P.J.
0
ஸ்விஸ் போன்ற வெளிநாட்டு வங்கிகளில் கருப&
ஸ்விஸ் போன்ற வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம்:
டெல்லி: ஸ்விஸ் வங்கி மற்றும் பல வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் வைத்திருப்போர் பற்றிய விவரம் மத்திய புலனாய்வுக்கழகத்திற்கு கிடைத்துள்ளது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கருப்புப் பணம் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய நிதியமைச்சகத்தின் முக்கிய அங்கமான மத்திய பொருளாதார புலனாய்வுக் கழகம், தகவல் பரிமாற்ற அடிப்படையில் சந்தேகத்திற்குரிய கணக்குகள் பற்றிய விவரத்தை கடந்த நிதியாண்டில் பெற்றது. இதில் சந்தேகத்திற்கிடமான முறையில் வெளிநாட்டில் கணக்கு வைத்திருக்கும் 500க்கும் மேற்பட்ட இந்தியர்களின் பெயர் மற்றும் அவர்கள் பற்றிய விவரங்கள் வருமான வரித் துறை, அமலாக்க இயக்குனரகம், நிதிப்புலனாய்வு கழகம், வருவாய் புலனாய்வு இயக்குனரகம் போன்றவற்றிற்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு, வரி ஏய்ப்பு, அந்நியயச் செலாவணிச் சட்ட மீறல்கள் ஆகியவை குறித்து அவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி ஏய்க்க 4 நாடுகளில் உள்ள வங்கிகளில் இந்த நபர்கள் வங்கி கணக்கு வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கருப்புப் பணத்தை ஒழித்துக் கட்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. அதன் படி அவர்களிடமும் இந்தப் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விசாரணைக் குழுவும் அவர்களது விசாரணையை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Swiss-like Black money in foreign banks: More than 500 Indians trapped chance | ?????? ??????????????? ?????????? ????????? ????: 500?????? ???????? ??????????? ????? ????????| - Dinakaran