100 ஆண்டுகளுக்கு பின்னர் தஞ்சை பெரியகோயில&#300

Status
Not open for further replies.
100 ஆண்டுகளுக்கு பின்னர் தஞ்சை பெரியகோயில&#300

Return of tradition.

100 ஆண்டுகளுக்கு பின்னர் தஞ்சை பெரியகோயிலில் ஏப். 29-ல் தேரோட்டம்

தஞ்சாவூர் பெரியகோயில் என அழைக் கப்படும் பெருவுடையார் கோயிலில் சுமார் 100 ஆண்டுகளுக்கு பின்னர் தேரோட்டம் வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் தஞ்சாவூர் பெரியகோயிலில் நடைபெறும் சித்திரை பிரம்மோற்சவ விழாவின் போது நடைபெற்று வந்த தேரோட்டம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூரைச் சேர்ந்த ஸ்தபதி வரதராஜன் தலைமையில் தொடங்கிய தேர் செய்யும் பணி, தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. புதிய தேர் 3 அடுக்குகளாக பதினாறரை அடி உயரம், பதிமூன்றரை அடி அகலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் பன்னிரென்டரை அடி தேரும், மீதி 4 அடி உயரத்தில் தேவாசனம், சிம்மாசனம் அமைக்கப்பட்டுள்ளது.
தேரின் சக்கரங்கள் 6 அடி உயரத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. தேரோட்டத்துக்கு பின் தேரை நிலைநிறுத்த கொடிமரத்து மூலை பகுதியில் பாழடைந்து இருந்த தேர்முட்டியும் புனரமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வரும் 15 ஆம் தேதி தஞ்சாவூர் பெரியகோயிலின் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் புதிய தேர் பணியும் முடிவடைந்துவிட்டதால் நிகழாண்டு திருவிழாவில் தேரோட்டத்தையும் நடத்திட அரண்மனை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இதற்காக தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகத்தால் நான்கு ராஜவீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் இந்த தேரோட்டத்தால் தஞ்சாவூர் மாவட்ட மக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

100 ???????????? ??????? ????? ????????????? ???. 29-?? ????????? - Dinamani - Tamil Daily News
 
Status
Not open for further replies.
Back
Top