தமிழில் ஏராளமான வலைப்பதிவுகள் வந்தவண்ணம் இருக்கின்றன. தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பது போல பல அரைகுறைகளும் அறிவுபூர்வமாக எழுதத் தெரியாதவர்களும் தன் மனதில் வடியும் ஆபாசங்களையும், அருவருத்தக்க விஷயங்களையும் எழுதி வருகின்றனர். நாம் அவற்றைப் படிக்காமல் விட்டுவிடலாம். ஆனால், “பார்ப்பான்” என்றும் “பார்ப்பனத்தி” என்றும் ஏகவசனத்திலும், இழிவாகவும் பல இனமானப் பிராணிகள் எழுதுவதைப் பார்க்கையில்,இதன் பின்னர் ஏதோ ஒரு பெரிய சக்தியின் உந்துதல் இருப்பதை உணர முடிகிறது. பாரதியைக்கூட இவர்கள் விட்டுவைப்பதில்லை. “பார்ப்பனக் கவிஞன் பாரதி” என்று மிகவும் இழிவாகக் குறிப்பிட்டு அவரது தேசபக்தியையும், தெய்வ பக்தியையும் தமிழ்ப் பற்றையும் அவமானம் செய்கிறார்கள்.
இங்கு (யூ.எஸ்.ஏ) துவேஷப் பிரசாரம் செய்பவர்கள் hate crime குற்றத்துக்கு ஆட்படுத்தப்பட்டு போலீஸ் நடவடிக்கைகளுக்கு உள்ளாகிறார்கள். கறுப்பர்களுக்கு எதிராக யாரும் இழிவாகப் பேசவும் முடியாது; எழுதுவதும் முடியாது.
அத்தகைய சட்டத்தை இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் கொண்டுவரப்பட்டு சமூக நீதி, இனமானம், ஆகிய பெயரில் பிராமணர் சமூகத்தை இழிவுபடுத்துவதைத் தடுக்கவேண்டும்.
பிராமண சமூகத்தைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர்கள் இதைப்பற்றிச் சிந்தித்துச் செயல்படவேண்டும் என்பது என் கோரிக்கை.