அண்ணன் தம்பி இருவறையும் ஒரு தெவசத்தில் வரிக்க கூடாது. வேதம் அறியாதவரை , நோயாளியை வரிக்க கூடாது. பஹிஷ்டை காரியின் புருஷன் அர்ஹரல்ல. பத்னி, புத்ரர் இல்லாதவரும் அர்ஹரல்ல. மூன்று நாட்களுக்குள் ப்ராஹ்மணார்த்தம் புஜித்தவரும் கூடாது.
புருஷ சூக்தமாவது சொல்ல தெரிய வேன்டும்
.
என்னை சொல்லு என்று கேட்பவரும் கூடாது. நான் உன் வீட்டில் ப்ராஹ்மனணாக இருக்கிறேன். நீ என் வீட்டில் ப்ராஹ்மனணாக இரு என்று ஏற்பாடு செய்ய கூடாது. 3 மாத்திற்கு மேல்பட்ட கர்பிணியின் பதியும் கூடாது.பெற்றோருக்கு ஆப்தீகம் முடிக்காதவரும் கூடாது.
அன்று காலை வபனம் செய்து கொண்டவர் கூடாது. குஷ்டம், சொத்தை பல், சொத்தை நக்ம் உள்ளவர் கூடாது. தீர்த்தம் தவிற வேரொன்றும் சாப்பிடக்கூடாது. தாம்பூலம் போடலாம். வேறெந்த வைதீக கர்மாவும் செய்யக்கூடாது.
10 முறை காயத்ரி ஜபம் செய்து தீர்த்தம் சாப்பிட்ட பிறகு சாயங்கால சந்த்யைக்கு அர்ஹன் ஆவான். சிராத்த ப்ராஹ்மணர் ஒருவரை ஒருவர் தொடக்கூட்டாது. பேசக்கூடாது.மெளனமாக புஜிக்க வேன்டியதை விரலால் தொட்டு காண்பிக்க வேண்டும்
. நெய் பாயசம் இரண்டயும் எறியக்கூடாது. மற்றெல்லாவற்றிலும் பாக்கி வைக்க வேண்டும். இரவு பசி எடுக்காதவாறு அவசரமின்றி புஜிக்க வேண்டும்
.பிரதி வசனம் சொல்ல தெரிந்து கொள்ள வேண்டும். மாமியார் சிராத்தத்தில் பிராமனணாக உட்காரலாம்.