“சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்&#299

Status
Not open for further replies.

shridisai

You Are That!
“சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்&#299

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்
அறத்துப்பால்:பயனில சொல்லாமை:குறள்:200

வள்ளுவர் இங்கு குறிப்பிடுவது, சொல்லப்படும் சொல்
பயன்தரும் சொற்களாக இருக்கவேண்டும் என்னும் பொருள்பட அல்ல.
அனைத்து பயன்களையும் ஒருங்கே தன்னகத்துள் கொண்ட பயனே சொல்லாக மருவி இருக்கும் சொல்லையே இங்கு குறிப்பிடுகிறார். அதாவது இப்பூவுலகில் வாழும் அனைத்து மானிடப்பிறவிகளுக்கும் ஒருங்கே பயனளிக்ககூடியதாய் இருக்கும் சொல்லையே சொல்லுக என்கிறார். அத்தகைய சொல் அனைத்து மானிடப் பிறவியுள்ளும் வெளியும் சதா சொல்லாமலே சொல்லிக்கொண்டே இருக்கும் தூயுஉணர்வான இருக்கிறேன் என்னும் சொல்லேயாகும். பெரும் பயனாகவே விளங்கிகொண்டே இருக்கும் இச்சொல்லுடன் கூடாத எச்சொல்லும் பயனிலாச் சொல்லே !!!

ஸ்ரீமத் பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் சாங்கிய யோகம் 16 ஆம் ஸ்லோகத்தில்
"இல்லாத்திற்கு (பயனிலாச் சொல்) இருப்பு இல்லை
இருப்பு (பயனுடைய சொல்)இல்லாமல் போவதும் இல்லை
தத்துவம் அறிந்தவற்கே இவ்விரண்டின் முடிபு விளங்கும்"
என்று நமக்கு உபதேசிக்கிறார்.
சாய்ராம்
 
Status
Not open for further replies.
Back
Top