• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

about Our current Minister of External Affairs Sri .Subrahmanyam Jaishankar

drsundaram

Active member
ஜெய்சங்கர் எனும் ராஜதந்திரி

இந்திய பாதுகாப்பு துறைகளில் ராணுவம் உளவுக்கு அடுத்து மாபெரும் சவாலான விஷயம் வெளிநாட்டு தூதரக பணியும் அதை முறையாக ராஜதந்திரமாக கையாள்வதும்..

ஒரு பக்கம் நெருப்பு, ஒரு பக்கம் பனி ஒரு பக்கம் பள்ளம் ஒரு பக்கம் நாகம் என சுற்றும் உலகில் தேச நலன் எனும் எண்ணெய் கலயத்தை மெல்லிய கம்பியில் நடந்து மிக கவனமாக கொண்டு செல்ல வேண்டியது அப்பணி

கடும் ஆபத்திலும் சிக்கலிலும் சுயநலம் தேடும் உலகிலும் பிராந்திய நலம், கண்டத்தின் நலம் இன்னும் பலவகையான நலன் என இழுத்துவிட்டு அவைகளின் நம்பிக்கையினை பெற்று அதே நேரம் எதிர்தரப்பினையும் பகைக்காமல் லாவகமாக நடந்து தன் நாட்டின் நலனை காப்பது பெரும் திறமை, அப்படி ஒரு ராஜதந்திரி கிடைப்பது வரம்

அப்படி ஒரு மாபெரும் வரம் இந்தியாவுக்கு கிடைத்திருக்கின்றது அவர் பெயர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர். தமிழர்

இன்று 65 வயதை எட்டும் அவரின் வெளியுறவு துறை பணி அவருக்கு 22 வயதான பொழுது 1977ல் தொடங்குகின்றது, முதல் பணியாக இரு வருடங்கள் மாஸ்கோவில் அன்றைய சோவியத் யூனியனில் இருந்தார். அது இந்திய சோவியத் உறவு உச்சத்தில் இருந்த காலம், உலக அரசியலை அந்த சிகப்பு பூமியில்தான் கற்க தொடங்கினார் கூடவே நிறைய கற்றார் ஜெய்சங்கர்.

2004ல் அமெரிக்க தூதரனார் அந்த காலகட்டம் இந்தியா அணுஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என அமெரிக்கா அடம்பிடித்த காலம் மிக கடுமையாக மிரட்டிய காலம், அதில் இந்திய நலன்களை காத்து, அமெரிக்க பொருளாதார தடையில் இருந்து மீட்டவர் அவர்தான்

2004ல் இந்தியாவினை சுனாமி தாக்கியபொழுது உலகெல்லாம் இருந்து மீட்புகுழு வரவும் ஜெய்சங்கர் முக்கிய காரணம் அவரின் தொடர்பு அப்படி இருந்தது

ஒரு கட்டத்தில் வெளியுறவு துறையின் பெரும் அதிகாரியனார், காங்கிரஸ் அரசு அவரை அதிகாரியாகவே வைத்து சிங்கப்பூரின் தூதராக அனுப்பியது, அங்கு ஓசைபடாமல் ஒரு காரியம் செய்தார், ஆம் சிங்கப்பூரில் இந்தியாவுக்கான அவசரகால ராணுவ விஷயம் சில உண்டு

அட்டகாசமாக அதை சாதித்தார் ஜெய்சங்கர் அதன் பின் சீனாவுக்கான தூதரனார்

அது சிக்கலான காலகட்டம் சீனா ஒருமாதிரி அடம்பிடித்து கைலாச யாத்திரைக்கு விடமாட்டோம், அருணாசல பிரதேசம் தெற்கு திபெத் என அடம்பிடித்த காலத்தில் சீன தூதராக இருந்தும் திபெத்துக்குள் வந்தார் ஜெய்சங்கர், அவரின் ராஜதந்திர அணுகுமுறையால் கைலாச யாத்திரை திறக்கபட்டது

திபெத்தில் கால் வைத்த அல்லது வைக்க அனுமதிக்கபட்ட முதல் இந்திய தூதர் அவர்தான்

சீனா பொதுவாக யாரையும் நம்பாது, அந்த சீனாவினையே இந்தியா சீனாவுக்கு எதிரி அல்ல என ஓரளவு தெளிவினை கொடுத்தவர் ஜெய்சங்கர், அவரின் சாதனை அது

அதன்பின் மறுபடி அமெரிக்க தூதரனார், அப்பொழுது பல ராஜதந்திர சர்ச்சைகளும் தேவயாணி கோப்ரகடே என்ற அதிகாரி சிக்கி கொண்ட விஷயமும் நடந்தது அதை எல்லாம் சமாளித்தது ஜெய்சங்கரே

நிச்சயம் நீண்ட அனுபவம் கொண்டவர் ஜெய்சங்கர், உலகில் அவர் கால் படா நாடு இல்லை, அவரை அறியாத வெளிநாட்டு துறைகள் இல்லை. எல்லா இடத்திலும் அவருக்கு நற்பெயரே

இதைத்தான் மோடி குறித்துகொண்டார்

மோடி தன் இரண்டாம் ஆட்சியில் பெரும் திட்டங்களை வைத்திருந்தார், அவை உலகை உலுக்கபோகும் விஷயம் எனவும், தேர்ந்த ராஜதந்திரியின்றி அவை சாத்தியமில்லை என்பதையும் நன்றாக உணர்ந்தபொழுது அவர் கண்முன் வந்தவர்தான் ஜெய்சங்கர்

கொஞ்சமும் யோசிக்காமல் அவரிடம் வெளியுறவு துறை அமைச்சர் பதவியினை கொடுத்தார் மோடி

அதன் தாக்கம் காஷ்மீர் விவகாரத்தில் 370 ரத்து செய்யபடும் பொழுது தெரிந்தது, தன் தேர்ந்த அனுபவத்தாலும் தன் அகில உலக தொடர்பாலும் உலகில் ஒரு குரல் ஒலிக்காமல் பார்த்துகொண்டார்

அரபு நாடுகளையே அசால்ட்டாக கட்டிபோட்டார் ஜெய்சங்கர்

பாகிஸ்தானை அடுத்து முணுமுணுத்த நாடு சீனா, அவ்வளவுதான் ஜின்பெங்கை மாமல்லபுரத்துக்கு இழுத்து வந்து அசத்தினார் ஜெய்சங்கர்

அதன்பின் துருக்கி முணுமுணுத்தது அதுவும் ஓரிருநாளில் அமைதியாயிற்று.

இதெல்லாம் மாபெரும் சாதனைகள், ஒரு வரியில் விளக்கமுடியாதவை

இந்தியாவுக்கு அந்த தேர்ந்த அமைச்சரை மோடி நியமித்தது மிக பெரும் நல்ல விஷயம், மோடிக்கு ஏன் சில இடங்களில் கைதட்டுகின்றோம் என்றால் இதற்காகத்தான்

கிட்டதட்ட 22 வயதில் இருந்து 43 வருடமாக இந்தியாவுக்கு உழைத்து வருபவர் ஜெய்சங்கர், அவர் ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் சீனாவிலும் எடுத்த பயிற்சியே இன்று காஷ்மீர் சிக்கலை உலக தலையீடு இன்றி தீர்க்க முடிந்தது

இன்றும் சீனா இந்தியாவோடு இனி உரசல் இல்லை என சொல்லிவிட்டது, அமெரிக்கா இந்தியாவினை தேடுகின்றது, ஈரான் தேடுகின்றது, ஜெர்மன் தேடுகின்றது இன்னும் ஏகபட்ட நாடுகள் நட்புறவில் இருக்கின்றன என்றால் காரணம் ஜெய்சங்கர்
இலங்கையில் இந்தியா இன்று கால்பதிகின்றது என்றால் அன்று பார்த்தசாரதி எனும் தமிழனிடம் தமிழன் ஜெய்சங்கர் பெற்ற அனுபவமும் மகா முக்கிய காரணம்

மோடி ஊர்சுற்றுவார் என சொல்பவன் சொல்லிகொண்டுதான் இருப்பான், அவரின் ஒவ்வொரு பயணத்தின்பொழுதும் ஒரு நாட்டு நலன் இருக்கும் அதை ஜெய்சங்கர் திட்டமிட்டு வைப்பார் மோடி சென்று கையெழுத்திடுவார்

அந்த அளவு உலக அரங்கில் தனி இடம் பெற்றிருக்கின்றார் ஜெய்சங்கர் எனும் தமிழர்

"கனகவிசயரின் முடிதனை எரித்து கல்லினை வைத்தான் சேரமகன், இமயவரம்பினில் மீன்கொடி ஏற்றி இசைபட வாழ்ந்தான் பாண்டியனே" என்ற வரிக்கு ஏற்ப காஷ்மீரை இந்தியாவோடு முழுக்க சேர்த்த தமிழன் அவர்

ஆம் அவர் கொஞ்சம் சொதப்பியிருந்தாலும் காஷ்மீர் விவகாரம் உலக விஷயமாகி இந்திய மானம் சந்தி சிரித்து காட்சிகளே மாறியிருக்கும்

பண்டைய சேர, பாண்டிய மன்னன் வரிசையில் அந்த இமயமலையினை மீட்டெடுத்தவர் ஜெய்சங்கர்

இந்த தமிழரை பற்றி இங்கு யாராவது பேசுவார்களா?, இந்த மாபெரும் ராஜதந்திர் தமிழன், உலகில் இந்தியாவுக்கு தனி இடம் பெற்றுகொடுத்திருக்கும் தமிழன் பற்றி தமிழக ஊடகமோ டிவியோ பேசுமா என்றால் பேசாது

நடிகர் ஜெய்சங்கர் தெரிந்த அளவு இந்த மாபெரும் சாதனையாளர் தமிழர் தேசிய ஜெய்சங்கர் தமிழனுக்கு தெரியாது

அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அரைவேக்காடு அரசியல்வாதிகளும் அவர்களின் அறிவே இல்லா அடிப்பொடிகள் மட்டுமே, தமிழகத்தின் சாபக்கேடு அப்படி

நாம் அந்த அற்புத தமிழனை எப்பொழுதும் நன்றியோடு நினைப்போம், தகுதியான தமிழனுக்கு பொருத்தமான பொறுப்பை கொடுத்த மோடியினையும் நினைப்போம்

இன்று அந்த மாபெரும் ராஜதந்திரி சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு பிறந்த நாள்

சுப்பிரமணி என்பது தமிழ்கடவுளின் பெயர், தமிழர்களின் அடையாளம்

ஆம் அந்த சுப்பிரமணிய ஜெயசங்கரும் தமிழக அடையாளம்

இந்த ஜெய்சங்கரும் டெல்லி பல்கலைகழகத்தில்தான் படித்தார், ஆனால் நாட்டுக்கு எப்படி நல்ல பொறுப்பான ராஜதந்திரியாக உருவாகிவிட்டார் பார்த்தீர்களா?

அந்த பெருமைமிக்க நிறுவணத்தின் இன்றைய நிலை என்ன? இன்று தேசவிரோதிகளால் நிறைந்து குட்டிசுவராயிற்று

இன்று ஜெய்சங்கரின் பிறந்த நாள், 65ம் பிறந்த நாள்

நாம் முன்பே குறிப்பிட்டபடி ராணுவ தளபதி போல வெளியுறவு துறை பணியும் சவால்மிக்கது பொறுப்பும் உயிர் ஆபத்தும் மிக்கது

அந்த வரிசையில் இந்த தமிழனும் மாபெரும் சவால் எடுத்து தேசம் காக்கின்றார்

ரஷ்யாவினையும் அமெரிக்காவினையும் பதமாக கையாண்டு, இஸ்ரேலையும் அரபு நாடுகளையும் ஒருசேர கையாண்டு, சீனாவினையும் ஜப்பானையும் ஒருசேர கையாண்டு, ஐரோப்பாவினையும் லத்தீன் அமெரிக்காவினையும் ஒருசேர கொண்டுவந்து, ஆப்ரிக்க நாடுகள் முழுக்க இந்திய சார்பு எடுக்க வைத்து..

நினைத்தாலே மயக்கம் போட வைக்கும் விஷயம் இது, இவ்வளவையும் செய்துதான் ஐ.நாவில் காஷ்மீர் இந்தியாவின் பகுதி என நிரூபித்திருக்கின்றார் ஜெய்சங்கர்

எவ்வளவு பெரும் ராஜதந்திரம் இது, பெரும் வீரமும் கூட.

அந்த நகர்வுதான் அயோத்தி தீர்ப்பு உலக சலசலப்பு ஆகாமலும் பார்த்து கொண்டது, அது ஜெயசங்கர் தவிர யாருக்கும் சாத்தியமில்லை

"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்" என்றார் கண்ணதாசன்

அப்படி நாட்டின் மானம் காத்து நிற்கும் ஜெய்சங்கர் சரித்திரமாகிவிட்டார், அவர் ஆயிரம் பிறை காண இந்நாட்டின் எல்லா தெய்வங்களும் அருள்புரியட்டும் எல்லா ஆலயத்திலும் அவருக்காய் பிரார்த்தனை நடக்கட்டும்

வாழிய நீ எம்மான், வாழிய வாழியவே

courtesy: stanley Rajan

sub.jpg
 

Latest ads

Back
Top