ஸ்ரீ ஸ்தவம் ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளிய

praveen

Life is a dream
Staff member
ஸ்ரீ ஸ்தவம் ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளிய

“ஸ்வஸ்தி ஸ்ரீர்திசதாத் அசேஷ ஜகதாம்
ஸர்கோபஸர்க்க ஸ்திதி தீ:
ஸ்வர்க்கம் துர்கதிமா பவர்க்கிக பதம்
ஸர்வஞ்ச குர்வன் ஹரி ... !!!


“யஸ்யா வீக்ஷ்ய முகம் ததந்கிதபராதீனோ
விதத்தே சகிலம்
கிரீடேயம் கலு நான்ய தாசஸ்ய ரஸதா
ஸ்யாதை கரஸ்யாத்தயா ... !!!


விளக்கம் : --


பகவான் ஹரி நாராயணன் உலகில் படைத்தல், அழித்தல் மற்றும் காத்தல் என்று எல்லாம் செய்யும்போது, பிராட்டியின் அழகான முககுறிப்பு இணக்கத்திலேயே பகவான் இவைகளை செய்கிறான். இத்தகைய சக்தியுடைய, எல்லா காலங்களிலும், இடங்களிலும் அகல கில்லேன் இறையும் என்ற ‘ஸ்ரிய பதி’ பகவானுடன் எப்போதும் சேர்ந்தே இருக்கிற விஷ்ணு பத்னியாகிய பிராட்டியே! மிகுந்த பக்தியும்,ஞானமும் அளித்து என்னை ரக்ஷிப்பாயாக!
 
Back
Top