• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

Agni Natchathiram - 4 th May 2015 to 29 th May 2015

Status
Not open for further replies.
Agni Natchathiram - 4 th May 2015 to 29 th May 2015


அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம் இந்தப் பெயரைச் சொன்னாலே வியர்த்து விறுவிறுத்து பெருமூச்சு விடத் தொடங்கிவிடுவார்கள் பலர். சூரியனுக்கும் அக்னிக்கும் என்ன சம்பந்தம் நட்சத்திரம் என்று சொல்வது ஏன்?


சூரியனும் ஒரு நட்சத்திரம்தான். அதீத பிரகாசத்தினாலும் பூமிக்கு அருகிலேயே இருப்பதாலும் பகலில் தெரிகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். குறிப்பிட்ட காலகடத்தில் பூமிக்கு மிக அருகில் சூரியன் வருவதால் வெம்மை அதிகரிக்கிறது. அதோடு அக்னி நட்சத்திர காலகட்டத்தில் சூரியனும் சந்திரனும் பூமிக்கு அருகே வருவதாக சொல்கின்றனர



சூரியனின் மனைவி உஷாதேவி தன் கணவனின் உடல் வெப்பம் தாங்காமல் தவித்தாள். தன் நிழலையே ஒரு பெண்ணாகப் படைத்து அங்கே இருக்கச் செய்துவிட்டு தான் மறைந்து வாழ்ந்தால். நிழல் பெண்ணுடன் வாழ்ந்த சூரியன் ஒரு காலகட்டத்தில் உண்மை உணர்ந்தான். உஷாவை மீண்டும் அழைத்தான். அவள் மறுக்க சூரியனின் வெம்மையைக் குறைத்திட முடிவு செய்தார் அவள் தந்தையான விஸ்வகர்மா. அதன்படி பகலவனின் தேஜஸைத் தேய்த்து மழுக்கி அவனது வெப்பத்தைத் தணித்தார்.

உஷா மகிழ்ச்சியோடு கணவன் வீடு வந்தாள். இழந்த ஒளியை வருடத்தில் சில நாட்கள் திரும்பப் பெற வேண்டும் என விரும்பினான் சூரியன். சம்மதித்தார் விஸ்வகர்மா.

சூரியன் தன் முழுமையான தேஜஸூடன் இருக்கும் காலகட்டமே அக்னி நட்சத்திரம் என்கிறது மற்றொரு புராணம்.


ஈசனின் அனல் விழிக் கனலில் இருந்து அவதரித்தவன் ஆறுமுகன். தீப்பிழம்பு சரவணப்பொய்கையில் விழுந்து சிசுவான போது அவனை எடுத்து வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். குழந்தையின் உடல் தகிப்பைத் தணிக்க தங்கள் உடலோடு சேர்த்து அணைத்துக்கொண்டனராம். அவர்களிடம் இருந்த குளிர்ச்சி குழந்தைக்குப் போக பாலகனின் உடல் வெப்பம் அந்தப் பாவையர்க்குச் சென்றதாம். தன் மீது அன்பு கொண்ட அவர்களது உடல் வெப்பத்தை பிரகாசமான ஒளியாக மாற்றி அவர்களை நட்சத்திரங்களாக வானத்தில் சுடர்விடச் செய்தான் சுப்ரமண்யன் கார்த்திகை நட்சத்திரத்தின் அதிதேவதை அக்னி தேவன் பொதுவாகவே கார்த்திகை நட்சத்திரத்தினை வெப்பமான நட்சத்திரம் என்பார்கள்



அக்னி நட்சத்திரத் தொடக்க நாள் முதல் காலத்தில் அதிகாலையில் எழுந்து நீராடுங்கள் சூரியனுக்கு உரிய கோலத்தை பூஜை அறையில் அரிசி மாவினால் போடுங்கள். சூரியனை நோக்கி மனதார வேண்டுங்கள். முதல் நாளிலும் கடைசி நாளிலும் சூரியனுக்கு சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்யலாம். நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து முருகப்பெருமான் துதிகளைச் சொல்லுங்கள். வெம்மை தீர்க்கும் அம்மன்களான மாரியம்மன் மீனாட்சியம்மனை வழிபடுவதும் நல்லது. பரணிக்குரிய துர்க்கையையும் ரேவதிக்கு உரிய பிரம்மனையும் கிருத்திகைக்கு உரிய அக்னி பகவானையும் கும்பிடுவதும் சிறந்தது. சிவபெருமான் நரசிம்மர் மகாவிஷ்ணு சீதளாதேவி போன்ற தெய்வங்களை வணங்குவது மிகுந்த நன்மை தரும்


நோய்கள் எளிதாகப் பரவும் காலகட்டம் இது. எனவே மஞ்சள் கலந்த நீரை வேப்பிலையால் தொட்டு வீடு முழுதும் தெளிக்கலாம். இவை அனைத்தையும் விட வெயிலால் வாடுவோர் குளிரும் வண்ணம் பானகம் நீர்மோர் தண்ணீர் தயிர்சாதம் விசிறி காலணிகள் என உங்களால் இயன்றதை தானமாக அளியுங்கள் கால் நடைகளுக்கு நீரும் கீரையும் கொடுங்கள். உங்கள் மனமும் உடலும் குளிர இறைவன் அருள் மழை பொழிவான்.

11070226_983708621646806_2459287837035856297_n.jpg





2015 Tamil Festivals Calendar for Lansing, Michigan, United States


2015 Tamil Festivals Calendar for Lansing, Michigan, United States
 
Status
Not open for further replies.
Back
Top