“தந்தை சொல் மிக்க மந்திரமில்லை”

Status
Not open for further replies.

shridisai

You Are That!
“தந்தை சொல் மிக்க மந்திரமில்லை”

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்.

கோவிந்தன் பஜ மூடமதே

கோவிந்தன் என்பது உருவத்தை குறிக்கும் சொல்.

கோவிந்தம் என்பது கோவிந்தனின் உபதேசத்தை குறிப்பது.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பது பழமொழி.

அதாவது வெறுமனே தந்தையின் உருவத்தை மட்டும்

வழிபடுவதை விட தந்தையின் சொல்படி நடப்பதே

மிகச்சிறந்தது என்றும் அதுவே மந்திரமும் ஆகும் என்னும்

பொருள்பட அவ்வைபிராட்டி உபதேசிக்கிறார். மேலும் தந்தை

எனப்படுபவரும் வெறுமனே தம்மை வழிபடுவதை விட தம் சொல்படி

நடப்பதையே பெரிதும் விரும்புவார். இப்பொருள் படுத்தியே ஸ்ரீ ஆதிசங்கர

பகவத்பாதாளும் வெறும் கோவிந்தனை (உருவத்தை) மட்டும் பஜனை

செய்வது மூடத்தனம் என்றும் கோவிந்தத்தை (அதாவது அவருடைய
உபதேசசாரமான ஸ்ரீமத் பகவத்கீதையையே) பஜனை (கீதோ உபதேசத்தின்படி
நடத்தல்) செய்வதே நம் அனைத்து உயிர்களுக்கும் தந்தையான ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தனின் அருளை பெரும் ஒரேவழி என்னும்
பொருள்பட பஜகோவிந்தத்தை நமக்கு அருளியுள்ளார்.

சாய்ராம்
 
Status
Not open for further replies.
Back
Top