6 மணி நேரத்தில் சென்னை - மதுரை ரயில் பயணம்

Status
Not open for further replies.
6 மணி நேரத்தில் சென்னை - மதுரை ரயில் பயணம்

6 மணி நேரத்தில் சென்னை - மதுரை ரயில் பயணம்

9-6-2015


Tamil_News_large_1270373.jpg



'தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, சென்னை - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதையில், நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள, விழுப்புரம் - திண்டுக்கல் இரட்டை ரயில் பாதை திட்டம், அடுத்த ஆண்டின் இறுதியில் நிறைவேற்றப்படும்; அப்போது, சென்னையிலிருந்து மதுரையை, ஆறு மணி நேரத்தில் சென்றடையலாம்' என, 'ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்' எனப்படும், பொதுத்துறை நிறுவனமான, ஆர்.வி.என்.எல்., தெரிவித்துள்ளது.


விழுப்புரம் - திண்டுக்கல் இரட்டைப் பாதை திட்டம், அடுத்த ஆண்டில் நிறைவேறும் பட்சத்தில், அதனுடன் இணைந்து, இந்தப் பாதை மின்மயமாக்கப்பட்டால்...

* சரக்கு போக்குவரத்து மேம்பாடு அடையும்.
* தமிழகத்தின் முக்கிய துறைமுகமான, துாத்துக்குடி துறைமுகம் வளர்ச்சி அடையும்.
* தமிழகத்தில் தொழில் வளம் பெருகும்; வேலைவாய்ப்புகள் பெருகும்; மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.

ஆனால், இந்தத் திட்டத்தை, குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற முடியாத அளவிற்கு, நிலம் கையகப்படுத்தும் விவகாரம் முட்டுக்கட்டையாக உள்ளது. குறிப்பாக, திண்டுக்கல் மற்றும் சில மாவட்ட கிராம மக்கள், இரட்டை ரயில் திட்டத்திற்கு, நிலம் வழங்க தயாராக இல்லை.

'வேண்டுமானால், ரயில் பாதையை அகலப்படுத்திக் கொள்ளுங்கள்; நிலங்களை ரயில்வே துறைக்கு விற்க மாட்டோம்' என, திண்டுக்கல் பகுதியில், ரயில் பாதையை அகலப்படுத்த தேவையான நிலங்களை வைத்துள்ள விவசாயிகள் பலர் தெரிவிக்கின்றனர்.இதனால், விழுப்புரம் - திண்டுக்கல் இரட்டைப் பாதை திட்டத்தை செயல்படுத்தும், ஆர்.வி.என்.எல்., நிறுவனத்தினர், ஆறு மாவட்டங்களில், நுாறுக்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர்களுடன் பேசி, நிலங்களை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி, இந்த திட்டத்தை படிப்படியாக செயல்படுத்தி வருகின்றனர்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதில், தமிழக அரசு போதிய அக்கறை காட்டுவதில்லை என்பது, பெரிய குறையாக உள்ளது. இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு தேவையான நிலங்களை வாங்கிக் கொடுப்பதில், ஆர்.வி.என்.எல்., நிறுவனத்துக்கு, தமிழக அரசு சற்று கூடுதலாக உதவினால், அடுத்த ஆண்டு மத்தியில் கூட, விழுப்புரம் - திண்டுக்கல் அகல ரயில் பாதை திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி விடலாம் என, இத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.அதே நேரத்தில், 'தமிழக அரசு சரிவர ஒத்துழைக்காவிடில், இந்த திட்டத்தை குறிப்பிட்ட காலத்தில் செயல்படுத்துவது சிரமமே' எனவும், அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதுபோல, பசுமை தீர்ப்பாய உத்தரவும், இந்த திட்டத்தின் வேகத்தை மட்டுப்படுத்தியுள்ளது. இந்த வழித்தடத்தில், ஒன்றிரண்டு இடங்களில், எவ்வித பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதால், அங்கு பணிகள் ஸ்தம்பித்துள்ளன.அனுபவம் மிக்க ஆர்.வி.என்.எல்.,: விழுப்புரம் - திண்டுக்கல் அகல ரயில் பாதை திட்டத்திற்கு, 2009ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது; திட்டப் பணிகள், 2011ல் துவங்கின. திட்ட மதிப்பு, 1,300 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. ஆறு ஆண்டுகள் ஆன பிறகும், அதே திட்ட மதிப்பில், திட்டத்தை, ஆர்.வி.என்.எல்., செயல்படுத்தி வருகிறது.

திருச்சி - தஞ்சாவூர் இரட்டைப் பாதை திட்டத்தையும், ஆர்.வி.என்.எல்., செயல்படுத்தி வருகிறது. 300 கோடி ரூபாய் இந்த திட்டமும், விரைவாக செயல்படுத்தப்படுகிறது. இந்தப் பணிகள் நிறைவடைந்த, 30 மாதங்களில், திருச்சி - தஞ்சாவூர் புறநகர் ரயில் சேவை துவங்கும் என கூறப்படுகிறது.இன்னமும் பாராமுகம் ஏனோ? தென் மாவட்டங்களில், இரட்டை ரயில் பாதை இன்னமும் கனவாகவே உள்ள நிலையில், வளர்ந்த நாடுகளில், நான்கு வழிப்பாதை, ஆறு வழிப்பாதை என, ரயில்வே உள்கட்டமைப்பு வேகமாக வளர்ச்சி அடைந்துஉள்ளது.

'இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவோம்' என கோஷமிடும் தலைவர்கள், குறைந்தபட்சம், இரட்டை ரயில் பாதை திட்டத்தையாவது தென் மாவட்டங்களுக்கு வழங்க முன்வரவேண்டும்.டில்லி அருகே உள்ள குர்கான், காஜியாபாத் போன்ற நகரங்கள், வட மாநிலங்களின், லக்னோ போன்ற முக்கிய நகரங்கள், மும்பை, கோல்கட்டா போன்ற கிழக்கு மற்றும் மேற்கு பகுதி நகரங்களில் ரயில்வே உள்கட்டமைப்பு பணிகள் அடைந்துள்ள வளர்ச்சியில் ஒரு சில சதவீத அளவு கூட, தென் மாவட்டங்களை எட்டிப் பார்க்கவில்லை என்பது, தமிழகம் நீண்ட காலமாக ரயில்வே துறையால் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளதை காட்டுகிறது.

தற்போதைய நிலை:
விழுப்புரம் - திண்டுக்கல், 273 கி.மீ., வழித்தடத்தில், பகுதி பகுதியாக, இரட்டை பாதை மற்றும் மின்மயப் பணிகளை, ஆர்.வி.என்.எல்., நடத்தி வருகிறது.

அது பற்றிய விவரம் வருமாறு:
*அரியலுார் - வாளாடி (50 கி.மீ.,) பகுதியில், இரட்டைப் பாதை போடப்பட்டுள்ளது. இப்பாதையின் இரண்டு பாதைகளிலும், 2014 முதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

*அரியலுார் - மாத்துார் (25 கி.மீ.,) அகலப் பாதை பணிகள் நிறைவு பெற்றுள்ளன. ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், செப்டம்பரில் பார்வையிட உள்ளார். அதன் பிறகு, இத்தடத்தில் ரயில்கள் இரு பாதையிலும் இயங்கும்.

*விருத்தாசலம் - திருவெண்ணெய்நல்லுார் (40 கி.மீ.,) இரட்டைப் பாதை பணிகள் நிறைவு பெற்றுள்ளன. ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், எந்த நேரமும் இந்த வழித்தடத்தில் ரயிலை இயக்கி, சோதனை நடத்த உள்ளார்.

*விழுப்புரம் - திருவெண்ணெய்நல்லுார் (16 கி.மீ.,) பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த ஆண்டு டிசம்பரில், பாதுகாப்பு கமிஷனர் பார்வையிட உள்ளார்.

*வாளாடி - திருச்சி (20 கி.மீ.,) அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில், இரட்டைப் பாதை பணிகள் நிறைவடையும். 2016 மே மாதம், பாதுகாப்பு கமிஷனர் பார்வையிடுகிறார்.

*திருச்சி - மணப்பாறை (40 கி.மீ.,) இரட்டைப் பாதை, மின்மயப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த மாதம், பாதுகாப்பு கமிஷனர் பார்வையிடுகிறார்.

*மணப்பாறை - தாமரைப்பாடி (48 கி.மீ.,) பாதையில், 39 கி.மீ., பணிகள் நிறைவடைந்துள்ளன. நிலம் கிடைக்காததால், 9 கி.மீ., தாமதமாகி வருகிறது. ஆகஸ்டில், பாதுகாப்பு கமிஷனர் பார்வையிடுகிறார்.

* தாமரைப்பாடி - திண்டுக்கல் வழித்தடத்தில், ஜூலை - ஆகஸ்டில், பாதுகாப்பு கமிஷனர் பார்வையிடுகிறார்.

*விழுப்புரம் - திண்டுக்கல், 273 கி.மீ., அகலப்பாதை பணிகள், 2011ல் துவங்கினாலும், அடுத்த ஆண்டு மத்தியில் அகலப்பாதை பணிகள் நிறைவடைந்து, கட்டுமான பணிகள் அடுத்த சில மாதங்களில் நிறைவடைந்து, 2016 டிசம்பரில், இந்த வழித்தடத்தின் இரண்டு பாதைகளிலும் ரயில் ஓடும் என நம்புவோம்.


அடுத்த ஆண்டில் நிறைவடையும்:
*சென்னை - கன்னியாகுமரி வழித்தடத்தில், சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு வரையிலும், திண்டுக்கல் - மதுரை வரையிலும் இரட்டைப் பாதை உள்ளது.

*செங்கல்பட்டு - விழுப்புரம் அகலப் பாதை மற்றும் மின்மயம் முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் ஒருசில வாரங்களில் கூட, இந்தத் திட்டம் நிறைவடையலாம்.

*விழுப்புரம் - திண்டுக்கல் இடையே, 273 கி.மீ., நீள அகலப் பாதை திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. நிலம் கிடைப்பதில் சிரமம் இருப்பதால், இத்திட்டம் நான்காண்டுகளாக இழுத்தடித்து, அடுத்த ஆண்டில் நிறைவடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



6 hours for travel from chennai to Madurai in Train | 6 ??? ????????? ?????? - ????? ????? ????? | Dinamalar
 
Status
Not open for further replies.
Back
Top