1st year death anniversary rites

As usual sodakumpam and masikal, oona masikam and varushaptheekam and subam will be there. on subham day udhaka shanthi and navagraha homam will be there.

for sodha kumpam you have to give as dhanam 9x5 veshti; brass sombu-1; aasana palakai-1; pancha pathira uthirini-1.
on varushaptheekam day give as thanam for 2 persons each vesti 9x5 -1; brass pot 1; panchaththira uththirini-1; aasana palakai-1; then pancha dhanam - VESHTI 9X5-1 EACH PERSON ;brass pot 1; bell-1; book-1; deepam-1; you may also give dasa dhanam; besides this you may also give bedsheet, pillow, wollen carpet, walking stick, umberellaw, chappal,

Dasa dhanam means, :- gold, silver, cow, land. rice, salt, jaggery. honey, ghee, veshti 9x5. dhanyam. with container for each and also dhakshina for each dhanam must be given.

gold pavithram . gold ring are also is a must. do it as per your financial condition.
 
வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை.

யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும்.

ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும்.

பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது .

த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால்,

த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது.

சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் .
ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்

செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று அவசியம் தக்ஷிணையுடன் கொடுக்க வேண்டும்..

இறந்த தமிழ் மாதம், பக்ஷம், திதிக்கு முதல் நாள் சோதகும்பம் செய்ய வேண்டும். ஒரு வாத்யாருக்கு சாப்பாடு. சமாராதனை சமையல்.
சோத கும்பமும் பிதா முதலிய மூவரை க்குறித்து செய்யப்படும் ச்ராத்தமே.

ஆனால் கர்தாவிற்கும் போக்தாவிற்கும் பார்வண ச்ராத்ததிற்கான உள்ள நியமங்கள் இல்லை. பிரும்ம யஜ்ஞம் , தேவ பூஜை செய்த பிறகும் இதை செய்யலாம். பன்னிரண்டாம் நாள் முதல் 364 ம் நாள் வரை தினமும் செய்ய வேண்டும் என அக்காலத்தில் எழுதி இருக்கிறார்கள்.

நியமம் அதிகம் இல்லாததால் இதற்கு சாஸ்திரிகள் வரணத்திற்கு ஒப்பு கொள்வார்கள். ஆனால் மாசிகத்திற்கு நியமம் அதிகம் உள்ளதால் சாஸ்திரிகள் மற்றவர்களை அனுப்புவார்கள்.

இன்று ஸோத கும்பம் சாப்பிட்ட வாத்யாருக்கு ஒரு பவுன் தங்கத்தில் ஒரு மோதிரம், , வெள்ளி பஞ்ச பாத்ர உத்திரிணி, வெள்ளி பவித்ரம் ஒன்று, 9x5 வேஷ்டி ,டவல்,

குடை, செருப்பு, விசிறி, ((பசு தானம், பூமி தானம்,)), மட்டை தேங்காயும் சந்தன கட்டையும், பித்ளை சொம்பு (ஒரு லிட்டர் கொள்ளலவு)
வெள்ளி கிண்ணத்தில் தேன் தானம் தர வேண்டும்.

.

பஞ்ச தானம்: பித்தளை சொம்பு ஜலத்துடன், மணி, வேத புத்தகம். ஒன்பதுx, 5 வேஷ்டி, தீபம், தீபத்தில் நெய் ஊற்றி, திரி போட்டு, எரிய விட்டு தீப ஜ்யோதி கர்த்தாவை பார்த்து இருக்குமாறு வைத்துக்கொண்டு தானம் செய்ய வேண்டும். இவைகளையும் தானம் செய்ய வேண்டும்.

வர்ஷாப்தீகம்:

சிராத்த சமையல். விஸ்வேதேவர், பித்ரு இருவர் சாப்பாடு. இவர்கள் இருவருக்கும் தங்க மோதிரம், வெள்ளி பஞ்ச பாத்ர உத்திரிணி, , வெள்ளி பவித்ரம் ஒன்று, வெள்ளி கிண்ணத்தில் தேன் ,

குடை, பாத ரக்ஷை, விசிறி, பித்தளை சொம்பு, டவல், 9x5 வேஷ்டி, பஞ்ச தானம் மட்டை தேங்காய், சந்தன கட்டை, இவைகளை இன்று மறுபடியும் தானம் செய்ய வேண்டும்.

சுபம்: இன்று நவகிரஹ ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், செய்கின்றோம். நவகிரக சமித்து, நவகிரக தான்யங்கள், நவகிரக வஸ்த்ரங்கள் , சமித்து, ஹவிஸ், நெய் ஹோமம்..

வீட்டிலுள்ள நபர்களின் பெயர், நக்ஷத்திரம், ராசி பேப்பரில் எழுதி சாஸ்த்ரிகளிடம் கொடுத்து விடவும். அதை பார்த்து அவர் ஆயுஷ்ய ஹோமம் செய்து விடுவார்..

நான்கு அல்லது ஐந்து சாஸ்த்ரிகள் வந்து இதை செய்து கொடுப்பார்கள் அவர்களுக்கு சாப்பாடு போடவும். தக்ஷிணை கொடுக்கவும்.

சாஸ்திரிகள் கர்த்தாவின் financial status க்கு தகுந்தாற்போல் தானப் பொருட்கள் , தக்ஷிணை பெற்றுக்கொள்வதால் நான் இங்கு எழுதுவது அதிக பக்ஷமாகவே இருக்கும்..

உதாரணம்: நவகிரக தான்யங்கள் ஒவ்வொன்றும் 50 கிராமும் வைத்து செய்யலாம். 500 க்ராம் ஒவ்வொன்றும் வைத்தும் செய்யலாம். மிக பெரிய பணக்காரர்கள் 50 க்ராம் தான்யம் வைப்பார்கள்.

வைதீகர்களுக்கு, ஏழை ப்ராமணர்களுக்கும் கர்மா செய்து வைக்க வேண்டி இருப்பதால் அவர்களிடம் குறைவாகவும் மிக ப்பெரிய பணக்காரர்களிடம் அதிக மாகவும் வாங்கி சரி செய்து கொள்வார்கள்.

தானம் செய்யும் பொருட்களில் வேறு பாடுகள் இருக்கும். வைதீகர்கள் இதை நிரந்தரமாக ஓர் அளவு சொல்வதில்லை.
 
Back
Top