Cuddalore District Temples-அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக&#30

Status
Not open for further replies.
Cuddalore District Temples-அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக&#30

Cuddalore District Temples-அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருவட்டத்துறை-606 111 திருவரத்துறை, கடலூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

+91-4143-246 467

T_500_204.jpg



தல சிறப்பு:

இங்குள்ள இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 212 வது தேவாரத்தலம் ஆகும்.



அப்பர், சம்பந்தர், சுந்தரர், ஆதிசங்கரர், குகை நமச்சிவாயர், ராமலிங்க அடிகள்
தேவாரப்பதிகம்


இங்கு கோயில் கர்ப்பகிரகத்திற்கு இடப்புறம் "மகம் வாசல்' என்ற வாசல் உள்ளது. கணவனை இழந்த பெண்கள் ஒரு வருடம் ஆன பிறகு அருகில் உள்ள ஆற்றில் குளித்து விட்டு மகம் வாசல் வழியாக வந்து சுவாமி தரிசனம் செய்த பிறகு அதன் வழியே சென்றுவிடுவர்.

பொன்னொப் பானைப்பொன் னிற்சுடர் போல்வதோர் மின்னொப் பானைவிண் ணோரும் அறிகிலார் அன்னொப் பானை யரத்துறை மேவிய தன்னொப் பானைக் கண்டீர்நான் தொழுவதே



-திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது முதல் தலம்.






திருவிழா:


மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்


பொது தகவல்:



மகாவிஷ்ணு, ஆதிசேஷன், சனி, செவ்வாய், வால்மிகி முனிவர், சனகர், சேர, சோழ, பாண்டியர்கள் ஆகியோர் வழிபட்டதலம்.

பிரார்த்தனை

வேண்டியதை எல்லாம் கொடுத்தருளும் இறைவன்.

சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றுகின்றனர்.

தல வரலாறு:


வெள்ளாற்றின் கரையில் உள்ள ஆதித்துறை(காரியனூர்), திருவாலந்துறை, திருமாந்துறை, திருஆடுதுறை, திருவட்டத்துறை (திட்டக்குடி) திருநெல்வாயில் அரத்துறை, திருக்கரந்துறை எனும் ஏழு துறைத்தலங்களுள் இது முக்கியமான தலம். இந்த ஏழு புண்ணியத்துறைகளில் மக்களின் பாவங்களை நீக்க இறைவன் இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது. இந்த ஏழு துறைகளையும் சப்தரிஷிகள் பூஜை செய்ய வேண்டி "நீவா' என்று அழைத்ததாக ஐதீகம். இதுவே நீவா-வடவெள்ளாறு நதியாக மாறியது என்றும் கூறுவர்.

இது கோயிலுக்கு தெற்கில் அமைந்துள்ளது. வெள்ளாறு நதியில் வெள்ளப்பெருக்கெடுத்த போது அதனால் சேதம் உண்டாகாதிருக்க நந்தி தலையை திருப்பி பார்க்க வெள்ளம் வடிந்தது என்றும், இதனால் இத்தலத்தில் நந்தியின் தலை சற்று திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. சம்பந்தர் பெண்ணாடகம் பிரளயகாலேஸ்வரரை தரிசித்து விட்டு, இத்தலம் வர விரும்பி வழியில் உள்ள மாறன்பாடி தலத்தில் தங்கினார். சம்பந்தர் வரும் வழியில் ஏற்பட்ட வருத்தத்தை கண்ட சிவன், அவர் செல்ல முத்துச்சிவிகையும், முத்துகொண்டையை தந்தருளினார்.

இருப்பிடம் :
விருத்தாசலத்திலிருந்து 22கி.மீ. தூரத்தில் திட்டக்குடி செல்லும் வழியில் கொடிக்கலம் ஸ்டாப்பில் இறங்கி செல்ல வேண்டும்.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
விருத்தாசலம்.

அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி.

தங்கும் வசதி :
விருத்தாசலம்.

ஹோட்டல் சூரியப் பிரியா போன் : +91- 4142 - 233 178, 233 179.
ஹோட்டல் வைகை போன் : +91- 4142 -224 321.
ஹோட்டல் உட்லண்ஸ் போன் : +91- 4142 -230 717,230 707.
ஹோட்டல் துரை போன் :+91- 4142 - 224 746,224 646.
ஹோட்டல் பிரியா இன் போன் : +91-9894626157.




Theerthapureeswarar Temple : Theerthapureeswarar Temple Details | Theerthapureeswarar- Tiruvattathurai | Tamilnadu Temple | ?????????????????
 
Status
Not open for further replies.
Back
Top