• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

Change Old Poonal (before Avani Avittam Normal day) : Iyer Yajur Vedam

Status
Not open for further replies.

  • aachamya ; achyuthaaya namaha; anandhaaya namaha govindaaya namaha
    [h=2]. கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர ரலால் வலது, இடது கண்களையும்,[/h]

    விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,,

    ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்.

    கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு

    சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும்

    .ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.

    மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்தம் ஸ்ரெளத ஸ்மார்த விஹித நித்ய கர்மானுஷ்டான ஸதாசார யோக்யதா ஸித்தியர்த்தம் ப்ரஹ்ம தேஜ: அபிவ்ருத்யர்த்தம் யக்ஞோப வீத தாரணம் கரிஷ்யே

    தீர்தத்தை தொடவும்
    .
    அஸ்ய ஶ்ரீ யக்யோப வீத தாரண மஹ மந்த்ரஸ்ய பரப்ருஹ்ம ரிஷி : என்று சொல்லி வது கை விரலால் (ஸிரஸ்) தலையை தொடவும்

    .த்ருஷ்டுப் சந்த:என்று சொல்லி மூக்கை தொடவும்.

    பரமாத்மா தேவதா என்று சொல்லி மார்பை தொடவும்
    .
    யஞ்யோப தாரணே வினியோக: என்று சொல்லவும்.

    பூணூல் ஒன்றை பிரித்து எடுத்து ப்ரும்ஹ முடிச்சை மோதிர விரலில் படும் படியாக மேலாக வைத்து வலது உள்ளங்கையினால் தாங்கியும் , இடது உள்ளங்கையினால் பூணூலின் கீழ் புறத்தை அழுத்தியும் பிடித்து கொண்டு

    யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத் ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் யக்ஞோப வீதம் பலமஸ்து தேஜ:

    என்று சொல்லி பூணூலை தரித்து கொள்ளவும்.. இதே வீதம் விவாஹம் ஆனவர்கள் இரண்டாவது, மூண்றாவது பூணூலையும் மந்த்ரத்தை சொல்லி தரித்து கொள்ளவும். ஆசமனம் செய்யவும்
    .
    இந்த மந்த்ரத்தை சொல்லி பழைய பூணலை கழற்றி வடக்கில் போடவும்.

    உபவீதம் பின்னதந்தும் ஜீரணம் கஷ்மல தூஷிதம் விஸ்ருஜாமி ஜலே ப்ரஹ்ம வர்ச்சோ தீர்க்காயுரஸ்துமே. மறுபடியும் ஆசமனம் செய்யவும்.​




 
Status
Not open for further replies.
Back
Top