Excuse me for posting this again!!
தமிழ் ஒரு கடினமான மொழி! நகர, னகர, ணகர வேறுபாடுகள்; லகர, ழகர, ளகர வேறுபாடுகள்;
ரகர, றகர வேறுபாடுகள் என்பவற்றைச் சரியாக அறிந்துகொள்ள, சில ஆண்டுகள் ஆகும்! கேட்கும்
தமிழை வைத்துக்கொண்டு எழுதவே இயலாது!
ஒரு ஆசிரியருக்கே தமிழ் மொழி எழுதத் தகராறு! மாணவன் அவரிடம் ' 'மரம்' என்று எழுத, சின்ன 'ர'வா,
பெரிய 'ற'வா?' என்று கேட்க, அவர் சின்ன மரத்துக்குச் சின்ன ர; பெரிய மரத்துக்குப் பெரிய ற என்றாராம்!!
உன் = your; உண் = eat;
பொன் = தங்கம்; பொண் = (பேச்சு வழக்கில்) பெண்
அரி = cut; அறி = know!
அரை = half; அறை = room / slap!
குலவி = கொஞ்சி; குளவி = wasp; குழவி = அரைக்கும் கல் / infant :baby:!