லில் உள்ள ஸ்ரீலஷ்மி ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்துப் பிரார்த்தனை செய்து கொள்ள லாம். பள்ளி, கல்லூரிகளில் இறுதித்தேர்வின் போது, மாணவர் களுக்கு ஏற்படும் பயத்தைப் போக்கவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும், இப்பிரார்த்தனை பெரிதும் உதவுவதாகப் பயன்பெற்ற பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் செட்டிப் புண்ணியம் கோயிலில் வித்யா தோஷ நிவர்த்தி சங்கல்ப அர்ச்சனை பூஜை நடத்தப்படுகிறது. இதில் பேனா, பென்சில் வைத்து அர்ச்சனை செய்கின்றனர். பிறகு, பூஜையில் வைத்து அர்ச்சிக்கப்பட்ட ரட்சையை, முன்பதிவு செய்த மாணவர் களுக்கு கூரியரில் அனுப்பி வைக்கிறார்கள்.

அந்த ரட்சையைக் கையில் கட்டிக்கொண்டால், கல்வியில் மேன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை.கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் ஸ்ரீ தேவநாதனுடைய மற்றொரு அதி சுந்தரமான பிரயோக சக்கரத்துடன் சேவை தரும் திவ்யமங்கள விக்ரகத்தை எடுத்து வந்து செட்டிப்புண்ணியம் என்ற இவ்விடத்தில் எழுந்தருள வைத்தனர்.

இத்திருமூர்த்தி யுடன் ஸ்ரீயோக ஹயக்ரீ வரும் கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளார். தற்போது பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் ஹயக்ரீவரை வழிபட மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சிறப்பு அர்ச்சனைகளும் நடத்தப்படுகின்றன.புதுவை முத்தியால் பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஆலய அர்ச்சகர் சம்பத்குமார் கூறும்போது, ஹயக்ரீவரை வழிபட்டால் கல்வி ஞானம் நன்கு வளரும்.

மாணவ, மாணவிகள் இவரை வழிபட்டால் தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம். நினைவாற்றல் அதிகரிக்கும். நல்ல சிந்தனை மேலோங்கும், தீய சிந்தனைகள் நம்மிடம் அணுகாது. மனதில் தெளிவு பிறக்கும். ஒழுக்கம் மேம்படும். மகாலட்சுமி வழிபாட்டால் அனைத்து செல்வங்களும் வந்து சேரும் என்றார்.

உ லகத்தில் உள்ளவற்றில், நமக்குத் தெரிந்ததைவிடத் தெரியாதவையே அதிகம். தெரியாதவற்றுள் ஏதாவது ஒன் றைத் தெரிந்து கொண்டாலே போதும். அளவில்லாத சந்தோஷம் உண்டாகும்.

அந்த சந்தோஷமும், ‘நம்மைவிடத் திறமைசாலி வந்து விடுவானோ? நம்மைத் தோற்கடித்து விடுவானோ?’ என்ற பயத்தில் மூழ்கிப் போய் விடும்!
இந்த பயம் இல்லாவிட்டாலும், அரசனே ஆனாலும் அவனுக்கு அவனது நாட்டில் மட்டுமே மதிப்பு. ஆனால், கல்விமான்களுக்கோ, அவர்கள் எங்கு போனாலும் மதிப்புக் கிடைக்கும். ‘கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்னும் வாக்கு இதை மெய்ப்பிக்கிறது.
இதிலும் ஒரு பிரச்னை.

வயிற்றுப் பாட்டுக்கான கல்வியாக இருந்தால், அதில் சந்தோஷம் இருக்கிறதே தவிர, ஆனந்தம் வருவது இல்லை. சந்தோஷம் என்பது அழியக் கூடியது. ஆனந்தமோ அழிவில்லாதது. சந்தோஷம் இருந்தால், துக்கமும் இருக்கும். ஆனால், ஆனந்தம் என்பதோ குறைவில்லாத பிரம்மத்தின் ஒரு திவலை.

ஆனந்தத்திலேயே பல வகை உண்டு. அவற்றின் உச்சியில் இருப்பது பிரம்மானந்தம் என உபநிடதம் கூறுகிறது.
இந்த பிரம்மானந்த, ஞானானந்த மயமாக, தூய்மையான ஸ்படிகம் போலத் துல்லியமாகப் பிரகாசிப்பவர் ஸ்ரீஹயக்ரீவர். எல்லா விதமான வித்தைகளுக்கும் ஆதாரமாக இருப்பவர் இவரே.

ஆய கலைகள் அறுபத்துநான்கையும் நமக்கு அருளும் சகலகலாவல்லியான சரஸ்வதிக்கும் குருவாக இருப்பவர் - ஹயக்ரீவர். ஸ்ரீவித்யா உபாசகர்கள் புகழும் லலிதா சஹஸ்ர நாமத்தை அகஸ்தியருக்கு வெளிப்படுத்தியவர் ஹயக்ரீவர்!
நமக்கு ஞானமும் கல்வியும் இரண்டு கண்கள். இதன்படி பார்த்தால்,

நாம் ஹயக்ரீவரை வழிபட வேண்டிய அவசியம் புரியும். நாம் கற்பது கல்வி. கற்றதை உள்ளத்தில் வைத்து நன்றாக உணர்ந்து, அதன்படி நடந்து, அனுபவத்தில் உண்மையைக் காண்பது ஞானம். இந்த ஞானம், கல்வி இரண்டும் இல்லாதவர்கள் பார்ப்பது, அறியாமை என்ற இருளை மட்டுமே.

இந்த இருள் விலகி ஒளி கிடைக்கவும், ஞானம் பிறக்கவும் நமக்கு ஒரு சிறந்த ஞான ஆசார்யர் தேவை. அவரும் ஈடு-இணை சொல்ல முடியாதவராக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒருவரை எங்கே தேடிப் பிடிப்பது?

இதற்கு உரிய வழியை நமது ஞான நூல்கள் விரிவாகச் சொல்கின்றன. அவற்றில் ஆழ்ந்து, அலையாழி அறிதுயிலும் மாயனின் அவதார மகிமைகளை நன்கு அனுபவித்த மகான்களும் ரிஷிகளும் நமக்குக் காட்டிய ஞான ஆசார்ய வடிவம் - ஹயக்ரீவர். கலைகளில் திறமை, கல்வியில் உயர்வு, தெளிந்த ஞானம் ஆகியவற்றை விரும்பி,

ஹயக்ரீவரை வழிபட்டு பலன் அடைந்தவர்கள் பலர். பள்ளிக் கூடங்கள் திறந்து விட்ட இந்த நேரத்தில் நம் குழந்தைகள் கல்வியில் தேர்ச்சி பெற்று விளங்க வேண்டும் என்பது பெற்றோரின் ஆசை. இந்த சந்தர்ப்பத்தில், மகா விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒன்றான ஹயக்ரீவரைப் பற்றியும் அவரருள் பெற்ற மகான்களின் அருஞ்செயல்கள் சிலவற்றையும் பார்க்கலாம்.
அவதாரம்

உ லகம் ஞானம் பெறுவதற்காக மகாவிஷ்ணு, குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவராகத் திரு மேனி கொண்டிருக்கிறார். குதிரை முகமும், மனித உடலும் கொண்ட மகாவிஷ்ணுவை ‘ஹயமுகன்’ என மகாபாரதம் கூறுகிறது.

பழங்காலத்தில் இருந்தே நமது நாட்டில் ஹயக்ரீவ வழிபாடு இருந்து வருகிறது என்பதையும் அவரின் மகிமையையும் ஹயக்ரீவ உபநிடதம், தலபுராணங்கள், மகான்களது வரலாறு, சிற்ப ஆகம நூல்கள் போன்றவை வெளிப்படுத்துகின்றன.

அவற்றில் இருந்து சில:

நான்கு வேதங்களையும் மது-கைடபர் என்ற கொடிய அரக்கர்கள்,

குதிரை வடிவில் வந்து நான்முகனான பிரம்ம தேவரிடம் இருந்து, பறித்துச் சென்றனர்.
வேதங்களை இழந்த உலகெல்லாம் இருள் சூழ்ந்தது. என்ன செய்வதென்று தெரியா மல் திகைத்தார் பிரம்மன்.
எனவே, மகாவிஷ்ணுவிடம் போய், ‘‘ஸ்வாமி! அரும்பெரும் வேதங்களை அரக்கர்கள் கவர்ந்து கொண்டு போய் விட்டார்கள். அவற்றை மீட்டுக் காத்தருள வேண்டும்!’’

என வேண்டினார் பிரம் மன். அவருக்கு திருவருள் புரியத் தீர்மானித்த மகாவிஷ்ணு, ஹயக்ரீ வராக வடிவம் கொண்டார்.
குதிரை முகம். மனித உடம்பு. சூரியனை மிஞ்சக் கூடிய ஒளி. கண்களாக சந்திர - சூரியர்கள். கங்கையும் சரஸ்வதியும் கண் இமைகள்.

தெய்வ ஒளி வீசும் வடிவம் ஆகியவற்றுடன் திருவடிவம் கொண்ட மகாவிஷ்ணு வேதங் களை மீட்பதற்காக அரக்கர்களைத் தேடிப் புறப்பட்டார்.

வேதங்களுடன் மறைந்திருந்த மது- கைடபர்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்தார். பின்பு அவர்களுடன் போரிட் டார். ஒளி வந்தால் இருள் தானாகவே மறைவதைப் போல, ஞானத்தின் முழு வடி வான ஹயக்ரீவரின் எதிரில் அகம்பாவத்தின் வடிவங்களான மது- கைடபர் அழிந்தனர்.

அவர் களிடம் இருந்து வேதங்களை மீட்டு பிரம்மதேவரிடம் ஒப்படைத்து வேதநெறி தழைத்தோங்க வழி வகுத்தார் ஹயக்ரீவர்.
(தேவி மகாத்மியம், தேவி பாகவ தம் ஆகிய நூல்களில் உள்ள மது, கைடப சம்ஹாரத்துக்கும் இதற்கும் வேறுபாடு உள்ளது. அதை எண்ணிக் குழம்ப வேண்டாம்!)

பரம்பொருளின் இந்தச் செயலை நாலாயிர திவ்யப் பிரபந்தம் அற்புதமாக வர்ணிக்கிறது.
முன்னிவ்வுலகேழும் இருள் மண்டியுண்ண முனிவரோடு தானவர்கள் திகைப்ப வந்து பன்னுகலை நூல் வேதப் பொருளை யெல்லாம் பரிமுக மாயருளிய வெம்பரமன் காண்மின் செந்நெல் மலி கதிர்க்கவரி வீசச் சங்கமவை முரலச் செங்கமல மலரையேறி அன்னமலி பெடையோடுமமரும் செல்வத்து அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே!

( நாலாயிர திவ்யப் பிரபந்தம் - இரண்டாயிரத்தில் ஏழாம் பத்து - எட்டாம் திருமொழி)
வசையில் நான்மறை கெடுத்த அம்மலரயற்கருளி முன் பரிமுகமாய் இசைகொள் வேத நூலென்றிவை பயந்தவனே! எனக்கருள் புரியே!

உயர்கொள் மாதவிப் போதொடுலாவிய மாருதம் வீதியின் வாய் திசையெல்லாம் கமழும் பொழில் சூழ் திருவெள்ளறை நின்றானே.
(நாலாயிர திவ்யப் பிரபந்தம் - இரண்டாயிரத்தில் ஐந்தாம் பத்து - மூன்றாம் திருமொழி)

॥ ஶ்ரீஹயக்³ரீவாஷ்டோத்தரஶதநாமஸ்தோத்ரம் ॥

அத² வினியோக:³ -
ௐ அஸ்ய ஶ்ரீஹயக்³ரீவஸ்தோத்ரமந்த்ரஸ்ய ஸங்கர்ஷண ருʼஷி:,
அனுஷ்டுப்ச²ந்த:³, ஶ்ரீஹயக்³ரீவோ தே³வதா ருʼம் பீ³ஜம்
நம: ஶக்தி: வித்³யார்தே² ஜபே வினியோக:³ ॥

அத² த்⁴யானம் -
வந்தே³ பூரிதசந்த்³ரமண்ட³லக³தம் ஶ்வேதாரவிந்தா³ஸனம்
மந்தா³கின்யம்ருʼதாப்³தி⁴குந்த³குமுத³க்ஷீரேந்து³ஹாஸம் ஹரிம் ।
முத்³ராபுஸ்தகஶங்க²சக்ரவிலஸச்ச்²ரீமத்³பு⁴ஜாமண்டி³தம்
நித்யம் நிர்மலபா⁴ரதீபரிமலம் விஶ்வேஶமஶ்வானனம் ॥

அத² மந்த்ர: -
ௐ ருʼக்³யஜு:ஸாமரூபாய வேதா³ஹரணகர்மணே ।
ப்ரணவோத்³கீ³த²வசஸே மஹாஶ்வஶிரஸே நம: ॥

ஶ்ரீஹயக்³ரீவாய நம: ।

அத² ஸ்தோத்ரம் -
ஜ்ஞானானந்த³மயம் தே³வம் நிர்மலம் ஸ்ப²டிகாக்ருʼதிம் ।
ஆதா⁴ரம் ஸர்வவித்³யாநாம் ஹயக்³ரீவமுபாஸ்மஹே ॥ 1॥

ஹயக்³ரீவோ மஹாவிஷ்ணு: கேஶவோ மது⁴ஸூத³ன: ।
கோ³விந்த:³ புண்ட³ரீகாக்ஷோ விஷ்ணுர்விஶ்வம்ப⁴ரோ ஹரி: ॥ 2॥

ஆதீ³ஶ: ஸர்வவாகீ³ஶ: ஸர்வாதா⁴ர: ஸனாதன: ।
நிராதா⁴ரோ நிராகாரோ நிரீஶோ நிருபத்³ரவ: ॥ 3॥

நிரஞ்ஜனோ நிஷ்கலங்கோ நித்யத்ருʼப்தோ நிராமய: ।
சிதா³னந்த³மய: ஸாக்ஷீ ஶரண்ய: ஸர்வதா³யக: ॥ 4॥ ஶுப⁴தா³யக:
ஶ்ரீமான் லோகத்ரயாதீ⁴ஶ: ஶிவ: ஸாரஸ்வதப்ரத:³ ।
வேதோ³த்³த⁴ர்த்தாவேத³னிதி⁴ர்வேத³வேத்³ய: புராதன: ॥ 5॥

பூர்ண: பூரயிதா புண்ய: புண்யகீர்தி: பராத்பர: ।
பரமாத்மா பரஞ்ஜ்யோதி: பரேஶ: பாரக:³ பர: ॥ 6॥

ஸகலோபனிஷத்³வேத்³யோ நிஷ்கல: ஸர்வஶாஸ்த்ரக்ருʼத் ।
அக்ஷமாலாஜ்ஞானமுத்³ராயுக்தஹஸ்தோ வரப்ரத:³ ॥ 7॥

புராணபுருஷ: ஶ்ரேஷ்ட:² ஶரண்ய: பரமேஶ்வர: ।
ஶாந்தோ தா³ந்தோ ஜிதக்ரோதோ⁴ ஜிதாமித்ரோ ஜக³ன்மய: ॥ 8॥

ஜராம்ருʼத்யுஹரோ ஜீவோ ஜயதோ³ ஜாட்³யனாஶன: । க³ருடா³ஸன:
ஜபப்ரியோ ஜபஸ்துத்யோ ஜபக்ருʼத்ப்ரியக்ருʼத்³விபு:⁴ ॥ 9॥

var ஜயஶ்ரியோர்ஜிதஸ்துல்யோ ஜாபகப்ரியக்ருʼத்³விபு:⁴
விமலோ விஶ்வரூபஶ்ச விஶ்வகோ³ப்தா விதி⁴ஸ்துத: । விராட் ஸ்வராட்
விதி⁴விஷ்ணுஶிவஸ்துத்ய: ஶாந்தித:³ க்ஷாந்திகாரக: ॥ 10॥

ஶ்ரேய:ப்ரத:³ ஶ்ருதிமய: ஶ்ரேயஸாம் பதிரீஶ்வர: ।
அச்யுதோऽனந்தரூபஶ்ச ப்ராணத:³ ப்ருʼதி²வீபதி: ॥ 11॥

அவ்யக்தோ வ்யக்தரூபஶ்ச ஸர்வஸாக்ஷீ தமோஹர: ।
அஜ்ஞானனாஶகோ ஜ்ஞானீ பூர்ணசந்த்³ரஸமப்ரப:⁴ ॥ 12॥

ஜ்ஞானதோ³ வாக்பதிர்யோகீ³ யோகீ³ஶ: ஸர்வகாமத:³ ।
யோகா³ரூடோ⁴ மஹாபுண்ய: புண்யகீர்திரமித்ரஹா ॥ 13॥

விஶ்வஸாக்ஷீ சிதா³கார: பரமானந்த³காரக: ।
மஹாயோகீ³ மஹாமௌனீ முனீஶ: ஶ்ரேயஸாம் நிதி:⁴ ॥ 14॥

ஹம்ஸ: பரமஹம்ஸஶ்ச விஶ்வகோ³ப்தா விரட் ஸ்வராட் ।
ஶுத்³த⁴ஸ்ப²டிகஸங்காஶ: ஜடாமண்ட³லஸம்யுத: ॥ 15॥

ஆதி³மத்⁴யாந்தரஹித: ஸர்வவாகீ³ஶ்வரேஶ்வர: ।
ப்ரணவோத்³கீ³த²ரூபஶ்ச வேதா³ஹரணகர்மக்ருʼத் ॥ 16॥

நாம்நாமஷ்டோத்தரஶதம் ஹயக்³ரீவஸ்ய ய: படே²த் ।
ஸ ஸர்வவேத³வேதா³ங்க³ஶாஸ்த்ராணாம் பாரக:³ கவி: ॥ 17॥

இத³மஷ்டோத்தரஶதம் நித்யம் மூடோ⁴ऽபி ய: படே²த் ।
வாசஸ்பதிஸமோ பு³த்³த்⁴யா ஸர்வவித்³யாவிஶாரத:³ ॥ 18॥

மஹதை³ஶ்வர்யமாப்னோதி கலத்ராணி ச புத்ரகான் ।
நஶ்யந்தி ஸகலான் ரோகா³ன் அந்தே ஹரிபுரம் வ்ரஜேத் ॥ 19॥

॥ இதி ஶ்ரீப்³ரஹ்மாண்ட³புராணே ஶ்ரீஹயக்³ரீவாஷ்டோத்தரஶதநாமஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ॥

உண்மையாகவும், நன்மை அளிக்கும்படியாகவும், மனத்தை நோகச் செய்யாத முறையிலும் பேசப்படும் பேச்சு வாக்குத் தவம் ஆகும். வேதங்களையும் ஒருவன் முறையாக ஓத வேண்டும்.
 
Back
Top