ஹனுமான் மட்டுமல்ல, எந்த தெய்வமும் இல்லை என சொல்லிவிட முடியாது சும்மா! தெய்வம் எப்படி நேரில் வரும் அப்படியே நம்ம முன்னால க்ருஷ்ணரே வந்தாலும் நம்ம எதிர்பார்க்கிற மாதிரி என் டி ராமராவு ரூபத்திலா இருப்பார்? சிவன் வந்தால் சிவாஜி கணேசன் மாதிரி இருப்பாரா? இப்படியெல்லாம் கற்பனை போகும். அதனால் தான் தெய்வம் மனுஷ்ய ரூபேண என்று சொல்றா. எனக்கு ஒரு தடவை ஒரு உறவினரின் உதவிக்காக உடுப்பியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தேன். இடையில் ஒருமுறை உடுப்பி கிருஷ்ணன் கோவிலுக்கு சென்றிருந்தேன். கியூவில் நிற்கும் சமயத்தில் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லிவிட்டு , சன்னிதியில் என் உறவினருக்கு நல்லபடியாக குணமாக வேண்டுமே என்று மனதிற்குள் வேண்டிக்கொண்ட சமயத்தில், பின்னால் ஒருவர், சப் டீக் ஹோ ஜாயேகா (எல்லாம் நல்லபடி நடக்கும்) என சொல்வது காதில் விழுந்தது. திரும்பி பார்த்தால் யாரோ இந்திக்காரர்கள் இரண்டு பேர் அவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது எனக்கு நல்ல சகுனமாகவும், கிருஷ்ணனே பதில்சொன்னதுமாகப் பட்டது. இப்படித்தான் தெய்வம் வரும். இன்னமும் சுந்தரகாண்டம் பாராயணம் அல்லது பிரவசனம் நடக்கும் இடத்தில் ஒரு பலகை தனியாக போட்டு வைத்திருப்பார்கள். அது ஆஞ்சனேயர் அங்கு வந்து அமர்வதாக ஒரு ஐதீகம். இதை ஒரு இங்கிலீஷ் பேப்பரில் போட்டு, அங்கு ஒரு குரங்கு போட்டொ (வில் மட்டும்) அமர்ந்திருப்பதையும் போட்டிருந்தனர்.