ஸ்ரீ வில்வாஷ்டகம்

praveen

Life is a dream
Staff member
ஸ்ரீ வில்வாஷ்டகம்

திரிதலம் திரிகுணாகரம், திரிநேத்திரம் ச திரியாயுதம்
திரிஜன்ம பாப ஸம்ஹாரம் #ஏக #வில்வம் #சிவார்ப்பணம்!


திரிசா கைப் வில்வ பத்ரைச் ச அர்ச்சித்ரைக் கோமளஸுபை
தவபூஜாம் கரிஷ்யாமி ஏக வில்வம் சிவார்ப்பணம்!


கோடி கன்யா மஹாதானம் திலபர்வத கோடய
காஞ்சனம் ஸைலதானேன ஏக வில்வம் சிவார்ப்பணம்!


காசி க்ஷேத்ர நிவாஸம் ச காலபைரவ தர்சனம்
ப்ரயாகே மாதவம் த்ருஷ்ட்வா ஏக வில்வம் சிவார்ப்பணம்!


இந்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேஸ்வரா
நித்தம் ஹௌஷ்யாமி தேவே ஏக வில்வம் சிவார்ப்பணம்!


ராமலிங்க பிரதிஷ்டா ச வைவாஹிக க்ருதம் ததா
தடாகனிச ஸந்தானம் ஏக வில்வம் சிவார்ப்பணம்!


அகண்ட வில்வ பத்ரம் ச ஆயுதம் சிவபூஜனம்
க்ருதம் நாம ஸஹஸ்ரேண ஏக வில்வம் சிவார்ப்பணம்!


உமயா ஸஹதேவேச நந்தி வாஹனமேவச
பஸ்மலேபன ஸர்வாங்கம் ஏக வில்வம் சிவார்ப்பணம்!


ஸாளக்கிரமேஸூ விப்ராணாம் தடாகம் தச கூபயோ
யக்ஞகோடி ஸஹ’ஸ்ரஸ்ச ஏக வில்வம் சிவார்ப்பணம்!


தந்திகோடி ஸஹ’ஸ்ரேஸூ அஸ்வமேத சதக்ரதௌ
கோடிகன்யா மஹாதானம் ஏக வில்வம் சிவார்ப்பணம்!


ஸ்ஹஸ்ர வேத பாடேஸூ ப்ரஹ்ம ஸ்தாபன முச்யதே
அனேக வ்ரத கோடினாம் ஏக வில்வம் சிவார்ப்பணம்!


அன்னதான ஸஹஸ்ரேஸூ ஸ்ஹ”ஸ்ரோப நயனம் ததா
அனேக ஜன்ம பாபானி ஏக வில்வம் சிவார்ப்பணம்!


வில்வ ஸ்தோத்ர மிதம் புண்யம் ய படேத் சிவ ஸன்னிதௌ
சிவலோகம் அவாப்னோதி சிவனே சஹ மோததே!


சிவபெருமானை வழிபடுவதற்கு, வில்வத்துக்கு இணையான அர்ச்சனை இல்லை. வில்வாஷ்டகத்துக்கு இணையான பாராயணம் இல்லை என்று சொல்லிச் சிலிர்க்கிறார்கள் சிவனடியார்கள்.


சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும்.
#ஒரு_வில்வத்தினால்
#பூஜைசெய்தால் அது லட்சம் #ஸ்வர்ணபுஷ்பத்துக்குச் #சமமாகும்.


வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம், சிரேஷ்ட, வில்வம், கந்தபல எனப் பல பெயர்களால் சுட்டப்படுகிறது. மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவென ஈசனின் இச்சா, கிரியா, ஞான வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம். எனவே இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும் அடைவார்கள்.


வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள் விளக்கமாகக் கூறுகின்றன. வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன.


#ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த #வேதங்கள் தாங்கள் #அழியாதிருக்க என்னவழி என #ஈசனிடம் கேட்க ஈசனும் #திருவைகாவூர் திருத்தலத்தில் #வில்வ மரத்தின் வடிவில் #நின்று #தவம் செய்யமாறு #அருளினார்.


அதன்படி #வேதங்களும் #வில்வமரங்களாகத் #தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெற்றது.


வில்வமரத்தை #வளர்ப்பதால் #அஸ்வமேத_யாகம் செய்த பலன் கிடைக்கும். ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால்
#சகல பாவங்களும் #நீங்கி அனைத்து #நன்மைகளும் உண்டாகும்.


வில்வத்தின் இலை #எல்லாவகையான #நோய்களுக்கும்
#மருந்தாக விளங்குகின்றது.
மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி ஆகிய தினங்களில் வில்வத்தைப் #பறிக்கக் கூடாது. இந்நாட்களில் பூஜைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்.


வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே
#பூஜித்த__வில்வம் முதலியவற்றாலும்
பூஜை #செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை #கோடி__புண்ணியம் தரவல்லது.
 
Back
Top