Guru Peyarchi Palangal 2023 to 2024 in Tamil

குரு பெயர்ச்சி -22 .04.2023

ஏப்ரல் 22 ஆம் தேதி, வியாழன் மீனத்திலிருந்து வெளியேறி, செவ்வாயின் ராசியான மேஷத்திற்குச் செல்கிறார். மேலும் மே 1, 2024 வரை அவர் இந்த ராசியில் இருப்பார். மேஷ ராசியில் கோச்சாரம் ஆன பிறகு, குரு பகவான் செப்டம்பர் 4 ஆம் தேதி வக்ர நிலைக்கு மாறுவார். அதன் பின்னர் டிசம்பர் 31 ஆம் தேதி அவர் வக்ர நிவர்த்தி அடைவார். ஏப்ரல் 22 ஆம் தேதி நிகழவுள்ள குரு பெயர்ச்சி அஸ்தமன நிலையில் நடக்கும். ஏனெனில், குரு மார்ச் 31, 2023 இல் அஸ்தமனமாகி, அதன் பிறகு ஏப்ரல் 30 அன்று உதயமாவார். இதற்கிடையில், ஏப்ரல் 22 அன்று குரு பகவான் தனது ராசியை மாற்றுவார்.

குரு பகவான் ராசியை பார்க்கும் போதும், 2,5,7,9,11ஆம் இடங்களில் பயணம் செய்யும் போது நன்மைகளை செய்வார். ஏப்ரல் மாதம் நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் அற்புதமான பலன்கள் யாருக்கு கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சித்திரை 9 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். கால புருஷ தத்துவப்படி, முதல் வீடான மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்யப்போகிறார் குரு பகவான். குரு பகவானுக்கு சனிபகவானின் பார்வையும் கிடைக்கிறது. ஓராண்டு காலம் குரு பகவான் மேஷ ராசியில் அஸ்வினி, பரணி, கார்த்திகை நட்சத்திரங்களில் பயணம் செய்வார்.

Guru Peyarchi Palangal 2023.jpg


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சுப விரையங்களை கொடுத்த குரு பகவான் ராசிக்கு மாறுவதால் நினைத்த காரியம் நிறைவேறும். உங்கள் ராசியில் உள்ள ராகு உடன் இணைந்து குரு பகவான் சுபத்துவத்தை தரப்போகிறார். குரு பகவான் 5,7,9ஆம் வீட்டிற்கு பார்வையிடுவதால் புதிய சொத்துக்கள் வாங்கலாம். தொட்டது துலங்கும். புதிய வேலை கிடைக்கும். லாபங்கள் அதிகரிக்கும். வேலை மாற்றம், ஊர் மாற்றம், இடமாற்றம் ஏற்படும் நினைத்தது நிறைவேறும். தொட்டது துலங்கும் காலமாக இருக்கிறது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்திற்கு குரு பகவான் வரப்போகிறார். பண விசயத்தில் கவனம் தேவை. முதலீடுகளில் அகலக்கால் வைக்க வேண்டாம். வீடு, நிலம் வாங்கும் போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து வாங்குவது நல்லது. வயிறு பிரச்சினைகள் வரலாம். வேலை விசயங்களில் கவனமும் நிதானமும் தேவை. இருக்கிற வேலையை தக்கவைத்துக்கொள்ளுங்கள். வேலையை விட்டு விட்டு வேறு வேலை தேடாதீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனம் தேவை. மன உளைச்சல் நீங்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். வழக்கு பிரச்சினைகள் நீங்கும். நிறைய பயணங்களை மேற்கொள்வர்கள். சுப விரைய சேர்க்கை அதிகரிக்கும். நரசிம்மர் வழிபாடு நன்மையைக் கொடுக்கும். காதல் திருமணம் செய்வதற்காக நேரம் கைகூடி வந்துள்ளது. நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனி விலகி விட்டது. குரு பகவான் 11ஆம் வீட்டிற்கு மாறுகிறார். லாபங்கள் எல்லாம் தேடி வரப்போகிறது. இழந்த செல்வங்களை மீட்கப்போகிறீர்கள். உங்களை விட்டு விலகிப்போனவர்கள் உங்களை புரிந்து கொண்டு தேடி வரப்போகிறார்கள். கஷ்டங்களில் இருந்து மீண்டு வரப்போகிறீர்கள். கையை விட்டு போன பணம் வீடு தேடி வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் படிப்படியாக முடிவுக்கு வரப்போகிறது.

கடகம்

குரு பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டிற்கு வரப்போகிறார். பத்தாம் வீட்டு தொழில் குரு பதவியை பறிப்பார் என்ற அச்சம் வந்திருக்கும். அஷ்டமத்து சனி கூடவே தொழில் குருவும் ராகு உடன் இணையப்போகிறார். வேலை, தொழிலில் சங்கடங்கள் ஏற்படும். பங்குச்சந்தையில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். இந்த கால கட்டத்தில் புதிய தொடங்காதீர்கள். சங்கடங்களை சமாளித்து விடுவீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப்போகிறது. பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகும் குரு பகவான் உங்கள் ராசியை பார்வையிடுவார். நல்ல மேன்மையும் கிடைக்கும். ஒன்பதாம் இட குரு நிறைய லாபத்தை தருவார். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் நிலை உயரும். பண வருமானம் அதிகரிக்கும். உங்களுக்கு

கன்னி

எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வரப்போகிறது. கடந்த காலங்களில் அதிக பேராசை பட்டு கடந்த காலங்களில் நிறைய பணத்தையும் அதனால் மதிப்பு மரியாதையையும் இழந்திருப்பீர்கள். இனி குருவின் பயணம், பார்வை உங்கள் ராசிக்கு 12,2,4ஆம் வீடுகளின் மீது விழுவதால் பண வருமானமும் அதனால் சுப செலவுகளும் அதிகரிக்கும். குரு பகவான் பார்வை விலகினாலும் உழைப்புக்கு ஏற்ப வருமானமும் வெற்றியும் கிடைக்கும். வேலைக்காக வெளியூர் செல்வீர்கள்.

துலாம்

குரு பகவான் ஏழாம் வீட்டிற்கு மாறி உங்கள் ராசியை பார்வையிடுவார். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். அதிக பண வருமானம் வரும் கடன் பிரச்சினைகள் நீங்கும். நல்ல வாழ்க்கை துணை தேடி வரும். வேலையை இழந்து தவித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உழைப்பிற்கு ஏற்ற நல்ல புரமோஷனும் கிடைக்கும்.

விருச்சிகம்

குரு பகவான் ஆறாம் வீட்டிற்கு வருவது நல்லது இல்லை என்றாலும் ராகு உடன் இணைவதால் உங்களுக்கு மிகப்பெரிய யோகத்தை தரப்போகிறது. உங்களின் பெயர் புகழ், வளர்ச்சி அதிகரிக்கும். சுப கடன்கள் அதிகரிக்கும். வீடு, வண்டி வாகன சேவை அதிகரிக்கும். நல்ல வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் அதிகரிக்கும். உங்களுக்கு நோய்கள் நீங்கப்போகிறது. பண வருமானமும் அதிகரிக்கும் காரணம் குருவின் பார்வை தன ஸ்தானத்தின் மீது விழுகிறது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதங்கள் நடத்தப்போகிறது. ஏழரை சனி முடிந்து விட்டது. உங்கள் ராசிநாதன் குரு பகவானின் பார்வை கிடைக்கப்போகிறது. 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறப்போகும் குரு பகவான் நிறைய நன்மைகளை செய்யப்போகிறார். குருவின் ஒன்பதாம் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கப்போவதால் வேலையில் புரமோஷன் கிடைக்கும். மதிப்பு, மரியாதை, கவுரவம் அந்தஸ்து கிடைக்கும். ஒளிமயமான எதிர்காலம் வரப்போகிறது. வேலை, தொழில் நன்றாக இருக்கும். திருமணத்திற்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும், பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு நன்மை ஏற்படும். உடலும் மனமும் புத்துணர்ச்சியாக இருக்கும். வெளிநாடு வேலை வாய்ப்பு அமையும். மாணவர்களுக்கு குரு பகவானின் அருளால் படிப்பில் உயர்வும் நினைத்த கல்வி நிலையங்களில் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

மகரம்

கஷ்ட காலங்கள் எல்லாம் நீங்கப்போகிறது. மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். சுக ஸ்தான குரு பகவான் ராகு உடன் இணைந்து பயணம் செய்யப்போகிறார். முன்னேற்றம் அதிகரிக்கும். விடியல் வரப்போகிறது. நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரப்போகிறது. அரசு தேர்வு எழுதியிருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். நன்மைகள் அதிகரிக்கும்.

கும்பம்

ஜென்ம சனி காலமாக இருக்கிறது. குரு பகவான் மூன்றாம் வீட்டில் ராகு உடன் இணையப்போகிறார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். கிரகங்களின் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் இறைவன் அருளால் நன்மைகள் நடைபெறும். திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு பகவானின் பார்வை சாதகமாக இருப்பதால் ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். தொழில் வியாபாரத்தில் சில நேரங்களில் லாபம் கிடைக்கும்.

மீனம்

குரு பகவான் இரண்டாம் வீட்டிற்கு வருவதால் பண வரவு அதிகரிக்கும். குடும்ப ஸ்தானத்திற்கு வரும் குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 6,8,10ஆம் வீடுகளின் மீது விழுகிறது. ஏழரை சனி காலம் தொடங்கினாலும் உங்களுக்கு ஏற்றம் மிகுந்த காலமாகவே உள்ளது. பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். இதுநாள் வரை கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் தவித்தவர்கள் குருவின் இடமாற்றத்திற்குப் பிறகு சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். நல்ல சம்பளத்தில் புதிய வேலையும், வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் கிடைக்கப்போகிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் தேடி வரும். திடீர் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது.

குரு பகவான் திருவடிகளே போற்றி
 
Back
Top