Chand Baori of Rajasthan largest inverted pyramid stepwell

Status
Not open for further replies.
Chand Baori of Rajasthan largest inverted pyramid stepwell

https://www.youtube.com/watch?v=Bs4cv74sEuM


Chand Baori of Rajasthan largest inverted pyramid stepwell in India built over 1000 years ago

வரலாற்றின் சுவடுகளை நம் கண்முன் எடுத்துக் காட்டுகிறது ஒரு கிணறு.
ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரின் அருகில் உள்ள
அபாநெரி என்ற கிராமத்தில், ஆயிரம் படிகளைக் கொண்ட கிணறு ஒன்று, ஹர்ஷத் மாதா என்ற கோவிலில் கட்டப்பட்டுள்ளது.


கி.பி. 800க்கும் 900க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது. இந்தக் கிணறு சாந்த்
பவோரி என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கிணறை நிகும்ப வம்சத்தைச் சேர்ந்த மன்னர் சந்தா என்பவர் கட்டியதாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.


இந்த கிணறு 13 அடுக்குகளை உடையது. 20 மீட்டர் ஆழம் கொண்ட இந்தக்கிணற்றின்
அனைத்து படிகளும் ஒரே எண்ணிக்கை கொண்டவை.


அவற்றின் நீள, அகலங்களும் எந்த இடத்திலும் மாறுபடாதபடி கனகச்சிதமாக
அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 3 ஆயிரத்து 400 படிகள் இந்த பாவோரி கிணற்றில் உள்ளன.


மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கிணறு உலக சாதனைகளில்
ஒன்றாக விளங்குகிறது.


இதை விட, தண்ணீருக்கு அதிக பிரச்சனையுள்ள ராஜஸ்தான் மாநிலத்தில், இந்தக்கிணற்றில் மட்டும் இதுவரை தண்ணீர் வற்றியதே கிடையாது.


பாவோரி கிணறு இந்தியர்களின் கட்டுமான திறமைக்கும், அறிவியல் தொழில் நுட்பத்திற்கும் எடுத்துக்காட்டாக கடந்த ஆயிரம் ஆண்டுகளாக தலைநிமிர்ந்து நிற்கிறது.


??? ?????????? ?????? ????????? ?????? ????????? ???? ?????? ????? (??????)
 
Status
Not open for further replies.
Back
Top