04.02.2019 அன்று தை அமாவாஸ்யை மட்டுமே. மஹோதய புண்யகாலம் கிடையாது

04.02.2019 அன்று தை அமாவாஸ்யை மட்டுமே. மஹோதய புண்யகாலம் கிடையாது

தை மற்றும் மாசி மாதங்களில்
சூர்யோதய சமயத்தில்
வ்யதீபாத யோகம்
சரவண நக்ஷத்திரம்
அமாவாஸ்யை திதியுடன் திங்கட்கிழமை கூடினால் மஹா உதய #மஹோதய புண்யகாலம் ஆகும்

மேலும் வ்யதீபாத யோகம் கடைசி பாதம் சூர்யோதய சமயத்தில் சேர்ந்தால் மகா உன்னதமான மஹோதயமாக சொல்லப் பட்டுள்ளது.

இதனை கோடி சூர்ய கிரஹணம் ஏற்ப்பட்ட பலனுக்கு சமமாகும் என ஆதி புருஷர்கள் ரிஷிகளின் நிர்ணயம்.

இதுவே ஞாயிறு அன்று சூர்ய உதய காலத்தில் கூடினால் அர்த உதய அதில் பாதி #அர்தோதய புண்யகாலம்.

சமுத்ர ஸ்நானம் தானம் தேவதா பூஜைகள் எல்லாமே சூர்யோதய சமயத்துக்குள் செய்யக்கடவன்.

04.02.2019 அன்று உதயகாலத்தில் வ்யதீபாத யோகம் சேராததால் #மஹோதயபுண்யகாலம்கிடையாது.

நமது விளம்பி வருஷ கருடன் பஞ்சாங்கத்தில் இதற்கான விளக்கம் பக்கம் 2ல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற நிகழ்வு (அலப்யமாக) அரிதாக சொல்லப்பட்ட நிர்ணயமாகும். எப்போதாவது ஏற்ப்படும் ஒன்றாகும்.

2016ல் சமீபமாக தான் இது போன்ற மஹோதய புண்யகாலம் அநுஷ்டிக்கப் பட்டது என நினைவில் கொள்ளவும்.
அவரவர்கள் தங்கள் ஆச்சார்ய புருஷர்கள் அனுமதி பெற்று அநுஷ்டிக்க ப்ரார்த்திக்கிறேன். இதனால் ஏற்படும் அபசாரங்கள் சிஷ்யகோடிகளை சேராது.

உங்கள் Sryas D. Murali Battachariar
 
Back
Top