Devotional Mantras for Nine Days of Navratri Worship of Navadurga

praveen

Life is a dream
Staff member
புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரியாக கொண்டாடுகிறோம். இது வெறும் பண்டிகையாக மட்டுமின்றி பக்தி, நல்லிணக்கம், ஒற்றுமை, பகிர்ந்தளித்தல் போன்ற பண்புகளையும் பண்பின் அடையாள விழாவாகவும் கொண்டாடுகிறது. துர்கா தேவி தீமைகளை அழித்து, வாழ்வில் உள்ள இருளை போக்கி, ஒளியை தரக் கூடியவள். அவளின் அருளை பெறுவதற்குரிய காலமே நவராத்திரி ஆகும்.

முப்பெரும் தேவியர்களை போற்றி வழிபடும் விழா நவராத்திரியாகும்.

இதில் துர்க்கையின் ஒன்பது வடிவங்களான நவதுர்க்கைகளையும் வழிபடும் வழக்கம் இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ளது.

நவதுர்க்க்கைகளையும் நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் அவரவருக்கு உரிய மந்திரங்களை சொல்லி வழிபடுவதால் செல்வ வளம், மகிழ்ச்சியான வாழ்க்கை, துன்பங்களில் இருந்த விடுதலை ஆகியன கிடைக்கும்.*



நவராத்திரியில் அம்பிகையின் அருளையும், செல்வ செழிப்பு மற்றும் வளமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை பெற வேண்டும் என்றால் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் நவதுர்க்கையின் ஒன்பது வடிவங்களுக்குரிய பீஜ மந்திரங்களை சொல்லி வழிபடுவது அவசியமாகும்.


நவராத்திரி மந்திரங்கள் :

நவராத்திரி முதல் நாள்


சைலபுத்திரி - ஓம் ஷம் ஷைலபுத்ரி தேவ்யாய நமஹ

நவராத்திரி 2ம் நாள்

பிரம்மச்சாரினி - ஹ்ரீம் ஸ்ரீம் அம்பிகையே நமஹ

நவராத்திரி 3ம் நாள்

சந்திரகாந்தா - ஐன் ஸ்ரீம் ஷக்தயே நமஹ

நவராத்திரி 4ம் நாள்

கூஷ்மாண்டா - ஐம் ஹ்ரீம் தேவ்யே நமஹ

நவராத்திரி 5ம் நாள்

ஸ்கந்தமாதா - ஹ்ரீம் க்லீம் ஸ்வாமினியே நமஹ

நவராத்திரி 6ம் நாள்

காத்யாயனி - க்லீம் ஸ்ரீ த்ரினித்ரயே நமஹ

நவராத்திரி 7 ம் நாள்

காலாத்ரி - க்லீம் ஐம் ஸ்ரீ காளிகாயே நமஹ

நவராத்திரி 8 ம் நாள்

மகாகெளரி - ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் வரதாயே நமஹ

நவராத்திரி 9 ம் நாள்

சித்திதாத்ரி - ஹ்ரீம் க்லீம் ஐம் சித்தாயே நமஹ

அந்தந்த நாட்கள் தவிர தினசரி துர்க்கைக்குரிய இன்னும் சில சக்திவாய்ந்த மந்திரங்களையும் சொல்லி வழிபட்டு வந்தால் அன்னையின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்,

துர்க்கை மந்திரங்கள் :

1. யா தேவி ஸர்வபூதேஷூ சக்திரோபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

2. சர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே திரியம்பிகே கெளரி நாராயணணீ நமோஸ்துதே

3. ஓம் ஜயந்தீ மங்களா காளீ பத்ரகாளீ கபாலிணி
துர்க்கா க்ஷமா சிவாதாத்ரீ ஸ்வாஹா ஸ்வதா நமோஸ்துதே

ஆயிரம் திருநாமங்களை கொண்ட மந்திரம் :

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ
ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ
ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ
ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ
ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ
ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ
ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ

இந்த ஏழு மந்திரங்களையும் தினசரி 11 முறை சொல்லி அம்பிகையை வழிபடுவதால் அம்பிகையை ஆயிரம் திருநாமங்களால் போற்றி துதித்த புண்ணிய பலனும், லலிதா சகஸ்ரநாமம் சொன்ன பலனும் கிடைக்கும்.

இது அதிசயங்கள் பல நிகழ்த்தக் கூடிய அற்புத மந்திரமாகும்.
 
Back
Top