• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Abirami Andhadhi

Status
Not open for further replies.
11. திருவடிப் பெருமை.

ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமாய்
வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான சரணாரவிந்தம் தவளநிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடி கண்ணியதே.

வானம் ஈறான ஐம்பெரும் பூதங்களின் வடிவு ஆனவள்; அவள் திருவடித் தாமரைகள் ஆனந்தமாகவும், அறிவாகவும், அமுதமாகவும், நான்மறைகளின் முடிவாகவும் உள்ளன. சுடலையைத் தம் ஆடல் அரங்காகக் கொண்ட இறைவனின் தலை மீது அவை மாலையாகவும் விளங்குகின்றன.
 
# 12. புண்ணியம் வியத்தல்.

கண்ணியது உன் புகழ், கறப்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம் புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே! புவி ஏழையும் பூத்தவளே!

ஏழு உலகங்களையும் மலரச் செய்த நாயகியே! நான் கருதுவது உன் புகழையே; க
ற்பது உன் பெயர்களையே; உள்ளம் உருக பக்தி செய்வது உன் பாத மலர்களிலே; உன்னை விரும்பும் அடியவர் அவையிலே பகலை இரவாக மாற்றியவளே; நான் முற்பிறவியில் என்ன புண்ணியம் செய்தேனோ?
 
# 13. பிறரைத் தொழேன்!

பூத்தவளே புவனம் பதினான்கையும்! பூத்தவண்ணம்
காத்தவளே! பின் கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே! உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.


பதினான்கு உலகங்களையும் படைத்துக் காத்துப் பின் மறைக்கின்றவளே! நீலகண்டனுக்கு மூத்தவளே! என்றும் மூப்பு அடையாத மாலுக்கு இளையவளே! மா தவம் உடையவளே! உன்னை விட்டு வேறு ஒரு தெய்வத்தை நான் வணங்குவேனோ?
 
# 14. அருமையும், எளிமையும்.

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி! நின் தண்ணளியே.

உன்னை வழிபடுபவர்கள் தேவர்களும், அசுரர்களும்; தியானம் செய்பவர்கள் பிரமனும், மாலும்; உன்னைத் தன் அன்பில் கட்டிப் போட்டுள்ளவர் அழியாத பரமானந்தம் கொண்ட சிவபிரான்; உன்னை தரிசனம் செய்பவர்களுக்கு உன் குளிர்ந்த கருணை எளிதில் கிடைக்கின்றது.
 
# 15. அடையும் பேறுகள்.

தண்ணளிக்கு என்று, முன்னே பல கோடி தவங்கள் செய்வார்,
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும் அன்றோ?
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.

பண் அமையும் இனிய குரலும், இயற்கை நறுமணமும் வாய்ந்த பைங்கிளியே! உன் அருள் வேண்டி முற்பிறவிகளில் தவம் இயற்றியவர்கள் இவ்வுலகச் செல்வங்களை மட்டுமோ பெறுவர்?
விண்ணுலகச் செல்வங்களையும், அழியாத முக்தியையும் அடைவர் அன்றோ?
 
# 16. நின் கருணை விந்தையன்றோ?

கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்தது கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே வெளிமுதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே!
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே.

பசுங்கிளியே! உன் அன்பர் உள்ளத்தில் வீசுகின்ற ஒளியே! ஞான ஒளியான சிவபிரானின் திருமேனியில் இடம் பெற்றவளே! ஆராய்ச்சியில் அடங்காத வெட்ட வெளியே! ஐந்து பூதங்களாகப பரந்து விரிந்தவளே! இத்தனை பெருமைகளையும் சுருக்கிக் கொண்டு , எளியேன் என் சிற்றறிவினால் அளப்பதற்கு அளவாகக் குறைந்தது ஒரு விந்தையன்றோ?
 
# 17. பதியையும் வென்றவள்!

அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதிசய ஆனன சுந்தர வல்லி, துணை இரதி
பதிசயமானது அபசயமாக, முன் பார்த்தவர் தம்
மதிசயம் ஆகவன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?


வியப்பூட்டும் வடிவழகி; தாமரை மலர்கள் வணங்கும்
அழகிய முகம் உடையவள்;
ரதிபதியாகிய மன்மதனின் வெற்றியானது தோல்வியாக மாறவும் , சிவபிரானின் நெற்றிக் கண் பார்வை வெற்றி அடையவும்,
இறைவனின் இடப்பாகத்தைக் கவர்ந்து கொண்டாள்.
 
# 18. காத்தருள வேண்டும்!

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும்,உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து
வெவ்விய காலன் என்மேல் வரும் போது வெளி நிற்கவே.

உன்னால் கவரப்பட்ட இடப் பாகத்தை உடைய இறைவனும் நீயும் இணைந்து விளங்கும் அர்த்த நாரீஸ்வரர் வடிவமும், உங்கள் திருமணக் கோலமும், என் பற்றுக்களை அகற்றி ஆட்கொண்ட உன் பொற்பாதங்களும் , கொடிய காலன் என்னை நெருங்கும் போது என் முன்னே காட்சி தர வேண்டும் தாயே!
 
“Porundhia”

In this song, the word usages of bhattar will be really fantastic. The first word itself gives straight and perfect meaning. The word “porundhia” means perfect. The grace and presence of ambal is perfectly present in all the three worlds and also within ambal, all the three worlds are present. Here we should take other meaning of “muppurai” as the three bents in her hip. Because of the heavy weight of her breasts, the hip has been bended into three-folds. The LS nama “sthanabara thalan Madhya pattabandha valithraya” should be remembered here. Again a word “Varundia vanji”. Vanji means creeper, girl, and hip in tamil. The creeper-like hip is worried because of the heavy-weighted breasts. But will that be true? She is the one who is apart from joys and sorrows, worries and happies. Then how comes it’s possible? Here, we can take other meaning, seeing the richness of her breasts and small hips with threefolds, the girls who see here will get worries by comparing themselves with ambal.

“Manonmani”- Why so specific with this name? Many of the readers might don’t know about this particular form of ambal and hence, will briefly explain about her here. She is the one, who does constantly the poojas to shiva. In many temples, within the shrine of shiva, this manonmani devi will be seated on his side. But she will be invisible from the views of devotees as she is constantly performing pooja and she should not be disturbed by devotees. (You can see this ambal in meenakshi amman temple- In the shrine of somasundareswara if you request the pujaris they will help you to see this ambal). The priests will do poojas only during the prescribe time. But this ambal will do continous pooja and she never get separated from swami. During procession, this ambal came out as “Piriyavidai nayagi”. In this song, bhattar call this devi, since he wants the grace of ambal along with swami as in the previous song.

Vaarsadaiyon arundiya nanju amudhuakkia ambigai
She turned the crude poison into elixir just by her simple touch. She has that much power. This event of drinking poison by shiva and devi securing him has been conveyed in many instances in this. According to the situations will try to explain them. Where is she? She has been perfectly seated in the lotus. Thirundhia means perfect. Like porundhia, here the word thirundhia also means same. But in different context. Lotus is very delicate flower. Will anyone can seat in that? It is not at all possible for ordinary beings. Then seating in this flower is a very hard task. But devi has been perfectly seated in this. Here the lotus depicted by bhattar is nothing than our “Heart” (Hrudhaya kamalam). Since we have lot of sorrows and sins throughout our heart, it is really a tough task for devi to be present here. But, because of her motherhood, she don’t even consider those sins and she perfectly seats within our hearts (The detailed version of this will be discussed in “Sundari endhai thunaivi” song. Finally he wants devi that her foots should always remained in his heads.
 
Dear V R,

I salute you, for posting Abirami Andhadhi here.

அபிராமி பட்டர் என்பதே சரி ஆகும். அபிராமிப் பட்டர் என்பது பிழை.
 
dear Mr. Pannavalan,

I salute you too in return!
:pray:

Actually I wanted to post Abhiraami Andaathi first- even before Bhajaa

Govindam and Adhithya Hrudayam. I wondered whether Tamil slokAs

needed Tamil translation and was actually hesitating till very recently.
:argue:

Mr. Durga Daasan enriches it further, by sharing the secret and sacred

meanings of the poems- all precious results of his long research work.
:flypig:

I though there will be a sandhi when the two words Abhirami and pattar

join. I stand corrected now. Thank you very much.

You are welcome your share your thoughts. After all our idea and aim is

the same.. to share our knowledge with the others.
:second:

with warm regards,

V.R.
 
# 19. ஆனந்த அதிசயம்.

வெளி நின்ற நின் திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே
தெளி நின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.


ஒளி பொருந்திய நிலையான ஒன்பது முக்கோணங்களில் வீற்று இருப்பவளே! வடிவம் எடுத்த உன் திருமேனியைக் கண்டதும் என் கண்ணும், கருத்தும் கரை காணா இன்பம் அடைந்தது! எனக்குள் தெளிவான மெய்ஞானம் பெருகுகின்றது. என்னே உன் திருவுள்ளம்!
 
# 20. உறைவிடம் யாது?

உறைகின்ற நின் திருக்கோயில் நின்கேள்வர் ஒரு பக்கமோ,

அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ, கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ,
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே.

பரிபூரண நித்திய கல்யாணியே!
நீ உறையும் இடம் உன் கணவரின் இடப்பக்கமா?
நான்கு வேதங்களின் முதலிலா அன்றி முடிவிலா?
அமுதம் பொழியும் நிலவிலா?
தாமரை மலரிலா? பாற்கடலிலா?
அடியேன் நெஞ்சிலா? கூறு தாயே!
 
# 21. காட்சியில் களித்தேன்!

மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச்
சங்கு அலை செங்கைச் சகல கலாமயில், தாவு கங்கை

பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்
பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண் கொடியே.



தீர்க்க சுமங்கலி; செப்புக் கலசம் போன்ற நகில்களை உடையவள்; மலை அரசனின் மகள்; வெண் சங்கு வளை அணிந்த சிவந்த கரங்களை உடையவள்; கலைகளின் தெய்வமாகிய அழகு மயில்; பொங்கும் அலை தவழும், கங்கை நதி தங்கும், சடையுடைய சிவபிரானின் உடலின் இடப்பாகத்தில் உள்ளவள்; என்னைத் தன் உடைமையாகக் கொண்டவள்; கா
விரியாகவும், துர்கையாகவும்,
அலைமகளாகவும், கலைமகளாகவும், மலைமகளாகவும் திகழ்பவள் அவளே!
 
# 22. பிறவி வேண்டாம்!

கொடியே, இளவஞ்சிக் கொம்பே, எனக்கு வம்பே பழுத்த
படியே, மறையின் பரிமளமே, பனி மால் இமயப்
பிடியே, பிரமன் முதலான தேவரைப் பெற்ற அம்மே!
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.

மென் கொடியே! பொற்கொம்பே! பழுத்த கனியே! வேதங்களின் நறுமணமே! இமயமலையில் உள்ள எழில் வாய்ந்த பிடியே! பிரமன் முதலான தேவர்களைப் பெற்ற அன்னையே! இனி நான் மீண்டும் மீண்டும் இறந்து பிறவாது என்னைத் தடுத்து ஆட்கொள்வாய்!
 
# 23. என் குறிக்கோள்.

கொள்ளேன் , மனத்தில் நின்கோலம் அல்லாது; அன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன்; பரசமயம் விரும்பேன்; வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தில் விளைந்த
கள்ளே, களிக்கும் களியே, அளியே என் கண்மணியே.

பரந்து விரிந்த மூன்று உலகங்களுக்கு உள்ளும் வெளியும் நிறைந்தவளே; என் உள்ளக் கமலத்தில் விளைந்த தேனே! அன்பர்கள் களிக்கும் களிப்பே! எளியேன் என்னுடைய கண்மணியே! என் மனத்தில் உன் வடிவம் அன்றி வேறு எதனையும் நான் ஏற்க மாட்டேன். உன் அன்பர் கூட்டத்தை விட்டுப் பிரிய மாட்டேன். வேறு சமயங்களையும் விரும்ப மாட்டேன்!
 
# 24. நீயே என் தெய்வம்.

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே!
பண்யேன், ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே.



மாணிக்கமே! மாணிக்கத்தின் ஒளியே! ஒளி வீசும் மணி பதித்த அணியே! அணிகளுக்கெல்லாம் அழகே! உன்னிடம் தஞ்சம் அடையாதவர்களுக்குப் பிணியே! அன்பர்களின் பிறவிப் பிணிக்கு மருந்தே! விண்ணவர்களுக்கு விருந்தே! உன் திருவடித் தாமரைகளைத் தொழுதபின்னர் நான் வேறு எவரையும் தொழேன்!
 
# 25. உன்னை மறவேன்!

பின்னே திரிந்து, உன் அடியாரைப் பேணிப் பிறப்பு அறுக்க,
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்; முதல் மூவருக்கும்
அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே!
என்னே? இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே!

மும்மூர்த்திகளின் அன்னையே! மூன்று உலகங்களிலும் அபிராமி என்று போற்றப்படும் அருமருந்தே! உன் அடியார்களைப் பின்பற்றிப் போற்றிப் பிறவிப் பிணியை அறுக்க, முற்பிறவியில் நான் தவங்கள் செய்தேன். உன்னை என்றும் மறவேன். உன் புகழ் பாடி உன்னை ஏத்துவேன்.
 
# 26. எத்தனை கருணை!

ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்ததும்
காத்தும் அழித்தும் திரிபவராம்; கமழ் பூக் கடம்பு
சாத்தும் குழல் அணங்கே! மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத் தங்கும் புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே!


மணம் கமழும் கடம்ப மலர்களைச் சூடிய கூந்தைலை உடைய அன்னையே! உன்னைப் போற்றும் அடியார்கள் பதினான்கு உலகங்களையும் படைத்ததும், காத்தும், அழித்தும் திரியும் மும்மூர்த்திகள் ஆவர். ஆயினும் மணம் மிகுந்த உன் திருவடிகளுக்கு, நான் சாத்தும் புன்மொழிகளால் ஆன என் பாமாலையையும் நீ ஏற்றுக் கொள்வது எனக்கே நகைப்பைத் தருகின்றதே!
 
# 27. எங்னம் புகழ்வேன்?

உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட் புனலால்
துடைத்தனை சுந்தரி, நின் அருள் ஏதென்று சொல்லுவதே!


அபிராம சுந்தரியே! உள்ளம் உருகும் அன்பை என்னிடம் படைத்துவிட்டாய்.
உன் பதகமலங்களைச் சென்னியில் சூடும் பணியை என்னிடம் ஒப்படைத்துவிட்டாய்.
நெஞ்சில் உள்ள மாசுக்களை எல்லாம் உன் அருட்புனால் துடைத்துவிட்டாய்.
மாயப் பிறவி என்னும் கடலின் கரையை உடைத்துவிட்டாய்.
உன் அருளை நான் எங்
னம் புகழ்வேன்?
 
# 28. அடியவர் அடையும் பேறுகள்.

சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே! நின் புது மலர்த்தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே, அழியா அரசும்,
செல்லும் தவ நெறியும், சிவலோகமும் சித்திக்குமே!


சொல்லும் பொருளும் போல, நடனம் ஆடும் ஈசனுடன் இணைந்துள்ள, நறுமணம் கமழும் பூங்கொடியே! இரவும், பகலும், உன் புதுமலர் போன்ற அடிகளைத் தொழும் அன்பர்களுக்கே அழியாத அரசும்,
தவ ஒழுக்கமும், சிவலோகமும் சித்திக்கும்.
 
# 29. திருமேனியின் சிறப்பு!

சித்தியும், சித்தி தரும் தெய்வமும் ஆகித் திகழும் பரா
சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த
புத்தியும் புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.

அணிமா முதலான அஷ்டசித்திகளும்; அந்த சித்திகளின் தெய்வமாகத் திகழும் பராசக்தியும்; அந்த சக்தி தழைக்கும் பரமசிவனும்; அந்த சிவத்தைக் குறித்துத் தவம் செய்பவர் அடையும் முக்தியும்; அந்த முக்தியின் விதையும்; அந்த விதையிலிருந்து முளைத்து எழுந்த ஞானமும்; அந்த ஞானத்தில் வியாபித்துக் காக்கும் பெருமையும்; ஆகிய அனைத்துமே அபிராமியே!
 
# 30. எல்லாம் உன் கடமை.

அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய்! கொண்டது அல்ல என்கை
நன்றே உனக்கு? இனி நான் என் செய்யினும், நடுக்கடலுள்
சென்றே வீழினும், கரை ஏற்றுகை நின் திருவுளமே!
ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே!

ஓர் உருவமாகவும், பல உருவமாகவும், அருவமாகவும் திகழும் உமை அன்னையே! எ
ன்னை நீ என்றோ தடுத்து ஆடக்கொண்டு விட்டாய். அதனை மறப்பது உனக்கு நன்றாகுமா? இனி நான் என்ன பிழை செய்தாலும் பொறுப்பதும், கடலின் நடுவே சென்று நான் வீழ்ந்தாலும் என்னைக்
கரை ஏற்றுவதும் உன் கடமையே!
 
"CHenniyadhu un pon"

In this song, bhattar is explaining the significance of devotees (SAthsangham). CHenniyadhu as usual takes two meanings and both are appropriate only. The bhattar submitts himself in the golden feets of ambal, so that his head falls on her feets. But the actual meaning of chenni is "Head, cheif". Bhattar claims that the superior thing is the golden feets of devi alone. NEither gods nor demi-gods are superior. Just the feets of ambal itself is the cheif for all other gods.

Even the word "Chennai" came from the goddess "Cheniamman" who has been now called as "Shri Kalikambal" in parrys. So here we have to take both the meanings of head and cheif for "Chenni".

Head has been rested in her feets. What next? Body has been submitted (Initial stage), the next stage is to control the mind. "Sindhai ulle manniadhu", I think the usage of bhattar and admire whether a poet can write lyrics like this even under such a drastic situations. The human mind will think of crore and crores of things within a minute. COntrolling that is a tough task. Bhattar is also saying that only. But what he is telling, SIndhai "ulle", it means he has trained his inner heart (Inner mind) (In psychology they will say we have three types of minds (COnscious, sub conscious, unconsious) (Jakradh, swapna, Sushupthi). Bhattar has trained his mind in such a way that even his mind always remembers only the manthras of devi, though while outside it do someother works. (Nindrum, irundhum, kidadndhum nadandhum ninaipathu unnai- song will give better explanation). The usage of word "manniadhu" it means "Submerging forcefully". Training mind is not simple task, but we have to do that even by force with full swing.

Munnia nin adiyarudan- I have been in contact with all the devotees of devi and also will do the poojas as prescribe in the "Agamas". Here also, bhattar says that he wants the contact of good devotees. With the help of them and by discussing with all those eminent devotees, he will do poojas as prescribed in agamas. I think this is the only place bhattar directly useed the word "Agama".

Why "murai muraie". It might seems to be a redundancy. Even my friends says that bhattar has used same words to fill the gaps and all. But if you go deep, certainly it is not so. The first time "Murai" means the "turn", when there are lot and lots of devotees there performing poojas there should not be hurry in completing that. Also performing the pooja in turn and order as mentioned in agama.

Already some procedures have been prescribed by agamas. Following them as such is a real tough task. So by performing the rituals a bit lineated and formulated by the devotees shall also be applicable. They have been shaped those hard and fast rules (Murai) into another soft and easy-to-follow rules (Murai)

In our colloquial terminology, we use words like "Vechadhu vechapadi" "ulladhu ullapadi" are these words redundant? Here to stress the word "Murai (in order)" bhattar has used it twice.

Like this we can get some many two meanings for this "Murai muraiye"

Finally he concludes that he always performs poojas in the order (Pathhadhi). In radha-krishna marriage, you will be heard of this word "Pathhadhi". It means the order to follow- Ganesha vandhanam, guru vandhanam, thodaka mangalam, Janavasam, oonjal, kalyanam, nalaungu, sobanam, etc.. everything goes in an order. Here bhattar also says that he performs pooja in the prescribed order as they do in the temples (Temples only follow agama rules).

Pranams
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top