ஸ்ரீப்ரகலாதவரதன் திருவடிகளே சரணம்

ஸ்ரீப்ரகலாதவரதன் திருவடிகளே சரணம்

ஸ்ரீப்ரகலாதவரதன் திருவடிகளே சரணம்.........!!!


வம்பவிழும்துழாய் மாலை தோள்மேல் கையன ஆழியும் சங்கும் ஏந்தி* நம்பர்நம் இல்லம் புகுந்து நின்றார் நாகரிகர்பெரிதும் இளையர்* செம்பவளம் இவர் வாயின் வண்ணம் தேவரிவரது உருவம்சொல்லில்*
அம்பவளத்திரளேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா!


திருமங்கையாழ்வார்
பெரியதிருமொழி 9.2.4


திருத்தோள்களிலே பரிமளம் விஞ்சுகிற திருத்துழாய் மாலையுள்ளது; சக்கரமும் சங்கமும்
திருக்கைகளிலுள்ளன (அத்திவ்யாயுதங்களைத்) தரித்துக்கொண்டு (இந்த) ஸ்வாமி
நம்மனையிலே வந்து ஸுலபராயிரா நி்ன்றார்; பெருமதிப்பராயிரா நின்றார்; மிக்க இளம்பருவமுடையராயிருக்கின்றார்;
இவருடைய அதரத்தின் நிறம்
சிவந்த பவளமே; அமாநுஷரான இவருடைய உருவமிருக்கும்படியைச் சொல்வோமாகில் அழகிய பவளத்திரள் போலே விரும்பத் தக்கவரா யிரா நின்றார்.


தோழீ! அவருடைய பரத்வ ஸௌலப்யங்களைச் சொல்லுகிறேன் கேளாய்; மணங்கமழ்கின்ற திருத்துழாய் மாலையைத் தோளினைமேல் அணிந்துள்ளார்; திருக்கைகளிலே திருவாழி திருச்சங்குகளைப் பூவேந்துமாபோலே ஏந்தியுள்ளார்; இப்படிப்பட்ட பரத்வங்கொண்டு எட்டாதவராயிருக்கையன்றியே நாமிருக்குமிடத்தே வந்த புகுந்திருக்கின்றார்! பரமரஸிகராயிருக்கின்றார்; கௌமாரங்கலசின யௌவன பருவம் வாய்ந்தவராயிருக்கின்றார். இவருடைய திருஅதரத்தின் நிறமோ சிவந்த பவளம்போலிரா நின்றது; தேவாதி தேவராகத் தோற்றமுடையராயிருக்கின்றார். திருவுருவமோ பவளத் திரள்போல மிக விரும்பத் தகுந்ததா யிராநின்றது. உபமான மில்லாதபடி மிகலக்ஷணமான அழகுபடைத்த இவ்விஷயத்திற்கு நாம் உபமானமிட்டுச் சொல்லுவதும் ஹேயமென்னும்படி அழகிற் சிறந்தவர் காண் என்கிறார் திருமங்கையாழ்வார்.
 
Back
Top