Do you know why Anjaneya is worshiped with butter?

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுவது ஏன் தெரியுமா?


ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.அனுமனை சனிக்கிழமை அன்று வழிபட்டால் சனியின் பிடியிலிருந்து நம்மை காப்பாற்றுவார் என்பது நம்பிக்கை.

அந்த வகையில் அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி ஏன் வழிபடுகின்றனர்? என்று இன்றைய பதிவில் தெரிந்து கொள்வோம்.

வெண்ணெய் சாற்றி வழிபடுவது ஏன்?இராமனின் பக்தன், சஞ்சீவி மலையை தூக்கியவன், பஞ்ச பூதங்களை வென்றவன் என பல சிறப்புப் பெயர்களை கொண்ட அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

ராவண வதத்திற்குப் பிறகு இரண்டு அசுரர்கள் தப்பி ஓடி தவம் செய்து வரங்களைப் பெற்று தேவர்களை மிரட்டிக் கொண்டிருந்தனர். அவர்களை எப்படி சமாளிப்பது? என்று தேவர்கள் பயந்து கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களை வதம் செய்யக் கூடியவர்களை அனுப்ப வேண்டும் என்று கலந்து ஆலோசித்தபோது அனுமன் தான் அதற்கு தகுதியானவர் என்று முடிவு செய்தனர்.

அனுமனுக்கு போரில் உதவ ஸ்ரீராமர் வில்லையும், பிரம்மாவும், சிவபெருமானும் இன்னும் பிற கடவுள்களும் சக்தி வாய்ந்த ஆயுதங்களை அளித்தார்கள்.

ஸ்ரீராமர், தன்னுடைய அடுத்த அவதாரமான கிருஷ்ணனுக்குப் பிடித்த வெண்ணெயை அளித்து, இந்த வெண்ணெய் உருகுவதற்குள் உனது காரியம் வெற்றியடையும், அசுரர்களையும் அழித்து விடுவாய் என்று சொல்லி ஆசீர்வதித்தார்.அதன்படி, அனுமன் வெண்ணெய் உருகுவதற்குள் இரண்டு அசுரர்களையும் அழித்துவிட்டார்.அதுபோல, நாம் அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபட்டால், நாம் சாற்றிய வெண்ணெய் உருகுவதற்குள் நாம் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பதே, இதன் உண்மைக் காரணம்.

திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயிலில், அனந்த பத்மநாபன் சந்நிதி முன்புறம் உள்ள ஆஞ்சநேயருக்கு முக்கியமான வழிபாடு வெண்ணெய் சாற்றுவது ஆகும்.இந்த வெண்ணெய் எவ்வளவு வெயில் அடித்தாலும் உருகுவது இல்லை.

எவ்வளவு நாள் ஆனாலும் கெட்டுப்போவதும் இல்லை.இத்தகைய சிறப்பு வாய்ந்த அனுமனை வழிபாடு செய்து வாழ்க்கையில் வளம் பெறுவோம்..!!
 
Back
Top