P.J.
0
Cuddalore District Temple-அருள்மிகு காயத்ரி அம்மன் திருக்கோய
Cuddalore District Temple-அருள்மிகு காயத்ரி அம்மன் திருக்கோயில்
அருள்மிகு காயத்ரி அம்மன் திருக்கோயில், சிதம்பரம்--608 001, கடலூர் மாவட்டம்.
காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் 7.30 இரவு மணி வரை திறந்திருக்கும்
+91 4144- 223 450
பொது தகவல்:
சிவனுக்குரிய நந்தியை இவளது சன்னதிக்குள் பிரதிஷ்டை செய்துள்ளனர். கோஷ்டத்தில் அஷ்டபுஜ துர்க்கை, அமிர்த கலசம் ஏந்திய மகாலட்சுமி, சரஸ்வதி உள்ளனர்.
தல வரலாறு:
மன்னன் ஒருவன் தனக்கு ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக, தல யாத்திரை சென்றான். வழியில் அவனைச் சந்தித்த அந்தணர் ஒருவர், காயத்ரி மந்திரத்தால் தான் பெற்ற புண்ணியத்தை மன்னனுக்கு கொடுத்தார். இதனால் அவனது தோஷம் நீங்கியது. மகிழ்ந்த மன்னன், அந்தணருக்கு பொருள் கொடுத்தான். அதை வாங்க மறுத்தவர், காயத்ரிக்கு கோயில் கட்டும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி மன்னன் இங்கு காயத்ரியை மூலவராகக் கொண்டு தனிக்கோயில் கட்டினான்.
தலபெருமை:
மூன்று அம்ச அம்பிகை: விஸ்வாமித்திர மகரிஷி காயத்ரி மந்திரம் சொல்லி, பிரம்மரிஷி பட்டம் பெற்றார். இந்த மந்திரத்தைச் சொல்லும் போது தோன்றிய உருவத்தை காயத்ரியாக வடித்தனர். இவள் மேற்கு நோக்கி, ஐந்து முகம், ஆயுதம் ஏந்திய பத்து கரங்களுடன் தாமரை மலரில் அமர்ந்திருக்கிறாள். பாதம் அருகில் ஸ்ரீசக்ரம் உள்ளது. இவள் காலையில் காயத்ரி, மதியம் சாவித்திரி, மாலையில் சரஸ்வதியாக அருளுவதாக ஐதீகம். இவளே மும்மூர்த்திகள் மற்றும் முத்தேவியரின் அம்சமாக இருக்கிறாள்.
பவுர்ணமி பூஜை: காயத்ரி, சூரியனுக்கு சக்தி தருபவள் என்பதால், சூரியனுக்கு உகந்த சிம்ம (ஆவணி) மாத பவுர்ணமியை ஒட்டி இவளுக்கு விழா நடக்கும். பவுர்ணமி நாட்களில் 1008 முறை காயத்ரி மந்திரம் சொல்லி, ஹோமத்துடன் விசேஷ பூஜையும் நடக்கிறது. குழந்தைகளின் கல்வி சிறக்க, இவளுக்கு சிவப்பு நிற மலர் மாலை அணிவித்து, வடை, பாயசம் படைத்து வணங்குகின்றனர். நவராத்திரியில் லட்சார்ச்சனையும், விஜயதசமியன்று பரிவேட்டை நிகழ்ச்சியும் நடக்கும்.
திருவிழா:
நவராத்திரியில் லட்சார்ச்சனையும், விஜயதசமியன்று பரிவேட்டை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
பிரார்த்தனை
குழந்தைகளின் கல்வி சிறக்க வணங்குகின்றனர்
இருப்பிடம் :
சிதம்பரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ., தூரத்திலுள்ள கஞ்சித்தொட்டி பஸ் ஸ்டாப்பிற்கு சென்று, அங்கிருந்து அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
சிதம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை, திருச்சி
தங்கும் வசதி :
சிதம்பரம்
ஹோட்டல் சூரியப் பிரியா போன் : +91 -4142 - 233 178, 233 179.
ஹோட்டல் வைகை போன் : +91- 4142 -224 321.
ஹோட்டல் உட்லண்ஸ் போன் : +91- 4142- 230 717,230 707.
ஹோட்டல் துரை போன் : +91- 4142 - 224 746,224 646.
ஹோட்டல் பிரியா இன் போன் : +91- 98946 26157.
Gayatri Amman Temple : Gayatri Amman Temple Details | Gayatri Amman - Chidambaram | Tamilnadu Temple | ??????? ??????