• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

20 லி., குடிநீர் ரூ.6: விரைவில் அசத்தல்

Status
Not open for further replies.
20 லி., குடிநீர் ரூ.6: விரைவில் அசத்தல்

20 லி., குடிநீர் ரூ.6: விரைவில் அசத்தல்

23-10-2015

Tamil_News_large_1370184.jpg
சென்னை: சென்னை, பெருங்களத்துார் பேரூராட்சி நிர்வாகத்தினர், பயன்படாத கிணற்று நீரை சுத்திகரித்து, ௬ ரூபாய்க்கு, 20 லி., குடிநீர் விற்பனை செய்ய உள்ளனர்.

பெருங்களத்துார் பேரூராட்சி, 14வது வார்டு, பாரதி நகர், வ.உ.சி., தெருவில், கிணறு உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் அந்த கிணற்று நீர், குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், பகுதிவாசிகளுக்கு வினியோகிக்கப்பட்டது. பின், அந்த நீர் குடிக்க லாயக்கற்றதாகி விட்டதால், வினியோகம் நிறுத்தப்பட்டது.

நாளடைவில், பேரூராட்சி பகுதி அசுர வளர்ச்சி அடைந்ததால், குடிநீர் தேவையும் அதிகரித்தது. இதைஅடுத்து, 'ஹேண்ட் இன் ஹேண்ட்' தனியார் நிறுவனத்துடன், பேரூராட்சி நிர்வாகம் இணைந்து, 8 லட்சம் ரூபாயில், ௩,௦௦௦ லி., தண்ணீரை சுத்தி

கரிப்பு செய்யும் நிலையம் அமைக்கும் பணியை துவக்கியது. தற்போது பணி முடிவடைந்து உள்ள தாக, பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

* சுத்திகரிப்பு நிலைய அமைப்பில், முதற்கட்டமாக, கிணற்று நீர், மூன்று குதிரை திறனுடைய மோட்டார் மூலம் எடுக்கப்பட்டு, 10 ஆயிரம் லி., கொண்ட தொட்டியில் நிரப்பப்படுகிறது
* பின், முதற்கட்ட சுத்திகரிப்பிற்கு அந்த நீர் செல்கிறது. அதன்பின், பல்வேறு நிலைகளில் சுத்திகரிக்கப்படுகிறது

* அடுத்ததாக, ௨,௦௦௦ லி., கொள்ளளவு கொண்ட, முதல் பராமரிப்பு தொட்டிக்கு, சுத்திகரிக்கப்பட்ட நீர் செல்கிறது

* அதன்பின், ஓசோன் கூரை இறுதி இருப்பில், சுத்திகரிக்கப்பட்ட, 3,000 லி., குடிநீர் சேமிக்கப்படுகிறது. மின்சாரம் இல்லாத நேரங்களில், இந்த குடிநீர் வினியோகம் செய்யும் அளவில், இருப்பு வைக்கப்படுகிறது.

இவ்வாறு சுத்திகரிக்கப்படும் நீரில், 60 சதவீதம் கழிவாக வெளியேற்றப்படுகிறது. கழிவு தண்ணீர், இதர பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.

சுத்திகரிக்கப்படும் குடிநீர், கேன்களில் அடைக்கப்பட்டு, 20 லிட்டர் கேன் ஒன்று, ௬ ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது.பகுதிவாசிகள், நிலையத்திற்கே சென்று குடிநீர் பெற்றால், ௬ ரூபாய், வீட்டுக்கு கேன் வினியோகிக்கப்பட்டால், 11 ரூபாய் என, விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பணமாக, 150 ரூபாய் செலுத்த வேண்டும். தனியார் குடிநீர் கேன் ஒன்று, ௩௦ முதல் ௪௦ ரூபாய் வரை விற்கப்படுகிறது.

முதல் கட்டமாக, 13, 14, 15 வார்டுகளில், 1,000 குடும்பங்களுக்கு, இந்தக் குடிநீரை விற்பனை செய்ய உள்ளனர். நிலையத்திற்கு, 500 ச.அ., இரும்பு தகடுகளாலான கூரை வேயப்பட்டு, பாதுகாக்கப்
படுகிறது. நிலையத்தில் மூன்று பணியாளர்கள் பணிபுரிய திட்டமிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் கூறியதாவது:சுத்திகரிப்பு நிலையம் மூலம் வழங்கப்பட உள்ள குடிநீர், சுவையாக உள்ளது. தனியாரை மிஞ்சும் வகையில், மிக குறைந்த விலையில் தண்ணீர் வழங்க உள்ளோம். முதற்கட்டமாக, மூன்று வார்டுகளுக்கு, ௩,௦௦௦ லி., மட்டும் வினியோகிக்க உள்ளோம்.

பின், வரவேற்பை பொறுத்து, அனைத்து பகுதிகளுக்கும் இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்கள் வழங்கப்படும்; மிக விரைவில், விற்பனையை துவங்க உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1370184

 
Status
Not open for further replies.
Back
Top