ஹிந்து மதத்தில் மட்டும் ஏன் முரண்பாடுகள&

Status
Not open for further replies.
ஹிந்து மதத்தில் மட்டும் ஏன் முரண்பாடுகள&

ஹிந்து மதத்தில் மட்டும் ஏன் முரண்பாடுகள் அதிகம் உள்ளன?


கேள்வி: மற்ற மதங்களைக் காட்டிலும், ஹிந்து மதத்தில் மட்டும் ஏன் முரண்பாடுகள் அதிகம் உள்ளன?

சுகி.சிவம்: ஹிந்து மதம் என்பது ஒரு நபரால் ஒரே நாளில் துவங்கப்பட்ட அமைப்பு ரீதியான மதம் இல்லை. பிற மதங்கள் எல்லாம் ஒருவரால் ஒழுங்கு படுத்தப்பட்ட மதங்களாக உருவானவை. ஜீசஸ் க்ரைஸ்ட் ஒரு மதத்தை உருவாக்கா விட்டாலும், அவருக்குப் பிறகு செயின்ட் பவுல்தான் கிறிஸ்தவ மதத்தை ஒழுங்குபடுத்துகிறார். இப்படி தனிநபர்களால்தான் பிற மதங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டன. ஆனால், ஹிந்து மதம் சமஷ்டி முறையில் உருவானது. ஆதிசங்கரர்தான் இதை முதலில் முயற்சி செய்தார். அவர் போகும் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி வணங்கிக் கொண்டிருந்தார்கள். ஆதிசங்கரர் அவற்றையெல்லாம் மாற்றாமல் அது, அது அப்படி அப்படியே இருக்கட்டும். ஆனால், எல்லாவற்றுக்கும் மூலம் பரமாத்மாதான் என்று கூறி அத்வைதத்தை இணைத்து தத்துவ ரீதியாக ஒரு பொது அடையாளத்தை உருவாக்குகிறார்.

ஆக, அடிப்படையில் இது ஒரு ஃபெடரல் ரிலிஜன். சைவம், வைணவம் என்று வெவ்வேறு சமயங்களாக இருந்து, இன்று எல்லாம் ஒன்றாகி இருக்கிறது. அப்படியிருக்கும்போது சில முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். ராணுவம் மாதிரி இது இப்படித்தான் என்று கட்டுப்படுத்தும் மதம் அல்ல ஹிந்து மதம். தளர்வாக, எளிதில் மாறிக் கொள்ளும் அளவிற்கு எளிதாக இருப்பதுதான் ஹிந்து மதத்தின் பலம்.

கேள்வி: ‘கடவுள் நம்மை காப்பாற்று கிறார்’ என்ற சிந்தனை படிப்படியாகக் குறைந்து போய், ‘கடவுளை நாம்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று ஒவ்வொரு மதத்திலும் பல பேர் கிளம்பி விட்டார்கள். இந்த மாறுதலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

சுகி.சிவம்: மனித அகங்காரத்தின் வீக்கம்தான் இந்த சிந்தனை. ‘கடவுள் பலவீனமானவர்; கடவுளால் இந்த எதிர்ப்புகளை தாங்க முடியாது; அவரை நான் தான் காப்பாற்ற வேண்டும்’ என்று நினைக்கத் துவங்குவது அறியாமையின் உச்சக்கட்டம். எல்லா மதங்களிலும் அறியாமையின் உச்சத்தில் உள்ள வர்கள்தான் பிரபலமடைகிறார்கள். ஏனென்றால், அவர்களால்தான் முட்டாள்களை எளிதாக கவர்ந் திழுக்க முடியும். உணர்ச்சிபூர்வமாக மட்டும் சில கருத்தைச் சொல்வார்கள்; எல்லோரும் அவர்கள் பின் னால் ஓடி வந்து விடுவார்கள். சிந்திக்கத் தெரிந்த வர்கள் இந்த மாதிரி நபர்களால் ஈர்க்கப்பட மாட்டார் கள். ‘வாங்க வாங்க நம்ம மதம் அழியப் போகிறது; வந்து காப்பாற்றுங்கள்’ என்று கூக்குரல் கொடுப்பவர் களுக்கு, மதம் பற்றிய எந்த புரிதலும் இருக்காது. மத தத்துவங்கள் குறித்து எந்தத் தெளிவும் இருக்காது. அவர்கள் ஆத்மார்த்தமாக வழிபாடு செய்பவர்களாக வும் இருக்க மாட்டார்கள். உண்மையான பக்திமான் கள் ஞானத்தை நோக்கித்தான் போவார்களே தவிர, இதுபோன்று பிதற்றிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

கேள்வி: இன்று வாழ்க்கை என்பது வேகமான தாக இருக்கிறது. எல்லோருக்கும் நேரம் போதவில்லை. இந்த நிலையில் தினசரி பிரார்த்தனைக்கு என்று எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும்?

சுகி.சிவம்: அபிராமி அந்தாதியில் ‘நின்றும் இருந் தும், கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை’ என் றொரு வரி உண்டு. அதை விட தெளிவாக வழி பாட்டை விளக்க முடியாது. இறைவனை நினைப் பதைவிட சிறந்த வழிபாடு இருக்க முடியாது. படத்தின் முன் அல்லது சன்னதி முன் நின்றுதான் வழிபாடு செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லை. பஸ்ஸில் பயணிக்கும்போது, ரயிலுக்குக் காத்திருக்கும் போது என்று எந்தச் சூழலிலும் இறைவனை நினைத்தால், அதுதான் வழிபாடு. கிரியைகள் என்பது கட்டாய மல்ல. நேரம் இருக்கும்போது அவற்றைச் செய்தால் போதும். சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கா மல், இறைவனை நினைப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் சிறந்த வழிபாடு.

Thuglak

http://www.skyscrapercity.com/showthread.php?t=712180&page=3573

 
Status
Not open for further replies.
Back
Top