2008 கல்கி இதழில் திருமங்கையாழ்வார் பற்றி ச&#3

praveen

Life is a dream
Staff member
2008 கல்கி இதழில் திருமங்கையாழ்வார் பற்றி ச&#3

2008 கல்கி இதழில் திருமங்கையாழ்வார் பற்றி சுஜாதா எழுதிய கட்டுரை

வைணவர்களுக்கு மிக முக்கியமான பாசுரம் எது?

அதைமட்டும் தெரிந்து கொண்டால் திவ்யப் ப்ரபந்தத்தையே தெரிந்துகொண்ட மாதிரி.

அப்படி ஒரு பாசுரம் இருக்கிறதா என்ற இந்த அவசர உலகத்தில் என்னிடம் கேள்விகள் கேட்கிறார்கள்.

அவர்களுக்கெல்லாம் திருமங்கை யாழ்வாரின் இந்தப் பாசுரத்தை பரிந்துரைப்பேன்.

என் தந்தை, 'இந்தப் பாசுரம் ஒன்றே போதும். திவ்யப் ப்ரபந்தத்தின் சாரம், திருமந்த்ரார்த்தம் இதுதான்' என்பார்.

இறக்கும் தருவாயில் இந்த ஒரு பாசுரத்தை காதில் சொன்னால் போதும் என்று கூடச் சொல்வார்கள்.

திருமங்கையாழ்வார் திவ்ய ப்ரபந்தத்தில் அதிகம் எண்ணிக்கையுள்ள பாடல்களைப் பாடினவர்.

அதிகம் வைணவத் தலங்களுக்குச் சென்று தரிசித்தவர். வடநாட்டில் தேவப் பிரயாகை, நைமிசாரண்யம் பத்ரிகாசிரமத்திலிருந்து துவங்கி தென்னாட்டில் அத்தனை கோயில்களையும் தரிசித்துப் பாடியுள்ளார்

. அவர் பாடாத வைணவக் கோயில் இருந்தால் அது சமீபத்தியதாக இருக்கும்.

''குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமமே''

நாராயணன் என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. எளிமையானது - கடலில் சயனித்திருப்பவன்.

நாரா - உலகத்தின் அத்தனை சேதன அசேதனப் பொருள்களையும் தன்னையும் சேர்த்து அயனன் இருப்பிடமானவன் திருமால் என்பதே இதன் ஆழமான பொருள்.

அந்தச் சொல்லை கைகண்டு கொண்டுவிட்டால் போதும். நமக்கு நல்ல குலம் அமையும்; செல்வம் பெருகும். அடியவர்களுக்கு ஏற்படும் துயரங்கள் எல்லாம் மட்டமாகும் (நிலந்தரம்) பரமபதத்தைக் காட்டும். பெற்ற தாயைவிட அதிகமாகச் செய்யும். நாராயணன் என்ற ஒரே ஒரு சொல்லை மட்டும் கண்டுகொண்டால் போதும். இதெல்லாம் உத்தரவாதம் என்கிறார்.
 
A simple and beautiful presentation of the pAsuram by Sujaatha indeed.

Vyakyaathaa has further embellished the meaning of this pAsuram as is his usual wont in Srivaishnava tradition. Thus the following is worth ruminating over and the interpretation is simply enchanting for its content and its depth:

திருமங்கை ஆழ்வார் இங்கு திருமந்திரத்தின் பெருமையை கூறுகிறார். நாராயணா எனும் நாமம் திருமந்திரம் ஆகும்.

குலம் தரும், செல்வம் தரும், அடியார் படுதுயர் எல்லாமும் நிலம் தரம் செய்துவிடும், நீள் விசும்பு அருளும், அருளுடன் மோக்ஷத்தை அளித்திடும், இன்னும் நீங்கள் சொல்லும் எல்லாவற்றையும் தந்திடும், பெற்ற தாயினும் ஆயின செய்திடும் அப்படிப்பட்ட நலம் தரும் சொல் நாராயணா எனும் திருமந்திரம் ஆகும். இதில் "பெற்ற தாயினும் ஆயின செய்யும்" என்ற வாக்கியத்துக்கு உரை எழுதப்புகுந்த வ்யாக்யாதா மிக அழகாக ஒரு பொருளையும் கூறுகிறார்.

"காயத்ரீ சந்தஸாம் மாதா" என்பது ஒரு கூற்று. அதாவது சந்தஸுகளுக்கு (கவிதையில் ஒரு அம்சம் எனக்கொள்ளலாம்) காயத்ரி என்ற சந்தஸு தான் அடிப்படை ஆதாரம். மாதா என்று கொள்ளலாம். காயத்ரிக்குப்பின் தான் அதனை அடிப்படையாகக்கொண்டு தான் மற்றைய சந்தஸுகளெல்லாம் உருவாயின. எனவே காயத்ரியை சந்தஸாம் மாதா என்று கூறுவது வழக்கம். இங்கு திருமந்திரம் என்று ஒரு மந்திரத்தைப்பற்றிக் கூற வந்ததால் சந்தஸுகளுக்கெல்லாம் மாதாவான காயத்ரி மந்திரம் ஜபித்தவர்களுக்கு செய்யும் நலனை விட அதிகமாகவே திருமந்திரம் நன்மை செய்யும் என்ற பொருளில் இங்கு "பெற்ற தாயினும் ஆயின செய்யும்" என்று ஆழ்வார் அருளிச்செய்தார் என்று பெரியோர்/வ்யாக்யாதாக்கள் கூறுவர். இந்த சுவைமிக்க interpretation இயற்கையான இந்தக்கவிதையின் பொருள் வளத்துக்கு இன்னும் மெருகு ஊட்டுவதாக இருக்கிறது.
 
இது காரணம் தான் வைணவர்கள் தினமும் சந்தியாவந்தனம் செய்யும் போது உபஸ்தானத்துக்குப்பின் கடைசியாக திருமந்திரத்தை காயத்ரி யை ஜபித்ததைவிட அதிக எண்ணிக்கையாக ஜபிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
 
a
 
''குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமமே''
Excellent pasuram/
 
2008 கல்கி இதழில் திருமங்கையாழ்வார் பற்றி ச&#3

2008 கல்கி இதழில் திருமங்கையாழ்வார் பற்றி சுஜாதா எழுதிய கட்டுரை

வைணவர்களுக்கு மிக முக்கியமான பாசுரம் எது?

அதைமட்டும் தெரிந்து கொண்டால் திவ்யப் ப்ரபந்தத்தையே தெரிந்துகொண்ட மாதிரி.

அப்படி ஒரு பாசுரம் இருக்கிறதா என்ற இந்த அவசர உலகத்தில் என்னிடம் கேள்விகள் கேட்கிறார்கள்.

அவர்களுக்கெல்லாம் திருமங்கை யாழ்வாரின் இந்தப் பாசுரத்தை பரிந்துரைப்பேன்.

என் தந்தை, 'இந்தப் பாசுரம் ஒன்றே போதும். திவ்யப் ப்ரபந்தத்தின் சாரம், திருமந்த்ரார்த்தம் இதுதான்' என்பார்.

இறக்கும் தருவாயில் இந்த ஒரு பாசுரத்தை காதில் சொன்னால் போதும் என்று கூடச் சொல்வார்கள்.

திருமங்கையாழ்வார் திவ்ய ப்ரபந்தத்தில் அதிகம் எண்ணிக்கையுள்ள பாடல்களைப் பாடினவர்.

அதிகம் வைணவத் தலங்களுக்குச் சென்று தரிசித்தவர். வடநாட்டில் தேவப் பிரயாகை, நைமிசாரண்யம் பத்ரிகாசிரமத்திலிருந்து துவங்கி தென்னாட்டில் அத்தனை கோயில்களையும் தரிசித்துப் பாடியுள்ளார்

. அவர் பாடாத வைணவக் கோயில் இருந்தால் அது சமீபத்தியதாக இருக்கும்.

''குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமமே''

நாராயணன் என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. எளிமையானது - கடலில் சயனித்திருப்பவன்.

நாரா - உலகத்தின் அத்தனை சேதன அசேதனப் பொருள்களையும் தன்னையும் சேர்த்து அயனன் இருப்பிடமானவன் திருமால் என்பதே இதன் ஆழமான பொருள்.

அந்தச் சொல்லை கைகண்டு கொண்டுவிட்டால் போதும். நமக்கு நல்ல குலம் அமையும்; செல்வம் பெருகும். அடியவர்களுக்கு ஏற்படும் துயரங்கள் எல்லாம் மட்டமாகும் (நிலந்தரம்) பரமபதத்தைக் காட்டும். பெற்ற தாயைவிட அதிகமாகச் செய்யும். நாராயணன் என்ற ஒரே ஒரு சொல்லை மட்டும் கண்டுகொண்டால் போதும். இதெல்லாம் உத்தரவாதம் என்கிறார்.
I fully agree withe above. Even Sri Vellukudi Krishnan, a famous Ubhayavedanti, says
"Om Namo Narayanaya" ashtakshari mantram will bring relief from all situation/s.
 
Back
Top