akshaya dwithiyai

kgopalan

Active member
09-5-2024. அக்ஷய துதியை. இன்று செய்யப்படும் பூஜைகள், ஜபம், ஹோமம், பாராயணம், பித்ரு தர்பணம், தானம் ஆகியவை அதிக பலனை தரும்.

அதி காலையில் ஸூரியன் உதிக்குமுன்பு 5-30 மணிக்குள்ளாக ஸ்நானம் செய்ய வேண்டும்.. இதனால் பாபங்கள் விலகும்.

குரு முகமாக உபதேசம் பெற்ற மந்திரங்களை அதிகமாகவே இன்று ஜபம் செய்யலாம். முடிந்தால் தெய்வ சன்னதியில் உட்கார்ந்து ஜபம் செய்யலாம். உபதேசம் இல்லாதவர்கள் ராமா என்றோ சிவா என்றோ சொல்லலாமே.

இன்று ஒளபாசனம்//ஸமிதாதனம் செய்யலாம். தான் கற்ற வேதத்தை சொல்லலாம். இல்லை என்றால் ராமாயணம், பாகவதம், கீதை சிறிதளவு படிக்கலாமே.. ப்ருஹ்மயக்ஞம் செய்யலாம்.

இதனால் பலன் நமக்கும் கிடைக்கும். நம் ஸந்ததியினருக்கும் தொடர்ந்து அக்ஷயமாக கிடைக்குமே..
 
Back
Top