Diwali (Deepavali) Mantras

praveen

Life is a dream
Staff member
தீபாவளி மந்திரங்கள்


தீபாவளித் திருநாளில் எல்லா நீர்நிலைகளிலும் கங்கையும், தீபங்களில் விளக்காக காமாட்சியும், தீபத்தின் சுடராக மகாலட்சுமியும் இருப்பதாக ஐதிகம்.

அன்றைய தினம் நீராடும்போதும், விளக்கேற்றும்போதும் சொல்லவேண்டிய அற்புதமான பலன்தரும் எளிய மந்திரம் சொன்னால் பரிபூரணமாக தெய்வங்களின் அருள் கிட்டும், வாழ்க்கை பிரகாசிக்கும்.


நீராடும் முன் சொல்லவேண்டிய துதி!

குளிக்கத் தொடங்கும் முன், சிறிது நீரைக் கையில் எடுத்துக்கொண்டு பின்வரும் துதியைச் சொல்லிவிட்டு பின்னர் நீராடுங்கள்!

ஓம் நம சிவாயை
நாராயண்யை தச தோஷ
ஹராயை கங்காயை ஸ்வாஹா

அர்த்தம்:

சிவனாரின் திருச்சடையில் உறைபவளே, நாரணன் பாதகமலங்களை நீராட்டி மகிழ்பவளே, எல்லாவித பாவங்களையும் போக்குபவளே, கங்கையே உன்னை வணங்குகிறேன்.

புத்தாடை அணியும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

‘தீப தேவி மகா சக்தீ சுபம் பவது மே சதா
ஓம் நமோ நாராயணாய வாசுதேவாய
ஓம் நமசிவாய’

இந்த ஸ்லோகத்தை, தீபாவளியன்று புத்தாடை அணியும்போது மூன்று முறை சொல்லி வழிபட வேண்டும். இதனால் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.

தீபம் ஏற்றும்போது சொல்லவேண்டிய ஸ்லோகம்

ஸுவர்ண வ்ருத்திம் குருமே க்ருஹேஸ்வரீ
ஸுதான்ய வ்ருத்திம் குருமே க்ருஹேஸ்வரீ
கல்யாண வ்ருத்திம் குருமே க்ருஹேஸ்வரீ ’

- இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடலாம். அல்லது
பொன்பொருள் பெருகட்டும் தீபம் போற்றி தானியம் செழிக்கட்டும் தீபம் போற்றி மங்கலம் பெருகட்டும் தீபலட்சுமியே போற்றி
என்று துதித்தபடி தீபங்கள் ஏற்றி வழிபடலாம். இதனால் வீட்டில் பொன்பொருள் பெருகும், தான்யங்கள் விருத்தியாகும், சர்வ மங்கலங்களும் உண்டகும்.

விளக்கேற்றும்போது சொல்லவேண்டிய துதி!

முதலில் விளக்காக இருக்கும் காமாட்சியன்னையை நினைத்து பின்வரும் மந்திரத்தைச் சொல்லுங்கள்.

ஸ்ரீசக்ர மத்யே வசந்தீம்-பூத
ராட்சச பிஸாசாதி துஷ்டான் ஹரந்தீம்
ஸ்ரீகாமகோட்யாம் ஜ்வலந்தீம்-காம
ஹுனஸ்ஸு காம்யாம் பஜே தேஹி வாசம்

அர்த்தம்:

ஸ்ரீசக்கரத்தில் நடுவில் வாசம் செய்பவளே, பூதம், பிசாசுகள், ராட்சதர்கள் முதலான துஷ்ட சக்திகளை அழிப்பவளே, காமகோடியில் பிரகாசிப்பவளே, ஆசையற்றவர்களால் எளிதாக அடையக் கூடியவளே, பக்தர்தம் விருப்பத்தினை ஈடேற்றக் கூடிய காமாட்சி அன்னையே, உன்னை வணங்குகிறேன்.

எனக்கு எல்லா நன்மைகளையும் அருள்வாயாக!

தீபத்தின் சுடராக ஒளிரும் மகாலட்சுமியை வேண்டிச் சொல்லவேண்டிய மந்திரம்:

ஓம் ஸ்ரீயே ஸ்ரீகரி தனகரி தான்யகரி
ஏஹ்யா அச்ய பகவதி வஸுதாரே ஸ்வாஹா

அர்த்தம்:

செல்வமகளே, எல்லா செல்வங்களின் வடிவாகவே இருந்து தனம், தானியம் முதலான எல்லாவற்றையும் அருள்பவளே, ஒப்பில்லாதவளே கருணையை பக்தர்கள்மேல் மழையெனப் பொழிபவளே, உன்னை ஆராதிக்கிறேன்.

துதிகளைச் சொல்லுங்க. திருமகள், காமாட்சி, கங்காதேவி ஆகிய மூவரின் அருளும் முழுமையாக கிட்டும்; வாழ்க்கையில் எல்லா மங்களங்களும் சேரும்!
 
Back
Top