• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

96 tharpanam details.

kgopalan

Active member
07/10/2020
முசிறி அண்ணா நம்முடைய தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஒரு வருடத்தில் நாம் செய்யக்கூடிய தர்ப்பண விவரங்களை மேலும் தொடர்கிறார்.

அதாவது சண்ணவதி தர்ப்பணம் முறையை பார்த்தோம். அதில் நாம் இப்போது பார்க்க கூடியது வயதீபாத புண்ணிய காலம் என்ற முக்கியமான ஒன்று.

27 யோகங்களுள் இதுவும் வருகிறது. நாம் தினமுமே திதி வாரம் நட்சத்திரம் யோகம் கரணம் இந்த ஐந்தையும் பஞ்சாங்கம் மூலம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் நமக்கு ஐந்து விதமான லாபங்கள் கிடைக்கின்றன.

இன்றைக்கு என்ன #திதி_என்று_தெரிந்து கொண்டால் ஐஸ்வர்யம இலாபம் கிடைக்கின்றது.
இன்றைக்கு என்ன #வாரம்_என்று தெரிந்து கொள்வதினால் #ஆயுசு_விருத்தி ஆகின்றது.
இன்றைக்கு என்ன #நட்சத்திரம்_என்று தெரிந்து கொண்டால் பாபம் போகிறது.

இன்றைக்கு என்ன #யோகம்_என்று தெரிந்துகொண்டால் ரோக நிவர்த்தி ஆகிறது.
இன்றைக்கு என்ன #கரணம்_என்று தெரிந்து கொள்வதினால் காரியசித்தி ஏற்படுகிறது.
இந்த ஐந்தையும் பஞ்சாங்கம் மூலம் தினமும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

யோகம் என்பது 27 உள்ளது. இந்த 27க்குள் வயதீபாதம் என்பதும் ஒரு யோகமாக சொல்லப்பட்டிருக்கிறது. இது ஒரு பெரிய புண்ணிய காலமாக சொல்லப்பட்டு இருக்கிறது தர்ம சாஸ்திரத்தில்.
இந்த வயதீபாத யோக நாமம் என்றைக்கு வருகிறதோ, அன்றைக்கு நாம் இந்த தர்ப்பணத்தை செய்ய வேண்டும்.

இந்த வயதீபாத யோகம் சில நட்சத்திரங்களோடும் சில வாரங்களோடும் சில திதிகளோடும் சேர்ந்து வந்தால், அது பெரிய புண்ணிய காலமாக சொல்லப்பட்டு இருக்கிறது.

பொதுவாகவே நாம் யாருக்காவது ஏதாவது ஒரு தானம் செய்யவேண்டும் என்று சங்கல்பித்து கொண்டால், இந்த வயதீபாத புண்ணிய காலத்தில் செய்தால் ரொம்ப புண்ணியத்தை கொடுக்கக் கூடியது என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.

#அம்மாவாசை_அன்று_நாம் செய்யக்கூடிய தானமானது, பத்து மடங்கு அதிகமான பலனைக் கொடுக்கக் கூடியது.
அதைவிட அதிகமான பலனை அதாவது #100_மடங்கு கொடுக்கக்கூடியது, மாச பிறப்பு அன்று நாம் செய்யக்கூடியதான தானம்.

#ஆயிரம்_மடங்கு_பலனைக் கொடுக்கக்கூடிய தான தினம், விஷு புண்ணிய காலம். துலா விஷு சைத்திரை விஷு என்று சித்திரை மாதப்பிறப்பு துலா மாச பிறப்பு. இந்த இரண்டு தினங்களில் நாம் செய்யக்கூடியது ஆன தானங்கள் ஆயிரம் மடங்கு பலனைக் கொடுக்கக் கூடியது.
#யுகாதி_புண்ணிய_காலங்களில் நாம் செய்யக்கூடியதான தானம், 12000 மடங்கு பலனைக் கொடுக்கக் கூடியது.

#தட்சணாயன_உத்தராயண_புண்ணிய காலங்களில் நாம் செய்யக்கூடியதான தானம், அதாவது தை மாதப் பிறப்பும் ஆடி மாதப் பிறப்பும் அன்றைய தினத்தில், 12000 X 10 மடங்கு பலனைக் கொடுக்கக் கூடியதாக உள்ளது

#சந்திர_கிரகணத்தன்று_நாம் செய்யக்கூடிய தான தானம், 12,00,000 லட்சம் மடங்கு பலனைக் கொடுக்கக் கூடியது.
சூரிய கிரகணத் அன்று நாம் கொடுக்க கூடியதான தானம் #கோடி_மடங்கு பலனைக் கொடுக்கக் கூடியது.

#இந்த_வயதீபாதம்_புண்ணிய_காலத்தில் #நாம்_செய்யக்கூடிய_தான_தானம், #அசங்கேயம்_அதாவது_சொல்லி #மாளாது_முடியாது_அளவு_பலனைக் கொடுக்கக் கூடியது.

அந்த அளவுக்கு அதிகமான அகண்ட நிறைய புண்ணியங்களை கொடுக்கக் கூடியது இந்த வயதீபாதம். ஆகையினாலே அன்றைக்கு செய்யக்கூடிய தானம் மிகவும் உத்தமமான பலனைக் கொடுக்கக் கூடியது.
இந்த மாதிரியான புண்ணிய காலங்களில் நாம் செய்யக்கூடியது தானங்கள் ஸ்நானங்கள் ஜபங்கள் எல்லாம் அனைத்து விதமான பாவங்களையும் போக்க வல்லது.

இன்றைய நாட்களில் நமக்குத் தெரியாமல் எவ்வளவு தவறுகள் நடந்து விடுகின்றன, அல்லது நாம் செய்ய வேண்டி வருகிறது. இப்போது உதாரணத்திற்கு, #தைத்த_துணியை நாம் போட்டுக் கொள்ளக்கூடாது என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.

அதாவது தையல் விழுந்த துணியை உடுத்திக் கொண்டு தேவ காரியங்களையும் பிதுர் காரியங்களை செய்யக்கூடாது. ஆனால் தைத்த துணியை தான் நாம் போட்டுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

தையல் விழாத துணியை போட்டுக் கொள்ளவே முடியாது என்கின்ற காலகட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம்.
அதேபோல, நாம் #தினமும்_வபனம் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்கள்.

ஏதோ ஒரு ரீதியாக அல்லது உத்தியோகத்தை சொல்லி, முக வபனம் என்று பாதி வபனம் செய்துகொண்டு இருக்க வேண்டிய நிலை, மீசை வைத்துக் கொள்ள வேண்டிய நிலை,

#இதையெல்லாம்_ஒரு_குறைபாடாக_நம் தர்ம சாஸ்திரம் நமக்கு காண்பிக்கின்றது.
இது எல்லாம் தவிர்க்க முடியாத ஒரு காலகட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம். இதை நாம் வேண்டாம் என்று நினைத்தாலும் கூட வைத்துக்கொள்ள வேண்டிய கடைபிடிக்க வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விட்டோம்.

இதற்கெல்லாம் என்ன பரிகாரம் என்று பார்க்கும்போது இந்த மாதிரியான #வயதீபாதம்_புண்ணிய_காலங்களில், புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்வது, அந்த நதிக்கரையில் இருப்பவர்களுக்கு ஏதாவது தானம் கொடுப்பது, அப்படி செய்வதினால் இந்த மாதிரியான பாபங்கள் எல்லாம் போகிறது. இதற்கெல்லாம் தனியான பரிகாரங்கள் தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்படவில்லை.

நாம் செய்யக்கூடியது ஆன இந்த நாட்களில் தவறுகள் எல்லாம் நடந்து போய் விடுகின்றன, ஆனால் பிராயச்சித்தம் என்று தர்ம சாஸ்திரத்தில் எதுவுமில்லை. பிராயச்சித்தம் தர்ம சாஸ்திரத்தில் இல்லை என்பதினால் பரவாயில்லை என்று நாம் முடிக்க முடியாது. #எப்பொழுது_தர்மசாஸ்திரம் #ஒன்றை_செய்யக்கூடாது_என்று #சொல்கிறதோ_கட்டாயம்_அதற்கு #பாவங்கள்_உண்டு.

எதற்கான #பிராயச்சித்தம் நம் தர்ம சாஸ்திரத்தில் #சொல்லப்படவில்லையோ_அவைகளை #கட்டாயம்_நாம்_செய்யக்கூடாது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இந்நாட்களில் இந்த மாதிரியான தவறுகள் நடந்து போய் விடுகின்றன.

இதற்கான பிராயச்சித்தமாக இந்த வயதீபாதம் புண்ணிய காலங்களை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி ஒரு உத்தமமான புண்ணிய காலம் இது.

இந்த வயதீபாதம் புண்ணிய காலம் விஷயமாக நிறைய தகவல்களை நமக்கு புராணங்கள் காண்பிக்கின்றன. #முக்கியமாக_வராக_புராணம்_நாரத புராணம் கூறுகிறது இந்த வயதீபாத புண்ணிய காலம் என்றால் என்ன?
இந்த புண்ணிய காலத்தில் நாம் என்னென்ன எல்லாம் செய்து, என்னென்ன பலன்களை நாம் அடையலாம் என்பதை இந்த இரண்டு புராணங்களும் விரிவாக காண்பிக்கிறது. அதைப் பற்றிய விவரங்களை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.
 

Latest ads

Back
Top