• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

Happy tamil new year greetings

Status
Not open for further replies.
wish you all a very happy and prosperous tamil Nandhana new year.(it is pity that we are exchanging tamil new year greetings in english)
 
[h=1]வரவேற்போம்[/h][h=2]சித்திரை விழாவுக்கு
கால் நாடினார்கள், காலம்
என்னை பின்னோக்கி கூட்டிச்சென்றது !

பந்தளிட்டவுடன்
பந்தங்கள் அனைவரும் கூடி
பகிர்ந்து உணவு உண்ட ஞாபகம் !

பகலிரவு இருநேரமும் இறைவனும் இறைவியும்
இருசப்பர வாகனத்தில் வருவதை கண்டால்
இரு மனதை உணர்த்துவது போல ஞாபகம் !

தந்தை என் கையில் தந்த
நாலு ரூபாய் காசை
நல்ல விதமாக செலவு செய்த ஞாபகம் !

கையில் கைபேசி
வைத்து விளையாடவில்லை
கையில் கடிகார மிட்டாய் கட்டி தின்ற ஞாபகம் !

நாலு ரதவீதியும் சுற்றி வரும்
தேரைக்கான அனைத்து மதசமுதாய மக்களும்
ஒன்று கூடி மகிழ்ச்சியுடன் பார்த்த ஞாபகம் !

தமிழர் திருநாளாம்
சித்திரை அன்று அவல், வெள்ளம் ,
தேங்காய் துருவல் கலந்த கலவையில்
காலை சிற்றுண்டி உண்ட ஞாபகம் !

சித்திரை முதல்நாளன்று குளித்து முடிந்ததும்
தாம்பாள தட்டில் காய்,கனி வகைகளை
முதன் முதலாக கண்டு களித்த ஞாபகம் !

இந்த வழக்கம் இப்போது
தமிழ் நாட்டில் இல்லை இப்போது
இதை கேரள மக்கள் பின்பற்றி வருகிறார்கள் !

சித்திரை நாளன்று இந்து மக்களின்
கோயில்கள் மட்டும்மன்றி ஒவ்வொரு
மதத்தை சார்ந்தவரும் அவர்கள் வணங்கும்
கோயில்களுக்கு சென்று வணங்குவார்கள் !

பொதுவாக அன்று முழுவதும்
மகிழ்ச்சி பெருக்குடன் இருப்பார்கள்
அப்படி ஒரு மகிழ்ச்சி எப்போதும் இருக்க
சித்திரை மாதத்தை வரவேற்போம் !

என்றும் அன்புடன் "நட்புக்காக"
இன்று மட்டும் "சித்திரை பிறப்புக்காக"[/h]
 
Status
Not open for further replies.
Back
Top