ஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளி&#2991

praveen

Life is a dream
Staff member
ஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளி&#2991

ஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது - ஸ்லோகம் – 3


ஸ்தோத்ரம் நாம கிமா மநந்தி கவயோ
யத்யந்யதீயான் குணாந்
அந்யத்ர த்வஸதோசதிரோப்ய பணிதி:
ஸா தர்ஹி வந்த்யா த்வயி ... !!!


ஸம்யக் ஸத்யகுணாபி வர்ணா நமதோ
ப்ரூயு: கதம் தாத்ருசீ
வாக்வாசஸ்பதி நாபி சக்யரசநா
த்வத்ஸத் குணார்ணோநிதௌ ... !!!


விளக்கம் : --


“இருக்கிறதை இருக்கு என்று பாடுவது ஒரு வகை ஸ்தோத்ரம்..இல்லாததை இருக்கு எனபது ஏற்றி சொல்வது அடுத்த வகை. தேவி! உன் இடத்தில் எல்லாம் உள்ளன. பல நிதி முத்துக்கள் கடலில் உள்ளது போல உயர்ந்த கல்யாண குணங்கள் இருக்கும் போது எனது சின்ன வாக்கால் எப்படி பாட முடியும்? ஹயக்ரீவர் ஆக இருந்தாலும் முடியாது. ” என்கிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்.


பராசர பட்டர் ஆயிரம் நாக்கு கேட்டு பின்பு பாட சக்தி இல்லை என்றார். முடியாது என்று சொல்ல ஆயிரம் நாக்கு வேணும் என்பது போல. பெரிய பிராட்டியாரின் கல்யாண குணங்களை பாடிக்கொண்டே இருக்கலாம், இதற்கு எல்லையே இல்லை.


ஸ்ரீ ஸ்தவம் – ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிசெய்த, ஸ்ரீ ரங்கநாயகி நாச்சியாரின் பெருமைகளை சொல்லும் ஸ்லோகங்கள். ஸ்ரீஸ்தவம்.
 
Back
Top