“சாதி இரண்டொழிய வேறில்லை"

Status
Not open for further replies.

shridisai

You Are That!
“சாதி இரண்டொழிய வேறில்லை"

ஒளவையார் அருளிச் செய்த நல்வழி

“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி”

ஒளவையார் சாதி என்று குறிப்பிடும் பொழுது மனிதர்கள்
பிறப்பால் உருவாக்கி கொள்ளும் சாதியையோ
அல்லது பாலின(ஆண்,பெண்) அடிப்படையில் உருவாகும் சாதியையோ
குறிப்பிடவில்லை!

மாறாக இடக்கூடிய தகுதியுடையோர் (அவர்கள் பிறப்பால்
எக்குலத்தவர் மற்றும் எவ்வினத்தவர் ஆயீனும்) பெரியோர்களே.அவ்வாறு
இடாதார்(அவர்கள் எக்குலத்தவர் மற்றும் எவ்வினத்தவர் ஆயீனும்)
அவர்கள் இழிகுலத்தோர்களே என்று எடுத்துரைக்கிறார்.

ஒளவையார் கூறும் இட்டார் என்பதற்கு வெறும் பொருளையோ
அல்லது அன்னத்தையோ ஒருவருக்கு இடுவது என்பதாக கருத்தில்
கொள்ளல் ஆகாது. திருவள்ளுவர் தம் திருக்குறளில்
“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.”

என்று உயிர்க்கு ஊதியம் உண்டாக்கி கொள்ளும் வழிதனை நமக்கு கூறுகிறார். இவ்வுலகில் எவர் ஒருவர் வள்ளுவர் கூறும் முறையில் இசைபட வாழ்ந்து? அவர்தம் உயிர்க்கு உரிய ஊதியம் பெற்று, அவ்வாறு பெற்றதிலிருந்து இவ்வுலகத்திற்கு இடுகிறார்களோ (ஈதல்) அவர்களே
“இட்டார்" எனப்படும் பெரியோர்கள்.

(உ .ம்) எவ்வாறு புத்தர் போதி மரத்தடியில் அமர்ந்து தம் உயிருக்கு ஊதியமாய் பெற்ற ஞானத்தை இவ்வுலகத்தாருக்கு இட்டாரோ அவ்வாறே!! இத்தகையோரே ஒளவை கூறும் இட்டார் எனப்படுபவர்கள்.மேலும் அவ்வாறு இட்டதை பெற்று வள்ளுவரின் குறள்படி
"போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது"
என்னும் தகுதியல் பெற்றதை அரியவையாக போற்றுபவர்களும்
பாக்கியசாலிகளே! இத்தகுதியில் இடாதார்(அல்லது அவ்வாறு இடப்பெற்றதை அரியவையாக போற்றாதார்) அனைவரும் இழிகுலத்தவர்களே பட்டாங்கில் உள்ளபடி.

சாய்ராம்
 
Status
Not open for further replies.
Back
Top