• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

garbha adhanam.

kgopalan

Active member
*10/02/2021*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து கர்ப்பாதானம் என்கின்ற ஒரு அனுஷ்டானம் பற்றி மேலும் விரிவாக தொடர்கிறார்.*

*மகாபாரதத்தில் இருந்து ஒரு சரித்திரத்தை பார்த்துக்கொண்டு வருகிறோம் ஆதி பர்வாவில். ஜனமேஜயன் என்கின்ற ஒரு இராஜா, வைசம்பாயனர் இடம் கேட்கிறார், நீங்கள் என்னுடைய முன்னோர்களின் சரித்திரத்தை சொல்லிக்கொண்டு வருவதைக் கேட்க கேட்க மிகவும்

பெருமையாக உள்ளது இவ்வளவு பெரிய உயர்ந்த குலத்திலே நான் பிறந்திருக்கிறேன். மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. இதிலிருந்து எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது. கேள்வியாக நான் கேட்கிறேன்.*

*காந்தாரிக்கு நூறு குழந்தைகளாக பிறந்தார்கள், என்று நீங்கள் சொல்வதை கேட்டவுடன், எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது எப்படி, காந்தாரி அடைந்தாள் 100 குழந்தைகளை, அந்த குழந்தைகளுக்கு ஆயுசு எப்படி இருந்தது? அதைப்பற்றி எனக்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது.*

*இந்த விஷயத்தை நீங்கள் எனக்கு விரிவாக சொல்ல வேண்டும் எப்படி, 100 குழந்தைகளை காந்தாரி அடைந்தாள். அதேபோல் பாண்டியனுடைய சரித்திரத்தை சொல்லிக் கொண்டு வரும் பொழுது, சாபத்தினால் அவருக்கு சந்ததிகள் இல்லை என்று இருந்த போதும் கூட, தேவதையுடன் உடைய அனுக்கிரகத்தினால் ஏ ஐந்து குழந்தைகளை பாண்டு அடைந்தார், குந்தியின் மூலமாக

அதைக்கேட்டதும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இதெல்லாம் எப்படி சாத்தியமானது இந்த விஷயத்தில் முழுமையாக நான் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அனுகிரக புத்தியோடு எனக்கு சொல்ல வேண்டும் என்று ஜனமேஜயன் கேட்டதும், வைசம்பாயனர் அந்த சம்பவத்தை சொல்கிறார்.*

*இது எப்பொழுது நடக்கிறது என்றால் விவாகம் ஆகியிருக்கிறது. பாண்டு விதுரன் திருதராஷ்டிரன் மூவருக்கும் விவாகம் ஆகியிருக்கிறது. விவாக தீக்ஷாவில் இவர்கள் இருந்து கொண்டு இருக்கிறார்கள். கல்யாணமான பிறகு ஒரு வருடம் 6 மாதம் அல்லது மூன்று மாதம் விவாக தீக்ஷா என்ற இருக்க வேண்டும்.*

*அதாவது அதற்கு அடுத்த சம்ஸ்காரம் அதற்கு அப்புறம் செய்ய வேண்டும். விவாகத்திற்கு அடுத்த படியாக வரக்கூடிய சம்ஸ்காரம் கர்ப்பாதானம். அதை ஒரு குறிப்பிட்ட காலம் தள்ளி செய்ய வேண்டும். அந்த சமயத்திலேயே பல மகான்கள் கல்யாணம் விசாரிக்க வருகிறார்கள் போகிறார்கள்.*

*அப்போது வியாசர் கல்யாணம் விசாரிக்க அங்கு வந்திருக்கிறார் அவர் காந்தாரியி/திருதராஷ்டிரன் இடத்தில் விசாரிக்கிறார் கல்யாணம் பற்றி. அப்பொழுது காந்தாரியின் இடத்திலே வியாஸர் பிரியத்தோடு பார்க்கிறார். காரணம், தன்னுடைய கணவருக்கு கண்

தெரியாது என்ற காரணத்தினாலே, தனக்கும் கண் தெரிய வேண்டாம் என்று நினைத்து, எருக்க இலையை தன்னுடைய கண்ணிலே வைத்து ஒரு துணியினால் கட்டிக் கொண்டு விட்டாள். எருக்க இலையை கண்ணில் வைத்து கட்டிக் கொண்டு வந்தால் நாள்பட கண்ணனுடைய பார்வை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும். இது எல்லாம் அவளும் கட்டிக் கொண்டிருக்கிறாள் என்று வியாசருக்கு தெரிந்ததினால் அவர் அனுகிரக புத்தியோடு பிரேமையோடும் பார்க்கிறார்.*

*ஒரு பெண்ணிற்கு எவ்வளவு உறுதி தீர்மானம் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் இவ்வாறு செய்ய முடியாது. அது எல்லாம் சந்தோஷமாக தெரிந்து கொண்ட பிறகு வியாசர் கல்யாணம் விசாரிக்க வந்திருக்கிறார். அவரைப் பார்த்தவுடன் வரணும் வரணும் என்று வரவேற்று அன்போடு உபசரித்து மதுபர்க்கம் கொடுத்து போஜனம் செய்து வைக்கிறாள். போஜனம் முடிந்து விஷ்ராந்தி ஆனபிறகு, காந்தாரியின் இடத்திலே கல்யாணம் பற்றி விசாரிக்கிறார் வியாசர்.*

*காந்தாரி மிகவும் பூஜித்தாள் அவரை அவருக்கு தாம்பூலம் எல்லாம் கொடுத்தாள். வியாசர் தன்னுடைய சந்தோஷத்தை அவளிடம் எவ்வாறு தெரிவிப்பது அதனால் அவளிடம் அம்மா நீ ஏதாவது ஒரு வரம் கேள் என்று சொன்னார். உடனே அவள் மகரிஷியிடம் ஒரு பெண்ணானவள்

பணம் காசு / வெளியில் சென்றுவர வண்டியா உங்களிடம் கேட்க போகிறேன். ஒரு பெண்ணிற்கு புருஷார்த்தம், ஒரு பெண் பிறவிப் பயனை அடைய வேண்டுமானால் குழந்தைகளை பெற வேண்டும். அதுதான் பெண்களுக்கு உடைய முக்கியமான குறிக்கோள். அதுதான் நான் கேட்கிறேன் என்னுடைய கணவரை போல் வீரமான குழந்தைகள் பிறக்க வேண்டும். எத்தனை குழந்தைகள் என்று கேட்க நூறு குழந்தைகள் வேண்டும் என்று வரம் கேட்டாள்.*

*ஷத்திரிய ஸ்திரீ ஆனதால், எந்த ஒரு விஷயத்தையும் பெரிய அளவு செய்ய வேண்டும் என்ற ஈடுபாடு இருக்கும். அதேபோல் தனக்கு எதிரிலே இன்னொருவரை உயர்வாகப் பேசி விடக்கூடாது என்கின்ற எண்ணம் இருக்கும். இந்த இரண்டு எண்ணங்களும் பூரணமாக உடையவள் காந்தாரி.*


*அதனால் அப்படி ஒரு வரம் கேட்டாள் வியாசரிடம். அப்போது அவர் அப்படியே நான் அனுகிரகம் செய்கிறேன் என்று சொன்னார். அவருடைய அனுக்கிரகத்தை பூரணமாக அடைந்தாள் காந்தாரி. பின்பு விவாஹ தீக்ஷா எல்லாம் பூர்த்தியாகி கர்ப்பாதானம் ஆகிறது. பின்பு காந்தாரி கர்ப்பம் தரிக்கிறாள். ஒரு பெண் மாசமாக இருக்கிறாள் என்றால் பந்துக்கள் எல்லாம் அவளைப் பார்க்க வருகின்றனர்.*

*பக்ஷணங்கள் எல்லாம் பண்ணி கொண்டு அவளை பார்க்க வருகிறார்கள் அவளுக்கு பிடித்தமான எல்லாவற்றையும் செய்து கொண்டு. உடம்பெல்லாம் சௌகரியமாக இருக்கிறாயா என்று கேட்டு, அந்த பட்டணங்களில் ஒரு கரித் துண்டை போட்டு எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார் கள் அதுதான் சம்பிரதாயம்/ வழக்கம்.*

*காந்தாரியினுடைய ஊரிலிருந்து வயதான பெண்களெல்லாம் வந்திருக்கிறார்கள். அவளைப் பார்த்து எல்லாம் விசாரித்துவிட்டு, அதில் ஒரு பெண் சொல்கிறாள் அவளைப் பார்த்து சந்தோஷமாக இருக்கிறது, நம் தேசத்திற்கு தான் பெரிய பெருமை. நீ நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள போகிறாய். ஆனால் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் உன்னுடைய முகத்தை பார்த்தால் ஏதோ சந்தேகமாக இருக்கிறது.*

*அனுபவ ஸ்திரீகளுக்கு எல்லாம் தெரியும். அந்தப் பெண்ணினுடைய முகத்தைப் பார்த்து எல்லாம் சொல்லி விடுவார்கள். அந்த வயசான அம்மா சொல்கிறாள் நீ எதற்கும் ஒரு தடவை நல்ல மருத்துவரை பார்த்து விடு. இந்த நாட்களில் சொல்வதென்றால், ஒரு ஸ்கேன் எடுத்து பார்த்து விடு

என்று சொல்லுவோம். அதுபோல் சொல்கிறாள் அவள் நீ ஒரு தடவை மருத்துவரைப் பார்த்து ஒரு உன்னுடைய முகத்தை பார்த்தால் எனக்கு என்னவோ, விசித்திரமாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது. பயமாயிருக்கிறது உடம்பை பார்த்துக்கொள் என்று சொல்லி விட்டு போய்விட்டாள்.*

*அந்த வார்த்தையை கேட்டவுடன் காந்தாரிக்கு கவலையாக போய்விட்டது. ஏன் இப்படி சொல்கிறார் என்று தெரியவில்லையே, ஒரு நல்ல மருத்துவர் வந்து பார்த்ததும் அவளுக்கு ஒரு தகவல் தெரிந்தது. அது என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.
 

Latest ads

Back
Top