• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

anna praasanam details.

kgopalan

Active member
அன்ன ப்ராஸனம்.

அன்ன ப்ராஸனம்:- ஆண் குழந்தைகளுக்கு 6-8-10-12 . பெண் குழந்தைகளுக்கு 5-7-9-11 மாதங்களில் த்விதியை, த்ருதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, த்ரயோதசி, திதிகளில் ,

திங்கள், புதன், வியாழன், வெள்ளி கிழமைகளிலும்,

அசுவதி, ரோஹிணி, ம்ருகசீர்ஷம், புனர்பூசம், பூசம், உத்திரம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி, நக்ஷத்திரங்களிலும்,

ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம்,தனுசு, மீனம் லக்னத்திலும், பத்தாமிடம் சுத்தியும் இருக்க வேண்டும்.

தாரா பலம் , சந்திர பலம் உள்ள நல்ல நாள் பார்த்து ஆறாம் மாதத்தில் செய்ய வேண்டிய கர்மா இது.ப்ரதிஸர பந்தம் செய்ய வேண்டும். இது கங்கண தாரணம்.

ஆண் குழந்தைக்கு வலது கையிலும், பெண் குழந்தைக்கு இடது கையிலும் கட்ட வேண்டும்.இது போதாயன ஸூத்திரத்தில் உள்ளது.உடனே நாந்தி சிராத்தம் செய்ய வேண்டும். அதற்கு அங்கமாக புண்ணியாவசனம் செய்ய வேண்டும். கிரஹ ப்ரீதி செய்ய வேண்டும்.


தேவையான பொருட்கள்;- மஞ்சள் தூள் 50 கிராம், குங்குமம் 10 கிராம், சந்தனம் 10 கிராம், தேங்காய் 2; மாவிலை கொத்து-2; பித்தளை குடம்-1; தொடுத்த புஷ்பம் 5 முழம், உதிரி புஷ்பம் 100 கிராம், வாழைபழம் 10; வீபூதி 1 பாகெட்; வெற்றிலை 50;

பாக்கு 50 கிராம்; தக்ஷிணை; கற்பூரம் ஒரு பாக்கெட்; ஊதுவத்தி 10; ஊதுவத்தி ஸ்டேண்ட்; கற்பூர கரண்டி; தயிர் 50 கிராம்; தேன் 50 கிராம், நெய் 50 கிராம்; டிரே; தாம்பாளம். ஹாரத்தி கரைசல். பஞ்ச பாத்திர உத்திரிணி, கின்னம்-4; தடுக்கு 4;

குத்து விளக்கு, திரி, நல்ல எண்ணைய்; தீப்பெட்டி; இத்யாதி.அரிசி 2 கிலோ; வாழை இலை 2 சிறிது பச்சை கற்பூரம், ஏலக்காய் பொடி செய்து கும்ப ஜலத்தில் போடவும்.

அன்ன ப்ராஸனம்.

கர்த்தா ஸ்நானம் செய்து பஞ்ச கச்சம் கட்டிக்கொண்டு நெற்றிக்கு இட்டுக்கொண்டு ஆத்தில் உள்ள பெரியவர்களுக்கு, ஸ்வாமிக்கு நமஸ்காரம் செய்து விட்டு ஆசமனம் செய்து கையில் பவித்ரம் போட்டுக்கொண்டு

விக்னேஸ்வர பூஜை ஆரம்பிக்கவும்.

அனுக்ஞை; ஓம் நமஸ்ஸதஸே நமஸ் ஸதஸஸ்பதயே நம: ஸகீனாம் புரோகானாம் சக்ஷுஸே நமோ திவே நம: ப்ருதிவ்யை ஓம் சர்வேப்யோ ப்ராஹ்மனேப்யஹ; ப்ராஹ்மனர்களுக்கு அக்*ஷதை போட்டு

அசேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே மயா ஸமர்ப்பிதாம் இமாம் யத்கிஞ்சித் ஸெளவர்ணீம் தக்ஷிணாம் யதோக்த தக்*ஷிணாமிவ ஸ்வீக்ரித்ய.
தக்ஷிணை கொடுத்து அத்ய கரிஷ்ய மானஹ: ----------------கர்ம கர்த்தும் யோக்யதா ஸித்திம் அனுக்கிரஹாண (யோக்கியதா ஸித்திரஸ்து).

விக்னேஷ்வர பூஜை:
கையில் பவித்ரம் அணிந்து 2 கட்டை தர்பை காலுக்கு அடியில் போட்டுக்கொண்டு பவித்ரதுடன் 2 கட்டை தர்பம் இடுக்கி கொள்ளவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வத.னம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்தயே.. நெற்றியில் குட்டிக்கொள்ளவும்.

ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓஞ்ஜந: ஓந்தப: ஓகும் சத்யம்; ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோ யோ ந் ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸுவரோம்.

சங்கல்பம்: எப்போது செய்தாலும் , வலது கையில் மங்கலாக்*ஷதையும் புஷ்பங்களையும் மூடி வைத்துக்கொண்டு , இடது கையை வலது தொடை மேல் , உள்ளங்கை மேல் நோக்கியவாறு வைத்துக்கொண்டு , மூடிய வலக்கையை இடது கை மேல் வைத்து பிடித்துக்கொண்டு ஸங்கல்ப வாக்யங்களை சொல்ல வேண்டும்.

சொல்லி முடித்த பிறகு , வலது கையில் மூடிய வாறு வைத்திருந்த அக்*ஷதையையும் புஷ்பத்தையும் வடக்கு பக்கம் போட்டுவிட்டு அப உப ஸ்பர்ஸியா என்று சொல்லி ஜலத்தை தொடவும்.((மனைவியும் அருகில் இருந்து சேர்ந்து கொண்டிருந்தால் மனைவி .கையிலும் ஜலம் விட வேண்டும். ))
.
சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: அவிக்நேந. பரிஸமாப்த்யர்த்தம் ஆதெள விக்னேச்வர பூஜாம் கரிஷ்யே. அப உப ஸ்பர்ஸியா.

கணபதி த்யானம்: கணாநாந்த்வா கணபதிகும் ஹவாமஹே கவிங்கவீநா முபமச்ர வஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மணாம் ப்ருஹ்மணச்பத ஆநஸ் ஷ்ருண்வந் நூதிபிஸ் சீத ஸாதனம். .

ஓம் ஶ்ரீ விக்னேச்வராய நமஹ; ஓம் ஶ்ரீ மஹா கணபதயே நம: பூர்புவஸுவரோம். ஆவாஹநம். 16 உபசார பூஜை. மஞ்சள் பொடியில் சிறிது ஜலம் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு தாம்பாளத்தில் அல்லது ஒரு இலையில்/கின்னத்தில்/பெரிய வெற்றிலையில் வைத்து கொள்ளவும்.

அஸ்மிந் ஹரித்ரா பிம்பே ஸுமுகம் ஶ்ரீ விக்நேஸ்வரம் த்யாயாமி புஷ்பம் ஸமர்பிக்கவும்:: ஆவாஹயாமி புஷ்பம் சமர்பிக்கவும். விக்நேஸ்வராய நம: ஆஸனம் ஸமர்பயாமி: புஷ்பம் ஸமர்பிக்கவும்.

பாத்யம் சமர்பயாமி ஒரு கின்னத்திலோ அல்லது தொன்னையிலோ ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.அர்க்யம் சமர்பயாமி ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.

ஆசமநீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும், ஸ்நாநம் சமர்பயாமி. மஞ்சள் விக்னேச்வரர் மேல் தீர்த்தம் ப்ரோக்ஷிக்கவும். ஸ்நாநாந்தரம் ஆசமனீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும்.

வஸ்த்ரம், உத்தரீயம் சமர்பயாமி-புஷ்பம் சமர்பிக்கவும். உபவீதம்-ஆபரணம் சமர்பயாமி—புஷ்பம் சமர்பிக்கவும். கந்தாந் தாரயாமி—சந்தனம் கும்குமம் இடவும். அக்ஷதான் சமர்பயாமி- மங்களாக்ஷதை சமர்பிக்கவும்

. புஷ்ப மாலாம் சமர்பயாமி—புஷ்ப மாலை சமர்பிக்கவும். புஷ்பை:: பூஜயாமி அர்ச்சனை செய்யவும். மந்திரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு புஷ்பமாக மஞ்சள் பிள்ளையார் மீது சமர்பிக்கவும்.

ஸுமுகாய நம: ஏகதந்தாய நமஹ; கபிலாய நம; கஜகர்ணகாய நம: லம்போதராய நம: விகடாய நம: விக்ந ராஜாய நம: விநாயகாய நம:

தூமகேதவே நம: கணாத்யக்ஷாய நம: பாலசந்த்ராய நம: கஜாநநாய நம: வக்ர துண்டாய நம: ஸூர்ப்ப கர்ணாய நம: ஹேரம்பாய நம: ஸ்கந்த பூர்வஜாய நம:

விக்னேச்வராய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி. . தூபம் ஆக்ராபயாமி------சாம்பிராணி/ ஊதுவத்தி புகை காண்பிக்கவும். மணி அடித்துக்கொண்டே. தீபம் தர்சயாமி.---- நெய் தீபம் காண்பிக்கவும்..

நைவேத்யம்; வாழைபழம்; தாம்பூலம்; : உத்திரிணீ தண்ணிரினால் வாழை பழத்தை பிரதக்ஷிணமாக சுற்றவும்.இடது கையால் மணி அடித்துக்கொண்டே
மந்திரம் சொல்லவும். ஓம் பூர்புவஸுவ: தத் ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோயோன: ப்ரசோதயாத்.

தேவ ஸவித: ப்ரஸுவ: சத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி; ;அம்ருதோபஸ்தரணமஸி; கையில் புஷ்பம் வைத்து கொண்டு வாழை பழத்தை சுற்றி கணபதி மேல் போடவும். மந்திரம் சொல்லிக்கொண்டே

ஓம் ப்ராணாய ஸ்வாஹா; ஓம் அபாநாய ஸ்வாஹா; ஓம் வ்யாநாய ஸ்வாஹா; ஓம் உதாநாய ஸ்வாஹா ; ஓம் ஸமாநாய ஸ்வாஹா; ஓம் ப்ருஹ்மணே ஸ்வாஹா. கதலீ பழம் நிவேதயாமி.
நிவேதநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி; தீர்த்தம் ஸமர்பிக்கவும்.

தாம்பூலம் சமர்பணம்; உத்திரிணி ஜலத்தால் தாம்பூலத்தை சுற்றவும். பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் சமர்பயாமி.

கர்பூரம் ஏற்றி காண்பிக்கவும். மணி இடது கையால் அடிக்கவும்.. ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.. வலது கையால் பூ எடுத்து கர்பூர ஜ்யோதியை சுற்றி பிள்ளையார் மேல் போடவும்.

கர்பூர் நீராஞ்சனார்த்தம் ஆசமணீயம் சமர்பயாமி; தீர்த்தம் விடவும்.

மந்த்ர புஷ்பம்: யோபாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜாவாந் பசுமாந் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவாந் ப்ரஜாவாந் பசுமாந் பவதி வேதோக்த மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி. புஷ்பம் போடவும். ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி. தங்க மலர் அல்லது தங்க காசு சாற்றவும். புஷ்பம் போடவும்.

ப்ரார்தனை: வக்ர துண்ட மஹா காய சூர்யகோடி ஸம ப்ரப. நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா.,

அர்சனை செய்த பூவை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்ளவும் .மனைவியிடம் புஷ்ப மாலை கொடுக்கவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் ச.துர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஷாந்தயே..
ப்ராணாயாமம்.

மமோ பாத்த சமஸ்த த்ருதயக் *ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே ஷோசுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் ச.துர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஷாந்தயே..
ப்ராணாயாமம். மமோ பாத்த சமஸ்த த்ருதயக் *ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்

சுபே ஷோபனே முஹுர்த்தே ஆத்ய ப்ருஹ்மண: த்வீதய பரார்த்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிகும் சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத் த்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே தண்டகாரண்யே ஷாலிவாஹண சகாப்தேஅஸ்மின்

வர்த்தமானே வ்யவஹாரிகே சாந்த்ரமானேன ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே --------
நாம ஸம்வத்ஸரே ---------- அயணே ---------- ருதெள ------- மாசே --------- பக்ஷே ---------
சுப திதெள ----------- வாஸரே ------- நக்ஷத்ரே ------- சுப யோக சுப கரண யேவங்குண ஸகல விஷேசன விசிஷ்டாயாம் அஸ்யாம் ------- சுப திதெள ஜாதம் குமாரம் அன்ன ப்ராஸ்னம் ஸம்ஸ்கரிஷ்யாமி.

கணபதி யதாஸ்தானம்: கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவிம் கவீனாம் உபவஸ்த்ரவஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மனாம் ப்ருஹமண ஸ்பத ஆனஸ்ருண்வண் ஹூதிபி: ஸீத ஸாதனம்.

அஸ்மாத் ஹரித்ரா பிம்பாத் ஆவாஹிதம் மஹா கணபதிம் யதாஸ்தானம் ப்ர்திஷ்டா பயாமி. ஷோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச.

விநாயக ப்ரசாத சித்திரஸ்து. வடக்கே நகர்த்தவும்.

க்ரஹ ப்ரீதி: ஆசமனம் சுக்லாம்பரதரம்; ப்ராணாயாமம். ஸங்கல்பம்.

அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம் சுப திதெள , கரிஷ்யமாணஸ்ய கர்மணி ஆதித்யானாம் நவாநாம் க்ரஹாணாம் ஆனுகூல்யதா ஸித்யர்த்தம் யே யே க்ரஹா: சுபேதர ஸ்தானேஷு ஸ்திதா:

தேஷாம் க்ரஹானாம் தோஷாதி நிவ்ருத்தி த்வாரா ஆனுகூல்யதா ஸித்தியர்த்தம் , அதிதேவதா ப்ரதி அதிதேவாதா ஸஹித ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரஸாதாத் ஸர்வத்ர ஸர்வ அரிஷ்ட நிவ்ருத்தி

த்வாரா ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம் யத்கிஞ்சித் ஹிரண்யம் நவக்ரஹ தேவதா ப்ரீதீம் காமயமான: யதா ஷக்தி ஹிரண்யம் நாநா கோத்ரேப்ய: ப்ராஹ்மனேப்ய: தேப்ய:தேப்ய: ஸம்ப்ரததே நம: ந மம.

ப்ரதி ஸர பந்தம்.==கங்கண தாரணம்.: ஆண்களுக்கு அன்னப்ராஸனம், குடுமி வைத்தல், (செளளம்) உபநயனம், ஸமாவர்த்தனம், விவாஹம் முதலிய காலங்களிலும், பெண்களுக்கு அன்னப்ராசனம், விவாஹம், பும்சவனம், சீமந்தம். முத்லிய காலங்களிலும் இது செய்வது சம்ப்ரதாயம்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே.

ப்ராணாயாமம். சங்கல்பம். மமோபாத்த ஸமஸ்த்த துரிதய க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் -----------நக்ஷதிரே --------ராசெள ஜாதஸ்ய ---------சர்மண:
அஸ்ய குமாரஸ்ய அன்னப்ராசன கர்மாங்கம் ப்ரதிசரபந்த கர்ம கரிஷ்யே. அபௌபஸ்பர்சியா==ஜலம் தொடவும்.

கும்ப ஸ்தாபனம்: பசுவின் சாணியால் மெழுக பெற்ற சதுரமான தரையில் நெல்லை (கோதுமை) பரப்பி அதன் மேல் இலையில் அரிசியை பரப்பி அதன் மேல் கீழே கண்ட மந்திரங்களால் கிழக்கு நோக்கி மூண்று கோடுகள் வரைய வேண்டும்.

ப்ரஹ்மஜஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விஸீமத: ஸ்ருச- வேன ஆவ: ஸ புத்த்னியா உபமா அஸ்ய விஷ்ட்டா: ஸதஸ்ச யோனிம் அஸதஸ்ச விவ:
(நடுக்கோடு).

நாகே ஸுபர்ணம் உபயத் பதந்தம் –ஹ்ருதாவேநந்த:- அப்யசக்ஷத –த்வா. . ஹிரண்ய பக்*ஷம்-வருணஸ்ய தூதம் –யமஸ்ய யோநெள சகுனம்-புரண்யும்.
(வலது கோடு).

ஆப்யாய ஸ்வஸமே துதே விச்வதஸ் ஸோம வ்ருஷ்ணியம். பவா வாஜஸ்ய ஸங்கதே. (இடது கோடு).

பிறகு வடக்கு நோக்கி பிறகு வடக்கு நோக்கி மூண்று கோடுகள் வரைக.

யோ ருத்ர: அக்நெள –யோ அப்ஸு –ய ஓஷதீஷு. யோ ருத்ர: விஷ்வா –புவணா- ஆவிவேச. தஸ்மை ருத்ராய நமோ அஸ்து.(நடுக்கோடு). ஜலத்தில் கையை தொடவும்.

இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிததே பதம் ஸமூடமஸ்ய பாகும் ஸூரே.
(மேல் கோடு).

இந்த்ரம் விச்வா –அவீவ்ருதந்சமுத்ர வ்யசஸம் கிர: ரதீதமம் –ரதீனாம்-வாஜானாம்-ஸத் பதிம் பதிம்.( கீழ் கோடு).

ப்ரஹ்மஜஜ்ஞானம் என்ற மந்திரம் சொல்லி கும்பத்தை வைக்கவும்.கும்பத்தின் மேல் காயத்ரீ மந்திரத்தால் குறுக்காக வடக்கு முனையாக பவித்ரத்தை வைக்கவும். ஒம். பூர்புவஸ்ஸுவஹ என்ற வ்யாஹ்ருதியை ஜபித்து சுத்த ஜலத்தால் கும்பத்தை நிரப்பவும்.பின் வரும் மந்திரத்தை ஜபிக்கவும்.

கும்ப ஜலத்தில் பச்சை கற்பூரம், ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

ஆபோ வா இதகும் சர்வம் விச்வா பூதான்யாப: ப்ராணா வா ஆப: பசவ ஆப: அன்னமாப: அம்ருதம் ஆப: ஸம்ராடாப: விராடாப: ஸ்வராடாப: சந்நாகும் ஸ்யாப: ஜ்யோதிகும் ஷ்யாப: -யஜூகும்ஷ்யாப: -சத்யமாப|: ஸர்வா தேவதா ஆப: பூர்புவஸுவராப-ஒம்.

அப்: ப்ரணயதி. ஷ்ரத்தா வா ஆப: ஷ்ரத்தாம் ஏவாரப்ய: -ப்ரணீய-ப்ரசரதி. . அப: ப்ரணயதி. யஜ்ஞோ வை ஆப: யஜ்ஞம்-ஏவாரப்ய –ப்ரணிய ப்ரசரதி.
அப: ப்ரணயதி. வஜ்ரோ வை ஆப: வஜ்ரமேவ-ப்ராத்ருவ்யேப்ப்ய: ப்ரஹ்ருத்ய ப்ரணிய ப்ரசரதி. அப: ப்ரணயதி. ஆபோவை ரக்ஷோக்னி: ரக்ஷசாம் அபஹத்யை. அப: ப்ரணயதி. ஆபோவை தேவானாம் –ப்ரியம்-தாம.தேவானாமேவ –ப்ரியம் தாம ப்ரணிய ப்ரசரதி. அப;ப்ரணயதி.

ஆபோவை ஸர்வா தேவதா: . தேவதா ஏவாரப்ய ப்ரணீய ப்ரசரதி. அப: ப்ரணயதி. ஆபோவை ஷாந்தா: ஷாந்தாபி: -ஏவாஸ்ய சுகம் –சமயதி. (இங்ஙனம் ஜபம்).

இந்த மந்திரத்தை சொல்லி மும்முறை சுத்தி செய்க.

தேவோவ: ஸவிதா-உத்புநாது. அச்சித்ரேண-பவித்ரேண. வஸோ ஸூர்யஸ்ய ரஸ்மிபி:

ஸஹி ரத்னானி தாசுஷே ஸுவாதி-ஸவிதா பக: தம்பாகம் சித்ரமீமஹே. ( கும்பத்தில் ரத்னம் சேர்க்கவும்).

கும்பத்தில் கூர்ச்சம் வைக்க: கூர்சாக்ரை ராக்ஷஸான் கோரான் ச்சிந்தி கர்ம விகாதின: த்வாமர்ப்பயாமி கும்பேஸ்மின் ஸபல்யம் குரு கர்மணி.

மாவிலை கொத்து வைக்க: வ்ருக்ஷராஜ ஸமுத்பூதா: சாகாயா: பல்லவத்வச:
யுஷ்மான் கும்பே த்வர்ப்ப்யாமி ஸர்வ தோஷாபனுத் தயே.

தேங்காய் வைக்க: நாளிகேர ஸமுத்பூத த்ரிணேத்ர ஹர ஸம்மத. சிகயா துரிதம் ஸர்வம் பாபம் பீடாஞ்ச மே நுத.

ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்த்தானி ச நதாஹ்ரதா: ஆயாந்து மம சாந்த்யர்த்தம் துரித-க்ஷய காரகா:

இமம் மே வருண:ஸ்ருதீஹவம் அத்யாச ம்ருடயா த்வாம வஸ்யு ராசகே தத்வாயாமி ப்ரஹ்மண வந்தமான: ததாசாஸ்தே யஜமானோ ஹவிர்பி: அஹேட மானோ வருணே இஹபோதி உரிசகும் ஸமான ஆயு: ப்ரமோஷீ.

அஸ்மின் கும்பே சகல தீர்த்தாதிபதீம் வருணம் த்யாயாமி. . வருணம் ஆவாஹயாமி. வருணாய நம: ஆஸனம் ஸமர்பயாமி. பாத்யம் சமர்பயாமி, அர்க்யம் சமர்பயாமி. ஆசமணீயம் சமர்பயாமி .

ஸ்நானம்; வஸ்த்ரம். உபவீதம். ஆபரணம் ஸமர்பயாமி. கந்தான் தாரயாமி. அக்ஷதான் சமர்பயாமி. புஷ்பாணி ஸமர்பயாமி. வருணாய நம: ப்ரசேதஸே நம: ஸுரூபிணே நம: அபாம் பதயே நம: மகர வாஹனாய நம:

ஜலாதிபதயே நம: பாசஹஸ்தாய நம: வருணாய நம: .தூபம், தீபம், நைவேத்யம். தாம்பூலம். ஸுவர்ண புஷ்பம், மந்திர புஷ்பம், ஸமஸ்தோபசாரான் சமர்பயாமி. கற்பூரம் காட்டி பூஜையை முடிக்கவும்.

கும்பத்திற்கு வடக்கு திக்கில் அரிசி போட்டு அதன் மேல் மஞ்சள், சந்தனம் பூசிய சரடு வைக்க வேண்டும்.

ப்ரதி ஸர மந்த்ர ஜபம்.:--அஸ்மின் ப்ரதிசர மந்த்ர கர்மணி ருத்விஜம் த்வாம் வ்ருணே.என ப்ராஹ்மணர்களை வரிக்கவும்.

ப்ரதி ஸர மந்த்ர ஜபம் குருத்வம். ( வயம் குர்ம )
ப்ரதிஸர மந்த்ர ஜபம்.

ஒம். பூ: தத் ஸவிதுர் வரேண்யம். ஓம். புவ: பர்கோ தேவஸ்யா தீமஹி
ஒம்.ஸுவ: தியோ யோ ந: ப்ரசோதயாத். ஒம்.பூர்புவஸுவ: ஸவிதுர் வரேண்யம். பர்கோ தேவஸ்ய தீ மஹீ. தியோ யோந: ப்ரசோதயாத்.

ததிக்ரா விண்ண; அகாரிஷம் ஜிஷ்ணோ ரஸ்வஸ்ய வாஜின:
ஸுரபினோ முகாகரத் ப்ரண ஆயூகும்ஷி தாரிஷத்
ஆபோஹிஷ்டா மயோபுவ: தா ந ஊர்ஜ்ஜே ததாதன:

மஹேரணாய சக்ஷஸே யோ வ சிவதமோ ரஸ:
தஸ்ய பாஜயத இஹ ந:உசதீரிவ மாதர:
தஸ்மா அரங்கமா மவோ யஸ்ய க்ஷயாய ஜிந்வத:
ஆபோ ஜனயதா ச ந:

ஹிரண்ய வர்ணா; கசய: பாவகா யாஸுஜாத: கச்யபோ யாஸ்விந்த்ர:
அக்னிம் யா கர்பம் ததிரே விரூபாஸ்தாநஆபச் சக்கும்ஸ்யோனா பவந்து.

யாஸாகும் ராஜா வருணோ யாதி மத்யே ஸ்த்யாந்ருதே அவபச்யன் ஜனானாம். மதுச்சுதச் சுசயோ யா: பாவகா: தா ந ஆபச் சக்கும் ஸ்யோனா பவந்து.

ஷிவேன மா சக்ஷுஸா பச்யதாப: சிவயா தநுவோப ஸ்ப்ருசத த்வசம் மே.
ஸர்வாகும் அக்னீகும் ரப்ஸுஷதோ ஹுவே மயி வர்ச்சோ பலம் ஓஜோ நிதத்த.

பவமானம்: பவமான: ஸுவர்ஜன: பவித்ரேண விசர்ஷணி: ய: போதா ஸ புநாதுமா . புந்ந்து மா தேவ ஜனா: புந்ந்து மனவோ தியா. புஎஅஎது விஸ்வ ஆயவ: ஸாதவேத: பவித்ரவத். பவித்ரேண புநாஹி மா.

சுக்ரேண தேவ தீத்யத். அக்னே க்ரத்வா க்ரதூகும் ரனு; யத்தே பவித்ர மார்ச்சிஷி. அக்னே
விதத மந்த்ரா. ப்ருஹ்ம தேன புநீமஹே . உபாப்யாம் தேவ சவித: பவித்ரேண சவேன ச இதம் ப்ருஹ்ம புநீ மஹே. வைஷ்வ தேவி புநதீதேவ்யாகாத்.யஸ்யை பஹ்வீ ஸ்தனுவோவீதப்ருஷ்ட்டா: தயா மதந்தச் சத மாத்யே ஷூ. வயக்கும் ஸ்யாம பத்யோ ரயீணாம்.

வைச்வானரோ ரச்மிபிர் மா புநாது. வாத: ப்ராணேனேஷிரோ மயோ புவ:
த்யாவா ப்ருத்வீ பயஸா பயோபி: ருதாவரீ யஜ்ஞியே ன புநீதாம்.

ப்ருஹத் பி: ஸவித ஸ்த்ருபி: வர்ஷிஷ்டைர் தேவமன்வபி:;அக்னே தக்ஷை: புநாஹி மா;

யே ந தேவா அபனுத யேநா போ திவ்யங்கச: தேந திவ்யேன ப்ரஹ்மனா. இதம் ப்ரஹ்ம புனீமஹே.

ய: பாவமானீ ரத்யேதி. ருஷிபிஸ் ஸம்ப்ருதகும் ரஸம்.
சர்வகும் ஸ பூத மச்னாதி. ஸ்வதிதம் மாதரிச்வனா.
பாவமானீர் யோ அத்யேதி. ருஷிபிஸ் ஸம்ப்ருதகும் ரஸம்.
தஸ்மை ஸரஸ்வதி து ஹே. க்ஷீரகும் ஸர்ப்பிர் மதூதகும்.

பாவமானீஸ் ஸ்வஸ்த்ய்யனீ: ஸுதுகாஹி பயஸ்வதீ:
ருஷிபிஸ் ஸம்ப்ருதோ ரஸ: ப்ராஹ்மணே ஷ்வம்ருதகும் ஹிதம்
பாவமானீர் திசந்து ந: இமம் லோகம் அதோ அமும்
காமான் ஸமர்த்தயந்து ந: தேவீர் தேவை: ஸமாப்ருதா:

பாவமானீஸ் ஸ்வஸ்த்ய்யனீ: ஸுதுகாஹி க்ருதச்சுத:
ருஷிபிஸ் ஸம்ப்ருதோ ரஸ; ப்ராஹ்மணேஷ்வம்ருதகும் ஹிதம்
யே ந தேவா: பவித்ரேண. ஆத்மானம் புநதே ஸதா
தேந ஸஹஸ்ரதாரேண பாவமான்ய: புநாது மா.

ப்ராஜாபத்யம் பவித்ரம். ச்தோத்யாமகும் ஹிரண்மயம்
தேந ப்ருஹ்ம விதோ வயம் . பூதம் ப்ருஹ்ம புநீமஹே.
இந்த்ர:ஸுநீதி சஹ மா புநாது. ஸோம :ஸ்வஸ்த்யா வருண: ஸமீச்யா
யமோராஜா ப்ரும்ருணாபி: புநாது மா.

ஜாதவேதா மோர்ஜயந்த்யா புநாது. பூர்புவஸ்ஸுவ: தச்சம் யோ ரா வ்ருணீமஹே. காதும் யஜ்ஞாயா.காதும் யஜ்ஞபதயே. தைவீ: ஸ்வஸ்தீரஸ்துந : ஸ்வஸ்திர் மாநுஷ்யேப்ய: ஊர்த்வம் ஜிகாது பேஷஜம் , சந்நோ அஸ்து த்விபதே சம் சதுஷ்பதே.

வருண ஸூக்தம்,ஶ்ரீ ருத்ர ஸூக்தம்; ப்ருஹ்ம ஸூக்தம், விஷ்ணு ஸூக்தம், துர்கா ஸூக்தம். ஶ்ரீ ஸூக்தம். ஶ்ரீ லக்*ஷ்மீ காயத்ரீ. ஶ்ரீ மஹா லக்*ஷ்மி காயத்ரி. முழுவதும் சொல்லவும்.

நமோ ப்ருஹ்மணே நமோஸ்து அக்னயே நம; ப்ருத்வ்யை நமோவாசே நமோ வாசஸ்பதயே . நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.என்று மூண்று தடவை ஜபிக்கவும்.

வருணனை யதாஸ்தானம் செய்யவும்.


த்ரயம்பகம் யஜா மஹே ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம் உர்வா ருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத். என்ற மந்திரத்தால் விபூதியால் மூன்று முறை தடவவும்.

ஸுரபிமதி மந்திரத்தாலும் அப்லிங்காபி மந்திரத்தாலும் ஸூத்திரத்தை ப்ரோக்*ஷிக்கவும்.

அக்னி ராயுஷ்மான் ஸ வனஸ்பதி ராயுஷ்மான் தேனத்வாயுஷா ஆயுஷ்மந்தம் கரோமி. ஸோம ஆயுஷ்மான் ஸ ஓஷதி பிராயுஷ்மான் தேனத்வாயுஷா ஆயுஷ்மந்தம் கரோமி.

யக்ஞ ஆயுஷ்மான் ஸதக்*ஷிணா பிராயுஷ்மான் தேனத்வாயுஷா ஆயுஷ்மந்தம் கரோமி.ப்ரம்ஹாயுஷ் மத்தத் ப்ராஹ்மணை ராயுஷ்மத்தேன த்வாயுஷா ஆயுஷ்மந்தம் கரோமி.

தேவா ஆயுஷ்மந்த ஸதே அம்ருதேன ஆயுஷ்மந்த: தேன த்வாயுஷா ஆயுஷ்மந்தம் கரோமி. என ஸுத்ரத்தை கையால் தொட்டு தேங்காய் வெற்றிலை, பாக்கு, பழம், அக்ஷதை கையில் வைத்து ஆணுக்கு வலது கையில் பெண்ணுக்கு இடது கையிலும்

ப்ருஹத் ஸாம க்ஷத்ரப்ருத் வ்ருத்த வ்ருஷீணியம் த்ருஷ்டுபெளஜ: சுபிதம் உக்ரவீர்யம். இந்த்ரஸ்தோமேன பஞ்சதஸேன மத்யமிதம் வாதேன ஸகரேண ரக்ஷா. என மந்திரம் கூறி ஸூத்ரத்தை கட்டி சந்தனம் குங்குமம் வைக்கவும்.

யோ ப்ருஹ்ம முதலிய மந்திரங்களால் மந்தரித்த வீபூதியை தரித்துக்கொண்டு ப்ராஹ்மணர்களுக்கு தக்ஷிணை கொடுக்கவும்.

சிலர் புருஷர்களுக்கு விச்வேத்தாதே சவனேஷு ச்வாத்ய யா ச கர்மா இந்த்ர சுந்ததே பாராவாரம் யத்குரு ஸம்ப்ருதம் வ: ஸ்பாவிநோத பவதபாய ரிஷிபந்தவே. என மந்திரம் கூறி கையில் கட்டுகிறார்கள்.

இந்த கருமம் முடியும் நாளன்று மாலையில் கையில் கட்டியிருந்த சரட்டை ஒம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஒம் பூர்புவஸ்ஸுவ: என்று சொல்லி அவிழ்த்து குளத்திலோ நதியிலோ நீரில் போட்டு விடவும்..

நாந்தீ==அப்யுதய ச்ராத்தம்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்த்யே.. ஓம் பூ: =+++++பூர்புவஸுவரோம்.

மமோபாத்த ஸமஸ்த்த +++++++ப்ரீத்யர்த்தம் ---------நக்ஷத்ரே---------ராசெள ஜாதஸ்ய மம குமாரஸ்ய அன்ன ப்ராஸன கர்மாங்கம் அப்யுதயிகம் ஹிரண்ய ரூபேன அத்ய கரிஷ்யே.. அப உப ஸ்பர்ஸ்ய.

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ணிய பலதம் அத சாந்திம் ப்ரயஸ்சமே.

அன்ன ப்ராஸன கர்மாங்க பூதே அஸ்மின் அப்யுதயே ஸத்ய வஸு ஸம்ஞய கானாம் விஶ்வேஷாம் தேவானாம் ( 2 முறை தத்தம் கொடுக்க வேண்டும்) ப்ரபிதாமஹி, பிதாமஹி, மாத்ரூணாம் நாந்தி முகானாம் ( தாய் இருக்கும் எஜமானர் இந்த தத்தம் கொடுப்பதில்லை). மற்றவர் 2 முறை தத்தம் கொடுக்க வேண்டும்.

ப்ரபிதாமஹ, பிதாமஹ, பித்ரூணாம் நாந்தி முகானாம் ( 2 முறை தத்தம் கொடுக்கவும்). ஸ பத்னீக மாது:ப்ரபிதாமஹ, மாது: பிதாமஹ, மாதா மஹானாம்

நாந்தி முகானாம் ( 2 முறை தத்தம் கொடுக்கவும்)
நாந்தி ஸம்ரக்ஷக மஹாவிஷ்ணோஶ்ச த்ருப்தியர்த்தம் இதம் ஹிரண்யம், ஸ தக்ஷிணாகம், ஸ தாம்பூலம் நாந்தி முகேப்ய: ப்ராஹ்மணேப்ய: தேப்யஸ் தேப்ய: ஸம்ப்ரததே. நம: ந மம.


மயா ஹிரண்யேன க்ருதம் ஆப்யுதயிகம் ஸம்பன்னம். (ஸுஸம்பன்னம்).

இடா தே வஹூ-மனுயக்ஞனீர் ப்ருஹஸ்பதி; உக்தாமதானி சகும் ஷிசத் விஸ்வே தேவா: ஸூக்த வாச: ப்ருத்வி மாத: -மாமா ஹிகும்சீர் மது மனிஷ்யே மது ஜனிஷ்யே மதுவக்ஷ்யாமி, மது வதிஷ்யே மதுமதீம் தேவேப்ய: -வாசமுத்யாசகும் சுஷ்ரூஷேண்யாம் மனுஷ்யேப்ய: தம் மா தேவ அவந்து சோபாயை பிதரோ அனுமதந்து.

இட ஏஹி,-அதித ஏஹி- ஸரஸ்வத்யேஹி. ஷோபனம் ஷோபனம். ஶோபனம். நாந்தி ஶோபன தேவதா: பிதர: ப்ரீயந்தாம். மனஸ்ஸம்பாதீயதாம் ( ஸமாஹித மனஸ: ஸ்ம:) ப்ரஸீதந்து பவந்த: (ப்ரஸன்னா:ஸ்ம) ஶ்ரீரஸ்த்விதிபவந்தோ ப்ருவந்து. (அஸ்து ஶ்ரீ:) புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து (புண்யாஹம்).

நாந்தி ஶோபன தேவதா: ப்ரஸாத ஸித்திரஸ்து. ( அக்ஷதை போடவும்).

புன்யாஹ வாசனம் ஜபம் செய்யவும்.

அன்ன ப்ராஸ்னம்.

தயிர், தேன், நெய் அன்னம் கலவை தயாரித்து,

பூரபாம் த்வெளஷதினாம் ரஸம் ப்ராசயாமி சிவாஸ்த ஆப: ஓஷதய: ஸந்து அநமீவாஸ்த ஆப ஓஷதய: :ஸந்து --------------சர்மன்.

புவ: அபாம் த்வெளஷதீனாம் ரஸம் ப்ராஷயிஷ்யாமி சிவாஸ்த ஆப ஓஷதய:ஸந்து-----------சர்மன்.

ஸுவ: அபாம் த்வெளஷதீனாம் ரஸம் ப்ராஷயிஷ்யாமி சிவாஸ்த ஆப ஓஷதய: ஸந்து-----------சர்மன்.

பூர்புவஸ்ஸுவ: அபாம் த்வெளஷதீனாம் ரஸம் ப்ராஷயிஷ்யாமி சிவாஸ்த ஆப ஓஷதய:ஸந்து-----------சர்மன்.

(ஹவிஸ்ஸை ஊட்டி முகத்தை துடைத்து விடவும்.

அன்ன ப்ராஸ்ன முஹூர்த்த: ஸுமுஹூர்தோஸ்து .
ஸ்வர்ண பாத்திரத்தில் உப்பு, உறைப்பு இல்லாமல் அன்னத்தை தயிர், தேன், நெய் இவைகளுடன் சேர்த்து பூரபாம் என்ற 4 மந்திரங்களை ஒரு முறை குழந்தைக்கு அதை ஊட்ட வேண்டும். ஒரே மந்திரம் 3 தனி வ்யாஹ்ருதி, பிறகு மூன்றையும்

சேர்த்து ஒரு முறை கூறுவதால் 4 தடவை ஆகிறது. பிறகு தங்க மோதிரத்தை கையில் வைத்துகொண்டு ஒரு முறை ஊட்டுவர், பிறகு ஆசீர்வாதம், ப்ருஹஸ்பதி ஸம்பாவனை, ஆரத்தி எடுத்தல் உடன் முடிவடைகிறது.
 

Latest ads

Back
Top