• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Chandra Grahanam Mantram - சந்திர கிரஹணம்

praveen

Life is a dream
Staff member
Chandra Grahanam Mantram - சந்திர கிரஹணம்

27.07..2018 வெள்ளி கிழமை விளம்பி ஆடி மாதம்11 ம் நாள் கேது கிரஸ்த சந்திர கிரஹணம் புண்யகாலம் இரவு 11.54 க்கு ஆரம்பித்து மத்யமகாலம் 1.52 (28.07.2018) விமோசனம் 3.49 (சனிக்கிழமை ) முடிவடைகிறது


27.07.2018 அன்று கிரஹணகாலத்திற்கு 20 நாழிகைக்கு முன்பு போஜனம் செய்யவேண்டும் எனவே மதியம் 12:00pm மணிவரை போஜனம் செய்யலாம் விமோசன ஸநானம் மறுநாள் 4.00 மணிக்கு மேல் செய்து போஜனம் செய்யவும்


27.07.2018 அன்று செய்யவேண்டிய பெளர்ணமி ஸ்ராத்தமும் , கிருஷ்ண பக்ஷ பிரதமை ஸ்ராத்தமும் 28.07.2018 சனிக்கிழமை செய்யவேண்டும்


27.07..2018 வெள்ளி கிழமை விளம்பி ஆடி மாதம்11 ம் நாள் ராகு கிரஸ்த சந்திர கிரஹணம் புண்யகால தர்பண ஸங்கல்பம்


மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ( ஸ்ரீ பகவத் ஆக்ஞய ஸ்ரீமன் நாரயண ப்ரீத்யர்த்தம் ஸ்ரீ பகவத் கைங்கர்ய ரூபம் ) அபவித்ர பவித்த்ரோவா ஸர்வாவஸ்தா கதோபிவா யஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்யா அப்யந்தர சுசிஹி மானஸம் வாசிகம் பாபம் கர்மணா சமுபார்ஜிதம் ஸ்ரீராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி நஸம்ஸய:ஸ்ரீ ராம ராம ராம திதிர்விஷ்ணு : ததாவார: நக்ஷத்ரம் விஷ்னுரேவச யோகஸ்ச கரணம்சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகது ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பாகவத:மஹாபுருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய ஆத்ய ப்ரம்ஹண: த்விதீயபரார்த்தே ச்வேதவராஹகல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதிதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே (க்ரெளஞ்ச தீவிபே ) பாரத வருஷே (ரமனாக வருஷே ) பரதகண்டே (இந்திரா கண்டே ) மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே (ரம்யக பச்சிமதிக்குபாகே ) ஸகாப்தே(சப்த சமுத்திரதிரே சகாப்பதே ) அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே பிரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே விளம்பி நாம ஸம்வஸ்தரே தக்ஷிணாயணே கிரீஷ்ம ருதவு கடக மாஸே சுக்ல பக்ஷே பெளர்ணமியாம் புண்யதிதவ் வாஸர: பிருகு வாஸர ,உத்தராஷாட நக்ஷத்திர யுக்தாயாம் பிரிதின் நாம யோக ,பவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்ட்டாயாம் அஸ்யாம் பெளர்ணமியாம் புண்யதிதவ் (ப்ரசினவிதி -புணல் இடம் ) ..............கோத்ரானம் ............சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் பித்ரு,பிதமஹா,பிரபிதாமஹானாம் ,மாத்ரு ,பிதமஹி ,பிரபிதாமஹிணாம் ,...............கோத்ரஸ்ய ..............சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் ஸபத்னிக மாதமஹா ,மாதுஹு பிதமஹா ,மாதுஹு பிரபிதாமஹானாம் , உபாயவம்ச பித்ரூணாம் ஸர்வேஷாம் அக்ஷய த்ருப்த்யர்த்தம் ஸோமோபராக ராகு கிரஸ்த புண்யகால ஸ்ராத்தம் திலதர்பண ரூபேன அத்ய கரிஷ்யே


27.07..2018 வெள்ளி கிழமை விளம்பி ஆடி மாதம்11 ம் நாள் ராகு கிரஸ்த சந்திர சந்திரகிரஹணம்
கிரஹணகால ஜப சங்கல்பம்
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ( ஸ்ரீ பகவத் ஆக்ஞய ஸ்ரீமன் நாரயண ப்ரீத்யர்த்தம் ஸ்ரீ பகவத் கைங்கர்ய ரூபம் ) சுபாப்யாம் சுபே ஷோபனே முகூர்த்தே ஆத்ய ப்ரம்ஹண: த்விதீயபரார்த்தே ச்வேதவராஹகல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதிதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே ஸகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே பிரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே விளம்பி நாம ஸம்வஸ்தரே தக்ஷிணாயணே கிரீஷ்ம ருதவு கடக மாஸே சுக்ல பக்ஷே பெளர்ணமியாம் புண்யதிதவ் வாஸர: பிருகு வாஸர ,உத்தராஷாட நக்ஷத்திர யுக்தாயாம் பிரிதின் நாம யோக ,பவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்ட்டாயாம் அஸ்யாம் பெளர்ணமியாம் சுப திதவ் மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ஸ்ரீ சூரியநாராயண பிரசாத ஸித்யர்த்தம் நவகிரஹ பிரசாத ஸித்யர்த்தம் விசேஷதஹ சந்திர கிரஹ ப்ரஸாதா ஸித்யர்த்தம் ......கோத்ரஸ்ய ஜென்ம நக்ஷத்திர ஜென்ம ராஸொள ஜதஸ்ய --------சர்மண: (நாம்யாஹா ) மம குடும்பஸ்ய சர்வேஷாம் க்ஷேமஸ்த்தைர்ய ஆயு: ஆரோக்கிய ஸித்யர்த்தம் , தீர்க்க சௌமாங்கல்ய அவாப்த்தி ஸித்யர்த்தம் ,தன தான்யா ,அஷ்ட லக்ஷ்மி பிரசாத பிராப்த்யர்தம் ,சிந்தித கர்யணி ஜெயத்ரென ஸித்யர்த்தம் ,காயத்ரி தேவி பிரசாத ஸித்யர்த்தம் ஜென்மபாயாசாது எதக்ஷண பர்யந்தம் சம்பாவித ஸந்த்யா வந்தன ,வேத அப்யாஸ வேத கர்ம அனுஷ்டான விசின்ன தோஷ பரிகாராரத்வம் , காயத்ரியாதி மந்தர ஜப பல ஸித்யர்த்தம் சூரியநாராயண பிரசாத ஸித்யர்த்தம் ஸோமோபராக ராகு கிரஸ்த புண்யகாலே காயத்ரியாதி மந்த்ர ஜபம் கரிஷ்யே


சந்திர கிரஹணம் ஆரம்பித்த பின்பு (மாலை 11.54 க்கு பிறகு ) ஸ்நானம் செய்து உலர்ந்த மடி வஸ்திரம் கட்டிக்கொண்டு நெற்றியில் விபூதி / கோபி /சந்தனம் /திருமண் /குங்குமம் தரித்துக்கொண்டு


முதலில் 336 முறை பிரம்மோபதேசம் ஆனவர்கள் காயத்திரி ஜபம் செய்தபின்பு குரு முகமாக உபதேசம் ஆன மந்திரங்களை ஜபம் செய்வது உத்தமம் பெண்கள் மற்றவர்கள் தங்களுக்கு தெரிந்த சிவ ராம சக்தி மந்திரங்களை ஜபம் செய்யலாம்


பித்ரு பூஜனம் (தர்பணம் )செய்ய வேண்டியவர்கள் கிரஹண மத்யமகாலம் முடிந்து (பின் இரவு 1.50) க்கு மேல் தர்ப்பணம் செய்ய வேண்டும் (தர்பண சங்கல்பம் ,மந்திரம் தனியாக அனுப்பியுள்ளோம் )


கிரஹணம் விட்டபின்பு (இரவு 3.49 க்கு மேல் ) மீண்டும் ஸ்நானம் செய்து மடி உடுத்தி கொண்டு சுவாமிக்கு விளக்கு ஏற்றி (முடிந்தவரை புதியதாக சமைத்து உணவு (பலகாரம் ) செய்ய வேண்டும்


கிருத்திகை ,ரோஹிணி , உத்திரம் , ஹஸ்தம் , பூராடம் ,உத்திராடம் ,,திருவோணம் ,அவிட்டம் - நக்ஷத்திரகாரர்கள் சாந்தி செய்து கொள்ளவேண்டும்


சாந்தி நக்ஷத்திரகாரர்கள் வெற்றிலை பாக்கு தேங்காய் பழம் நெல்/அரிசி வெள்ளை வஸ்திரம் (வேஷ்டி /துண்டு ) தானம் செய்வது உத்தமம் கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லி தத்தம் செய்து பின்பு அருகில் உள்ள பிராமணர்கள் (வைதீகா / அர்சகர்கள் ) கொடுக்கவும்


ஹிரண்ய கர்ப்ப கர்ப்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ: அநந்த புண்ய பலதம் அத சாந்திம் ப்ரயச்சமே இதம் ஹிரண்யம் சதக்ஷிநாகம் சதாம்பூலம் ஸோமோபராக புண்ய கால சம்பாவித ஜென்ம நக்ஷத்திர தோஷ பரிகாரார்த்தம் ஸர்வாரிஷ்ட சாந்தியர்த்தம் சர்வாபீஷ்ட்ட சித்யர்த்தம் சந்திர கிரஹ பரித்யர்த்தம் விரிஹிதான்யா ஸ்வேத வஸ்திர சகித யத்கிஞ்சித் ஹிரண்யம் நானா கோதரஸ்ய பிரமாண ஸ்ய காமயமானா துப்யம் அஹம் ஸம்பிரததே நமஹ நமம
 

Latest ads

Back
Top