Gifts and Curses received by Anjaneyar

ஆஞ்சநேயர் பெற்ற வரங்கள் மற்றும் சாபம் :-

சூரியன், தனது ஒளியில் 100-ல் ஒரு பங்கை ஆஞ்சநேயருக்கு அருளினார். மேலும்,
தானே அனுமனுக்கு வேதங்கள், சாஸ்திரங்கள் அனைத்தையும் போதித்து, கல்வியில் சிறந்தவனாகச் செய்வதாக ஒப்புக்கொண்டார்.

வருணன் – காற்றாலோ, நீராலோ அவருக்கு மரணம் ஏற்படாது என்றார்.

யமதர்மன், யம தண்டத்திலிருந்தும் நோய்களினின்றும் அனுமன் பாதிக்கப்பட மாட்டார் என வரமருளினார்.

குபேரன், அனுமன் யுத்தத்தில் சோர்வே அடைய மாட்டார் என்றார்.

சிவபெருமான், தனது அஸ்திரங்களினாலோ, தனது கரங்களினாலோ மரணம் ஏற்படாது என்றார்.

விஸ்வகர்மா, தன்னால் இதுவரை செய்யப்-பட்ட ஆயுதங்களாலோ, இனிமேல் தான் செய்யும் ஆயுதங்களாலோ ஆஞ்சநேயர் பாதிக்கப்பட மாட்டார் என்றார்.

பிரம்மதேவர், ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக இருப்பார் என்றும் பிராமணர்களால் சாபம் அளிக்கப்பட மாட்டார் என்றும் அருளினார். மேலும், அனுமன் தான்விரும்பிய வடிவம் எடுக்கவும், ஒருவரிடமும் பயமோ, யுத்தத்தில் தோல்வியோ அடைய மாட்டார்.
நினைத்த இடத்துக்கு நினைத்த வேகத்தில் அவரால் செல்ல முடியும் என்றும் வரமளித்தார்.

அனுமனுக்கு சாபம் :-

குழந்தை பருவத்தில் தனக்களிக்கப்பட்ட வரங்களால் பெருமை மற்றும் அறியாமையில் அனுமன்,

காட்டில் தவம், யாகம் செய்துவந்த முனிவர்களுக்கு விளையாட்டாக தொல்லை கொடுக்கவே, அவர்கள் அனுமனுக்குத் தனது பலம் தெரியாமல் இருக்கவும், யாராவது அதைப் பற்றி நினைவுறுத்தினால் மட்டுமே அதை அவர் உணரமுடியும் என்று சொல்லி, அவர் தனது உண்மையான பலத்தைப் பற்றி அறியாதவாறு செய்துவிட்டனர்.

அதனால் ஆஞ்சநேயரால் தனது பலத்தை உணர்ந்து சுக்ரீவனுக்கு உதவ முடியாமல் போனது”

சாப விமோசனம் :-

ஆஞ்சநேயருக்கு ஜாம்பவான், இலங்கைக்கு கடல் கடந்து செல்ல வேண்டிய வேலை வந்த பொழுது ஆஞ்சநேயருக்கு அவருடைய பலத்தையும் பராக்கிரமத்தையும் எடுத்துக் கூறி நினைவூட்டியதால்தான், அவரால் செயற்கரிய செயல்களைச் செய்ய முடிந்தது.


ஆஞ்சநேயர் மந்திரம் :-

புத்திர்-பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம்அரோகதாஅஜாட்யம் வாக்-படுத்வம் ச ஹநூமத்ஸ்மரணாத் பவேத்‘புத்தி,

விளக்கம் :-

பலம், புகழ், தைரியம், பயமின்மை, நோயின்மை, சோம்பலின்மை, தெளிந்த வாக்கு ஆகியவை, அனுமனை நினைப்பதால் சித்திக்கும்.’

ஓம் ஆஞ்சநேயாய நமஹ .


1655960573166.png
 
Back
Top