Aadi Mirugasirisham

இன்று ஆடி மிருகசிரிஷம் நக்ஷத்திரம்.

, பூவிருந்தவல்லியில் வைஸ்ய குலத்தைச் சேர்ந்த வீரராகவ செட்டியாருக்கும், கமலையார்க்கும் நான்காவது குமாரராய், கலி கடந்த 4110ல் (கி.பி.1909) ஸௌம்ய வருடம், மாசி மாதம், சுக்ல பக்ஷம்,தசமி திதி, வியாழக்கிழமை, மிருகசிரீஷ நக்ஷத்திரத்தில் திருக்கச்சி நம்பிகள் அவதாரம் செய்தார். இவரது இயற்பெயர் கஜேந்த்ர தாசர் என்பதாகும். தாம் கைங்கர்யம் செய்துவந்த பார்க்கவரான திருமழிசை ஆழ்வாருடைய அருளாலே பிறந்ததால், இவர் தந்தையார் இவருக்கு "பார்க்கவப்ரியர்" என்றும் பெயரிட்டார். இவர் ஸ்ரீ ஆளவந்தாருடைய சிஷ்யராவார். ஸ்ரீ ஆளவந்தார் இவருக்கு அளித்த திருநாமம், "பேரருளாள தாஸர்" என்பதாகும். கச்சியில் (காஞ்சிபுரம்) வாழ்ந்ததால், திருக்கச்சி நம்பி, காஞ்சிமுனி, காஞ்சீபூர்ணர் என்றும் அழைக்கப்பட்டார். காஞ்சி ஸ்ரீவரதாரஜ பெருமாளுக்கு திருவாலவட்டம் (விசிறி வீசுதல்)கைங்கர்யம் செய்துவந்தவர்.

திருக்கச்சி நம்பிகளின் திருவடித் தாமரைகளில் பணிந்து, அவருக்கும் பகவானுக்கும் உள்ள ஸம்பந்தத்தை போலவே நமக்கும் எம்பெருமான் மற்றும் ஆசார்யன் ஆகியோரிடம் ஸம்பந்தத்தை ஏற்படுத்தித் தரும்படி ப்ரார்த்திப்போம்.

திருக்கசி நம்பி தனியன்

தேவராஜ தயாபாத்ரம் ஸ்ரீ காஞ்சி பூர்ணம் உத்தமம்
ராமாநுஜ முநேர் மாந்யம் வந்தேஹம் ஸஜ்ஜநாச்ரயம்

ஸ்ரீவரதராஜனின் கருணைக்கு இருப்பிடமாய், மிகச் சிறந்தவராயும், ராமானுஜமுனிக்கும் மதிக்கத் தக்கவராய், நல்லோர்கள் சென்று சேருமிடமான திருக்கச்சி நம்பியை வணங்குகிறேன்.
வாழி திருநாமம்.

மருவாருந் திருமல்லி வாழவந்தோன் வாழியே
மாசி மிருகசிரீடத்தில் வந்துதித்தான் வாழியே
அருளாளருடன் மொழிசொல் அதிசயத்தோன் வாழியே
ஆறுமொழி புதூரர்க்கு அளித்தபிரான் வாழியே
திருவாலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே
தேவராசாட்டகத்தைச் செய்பவன் வாழியே
தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே
திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே.

திருக்கச்சி நம்பிகள் திருவடிகளே சரணம்.

1628149703152.png
 
Back
Top